Sunday, April 10, 2011

வறிய புலவனும் செல்வ அறிஞனும்

"இப்பவெல்லாம் அதுகிட்ட
சிரிச்சு பேசுறதே இல்லை
கிட்ட வந்தாலே
திட்டி திட்டித்தான் வெரட்டுறேன்
எப்படித்தான்
தள்ளித் தள்ளிப் போனாலும்
இந்தச் சனியன் மட்டும்
எப்படியோ
உள்ள வந்து தொலைக்குது"என
அடிவயிற்றைக் காட்டி புலம்புகிறாள்....
வீட்டில் இரண்டை விட்டுவிட்டு
இடுப்பில் ஒன்றை இடுக்கிக்கொண்டு
கைபிசைந்து    நிற்கும்
குப்பத்து முனியம்மா

வாரந்தோறும் விரதம் இருந்தும்
தான தருமங்கள் ஆயிரம் செய்தும்
விதம்விதமாய் வேண்டுதல்கள் செய்தும்
தரிசாய் கிடக்கும்
தன் அடிவயிரைத் தடவி
மனம் நொந்துச் சிரிக்கிறார்
கைராசிக்காரி என புகழ்பெற்ற
லட்சாதிபதி டாக்டரம்மா

17 comments:

  1. கண்கூடாகக் கண்ட காட்சி கவிதையாக !!

    ReplyDelete
  2. கலக்கிட்டீங்க சிம்பிளாக.....
    ஆனால் மனசு வலிக்கத்தான் செய்யுது...

    ReplyDelete
  3. //தரிசாய் கிடக்கும்
    தன் அடிவயிரைத் தடவி
    மனம் நொந்துச் சிரிக்கிறார்
    கைராசிக்காரி என புகழ்பெற்ற
    லட்சாதிபதி டாக்டரம்மா//

    எதுக்கும் தெய்வ அனுக்கிரகம் வேணும் இல்லையா குரு...

    ReplyDelete
  4. யதார்த்தம் நிறைந்த நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அன்புள்ள ஐயா,
    “புறமும் அகமும்” என்ற ஒரு தலைப்பில் ஒரு படைப்பு என் டேஷ்போர்டில் மட்டும் தெரிகிறது. ஆனால் உள்ளே புகுந்தால் புறமும் தெரியாமல் அகமும் தெரியாமல் அவதிப்படுத்துகிறது.
    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    குப்பத்து முனியம்மாவின் புலம்பல் மிகவும் யதார்த்தம் [என்னவளின் அந்தக்காலப்புலம்பல் போலவே].


    ’மனம் நொந்துச் சிரிக்கும் கைராசிக்காரி என புகழ்பெற்ற லட்சாதிபதி டாக்டரம்மா’ என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்டதாக இருப்பினும், கவிஞரின் கவிதையின் அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலனாகவே தெரிகிறது.

    நான் மிகவும் ரசித்த, அருமையான படைப்பு.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  6. அன்பார்ந்த பதிவுலக வை.கோ அவர்களுக்கு
    தங்களின் பின்னூட்டம் எப்போதும் எனக்கு
    எழுத நல்ல ஊட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறது
    அதற்காக எனது நன்றியை முதலில்
    தெரிவித்துக்கோள்கிறேன்

    அடுத்து புறமும் அகமும் என்கிற
    பதிவைப் போடலாம் என உள்ளேன்

    கவித்துவத்தை பிரதானமாகவும்
    அடுத்துஎழுத்தாளர்களையும் பதிப்பதக்தாரையும்
    சொல்ல நினைத்த நான்
    எழுத்தாளர்களின் ஏழ்மையை முனியம்மா மூலம் மிகச் சரியாகச்
    சொல்லிவிட்டதாக உணர்ந்தேன்
    பதிப்பகத்தாரின் செல்வச் செழிப்பை(படைப்பாற்றல் அற்ற தன்மையை)
    சுட்டுக்காட்ட கொஞ்சம் கூடுதல் பில்டப் கொடுத்தேன்
    அது சரியாக செட் ஆகவில்லை என தங்கள்
    பின்னூட்டத்தின் மூலம் அறிந்து கொண்டேன்
    அடுத்த பதிவுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம்
    எடுத்துக்கொள்வேன்
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. இவைக் குறியீடா ?? அப்படி என்றால் சரியாக பொருள் கொள்ளப் படவில்லை எங்களால்

    ReplyDelete
  8. DEAR RAMANI SIR, I WAS NOT ABLE TO IDENTIFY MUNIYAMMA WITH WRITERS, OR DOCTOR WITH PUBLISHERS AFTER READING YOUR POST. EVEN AFTER READING YOUR REPLY TO VGK, I WAS NOT ABLE TO UNDERSTAND THE EQUATION. SOMETHING WRONG WITH ME.?

    ReplyDelete
  9. வித்தியாசமான கவிதையாக இருக்குது. Irony in few people's life.

    ReplyDelete
  10. //தரிசாய் கிடக்கும்
    தன் அடிவயிரைத் தடவி
    மனம் நொந்துச் சிரிக்கிறார்
    கைராசிக்காரி என புகழ்பெற்ற
    லட்சாதிபதி டாக்டரம்மா//
    கலக்கிட்டீங்க .....

    ReplyDelete
  11. "சந்தான லக்ஷ்மியும் மஹா லக்ஷ்மியும்" கவிதை சூப்பர். நன்றாக உள்ளது சார். யதார்த்தம் ததும்புகிறது. ;-))

    ReplyDelete
  12. எல்லோருக்கும் குடுப்பினை இருப்பதில்லை தானே. நல்ல கவிதை.

    ReplyDelete
  13. எதற்கும் அதிஷ்டம் வேணும்ன்னு சொல்லுவாங்க.அதான் இது !

    ReplyDelete
  14. நல்லா இருக்கு வரிகள்

    ReplyDelete
  15. ரமணி சார் நானும் தங்களது சுட்டிக்காட்டலை தங்கள்
    பார்வையில் பார்க்கவில்லை.மன்னித்துக் கொள்ளுங்கள்.
    தாங்கள் வை கோ சாருக்கு அளித்த பதிலுக்குப் பின் மீண்டும் படித்தபின்பே புரிந்து கொண்டேன்

    ReplyDelete
  16. //பதிப்பகத்தாரின் செல்வச் செழிப்பை
    (படைப்பாற்றல் அற்ற தன்மையை)
    சுட்டுக்காட்ட கொஞ்சம் கூடுதல் பில்டப் கொடுத்தேன்//

    எல்லாமே புரிந்து கொண்டேன்.
    இதில் எந்தத்தவறும் கிடையாது, சார்.

    கவிதைக்கு அழகும், கருத்து வலிமையும் கொடுத்திட இது போல சற்று பில்டப் கொடுத்தே ஆக வேண்டும்.

    கவிஞர்களுக்கு இதில் எல்லாவித உரிமைகளும், சிறப்புச் சலுகைகளும் காலங்காலமாகக் கொடுக்கப்பட்டுத்தானே வருகின்றன.

    நீங்கள் தொடர்ந்து உங்கள் பாணியிலேயே எழுதவும்.

    அதில்தான் உண்மையான ரசனையை நாங்கள் அனுபவிக்க முடியும்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  17. : இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete