Wednesday, March 22, 2017

அதிகாரமற்ற அதிகாரியின்.....



அதிகாரபலமற்ற அதிகாரியின்
ஆ ணைக்கு அடங்காது
நமட்டுச் சிரிப்புச் சிரிக்கும்
கடை நிலை ஊழியனாய்..

வெப்பமற்ற சூரியனின்            
வெளிச்சத்திற்கு அடங்காது
பளீரெனச் சிரிக்கிறது
வெண்பனி எங்கும்...

                                                   நிலைமை இப்படியே
                                                  நிச்சயம் தொடராது
                                                 என்னும் நம்பிக்கையுடன்
                                                 மெல்ல நகர்கிறான் கதிரவன்

"அப்போது பார்க்கலாம்"
என அசட்டுத் துணிச்சலுடன்
பரவிச் சிரிக்குது
வெண்பனி எங்கும்.    

                                             ஒருவகையில்
                                             மக்களின் ஆதரவற்று
                                             பதவியில் தொடரும்
                                             அமைச்சர்கள் போலவும்

ஆடும்வரை ஆடட்டும்
தேர்தல்வரட்டும்
 பார்க்கலாம்  என நினைக்கும்
தமிழக மக்கள் போலவும்



7 comments:

  1. ம்ம்ம்... அங்கு பனி! கவிதை வருகிறது. இங்கு வெய்யில் கொளுத்துகிறது. வேர்வைதான் வருகிறது!!!

    :))

    ReplyDelete
  2. கொட்டும் பனி... எஞ்சாய்!

    இங்கே வெயில் ஆரம்பித்து விட்டது! இப்போதே சுட்டெரிக்கிறது.

    ReplyDelete
  3. அடுத்தடுத்து என்னென்னவோ நடக்குது இங்கே. வெயிலின் கடுமைபோல எதையுமே தாங்கவோ சகித்துக்கொள்ளவோ முடியவில்லை. உங்களைப் போல வெளிநாட்டுக்குப் புறப்பட்டால் மட்டுமே மனதுக்கு ஜில்லுன்னு இருக்கும் போலிருக்குது. :)

    ReplyDelete
  4. என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே

    ReplyDelete
  5. அருமை ஐயா
    நல்லது நடக்கட்டும்

    ReplyDelete
  6. ஆஹா கொட்டும் பனி அங்கே இங்கே சுட்டெரிக்கும் வெயில்!! நன்றாக அனுபவியுங்கள் நண்பரே/சகோ...

    ReplyDelete
  7. "வெப்பமற்ற சூரியனின்
    வெளிச்சத்திற்கு அடங்காது
    பளீரெனச் சிரிக்கிறது
    வெண்பனி எங்கும்..." என
    நன்றே சிந்திக்க வைக்கிறீர்கள்!

    வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete