Thursday, October 8, 2020

வெற்று உரலை இடித்தபடி

 கண்டதும்

கண்களை இமைக்கவிடாது
சுண்டி இழுக்கும்படியாய்
ஒரு அருமையான தலைப்பும்..

ஆரம்பமே
அமர்க்களமாய் இருக்கிறதே என
எண்ண வைக்கும்  படியாய்
சுவாரஸ்யமான பல்லவியும்

கருவிட்டு விலகாது
சங்கிலிக் கண்ணியாய்த்
தொடர்ந்து மயக்கும்
அசத்தலான சரணங்களும்

மூன்றையும்
மிக நேர்த்தியாய் இணைத்து
அட டா என தலையாட்டவைக்கும்
அருமையான முடிவும்

மிகச் சரியாய் அமைந்தால்
ஒரு கவிதை எழுதி விடலாம் என
அனுதினமும் காத்திருக்கிறேன்

என்றும் போல இன்றும் 
வெற்று உரலை 
வேதனையுடன் இடித்தபடி....

7 comments:

  1. ஹா.. ஹா.. ரசித்தேன் கவிஞரே...
    சூட்சுமம் அறிந்தவுடன் எனக்கும் மின்னஞ்சல் செய்யவும்.

    ReplyDelete
  2. உங்கள் எழுத்து பலவும் கவிதைதானே

    ReplyDelete
  3. ஆஹா... உங்கள் கவிதைகளுக்குக் குறையேது?

    நல்ல பகிர்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. அதையே கவியாகவும் வடித்து விட்டீர்கள்.   அதுதான் உங்கள் திறமை.

    ReplyDelete
  5. அன்பு ரமணி சார்.
    இதே ஒரு கவிதை.
    மனம் முனங்க கை எழுதினால் எல்லாமே கவிதைதான்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. மிகப் பொருத்தமான வார்த்தைகளை அமைத்து தாங்கள் எழுதியிப்பதும் ஒரு சிறந்த கவியே..அதில் ஒரு சிறிதளவும் சந்தேகமேயில்லை.. உங்கள் திறமைக்கு என்றும் என் பணிவான வணக்கங்கள்.

    /என்றும் போல இன்றும்
    வெற்று உரலை
    வேதனையுடன் இடித்தபடி..../

    "இவ்வளவு திறமைகளுடன் எப்போதும் கவிதைகளை இயற்றும் நீங்கள் வெற்று உரலுடன் காத்திருப்பதாக" என்கிறீர்கள். நான் அந்த உரலையே என்றும் என் கற்பனையில் மட்டுந்தான் பார்த்தபடி இருக்கிறேன்.:) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete