Friday, January 10, 2020

வலைத்தள வீதி

முகநூல் நகரத்தின் பளபளப்பா
டுவிட்டர் வீதிகள் தந்த குதூகலமா
வாட்ஸ்அப் வீடுகளின் வசதி வாய்ப்புகளா
எதுவென சரியாக அனுமானிக்க முடியவில்லை..

மந்தையைப் பிரிந்த ஆடாக
சுற்றித் திரிந்து
மீண்டும்
வளைத்தள வீதி நுழைகையில்...

கூத்தும் கும்மாளமாயும்
இருந்த வீதி
குண்டு வீழ்ந்த சிறு நகரமாய்
சிதிலமடைந்துக் கிடக்கிறது...

சிரிப்பின் சப்தமும்
சந்தோஷ சங்கீதமும்
பொங்கித் ததும்பிய வீடுகள் எல்லாம்..

வெறுமை வெக்கையும்
சோம்பல் தூசியும் மண்ட
உட்பக்கத் தாளிட்டுக் கிடக்கின்றன

கூடவைத்துக் களித்த
சேர்த்துவைத்து இரசித்த
வலைமண்டபங்கள். இருந்த இடம்
நினைவூட்டும் மண்மேடுகளாய்....

ஆண்டுக்கொருமுறை
சுளுக்கெடுத்து உணர்வேற்றும்
சந்திப்புத் திருவிழாக்கள் எல்லாம்
வெறும் கனவாய்...பொய் நினைவாய்...

வெறுமை தந்த வேதனையுடன்
மெல்ல மெல்ல என் வலைவீட்டினை
சீர் செய்வதன் மூலமும்
மீண்டும்
வலைவீதியை உயிர்ப்பிக்க முயல்கிறேன்...

வலையகச் "சித்தர்களின் "
எழுச்சியும் சீரிய முயற்சியும்
வலைத்தள வீதியினை
நிச்சயம்
உயிர்ப்பிக்கும் எனும் உன்னத நம்பிக்கையுடனும்......

16 comments:

  1. அதே நம்பிக்கையுடன் இருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இவ்வருடம் நிச்சயம் வலைத்தளம் முந்தைய நிலையை எட்டும் பதிவர் சந்திப்பும் நடக்கும் என நினைக்கிறேன்...வாழ்த்துக்களுடன்..

      Delete
  2. நம்புவோம். அதே நேரம் நம் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக...தங்கள் வரவுக்கும் நம்பிக்கையூட்டும்பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

      Delete
  3. நலமா அண்ணா. நானெல்லாம் முகநூலை விட்டுட்டு மீண்டும் வலைப்பூக்களை நாடி வந்திட்டேன் .உங்க பதிவுகளில் பல நேரம்  பின்னூட்டப்பெட்டி பூட்டியிருந்ததால் பிறகு கவனிக்காம விட்டுட்டேன்.
    ///கூத்தும் கும்மாளமாயும்இருந்த வீதி
    குண்டு வீழ்ந்த சிறு நகரமாய்
    சிதிலமடைந்துக் கிடக்கிறது...//
    மிகவும் உண்மை பலர் காணாம போய்ட்டாங்க .ஆனாலும்  சிலர் இன்னமும் இங்கே வலைப்பூக்களுக்கு நீர்பாய்ச்சி உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் 

    ReplyDelete
    Replies
    1. நான் தங்கள் அழகிய அற்புதமான வலைப்பூவின் தீவீர இரசிகன்...கடந்த வருடம் முழுவதும் ஓரிடத்தில் இருக்கமுடியாத சூழல் இருந்ததால் யாருடைய பதிவையும் படிக்க முடியாமலும் பின்னூட்டமிட முடியாமலும் இருந்தது.இனி மீண்டும் தொய்வின்றீ தொடர எண்ணியுள்ளேன்...தங்கள் வரவுக்கும் அற்புதமான விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

      Delete
  4. அதுதான் நீங்கள் வந்து விட்டீர்களே எல்லாம் நலமாய் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வஷீஸ்டர் வாயால்...என்கிற வாசகம் நிச்சயம் தங்கள் பின்னூட்டத்திற்குப் பொருந்தும் என நினைக்கிறோம்...தங்கள் வரவுக்கும் சுருக்கமான ஆயினும் மிகச் சிறப்பான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  5. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

      Delete
  6. என்ன மதுரைக்காரரே செளக்கியமா? எந்த நாட்டில் இப்போது இருக்கிறீர்கள்? உங்கள் எழுத்தை எண்ணத்தை மீண்டும் இங்கு பார்ப்பதில் சந்தோஷம்,வலைதளத்தை மறந்து இருந்தது போல எங்களையும் மறந்து வீட்டீர்களா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஒருநாள்தான் என்றாலும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் காட்டிய அன்பினையும் பாசத்தையும் மறக்கமுடியுமா..தற்சமயம் ஒரு இருபது நாள் சிங்கப்பூர் பயணம் முடித்து மதுரை வந்து சேர்ந்துள்ளோம்..இனியாவது தொடர்ந்து வலைத்தளத்தில் எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது....வாழ்த்துக்களுடன்..

      Delete
  7. நம்பிக்கைகள் நிறைவேறும்.   ஒரு வலைத்திரட்டியும் தயாராகிக் கொண்டிருப்பதாய் நீச்சல்காரன் சொல்லியிருந்தார்.  மீண்டும் கலகலப்பு பூக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான செய்தி..நிச்சயம் கலகலப்பு பூக்கும்...வாழ்த்துக்களுடன்

      Delete
  8. வலைத்தளம் மறந்த பலர்... உண்மை தான் ஜி. நீங்கள் மீண்டும் இங்கே எழுத வந்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். மீண்டும் பூக்கள் இங்கே துளிர்க்கட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete