Wednesday, November 4, 2020

ஆணிவேர் இங்கிருக்கு...

   கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் எந்த மதத்தவராயினும் ஒன்றாக இருத்தல் தானே இயற்கை..மாறாக கடவுளை மறுப்பவர்களுடன் இணைந்திருப்பது எந்த விதத்தில் சரி...இந்தச் சிந்தனை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வந்தால் போதும்.மதப்பிரச்சனை வரவே வராது..ஆனால் மதத்தை வைத்து ஆண்டவனுக்கும் பக்தனுக்கும் இடையில்  நிறுவனமாகி பெரும் வியாபாரம் நடத்தும் நிறுவனத் தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள்...திருமணமோ மரணமோ அவர்களது ஒப்புதலின்றி நடத்தமுடியாது என்கிற நிலை இருக்கும் வரை இவர்களின் போக்கு பிடிக்கவில்லை ஆயினும் கூட அவர்கள் மதத்தில் உள்ள  சாமான்யர்களால்   இவர்களை விலக்கி ஒதுக்கவும் முடியாது..இதற்கெல்லாம் ஒரே தீர்வு பொதுச் சிவில் சட்டம் ஒன்றே...அது நிறைவேற்றப்பட வேண்டியது ராஜ்யசபாவில் மெஜாரிட்டி மட்டுமே..அது கூடிய விரைவில் ஆகச் சாத்தியமே....அது மட்டும் ஆகிவிட்டால் எல்லாம் சரியாக ஆவதும்  நிச்சயம் சாத்தியமே...

11 comments:

  1. மதம் கொண்டவன் மனிதனே இல்லை... பிறகு எப்படி ஆணி வேர்...?

    ReplyDelete
    Replies
    1. மதம் சார்ந்தவர்கள் எல்லாம் மதம் கொண்டவர்கள் இல்லை...மதத்தை மறுப்பதாலேயே பகுத்தறிவுவாதி என்பதுவும் இல்ல.

      Delete
    2. // மதம் சார்ந்தவர்கள் எல்லாம் மதம் கொண்டவர்கள் இல்லை... //

      ஆம்... மிகவும் சரி தான் ஐயா...

      ஆமாம் மதம் எப்போதிலிருந்து வந்தது...?
      ஏன்...?
      அதற்கு முன் அறிவு இங்கு ஏன் வந்தது...?

      Delete
  2. கடவுள் - தெய்வம் - இறைவன்- வேறுபாடு என்ன...?

    // ஆண்டவனுக்கும் பக்தனுக்கும் // இவை என்ன...? // இடையில் // அப்படியென்றால்...?

    ReplyDelete
  3. மதம் ஒரு வாழ்வு முறை. நமக்கும் மேல் ஒருவர் இருக்கிறார். நாம் செய்வது யாருக்கும் தெரியாது என்று நாம் நினைத்தாலும், அது நமக்கும், மேல் இருப்பவனுக்கு தெரியும் என்ற எண்ணம் நம்மை ஒழுக்கமாக இருக்க வழி செய்யும். இந்த புள்ளியில் கடவுளை நம்பும் அனைவரும் இணைகின்றனர் . பெரும்பாலும் பலர் இதில்.

    நமக்கும் மேலே யாரும் இல்லை. ஆனாலும் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க, ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக இருக்க, என் சுயநலத்துக்காக மற்றவரை துன்பத்துக்கு உள்ளாகாமல் இருக்க இந்த கட்டமைப்பு இருக்கிறது. அதனால் இந்த கட்டமைப்பு இல்லாமல் நான் ஒழுக்கமாக இருப்பேன் என்பது வேறு ஒரு புள்ளி. இதில் இருப்பவர் மிகச் சிலர்.

    நமக்கு மேல் யாரும் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. பலவிதமான வாழ்வு முறைகள், மதங்கள், இருக்கும்போது ஒருவருக்கு எதிராக இன்னொருவரை தூண்டிவிட்டால் போதும். எனக்கு அனுகூலமாக முடியும் என்பது இன்னொரு விதமான பிரிவினர்.

    இதில் யார் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்!

    ReplyDelete
  4. பந்து சார் கருத்தை ஆதரிக்கிறேன், வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  5. கடவுளை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள், நம்புவர்களில் பல மதத்தினர் எல்லோருமே ஒன்றாகத்தானே இருக்கிறோம். பின்னர் என்ன ஆணிவேர் இங்கே இருக்கிறது. தென்னைமர சல்லிவேர் போன்று எல்லோரும் இந்தியக்குடிமகன்கள் தான். இந்தியா என்பதே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். 
    ஆக பொது சிவில் சட்டம் என்பதால் சாதிக்க விரும்புவது என்ன?எல்லோரையும் ஒரு மதத்தின் கீழ் கொண்டுவரவா? அல்லது கம்யூனிச நாடுகள் போன்று எதேட்சாதிகார ஆட்சியை நிலைப்படுத்தவா? 

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. மைனாரிடி மெஜாரிட்டி என இல்லாமல் எல்லோரும இந்நாட்டு குடிமக்கள் என சட்டரீதியாக சமதளத்தில் இருத்தல்...

      Delete
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete