Friday, March 18, 2011

இப்படியும் ..........

எல்லாம் சரியாகத்தான் இருந்தது
எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருந்தார்கள்
நான் சந்தோஷமாகத்தான் இருந்தேன்
ஒரு முட்டாள் நண்பன்
என்னை ஏமாற்றத் தெரியாமல் ஏமாற்றி
என்னிடம் மாட்டிக் கொள்ளாதவரையில்

ஒரு கெட்டிக்கார அயோக்கியனிடம் கூட
ஏமாந்து தொலைத்திருக்கலாம்
ஒரு முட்டாள் நண்பனிடம் ஏமாறுதல் என்பதை
என்னால் ஜீிரணிக்கவே இயலவில்லை

நொந்துபோய் திரிந்துகொண்டிருந்த எனக்கு
ஒரு நெருங்கிய நண்பன்தான் ஆறுதல் தந்தான்
"நீ யாரையும் ஏமாற்ற வேண்டாம்
யாரிடமும் ஏமாறவும் வேண்டாம்
அதற்காகவாவது ஏமாற்றுதல் குறித்து
கொஞ்சம் தெரிந்துகொள் " என்றான்
அது எனக்கு சரியெனத்தான் பட்டது

அந்த நண்பன் தான் என் கைப்பிடித்து
கொஞ்சம் கொஞ்சமாக
அந்த இருண்ட குகைக்குள் அழைத்துப் போனான்
அந்த அகண்ட குகையின் கனத்த இருள்
என் கண்களுக்குப் பழகப் பழக
நான் கதிகலங்கிப் போனேன்

இத்தனை காலமும்
எல்லாரிடத்தும்
எல்லாவகையிலும்
ஏமாந்து திரிந்தது
எள்ளவும் ஐயமின்றி
அப்போதுதான் புரிந்து தொலைந்தது
நான் மனம் வெறுத்துப் போனேன்

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம்
யாரும் ஏமாறுவதில்லை
அதிகம் அறிந்தவர்களிடம்தான்
அதிகம் ஏமாறுகிறார்கள்
ஏமாந்தவன் ஏமாற்றுபவனை
அடையாளம் காண்ாதவரையில்
ஏமாற்றுபவன் ஏமாறுபவனை விடுவிப்பதில்லை
ஏமாறுபவன் விழிக்க நேர்ந்தால்தான்
ஏமாற்ற வேறு இடம் தேடுகிறான்
ஏமாந்து கிடந்தவனும்
முற்றிலும் விழிப்படைவதில்லை
ஏமாந்தவனிடத்தும்
ஏமாந்த விஷயங்களில் மட்டும்
அதிகம் கவனம் கொள்கிறன்
மற்றபடி
அடுத்தவனிடத்தும்
அடுத்த விஷயங்களிலும்
அடிக்கடி ஏமாற
அவன் ஆயத்தமாகத்தான் இருக்கிறான்
ஆயத்தமானவர்கள் அதிகமாக அதிகமாக
ஏமாற்றுவோனுக்கு
ஏமாற்றுதல் கை வந்த கலையாகிப்போகிறது

இப்படியும்,இன்னமும்
கட்டுரை எழுதும் அளவு
ஏமாறுதல் குறித்து அதிகம் தெரிந்துபோனதால்
எல்லா ஏமாற்று வித்தையும் தெளிவாய் தெரிகிறது
எல்லா ஏமர்ற்றுக் காரர்களும் பெரிதாய் தெரிகிறார்கள்

இப்போது எனக்கு
தொடந்து ஏமாறுவதோ
தொடர்ந்து ஏமாற்றப்படுவதோ கூட
எரிச்சலூட்டுவதாக இல்லை
மாறாக
ஏமாற்றத் தெரியாமல் ஏமாற்றி
என்னை அனைத்தையும்
தெரிந்து கொள்ள வைத்த
அந்த முட்டாள் நண்பன் மீது தான்
எரிச்சல் அளவுகடந்து வருகிறது

அந்த சனிப்பயல் மட்டும்
என்னை மிகச் சரியாக ஏமாற்றித் தொலைத்திருந்தால்
இத்தனை எழவுகைள்யும்
தெரிிந்து தொலைத்திருக்கவும் மாட்டேன் 
எவ்வளவு இழந்து தொலைத்தாலும்
எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது
எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்
என்ற் நல்ல நினைவுகளோடு
தொடர்ந்து சந்தோஷமாய் வாழ்ந்துகொண்டும் இருப்பேன்
v

24 comments:

  1. ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் ஒரு மணி நேரமாவது வேறு வேலை செய்ய தோனாது... அதுபோலத் தான் உங்கள் கவிதையை படித்து முடித்தவுடன் மனது அதையே நினைத்துக் கொண்டிருக்கிறது..
    அருமை.....

    ReplyDelete
  2. நேரமிருந்தால்....
    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_3840.html

    ReplyDelete
  3. நல்லா இருந்தது.
    ஏமாற்றாதே.. ஏமாறாதே... பாட்டு உங்க நண்பனுக்கு தெரியாதா? ;-)))

    ReplyDelete
  4. என்ன குரு பிளாக் தீ பிடிச்சி எரியுது.....

    ReplyDelete
  5. இதுக்கு என்ன கமெண்ட்ஸ் போடுரதுன்னே புரிய மாட்டேங்குது குரு......
    ம்ம்ம் நானும் ஒரு முறை தலைவன் பாட்டை பாடி விடுகிறேன். ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே....

    ReplyDelete
  6. //ஒரு கெட்டிக்கார அயோக்கியனிடம் கூட
    ஏமாந்து தொலைத்திருக்கலாம்
    ஒரு முட்டாள் நண்பனிடம் ஏமாறுதல் என்பதை
    என்னால் ஜீிரணிக்கவே இயலவில்லை//

    அருமையான வரிகள் ஐயா.

    வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  7. ஏமாற்றம் பற்றியும் நாம் எதிர்பார்த்திருக்கும் மாற்றம் பற்றியுமானதுமாய் இதை நான் எடுத்துக் கொள்கிறேன்.

    நீங்கள் சொல்வதுபோல ஒன்றில் ஏமாந்ததை உணர்ந்து விழிப்பதற்குள் அடுத்தகுழி தயாராய்க் காத்திருக்கிறது.

    எங்கும் நான் ஏமாறமாட்டேன் என்று சொல்பவர்களையும் நினைவூட்டுகிறது உங்களின் இப்பதிவு.

    அற்புதம் ரமணி அண்ணா.

    ReplyDelete
  8. பதிவு மிகவும் அருமை . எப்ப்படி சொன்னாலும் அனுபவ பாடம் தான், சூடு சொரணை தருகிறது.

    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. சாரி த‌ப்பா அடிச்சுட்டேன்,..

    நாம் எவ்வ‌ள‌வுதான் எச்ச‌ரிக்கையாக‌ இருந்தாலும் ஏமாற்ற‌ப்ப‌டுவ‌து த‌விர்க்க‌ முடியாத‌து.

    அடுத்த‌ முறை ஏமாற‌க்கூடாது என‌ப் போய்க்கொண்டே இருக்க‌ வேண்டிய‌துதான். இல்லையென்றால் ஏமாற்ற‌ம் ச‌ந்தேக‌த்தில் போய் முடியும்,. அது மிக‌ மோச‌மான‌ வியாதி,..

    ஏமாற்ற‌ம் ந‌ம்மை மட்டும்தான் பாதிக்கும், ச‌ந்தேக‌ம் நம்மை சுற்றி உள்ளோரையும் அது பாதிக்கும்,

    ReplyDelete
  11. எங்கோப் படித்தது

    எமாற்றுபவனை விட ஏமாருபவனுக்கு தண்டனை தர வேண்டும்

    ReplyDelete
  12. ஏமாற்றத் தெரியாமல் ஏமாற்றி
    என்னை அனைத்தையும்
    தெரிந்து கொள்ள வைத்த
    அந்த முட்டாள் நண்பன் மீது தான்
    எரிச்சல் அளவுகடந்து வருகிறது.
    ஏங்க உங்களுக்கு நல்லதுதானே பண்ணி இருக்காரு.அவர் மீது ஏங்க எரிச்சல் வருது?!!!

    ReplyDelete
  13. ஏமாற்றம் எவ்வளவு பாடங்களை கற்று தருகிறது பாருங்கள்.

    ReplyDelete
  14. ஏமாறுகிறோம் என்பதை அறியாதவரை கிடைக்கும் மகிழ்ச்சியை விட ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த பின் கிடைக்கும் கவலையே மேல். நல்ல கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அதிகம் அறிந்தவர்களிடம்தான்
    அதிகம் ஏமாறுகிறார்கள்//
    சத்தியமான வார்த்தைகள்

    ReplyDelete
  16. //ஏமாற்றத் தெரியாமல் ஏமாற்றி
    என்னை அனைத்தையும்
    தெரிந்து கொள்ள வைத்த
    அந்த முட்டாள் நண்பன் மீது தான்
    எரிச்சல் அளவுகடந்து வருகிறது//

    அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. ஒரு பத்து ரூபாய் பணம் தெரிந்து செலவு செய்திருந்தால் கவலை இருக்காது. ஏதோ செலவாயிற்று என விட்டுவிடுவோம்.ஆனால் அதே பணம் நம்மிடமிருந்து நமக்குத் தெரியாம்லேயே பறிக்கப் பட்டிருந்தால் வினையே வேண்டாம். அதுபொல் தெரியாமல் ஏமாறுவதும் தெரிந்தே ஏமாறுவதும்.நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. /ஏமாற்றத் தெரியாமல் ஏமாற்றி
    என்னை அனைத்தையும்
    தெரிந்து கொள்ள வைத்த
    அந்த முட்டாள் நண்பன் மீது தான்
    எரிச்சல் அளவுகடந்து வருகிறது/

    "நன்றும் தீதும் பிரர் தர வாரா" என்று போட்டு விட்டு இப்படி அழுதால் எப்படி?

    இந்தப் பிறப்பில் இல்லையென்றாலும் எந்தப் பிறப்பிலோ செய்தவையே தான் எமக்கு இப்போ அனுபவங்களாகின்றன, என்பதை எண்ணத்தில் கொள்ளுங்கள்.

    உலக விளையாட்டின் அர்த்தத்தை புரிந்து கொள்ள இவற்றை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு, வரவின் காரணத்தை ஆராயுங்கள்.

    ReplyDelete
  19. ஏமாற ஏமாறத்தானே அவர்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
  20. //முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம்
    யாரும் ஏமாறுவதில்லை
    அதிகம் அறிந்தவர்களிடம்தான்
    அதிகம் ஏமாறுகிறார்கள்//

    அருமை.. அறிமுகம் இல்லாதவங்ககிட்ட எப்பவும் ஒரு எச்சரிக்கை உணர்வோட பழகுவோம். அது நம்மை ஏமாறுவதிலிருந்து தடுத்துடும் இல்லியா..

    ReplyDelete
  21. //ஏமாந்து கிடந்தவனும்
    முற்றிலும் விழிப்படைவதில்லை
    ஏமாந்தவனிடத்தும்
    ஏமாந்த விஷயங்களில் மட்டும்
    அதிகம் கவனம் கொள்கிறன்
    மற்றபடி
    அடுத்தவனிடத்தும்
    அடுத்த விஷயங்களிலும்
    அடிக்கடி ஏமாற
    அவன் ஆயத்தமாகத்தான் இருக்கிறான்//

    உண்மைதான்.யாரும் முழுதும் விழித்துக் கொள்வதில்லை.
    அப்படி நினைத்துக் கொள்கிறோம்

    ReplyDelete
  22. அந்த நண்பனுக்கு நன்றி (?) இப்படி ஒரு கவிதையை ரமணி சாரை எழுத வைத்ததற்கு .

    ReplyDelete
  23. எவ்வளவு இழந்து தொலைத்தாலும்
    எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது
    எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்
    என்ற் நல்ல நினைவுகளோடு
    தொடர்ந்து சந்தோஷமாய் வாழ்ந்துகொண்டும் இருப்பேன்
    ஆம் எதை இழந்தாலும் இனிய நினைவுகளோடு என்றும் என்னை கவர்ந்த வரிகள்

    ReplyDelete
  24. ஒரு முட்டாள் நண்பனிடம் ஏமாறுதல் என்பதை
    என்னால் ஜீிரணிக்கவே இயலவில்லை
    ஆம். நிறைய நேரம் நம்மை நாம் முட்டாள் என்று
    கணிப்பவர்களாலேயே ஏமாற்றப்படுகிறோம்.

    ReplyDelete