Tuesday, August 23, 2011

வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் ...

சிலைகளுக்கும் பக்தனுக்கும்
இடையில்தான் பூசாரி நிற்கிறான்
ஆதிமூலத்திற்கும் பக்தனுக்கும் இடையில்
நிச்சயமாக அவன் இல்லை
எங்கெங்கோ எதை எதையோ
தேடி அலையும் பாவப்பட்ட பக்தன்
இதை அறிந்து கொண்டால்
பகுத்தறிவும் பெருகிப் போகும்
பூசாரிக்கும் தான் மனிதன் என்று
புரிந்தும் போகும்

சில வித்தைகளுக்கும் சீடனுக்கும்
இடையில்தான் "ஆனந்தாக்கள் "இருக்கிறார்கள்
பரம்பொருளுக்கும் சீடர்களுக்கும் இடையில்
சத்தியமாக இல்லவே இல்லை
அமைதி தேடும் அறிவு ஜீவிகள்
இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்
தேடும் அமைதி இலவசமாய் கிட்டும்
போலி பீடங்கள் தகர்ந்து நொறுங்க
"ஆனந்தர்களின்" வேஷங்களும்
முழுதாய் கலையும்

எவையெல்லாம் இல்லாது
நாமிருக்க முடியாதோ
அதுவாகவே நம்மைச் சுற்றி இருப்பவனை
அடியாள்ம் காட்ட ஒரு வழிகாட்டி தேடி
நாம்தான் நாளெல்லாம் அலைகிறோம்
போலிகள் காட்டும் வழியில்
நாயாய் அலைந்து சாகிறோம்

நம் நோக்கில் நாடுகளாய்
பூமியைப் பிரித்திருத்தலைப்போல்
அந்த ஆதி மூலம் தன்னை
பத்து பதினைந்தாய் பிரித்துக் கொண்டதில்லை
கதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்
எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்

இந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்
"வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
பக்குவம் நமக்கும் வந்துவிடும்
வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்

92 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. போலிகள் காட்டும் வழியில்
    நாயாய் அலைந்து சாகிறோம்
    //
    எப்போது தெளியப்போகிறோம்?

    tm 1

    ReplyDelete
  3. கோகுல் //

    முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. போலிகள் என்று தெரிந்தே வலையில் விழுந்து விடுகிறார்கள் என்பது இன்னும் சோகம்.

    நல்ல கவிதை....

    ReplyDelete
  5. எத்தர்கள் கூட்டம் ஒழியும்???

    ReplyDelete
  6. எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
    எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்

    அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //நாம்தான் நாளெல்லாம் அலைகிறோம்
    போலிகள் காட்டும் வழியில்
    நாயாய் அலைந்து சாகிறோம்//

    சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்.
    எத்தைத்தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இன்று ஜனங்கள் உள்ளனர் என்பது உண்மை தான். அந்த அவர்களின் பலகீனத்தை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு பலரும் தங்கள் பிழைப்பை ஜோராகவே நடத்தி வருகின்றனர்.

    இந்த உண்மையை எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு கொள்ள வைக்கும் அருமையான கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

    ReplyDelete
  8. அருமையான வரிகள்...
    நல்ல கவிதை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. வெங்கட் நாகராஜ் //


    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. நாய்க்குட்டி மனசு//


    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. Rathnavel //

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. ////கதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்
    எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
    எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்// சொல்ல வந்த கருத்துக்கள் புரிகிறது ஐயா.
    எல்லாம் அறியாமை என்று சொல்வதா..
    இல்லை அமைதியை தேடி போலிகளிடம் சிக்கி கொள்கிறோம் என்பதா?

    ReplyDelete
  13. பூசாரி யார் என்றால் 'பக்தனுக்கு கடவுளுக்கும் தொடர்பை எற்ப்படுத்து கொடுப்பவன்' என்பார்கள். அப்போ பூசாரிக்கும் கடவுளுக்கும் தொடர்பை ஏற்ப்படுத்துவது யார் என்றால் பதில் இருக்காது !!! இவ்வாறான அறியாமை நீங்கினாலே போதும்..

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன்

    மேலான வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  15. //வையெல்லாம் இல்லாது
    நாமிருக்க முடியாதோ
    அதுவாகவே நம்மைச் சுற்றி இருப்பவனை
    அடியாள்ம் காட்ட ஒரு வழிகாட்டி தேடி
    நாம்தான் நாளெல்லாம் அலைகிறோம்
    போலிகள் காட்டும் வழியில்
    நாயாய் அலைந்து சாகிறோம்
    // அழகாய் கவிதை புனைந்து ஆச்சரியப்படுத்தி விட்டிர்கள் சார்.வழக்கம் போல் நல்லதொரு மெசேஜ் இக்கவிதையின் மூலம்.வாழ்த்துக்கள் ரமணி சார்

    ReplyDelete
  16. உண்மை தான். "வெட்ட வெளியே மெய்" என்பது. ஒன்றுமே இல்லாததை பெரிதாக நினைத்து வாழுவதை அழகாக சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  17. சில வித்தைகளுக்கும் சீடனுக்கும்
    இடையில்தான் "ஆனந்தாக்கள் "இருக்கிறார்கள்
    பரம்பொருளுக்கும் சீடர்களுக்கும் இடையில்
    சத்தியமாக இல்லவே இல்லை


    ..... Super! சமூதாயத்தை குறித்த கருத்துக்களை , உங்கள் கவிதைகள் மூலமாக பகிர்ந்து கொள்ளும் விதம் அருமை.

    ReplyDelete
  18. ஆதிமூலத்திற்கும் பக்தனுக்கும் இடையில்
    நிச்சயமாக அவன் இல்லை/

    அற்புதமான சத்திய வாக்கு!!

    ReplyDelete
  19. இந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்
    "வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
    பக்குவம் நமக்கும் வந்துவிடும்/

    பக்குவமாய் பயனளிக்கும் வாக்கு.!

    ReplyDelete
  20. எங்கெங்கோ எதை எதையோ
    தேடி அலையும் பாவப்பட்ட பக்தன்
    இதை அறிந்து கொண்டால்
    பகுத்தறிவும் பெருகிப் போகும்
    பூசாரிக்கும் தான் மனிதன் என்று
    புரிந்தும் போகும்//

    தேடி அலையும் மனது பகுந்து ஆராயிந்தால் தெளிவு கிடைக்கும் என்பதை விளாசி தள்ளியிருக்கிறீர்கள்...சகோதரரே

    ReplyDelete
  21. இந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்
    "வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
    பக்குவம் நமக்கும் வந்துவிடும்
    வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
    எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்//

    உண்மை தான் சகோதரரே நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. பரமாத்மாவை அடையாளம் காண ஜீவாத்மாவுக்கு பாவாத்மாவின் உதவி எதற்கு?

    தனக்கு பிடித்த வகையில் பிரார்த்திப்பதே ஒரே வழி என்பதை புரிய வைத்ததற்கு நன்றி!

    ReplyDelete
  23. வாழ்வியல் பேசும் கவி

    ReplyDelete
  24. மிகவும் நல்லதொரு கவிதை, ஏன் மன ஓட்டத்தை பிரதி பலித்து இருந்ததாலோ என்னோவோ இந்த கவிதை எனக்கு ரெம்ப புடித்துவிட்டது..

    ReplyDelete
  25. உங்கள் கவிதையே என் கருத்தும்.
    அதைவிட உண்மையான பக்தன், உண்மையாக கடவுளை நம்புகின்றவன், உண்மையாக கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவன், கடைசி வரை கண்டிப்பாக சாமியாரையோ புசாரியையோ நம்பி போகமாட்டான், கடுவுள் மேல் நம்பிக்கை இருந்தால் இடையில் இவர்கள் உதவி அவனுக்கு எதற்கு....

    ReplyDelete
  26. நான் எழுத்தில் நீங்கள் கவிதையில். நல்லாயிருக்கு.

    ReplyDelete
  27. நண்டு @நொரண்டு -ஈரோடு//

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. ஸாதிகா //

    மேலான வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  29. கந்தசாமி.//.

    மேலான வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  30. மாய உலகம் //

    மேலான வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  31. Chitra //

    மேலான வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  32. இராஜராஜேஸ்வரி//

    மேலான வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  33. ரம்மி //

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. ஷீ-நிசி//

    மேலான வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  35. கற்றது தமிழ்" துஷ்யந்தன்//


    மேலான வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  36. JOTHIG ஜோதிஜி//

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. பரம்பொருளும் இல்லை என்று எப்பொழுது புரியும் என்ற ஏக்கம்.

    ReplyDelete
  38. கதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்
    எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
    எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்//

    போலிகள் காட்டும் வழியில்
    நாயாய் அலைந்து சாகிறோம்/

    அருமை...
    கருத்தாளம் மிகுந்த கவிதை...

    ReplyDelete
  39. அப்பாதுரை //

    வரவுக்கும் மேலான கருத்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. vidivelli//

    மேலான வரவுக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  41. ”"வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
    பக்குவம் நமக்கும் வந்துவிடும்
    வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
    எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்”

    விழிப்புணர்வூட்டும் வரிகள். நல்லதொரு கவிதை.

    ReplyDelete
  42. வணக்கம் அண்ணாச்சி,

    மனிதர்களுக்கு எத்தகைய புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  43. அருமையான சொல்லாடல்..
    பாராட்டுகள்..

    ReplyDelete
  44. பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருக்கவேண்டிய பூசாரி, நமக்காகக் கடவுளிடம் தூது செல்பவன் என்று நம்பப் படுபவன் பாவப்பட்ட காரியங்கள் செய்யும்போது விரக்தி ஏற்படுவது நியாயமே. நம்பிக்கையுள்ளவர்கள் சிலையைக் கல்லாக நினைப்பதில்லை. மனசையும் சிந்தனையையும் ஒருமைப் படுத்தி லயிக்க வைக்க ஒரு ஏற்பாடு என்பதே நிஜம். வெட்ட வெளி மெய்யென்று உணர்தல் சாமானியனுக்கு சாத்தியமில்லாததால்தான் உருவ வழிபாடும் பிரார்த்தனைகளை கடத்திச்செல்ல பூசாரிகளும். கல்லுக்கும் புற்றுக்கும் பாலூற்றி மகிழ்ந்து பரம்பொருளில் லயித்தல் ஒரு வழி. மனசை ஒருமுகப்படுத்த ஏற்படுத்த வேண்டிய நம்பிக்கைகள் அறிவுக்கு ஒவ்வாது அனுஷ்டிக்கப்படும்போது எச்சரித்தல் அவசியம். அதனை உங்கள் பதிவு செவ்வனே செய்திருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  45. //நாம்தான் நாளெல்லாம் அலைகிறோம்
    போலிகள் காட்டும் வழியில்
    நாயாய் அலைந்து சாகிறோம்//
    மெய் ஞானத்தை தேட யாருடைய உதவியும் தேவையில்லை. அதை நாமேதான் உணர முடியும்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  46. ஆழ்ந்த சிந்தனை வரிகள் ரமணி சார்…. திரும்ப திரும்ப படிக்கிறேன்… இத்தனை நுணுக்கமாய் சிந்திக்கவைத்த வரிகள் பார்த்ததும் எனக்கு என்னென்னவோ நினைவு வந்துவிட்டதை தவிர்க்கமுடியவில்லை…
    எதைத்தேடி மனிதன் இப்படி ஓடுகிறான் கோவிலுக்கு? ஸ்வாமி தரிசனம் பார்க்கவா? வீட்டில் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து அன்புடன் அவர் பாதம் பணிந்தாலே பரமன் பாதம் பணிந்ததற்கு ஒப்பாகுமே…
    திருப்பதி பெருமாளை தரிசிக்க போகும்போது கூட்டம் அலைமோதும் பாருங்க….தெய்வபக்தியுடன் வரும் பக்தர்களுக்காக மட்டுமே கோவிலில் அனுமதி தரப்படும் அப்டின்னு போர்ட் வெச்சால் கண்டிப்பாக பத்து பர்செண்ட் மக்கள் கூட கோவிலுக்கு உள்ளே போகமுடியுமா? சந்தேகம் தான்…சிலைக்கும் பக்தனுக்கும் இடையில் தான் பூசாரி நிக்கிறான்னு சொல்லி நச்னு அடிச்சீங்க பாருங்க ஜனங்களை அசத்தல் இந்த இடம் மிக அருமையான இடம் ரமணி சார்… தெய்வ தரிசனம் செய்ய வந்தபின் ஏன் அதிக காசு கொடுத்து ஸ்பெஷல் தர்ஷன் செய்யனும்? அப்ப அங்க பார்ப்பது தெய்வத்தையா இல்லை சிலையையா? நச் நச்….
    பக்தி இருக்கலாம் ஆனால் அந்த பக்தி ஒருவனை உயர்த்தவேண்டுமே அன்றி அங்கே பிரிவினை உண்டாக்கவோ முட்டாள்தனமான செயல்களுக்கு வித்தாகவோ இருக்க கூடாது.. கூடவே கூடாதுன்னு சொல்லி நீங்க சொன்ன உதாரண ஆனந்தாக்கள் இன்னமும் உலகில் இத்தனை அசிங்கம் நடந்தப்பின்னரும் உலவுகின்றனர்னா அதுக்கு காரணம் மக்கள் கொடுக்கும் இன்னும் அதே மரியாதையும் தான் காரணம்… அது மட்டுமா இப்பவும் ஜனங்க இப்படி போலிச்சாமியார்களை தேடி ஓடிக்கொண்டு தான் இருக்கிறது… புண்ணியங்களை சேர்க்க வழி அறியாத மக்கள் தம் பிரச்சனைகளை டெம்பரரியாக தீர்க்கும் இடம் தேடி ஏராளமாக செலவும் செய்கிறார்கள்…

    உங்க கைல சாட்டை இருக்கான்னு பார்க்கிறேன் ரமணி சார்….

    மக்களின் மெண்டாலிட்டி பாருங்களேன்… உலகில் எத்தனையோ மாற்றங்கள் எத்தனையோ டெக்னாலஜி டெவலப்மெண்ட் ஆனால் போலிச்சாமியார்களிடம் நம் அரசியல்வாதிகளில் தொடங்கி பாமரர்கள் வரை விழுந்து கிடப்பது வேதனை….
    அதை நீங்க நுணுக்கமா எழுதி இருப்பது மிக மிக சிறப்பு ரமணி சார்…

    அமைதியை தேடி போலிச்சாமியார்கள் கிட்ட ஓடுறாங்க ஒரு சிலர்…. வாழ்க்கையில் வெற்றியை தேடி ஒரு சிலர்…. பணத்துக்காக ஒரு சிலர், புகழுக்காக ஒரு சிலர், பிள்ளை வரம் வேண்டி ஒரு சிலர்… இப்படி போறவங்க எல்லார்க்கிட்டயும் ஒரு குறை இருப்பதை பலவீனங்கள் இருப்பதை போலிச்சாமியார்கள் தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க…. ரத்தத்தை உறியும் அட்டையைப்போல் அவங்க எதைத்தேடி ஓடினாங்களோ அதன் மிச்சத்தையும் உறிந்துவிட்டு துப்புகிறார்கள்….

    உண்மையான பக்தி என்பது என்னவென்று மிக அற்புதமா தெளிவா இயல்பா சொல்லி இருக்கீங்க ரமணி சார்…. தன்னுள் தன்னைத்தேடி உணர்பவனே வாழ்வில் உயர்பவன்… எதையும் வேண்டாது பக்தியுடன் இருப்பவனே முக்தியை அடைபவன்….

    ஏழு தலைமுறைக்கு சொத்து வைத்திருக்கும் பணம் படைத்தவன் தானதர்மங்கள் செய்து ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றுபவனே இறைவனாகிறான்… அமைதியை தேடுபவன் அன்பை பரிமாறினாலே போதுமே உலகமே சுபிஷமடையுமே…

    தகாத செயல்களை செய்து பாவங்களை சேர்த்துக்கொள்பவர் இது போன்று சாமியார்களிடம் போய் பணத்தைக்கொட்டி இன்னமும் அதிக பாவங்கள் செய்கிறார்கள்…

    இறைவன் தன்னை பிரித்துக்கொண்டதில்லை நாட்டை நாம் துண்டுகளாக பிரிச்சது போல… மனிதன் தான் தன் சுயநலத்திற்காக இறைவனையும் பங்கு போட்டான்… அசத்தலான வரிகள் ரமணி சார்…

    மெய் உணர்தலை மிக அருமையா முடிச்சிருக்கீங்க.. கடைசி பத்தி மிக அசத்தல்…. மனிதன் இதை உணர்ந்து போலிச்சாமியார்களை புறக்கணித்தால் தான் அந்த கூட்டமும் ஒழியும்.. நல்லதும் நடக்கும்…

    எல்லோரையும் இந்த கவிதை மூலம் சிந்திக்கவைத்துவிட்டீர்கள்… இதுவே உங்க கவிதைக்கு கிடைக்கும் வெற்றி ரமணி சார்…

    சிறப்பான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துகள் ரமணி சார்….

    ReplyDelete
  47. எதையும் வேண்டாத ஸ்வாமிகள் அன்று ஒரு காலத்தில் இருந்தனர்.... ரமண மகிரிஷி, ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஷீர்டி பாபா இப்படி.... ஹூம் இனி அது போன்ற காலம் வருமா தெரியவில்லை....

    ReplyDelete
  48. தமிழ் மணம் 17 போலிகளை துகிலுரிக்கும் தங்கள் கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  49. கோவை2தில்லி//

    மேலான வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  50. நிரூபன்//
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. G.M Balasubramaniam //


    மேலான வரவுக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  52. வேடந்தாங்கல் - கருன் *! //

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. RAMVI //

    மேலான வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  54. M.R said...//

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. அன்பார்ந்த மஞ்சுபாஷிணி அவர்களுக்கு
    உண்மையில் தங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் இடுகிற
    பின்னூட்டங்கள் ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது
    ஏனெனில் நீங்கள் எப்படி விரிவாக பதிவைக் குறித்து
    பின்னூட்ட்டமிடுகிறீர்களோ அதையெல்லாம்
    யோசித்துத்தான் நான் பதிவே எழுதி இருப்பேன்
    அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கி
    பதிவாக்கியிருப்பேன்
    நீங்கள் அதையே விரிவாக்கித் தரும்போது எனக்கு
    ஆச்சரியமாகிப் போகிறது.இத்தனை மைல்களுக்கு அப்பால்
    ஒரு ஒத்த சிந்தனை என்பது ஆச்சரியமான விஷயமாகவே உள்ளது
    பதிவை விட உங்கள் பின்னூட்டங்களை விரும்பிப் படிக்கிற
    பதிவர்கள் எண்ணிக்கை அதிகமானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை
    விரிவான தெளிவான மிகச் சரியான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. அருமையாக சொல்லியுள்ளீர்கள் அண்ணே ...

    நம்முள்ளும் இருக்கிறான் பரம்பொருள் ஆழ்ந்து துழாவி அலசிபார்க்க புலப்படும் அவனுள்ளம் நம்மிலும் நடை பழகு உள்ளில் உணர்வாய் பரம்பொருளானவரை...

    ReplyDelete
  57. தினேஷ்குமார் //

    மேலான வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    வாக்குக்கும் நன்றி

    ReplyDelete
  58. அன்பு நன்றிகள் ரமணி சார்... படைப்புகளை ஆழ்ந்து படிக்கும்போது இப்படி யோசித்து எழுதி இருப்பார்களா என்றும் எனக்கு தோணும்... ஆனால் எனக்கென்ன ஆச்சர்யம் என்றால் நான் அப்படி இருக்குமா என்று யோசித்து எழுதியதை ஆமாம் அப்படி தான் என்று எழுதியது தான் ரமணி சார்...

    எனக்கு நேரம் இருப்பதில்லை அதனால் எத்தனையோ படைப்புகள் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கிறேன் எப்போது நேரம் வரும் பதிவிட என்று...சுருக்கமாக நான் பதிவிட்டிருந்தால் கண்டிப்பாக நேரமின்மையே காரணமாக இருக்கமுடியும்.. ஆனால் இந்த எக்ஸ்க்யூஸ் எப்பவும் எடுத்துக்கிறதில்லை எப்பவாச்சும் தான் :)

    அதென்னவோ படித்ததை முழுமையாக பகிரும்போதே எனக்கு ஒரு ஆத்ம திருப்தி... படைப்பாளிக்கு இதை விட சந்தோஷம் வேறென்ன இருக்கமுடியும்? அட நாம எப்படி நினைப்பதை சொல்லமுடிகிறதே பின்னூட்டத்தில் அப்டின்னு படைப்பாளி நினைக்கும்போது நாம் சரியாக படித்து கருத்திட்டிருக்கிறோம் என்ற ஆத்ம திருப்தி இருக்கும் எனக்கும்...

    ReplyDelete
  59. நல்ல வளமான கருத்துக்கள்
    வரிதோறும் வந்துள்ளன
    ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக
    ஆண்டவன் முதல் அரசியல் வாதிவரை
    இடைத் தரகர்களே காரணமாவார்
    நன்றி!நண்பரே நலமா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  60. விக்கியுலகம்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. சுட்டெரிக்கும் வரிகள் ..ஒரு நிஜம் எனில் ஒரு போலி இருக்கத்தான் செய்கிறது..

    ReplyDelete
  63. கோவை நேரம்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. உங்களின் பதிவு, மஞ்சுபாஷிணி அவர்களின் பின்னூட்டம் சூப்பர் சார். இதெல்லாம் Heavy dose என்று நினப்பேன். ஆனால் உங்கள் வாசகர் வட்டம் ஒரு சிந்தனைக் குழுமம்.

    ஒருமுறை திருப்பதிக்குச் சென்று கோவில் வாசலில் நின்று எனக்கும் அவருக்கும் இடையில் யாருமில்லை என்ற எண்ணம் ஓங்கிடவே ஒரு நமஸ்காரத்துடன் கிளம்பி வந்து விட்டேன்.

    கவனிக்க வேண்டிய விஷயம் என் முழுப்பெயர் "வெங்கடாசலபதி"

    மிக மிக சிறந்தப்பதிவு, லேட்டா வந்து அத்தனை பின்னூட்டங்களையும் படித்த பாக்கியம் கிடைத்தது.

    ReplyDelete
  65. நான் பெரும்பாலும் பதிவுகளையும், கண்ணில் படும் சில கருத்துகளையும் படிப்பது வழக்கம்.

    கவிதையும் அருமை, மஞ்சுபாஷினி அவர்களின் கருத்தும் அருமை.

    ReplyDelete
  66. தேடி அலையும் பாவப்பட்ட பக்தன்
    இதை அறிந்து கொண்டால்
    பகுத்தறிவும் பெருகிப் போகும்
    பூசாரிக்கும் தான் மனிதன் என்று
    புரிந்தும் போகும்

    சில வித்தைகளுக்கும் சீடனுக்கும்
    இடையில்தான் "ஆனந்தாக்கள் "இருக்கிறார்கள்
    பரம்பொருளுக்கும் சீடர்களுக்கும் இடையில்
    சத்தியமாக இல்லவே இல்லை
    அமைதி தேடும் அறிவு ஜீவிகள்
    இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்
    தேடும் அமைதி இலவசமாய் கிட்டும்.
    உன்மையில் கடவுள் என்பவர் உணர்தலில் இருக்கின்றார். கட உள். உனக்குளே கடந்து செல் என்பதன் பொருள் புரியாமல். பலரும் வெளியில் தேடி அழைகின்றனர். அருமையான படைப்பு. . .

    ReplyDelete
  67. VENKAT //

    தங்கள் மேலான வரவுக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. பிரணவன் //.

    தங்கள் மேலான வரவுக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. பலே பிரபு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. ஆதங்கம் வெளிப்படுத்தும் வரிகளில் புதிந்திருக்கிறது ஆனந்தம். ஆனந்தாக்களை அகற்றிவிட்டால் அங்கிருந்தே துவங்கும் நம் அன்பு ராஜாங்கம். பிரமாதம். வாழ்த்துக்கள் ரமணி சார்.

    ReplyDelete
  71. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. இந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்
    "வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
    பக்குவம் நமக்கும் வந்துவிடும்
    வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
    எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்
    >>
    ஆனால், நமக்கு அந்த பக்குவம் எப்போ வரும் ஐயா! இல்லை, வராமலே போய்விடுமா?

    ReplyDelete
  73. ராஜி//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. //எவையெல்லாம் இல்லாது
    நாமிருக்க முடியாதோ
    அதுவாகவே நம்மைச் சுற்றி இருப்பவனை
    அடியாள்ம் காட்ட ஒரு வழிகாட்டி தேடி
    நாம்தான் நாளெல்லாம் அலைகிறோம்//

    fantastic.no words to say.....

    thank u Ramani sir

    ReplyDelete
  75. raji //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. ''..வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
    பக்குவம் நமக்கும் வந்துவிடும்
    வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
    எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்..''
    மிகவும் தத்துவமான இடுகை! நல் வாழ்த்துகள்!.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  77. வணக்கமையா இவ்வளவு தாமதத்துக்கு மன்னின்ன.. நான் டெலிபோனில்தான் அதிக பதிவுகளை பார்பது டெம்பலேட்டை பார்பதில்லை அதனால் உங்கள் பதிவுகளை உடனுக்குடன் படிக்க முடிவதில்லை.. இப்போதுகூட நீங்கள் எனக்கு இட்ட பின்னூட்டத்தை பார்த்த பின்பே நான் உங்கள்ளை மறந்து விட்டேனேன்னு ஓடி வந்தேன்.. சகோதரி மஞ்சு அருமையான பின்னூட்டம் இட்டுள்ளார்... நீங்கள் பதிவுகள் எழுதினால் சிரமம் பாராது எங்களுக்கு மெயில் பண்ணமுடியுமாய்யா..?
    அருமையான கவிதை சமூகத்தின் போலிகளை தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்., வாழ்துக்கள் ஐயா..

    காட்டான் லேட்டா குழ போட்டான்..

    ReplyDelete
  78. காட்டான் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  79. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. தேடும் அமைதி இலவசமாய் கிட்டும்
    போலி பீடங்கள் தகர்ந்து நொறுங்க
    "ஆனந்தர்களின்" வேஷங்களும்
    முழுதாய் கலையும்

    ReplyDelete
  81. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. //கதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்
    எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
    எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்//

    அதே அதே!

    ReplyDelete
  83. அன்பு நன்றிகள் வெங்கட்...

    ரமணி சார் படைப்புகள் எப்போதுமே சிந்திக்கவைக்கும்படி இருப்பதால் தான் இப்படி பின்னூட்டமும்பா....

    அதற்கு நான் தான் ரமணி சாருக்கு நன்றிகள் சொல்லவேண்டும்...

    ReplyDelete
  84. சத்ரியன்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  85. பகுத்தறிவும் பெருகிப் போகும்
    பூசாரிக்கும் தான் மனிதன் என்று
    புரிந்தும் போகும்//

    இந்த ஆக்கம் உளபூர்வமான எமது பாராட்டுகளையும் அதே வேளை சிறந்த ஒரு பதிவினை இப்படி தொடர்ந்து வழங்குவது இந்த குமுகம் ஒரு மாற்றத்தை ஏண்டி நிற்கும் நியத்தில் நல்ல மதிப்பினை பெறுகிறது நன்றி .

    ReplyDelete
  86. மாலதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  87. எவையெல்லாம் இல்லாது
    நாமிருக்க முடியாதோ
    அதுவாகவே நம்மைச் சுற்றி இருப்பவனை
    அடியாள்ம் காட்ட ஒரு வழிகாட்டி தேடி
    நாம்தான் நாளெல்லாம் அலைகிறோம்
    போலிகள் காட்டும் வழியில்
    நாயாய் அலைந்து சாகிறோம்

    உண்மையின் தரிசனம் அருமை .
    தங்கள் கவிதைகண்டு மகிழ்ந்தேன்
    நன்றி ஐயா பகிர்வுக்கு ......

    ReplyDelete
  88. அம்பாளடியாள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  89. எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
    எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்

    இடைத்தரகர்கள் தேவையில்லைதான். அருமையாய் வலியுறுத்திய விதம் என்னைக் கவர்ந்தது.

    ReplyDelete