Monday, April 18, 2011

விபச்சாரர்

அவர் பெண் பார்க்க வந்தபோது
"ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும்
லெள்கீக விஷயங்க்ள் பேசுவதும்
தாய் தந்தையருக்காத்தான்
எனக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை"என்றார்
அவள் உண்மையில் பூரித்துப்போனாள்

"பெண் பார்க்க வரும்போது
சேலை கட்டியிருக்கச் சொன்னதுகூட
தனது தமக்கைக்காகத்தான்
எனக்கு யெப்படி யிருந்தாலும் சரிதான்"என்றார்
அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்

"திருமணத்தில் சாஸ்திர சம்பிராதயங்கள்
சரியாக இருக்க வேண்டும்
என்பதுகூட தாத்தா பாட்டிக்காதத்தான்
எனக்கு துளிகூட இதிலெல்லாம் நம்பிக்கையில்லை" என்றார்
அவளுக்கும் இது சரியெனததான்பட்டது 

"திருமணமண்டபம் நல்லதாய் இருக்கவேண்டும்
சாப்பாடுதான் ரொம்ப முக்கியம்
விருந்தினர்களின் திருப்திதானே
நம்மெல்லோருக்கும் முக்கியம்" என்றார்
அதுகூட அவளுக்கு ஏற்கும்படியாகத்தானிருந் தது

சீர்வரிசையில் ஒரு சிறுகுைற்யென்று
அவரது ஒன்று விட்ட் மாமன் 
மண்டபத்தையே உலுக்கியெடுத்தபோது
"எங்கள் மாமன் எப்போதும் இப்படித்தான்
இங்கிதம் தெரியாத பிறவி
அவரைக் கண்டுகொள்ளாமல் 
எனக்காகவேனும் இதைமட்டும் செய்துகொடுங்கள்"என்றார்
அவ்ளுக்கும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை

கல்யாண அமர்க்களங்கெள்ல்லாம் முடிந்து
அவள் தங்கக் சிலையென
வெள்ளிச் செம்பேந்தி
அன்னமென பள்ளியைற்யினுள்
அடியெடுத்து வருகையில்
மெய்மறந்து வாய்பிளந்தவன்
அவளை கட்டியணைத்து
அருகிலமர்த்திக் கொண்டபோது
"அணைத்துக் கொண்டது கூட
யார் சொல்லியேனும்" எனச் சொல்லக்கூடுமோ எனப் பயந்தாள்

அவன் மிக மெதுவாக
அவள் முகத்திரை விலக்கி
நிச்சயித்த நாள்முதல்
ஒத்திகை பார்த்து வைத்த முத்தத்தை
சிதறவிட்டு கொடுத்தபடிச் சொன்னான்
"இத்தனை ஆர்ப்பாட்டங்களும்
இதற்காகத்தான் இல்லையா"என்றான்
அவன் முகத்தில் நியூட்டனால் கண்டுபிடிக்க முடியாத
புதிய விதியை கண்டுபிடித்த பெருமிதம் இருந்தது
அவள் தலை குனிந்து நின்றாள்

"பெறவேண்டியதை எல்லாம்
சாமர்த்தியமாய் பெற்றுக்கொண்டும்
பத்தினிபோலும் வேடமிட்டுக்கொண்டும்
சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
விபச்சாரிகள் எனச் சொல்வதை போலிந்த
ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை"
அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன் வந்து போனது

அவளுள் உறங்கிக் கிடந்த தமிழச்சி
திடுமென்று வீறுகொண்டாள்
"தொட்டு தாலிகட்டிய கணவனை 
விபச்சாரன் எனச்சொல்லல் தகுமா?
தமிழர் பண்பாடு ஏற்குமா ? தவறல்லவா"என்றாள்

தமிழச்சியின் கூற்று சரியெனவே இவளுக்கும் பட்டது
"வேண்டுமாயின் ஆர் விகுதி சேர்த்து
விபச்சாரர் எனச் சொல்லலாமா"என்றாள் இவள்
உள்ளிருந்த தமிழச்சி மௌனமாய் சம்மதிக்க
இவள் லேசாகப் புன்னகைத்தாள்

வழக்கம்போல
எல்லா ஆண்களையும் போல
புன்னகைத்ததற்கான பொருள் புரியாது
தனது முதல் முத்தத்தில்
தனது முதல் பேரைண்ப்பில்
அவள் நிலைகுலைந்து போனாள் என
ஆண்மைகுரிிய கம்பீரத்தோடு
அவளை அள்ளிக்கொண்டான் "விபச்சாரர்"

30 comments:

  1. அருமை.. சான்ஸே இல்ல.. பெண்ணின் மனதை அப்படியே 100%..

    பாராட்டுகள்..

    ReplyDelete
  2. மிக மிக அருமை ..

    ReplyDelete
  3. கோப அனல் பறக்குது....

    ReplyDelete
  4. வழக்கமா ஊசி ஏத்துவீங்க ரமணி சார். இதில் ஈட்டியையே ஏத்திட்டீங்க.

    சுடுகிறது சொற்கள்.

    ReplyDelete
  5. ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை ----- சபாஷ் சரியான சவுக்கடி கேள்வி.

    ReplyDelete
  6. உங்கள் தார்மீக கோபம் அழுத்தமாக வெளிப்படுகிறது.
    பெற வேண்டியதை எல்லாம் பெற்றுக்கொண்டுபத்தினி வேடம் போடுபவள் விபசாரி. இங்கு பாட்டுடைத் தலைவன் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்கிறான்.
    “பத்தினன்” வேடம் போடுகிறானா சொல்லவில்லையே. கொடுத்த சவுக்கடிக்கு இது பெரிய தவறில்லை . நெஞசார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. உள்ளிருந்த தமிழச்சி
    உண்மையைத்தான்
    உருமாற்றி
    உவகையுடன்
    உருப்படியாக
    உசிப்பிவிட்டு
    உரைத்துள்ளாள்.
    உங்களுக்கு என் பாராட்டுக்கள்.


    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. //அணைத்துக் கொண்டது கூட
    யார் சொல்லியேனும்" எனச் சொல்லக்கூடுமோ எனப் பயந்தாள்///

    வார்த்தை விளையாடுது குரு.....

    ReplyDelete
  9. //சுந்தர்ஜி said...
    வழக்கமா ஊசி ஏத்துவீங்க ரமணி சார். இதில் ஈட்டியையே ஏத்திட்டீங்க.//

    நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லிட்டீங்க...

    ReplyDelete
  10. செமையான குதிரைவீரனின் சாட்டையடி......

    ReplyDelete
  11. டைட்டிலே விஷயத்தை சொல்லிவிட்டது. அற்புதம் ரமணி சார்! ;-))

    ReplyDelete
  12. நெஞ்சில் உணர்ச்சிகள் மிகுந்து நிற்கின்றன.
    வார்த்தைகள் ஏனோ வற்றி விட்டன..
    ஒட்டுமொத்த பெண்ணினத்தின் ஒரே குரலாய் ஒலித்துவிட்டீர்கள் :)
    வாழ்த்துக்கள் ரமணி!

    ReplyDelete
  13. உள்ளத்தை தொடுகின்றது உங்களது சிந்தனைகளும், எழுத்துக்களும், அழகாக சிந்தித்து அழகாக எழுதி மாட்டை அடிப்பது போல இந்த ஆண்களை வார்த்தை எனும் சவுக்கால் வெளுத்து விட்டிர்கள்

    ReplyDelete
  14. end thaan sir, class!!
    பெண்ணின் மனது ஆழமானது னு சும்மாவா சொன்னாங்க !

    ReplyDelete
  15. அனல் பறக்குது வரிகளில். அழகான கவிதை. தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. ஆஹா!.. அற்புதம். போலிவேஷம் போடறவங்களை நல்லா வெளுவெளுன்னு வெளுத்துட்டீங்க, ஜூப்பரு.

    ReplyDelete
  17. KO பஞ்ச் சார்! எழுந்திருக்க முடியாத அடி!!!

    ReplyDelete
  18. ஒரு ஆணாக இருந்தும் பெண்ணின் மனநிலையை அப்படியே வரிகளாக்கியிருக்கிறீர்கள்.ஆண்களின் குற்றங்களை சொல்லியுமிருக்கிறீர்கள் துணிவோடு !

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா!
    என் தலைவனின் ஆணை கவிதைக்கு
    கருத்து சொன்னதற்கு மிக மிக நன்றி !
    தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டுகிறேன் !
    கவி தென்றல்

    ReplyDelete
  20. ///"பெறவேண்டியதை எல்லாம்
    சாமர்த்தியமாய் பெற்றுக்கொண்டும்
    பத்தினிபோலும் வேடமிட்டுக்கொண்டும்
    சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
    விபச்சாரிகள் எனச் சொல்வதை போலிந்த
    ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை"
    அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன் வந்து போனது//// நியாயமான சிந்தனை தானே ......

    ReplyDelete
  21. "பெறவேண்டியதை எல்லாம்
    சாமர்த்தியமாய் பெற்றுக்கொண்டும்
    பத்தினிபோலும் வேடமிட்டுக்கொண்டும்
    சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
    விபச்சாரிகள் எனச் சொல்வதை போலிந்த
    ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை"

    மிக அருமை! நிகழ்கால‌ வாழ்க்கையில் நடப்பதை யதார்த்த வரிகளில் முட்களாய் குத்திக்கிழித்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  22. சபாஷ்! சரியான கேள்வி!

    ReplyDelete
  23. ".."அணைத்துக் கொண்டது கூட
    யார் சொல்லியேனும்" எனச் .."
    மிக அருமையான கவிதை. கருவாலும். அதைச் சொல்லிய திறத்தாலும்.

    ReplyDelete
  24. செவிட்டில் அறைந்ததைப் போல் ஒரு கவிதை படித்து நாளாயிற்று. அதை தீர்த்தது இந்தக் கவிதை. வாழ்க!

    ReplyDelete
  25. உங்கள் தார்மீக கோபம் அழுத்தமாக வெளிப்படுகிறது."பெறவேண்டியதை எல்லாம்
    சாமர்த்தியமாய் பெற்றுக்கொண்டும்
    பத்தினிபோலும் வேடமிட்டுக்கொண்டும்
    சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
    விபச்சாரிகள் எனச் சொல்வதை போலிந்த
    ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை"சாட்டை அடி....

    ReplyDelete
  26. வழக்கம்போல
    எல்லா ஆண்களையும் போல
    புன்னகைத்ததற்கான பொருள் புரியாது
    தனது முதல் முத்தத்தில்
    தனது முதல் பேரைண்ப்பில்
    அவள் நிலைகுலைந்து போனாள் என
    ஆண்மைகுரிிய கம்பீரத்தோடு
    அவளை அள்ளிக்கொண்டான் "விபச்சாரர்"

    தலைப்பே தலையில் அடித்ததை போல உணர்ந்தேன்

    உங்களின்
    கருத்து கோர்வையும்
    சமூக பார்வையும் ...................அருமை

    ReplyDelete
  27. அதெப்படி ரமணி சார் ,
    பெண்களின் மனநிலையை இப்படி புட்டு புட்டு வைக்கிறீர்கள் ?
    ஒத்திகை முத்தம் , யார் சொல்லி யேனும் , பெறவேண்டியதை,
    நிலைகுலைதல் ..... போன்றவை போற்ற வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  28. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    மிகச் சரியாக புரிந்து கொள்ளப்படுபவர்களால்தான்
    கல்லாகக் கிடக்கும் அகலிகைக் கவிதை கூட
    சாப விமோச்சனம் பெறுகிறது

    ReplyDelete