Monday, February 17, 2020

இரசிப்போர் நிலை பொருத்தே நிலைத்தலும்..

விதையினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் வளர்ச்சி
அதுவீழும் நிலம் பொருத்தும்தான்

உயிரினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் இயக்கம்
அதைத்தாங்கும் உடல் பொருத்தும்தான்

அழகினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் பெருமை
அதனை ஆராதிப்போர் மனம் பொருத்தும்தான்

நதியினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் புனிதம்
அதுபாயும் ஸ்தலம் பொருத்தும்தான்

கடவுளைப் பொருத்து மட்டுமல்ல
அதன் கீர்த்தி
அது உறையும் கோவில் பொருத்தும்தான்

................................................
...............................
..................................................

கவிதையைப் பொருத்து மட்டுமல்ல
அதன் சிறப்பு
அதனை இரசிப்போர் நிலையினைப் பொருத்தும்தான்

5 comments:

  1. ஒன்றை ஒன்று சார்ந்து... அருமை ஐயா...

    ReplyDelete
  2. ஆஹா... கவிதையின் சிறப்பு பற்றி நீங்கள் சொல்வது உண்மை.

    நல்ல பகிர்வு. தொடரட்டும் சிறப்பான உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  3. ஒன்றில்லாவிட்டால்
    மற்றொன்று ஏது
    அருமை

    ReplyDelete
  4. இதனால் அது.அதனால் இது. பிரிக்கமுடியாது.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    நல்ல கவிதை. ஒன்றையொன்று சார்ந்திருந்தால்தான், அந்த ஒன்றின் சிறப்பு புரிபடும்படியாய் இருக்குமென தெளிவாக விளக்கிய அழகான கவிதை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete