Monday, June 27, 2011

எல்லோரும் கவிஞர்களே


சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா

இனிய நினைவில் தனித்து இரவில்
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-அந்த
ராமா நுஜர் போல  நீயும்
உரத்துக்  கதற மாட்டியா

விதையாய் கவிதை அனவரி டத்தும்
வீணே  கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே  விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில்  குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரிந்து போனாலே -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே



25 comments:

  1. ஆஹா அழகு கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப அழகாயிருக்குது கவிதை..

    ReplyDelete
  3. பேஷ்...பேஷ்...ரொம்ப நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  4. உணர்வை சொல்லில் குழைத்துப் பார்க்கும் நுட்பம் புரிந்து போனாலே உனது உதடு உதிர்க்கும் எல்லாச் சொல்லும் கவிதை என்றே ஆகுமே.......அவ்வளவு எளிதா கவிதை எழுதுவது.? இருக்கலாம் எல்லோரும் ரமணி மாதிரி இருந்தால்...எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. குரு இதையெல்லாம் எங்கே இருந்து பிடிக்கிறீங்க பொறாமையா இருக்கு எனக்கு....!!!

    ReplyDelete
  6. பாரதியார் பாடல் மாதிரி கவிதை சூப்பரா இருக்கு குரு.....

    ReplyDelete
  7. இயல்பான நடையில் வார்த்தைகள் துள்ளிக் குதித்து வருகின்றன. தாள லயத்தில் உள்ள கவிதை நன்று.

    ReplyDelete
  8. பாடல் போல கவிதை போகிறது வாசிக்க வாசிக்க இனிமை

    ReplyDelete
  9. விதையாய் கவிதை அனவரி டத்தும்
    வீணே கொட்டிக் கிடக்குது
    விரைந்து வெளியே விளைந்து வரவே
    நாளும் ஏங்கித் தவிக்குது
    உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
    நுட்பம் புரிந்து போனாலே -உனது
    உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
    கவிதை என்றே ஆகும .

    நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
    நுட்பம் புரிந்து போனாலே -உனது
    உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
    கவிதை என்றே ஆகுமே. உணர்வுப் பூர்வமாக உதடுகள் பேசினாலே கவிதைதான். . .அருமையான வரிகள் sir. . .

    ReplyDelete
  11. கவிதை நல்லாயிருக்கு

    ReplyDelete
  12. படிக்கும்போதே குதித்துக் கும்மாளமிட்டபடி நடனமாடி வரும் கவிதை வரிகள். மிகவும் அருமையாக வித்யாசமாக எழுதப்பட்டுள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமையான கவிதை.

    ReplyDelete
  14. சூப்பெர்ப் கவிதை ரமணி சார்! ;-))

    ReplyDelete
  15. கவிதை அருமை.
    உங்கள் வலைப்பூ திறக்க நேரம் எடுக்கிறது. என்ன காரணமோ?

    ReplyDelete
  16. கவிதையின்
    கருவை
    சிந்தனையில்
    சுமந்து
    பிரயோகிக்காமல்
    பிரசவிக்காமல்
    சிதைந்து போகும்
    சீர்மிகு எண்ண
    சிதறல்களை
    சிறப்பாய் எடுத்துரைக்க
    சிகரமாய் நின்று
    சொல்லிய கவிதை வரிகள்
    ஆஹா
    அமர்க்களம் சார்

    ReplyDelete
  17. இப்படியெல்லாம் கவிதை நீங்க எழுதினா
    நாங்க ரசிச்சு படிக்க மாட்டோமா?

    ரசிச்சு ரசிச்சு கருத்து போட மாட்டோமா?

    நன்று நன்று என்றே குதிக்க மாட்டோமா?

    ************************

    ஆனால் உங்க ப்லாக் ஓப்பனாகி நான் கருத்து போடறதுக்குள்ள
    நீங்க அடுத்ததையே ரிலீஸ் பண்ணிடுவீங்க போலருக்கே.
    ஏன் உடனே ஒப்பனாக மாட்டேங்குது?

    ReplyDelete
  18. இனிய பாடலாய் கவிதை.

    ReplyDelete
  19. விதையாய் கவிதை அனவரி டத்தும்
    வீணே கொட்டிக் கிடக்குது
    விரைந்து வெளியே விளைந்து வரவே
    நாளும் ஏங்கித் தவிக்குது
    உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
    நுட்பம் புரிந்து போனாலே -உனது
    உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
    கவிதை என்றே ஆகுமே
    arputham
    aththanaiyum supper

    ReplyDelete
  20. சொல்ல வந்த கருத்துகளை-நீர்
    சொல்லு கின்ற விதமே
    வெல்லம் தன்னை பாவாக்கி-காச்ச
    வேண்டி யுள்ள பதமே
    உள்ளம் மகிழ வைத்தீர் -கவிதை
    உருவம் தன்னை யமைத்தீர்
    பள்ளம் கண்ட நீராய்-தமிழ்
    பயிர் வளர்க்கும் வேராய்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. அழகிய சொல்லெடுத்து
    அதனை அடுக்கிகோத்து
    அருமையாய் கவிதையை
    அன்பாய் சொன்ன பாடல்
    அனைவர் நெஞ்சிலும்
    அமிர்தமாய் இனித்தது.

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  22. காணும் காட்சி எல்லாம்
    கனவு போலத் தானே
    தண்ணீர் மேலே போட்ட கோலம்
    தானே வாழ்வு தானே
    True lines.

    ReplyDelete
  23. கவிதைகள் பலவிதம்
    மன உணர்வுகளை கொட்டி எழுதுவது ஒரு விதம்
    அழகிய அலங்கார வார்த்தைகளால் வடிப்பது ஒரு விதம்
    கரு கிடைத்தால் அதையே கவிதையாக்குவது ஒரு விதம்
    கண்முன் நடக்கும் நிகழ்வை கவிதையாக்குவது ஒரு விதம்
    எளிய சொற்களால் சட்டென எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பது போல் இப்படி இனிமையாக சொல்வதும் ஒரு விதம்...

    அசத்தலாய் சொல்லி விட்டீர்கள் ரமணி சார்...

    அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete