Sunday, August 28, 2011

நினைவுகூறல் கடமை அல்லவா

ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்

குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா

பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா

திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா

இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா

(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)

75 comments:

  1. Montessori க்கு கவிதை எழுதிய முதல் ஆள் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். அவரின் மூலம் பிஞ்சுகளுக்கு பள்ளியும் கல்வியும் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது அழகு.

    பாராட்டுகள். வாழ்த்துகள். :-))

    ReplyDelete
  2. திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
    புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது//

    நீங்கள் சொல்லிய விதத்திலே எவ்வளவு அன்பு உள்ளம் படைத்தவர் இந்த அன்னை மரியா அவர்கள் என்பது தெரிகிறது... கண்டிப்பாக இந்த அன்பு உள்ளம பிறந்த தினத்தை திருவிழாவாகத்தான் கொண்டாட வேண்டும்... பகிர்வுக்கு நன்றி சகோதரரே...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
    புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
    அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா!!!

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. வீடுகளே இன்று பெற்றோர் நடத்தும் கல்விக் கூடங்களான காலத்தில்..

    பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
    குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே

    என்ற மேதையைப் பற்றி அறிதல் காலத்தின் தேவைதான் ...

    அறிவுறுத்தியமைக்கு நன்றிகள் அன்பரே.

    ReplyDelete
  5. நாம் படிக்கும் போது பள்ளிகள் இருந்த நிலை நன்றாகத்தான் இருந்தது! கூட்டம் இல்லை! அதனால் போட்டி இல்லை!போட்டிகள் அதிகரித்ததால் திறமையை வளர்த்துக் கொள்ள, விளையாட்டுப் பருவத்திலேயே, வயதானவரின் அளவு பளு, குழந்தைகளின் முதுகில் ஏற்றப்பட்டு விட்டது!

    ReplyDelete
  6. எனக்கும் RVS கருத்தே தோன்றியது..

    ReplyDelete
  7. மாண்டி சோரிக்கு கவிதையா ...வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. //பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
    குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே//

    நல்ல கருத்து. அருமையான கவிதை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
    குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே //

    இதை உணர வைத்த மரியா மாண்டிசோரி யை இந்நாளில் நினைவு கூர்ந்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றியும்!பாராட்டுக்களும்!

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி

    தமிழ்மனம் 7

    ReplyDelete
  11. //பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
    குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
    எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-//
    அருமை.

    மாண்டிசோரிக்கு கவிதை.. புதுமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. RVS //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. மாய உலகம்//

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. ரம்மி//

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. அப்பாதுரை //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. நண்டு @நொரண்டு -ஈரோடு//

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. நாராயணன் (இனிய உளவாக) //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. கோகுல் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. Riyas //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. RAMVI //
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. சரியான நேரத்தில வந்த சரியான கவிதை

    ReplyDelete
  23. // இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
    தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
    சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை

    இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா//

    இன்றைய, மாண்டிச்சேரி பள்ளிகளை
    நடத்துவோர் அனைவரும் அறிந்து கொள்ள
    வேண்டிய அவசியமானது இவ் வரிகள்
    ஆனால் இன்று அவைகள் வெறும்
    பொருள் ஈட்டும் நோக்கோடு நடத்தப்படுவதே
    மிகவும் கொடுமை!
    நல்ல நேரத்தில் நல்லவர் ஒருவரை உரிய வகையில்
    உயர்ந்த கருத்தில் நினைவு கூர்ந்து எழுதிய
    தாங்கள் பெருமைக்கு உரியவராவீர்
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. "மாண்டிசோரி" - பிறந்த நாள் கவிதை... மிகவும் நன்றாக இருந்தது. மண்ணை மைனர் மற்றும் அப்பாதுரை அவர்கள் சொன்னது போல அது பற்றிய முதல் கவிதை உங்களுடையது தானாக இருக்கும்...

    ReplyDelete
  25. அண்ணே அருமையா சொல்லி இருக்கீங்க கவிதையாக நன்றி!

    ReplyDelete
  26. நல்லது செய்தோரை நினைவு கூறல் ஒரு வழியில் நன்றி கூறுவதற்கு ஒப்பானது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. கண்டிப்பாக இவர்களை எல்லாம் நினைவு கூறத்தான் வேண்டும். கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  28. அழகான பாடல் வரிகளில் முக்கியமாக அறிவுறுத்த வேண்டியவற்றைச் சொல்லியிருக்கின்றீர்கள். பள்ளியது தோன்றியிராவிட்டால், எல்லோரும் அம்பும் வில்லும் தூக்கிக் கொண்டே அலைந்திருப்போம். இச்சிந்தனையும் எனக்குள் உதித்தது. வாழ்த்துகள்

    ReplyDelete
  29. அருமையான கவிதை மூலம் அனைவருக்குமே அன்னாரை அறிமுகம் செய்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள். நல்லதொரு பகிர்வுகு நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
  30. முதன் முதல் Montessori அன்னைக்கு கவிதை வாசிக்கிறேன் ரமணி சார்...
    எழுதிய வரிகள் அத்தனையும் முத்துக்களாய் பிரகாசிக்கிறது....
    பள்ளி என்பது பிள்ளைகளுக்கு வதைக்கும் இடமாக இருந்துவிடக்கூடாது... கண்டிப்பு அவசியம் தான். அதே சமயம் கண்டிக்கும் குணத்துடன் பிள்ளைகளை அரவணைத்து அன்புடன் பாடம் நடத்தும் விதமும் இருக்கவேண்டும் என்று புரியவைக்கிறது உங்கள் வரிகள்....

    பள்ளி என்பது சிறையாக இல்லாமல் வீடாக அதாவது கோகுலமாக நந்தவனமாக இளைப்பாறும் சோலையாக இருக்கவேண்டும் என்பதில் இந்த மாண்ட்டிசோரி ஸ்கூல் அதிக பங்கு வகிக்கிறது என்று அறியமுடிகிறது...

    தாய் தந்தையை விட பிள்ளைகள் அதிக பொழுதுகள் கழிப்பது பள்ளியில் தான் என்பதால் குருவும் நம் பெற்றவரைப்போல.... தந்தையை போல தாயைப்போல என்றாகிவிடுகிறார்கள்....

    இரண்டு வயதிலிருந்து ஆறுவயது முதலான பருவம் குழந்தைகளுக்கு மிக மிக அற்புதமான பருவம். அதை சிதைத்துவிடாமல் கண்டித்து அடித்து துன்புறுத்தி பயமுறுத்திவிடாமல் இலகுவாக பாடம் நடத்த முதன் முதல் தொடங்கிய பள்ளியாக இந்த அன்னை நிர்வகித்த ஸ்கூல் என்று அறியமுடிகிறது ரமணி சார்....

    பிள்ளைகளின் தேவைகளை பெற்றோர்கள் பார்த்து பார்த்து செய்ய இயலும்... ஏன்னா ஒன்னு இரண்டு அல்லது மூணு பிள்ளைகளை சமாளிப்பது பெரிய சிரமம் இல்லை தானே...

    ஆனால் பள்ளியில் எனும்போது ஒரே ஒரு டீச்சர் க்ளாஸ்ல 30 பிள்ளைகளை அதுவும் வெவ்வேறு இயல்புடன் குணநலனுடன் இருக்கும் பிள்ளைகளை அவரவர் வழியில் சென்று அன்புடன் அணைத்து நடத்தும் விதத்தில் தான் அந்த பிள்ளைகளின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது....

    ஆசிரியர் என்று சொல்லும்போது பொறுப்பும், பொறுமையும், அன்பும், தாய்மையும், கண்டிப்பும், ஒழுக்கமும் கவனிக்கவேண்டிய முக்கிய பணியில் இருப்பதாக அர்த்தம்...

    பணத்துக்காக வேலை பார்க்கும் ஒரு சில ஆசிரியர்களை விட்டுவிட்டு ஆத்மார்த்தமாக பிள்ளைகளின் எதிர்க்காலத்துக்காக பாடுபடும் எத்தனையோ நல்லுள்ளம் படைத்த ஆசிரியர்களை ஆசிரியைகளை நான் அன்புடன் நினைவு கூறவைத்துவிட்டது உங்கள் கவிதை வரிகள்....

    ஆசிரியை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல பிள்ளைகளுக்கும் மனதில் இவரை பிடிக்கும் இவரை பிடிக்காது போர், நல்லா பாடம் நடத்துவாங்க...அன்பா சிரிப்பாங்க என்ற எண்ணங்கள் உண்டு என்பதை இவர்கள் அறியவேண்டும்...

    இப்ப எங்க பார்த்தாலும் பிசினசுக்காக தான் பள்ளிக்கூடம்... வியாபாரம் ஆகிவிட்ட நிலையில்... நான் என் மூத்த மகனை இப்படி ஒரு மாண்ட்டிசோரி ஸ்கூலில் சேர்க்க பட்ட பாட்டை நினைவு கூறுகிறேன்... அம்மா தான் இப்படி ஒரு பள்ளி இருக்கிறது.. இங்கே பிள்ளைகள் நிம்மதியாக சந்தோஷமாக படிக்கலாம்... என்று சொன்னதும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை...

    எங்களைப்போல வெளிநாட்டில் வாழும் பெற்றோர்களில் எத்தனையோ பேர் பிள்ளைகளை ஹாஸ்டலிலோ அல்லது உறவுகளின் வீட்டிலோ பிள்ளைகளை விடுவார்கள்... பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சிப்பதில்லை நான் உள்பட....மாண்ட்டிசோரி ஸ்கூலில் படிக்கும் பாக்கியம் என் பிள்ளைக்கு கிடைக்கவில்லை...

    ஆசிரியர்களை நம்பி தான், பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு விடுவது.... அவர்கள் தன் பிள்ளைகளாக நடத்தினாலே போதும்.. கண்டிப்பும் அவசியம்... அன்பும் அவசியம்....

    ஆசிரியப்பணி ஒரு டிவைன் ப்ரஃபஷன் ஏனெனில் என் அம்மா வீட்டில் அம்மாவின் அப்பா, அம்மாவின் அக்கா, அம்மாவின் அம்மா, அம்மாவின் சித்தி எல்லோருமே ஆசிரியப்பணியில் சிறப்பாக பணியாற்றி பிள்ளைகள் இன்றும் பெருமையுடன் நினைவு கூறும்படி தான் தன் பணியை சிறப்புடன் செய்தனர் என்பதில் எனக்கு அதிக சந்தோஷம்....

    மாண்ட்டிசோரி அன்னையால் தான் இத்தகைய அற்புதமான கல்வி வரம் பிள்ளைகளுக்கு கிடைத்தது என்பதை மகிழ்வுடன் நினைவுக்கூறவைத்துவிட்டீர்கள் ரமணி சார்....

    உங்கள் கவிதை ஒவ்வொன்றுமே ஏதேனும் ஒரு வித்தியாசத்தை வழங்குவதில் தவறுவதில்லை....
    இதோ இந்த கவிதையும் அதற்கு சான்று.....

    ஆசிரிய பெருமக்கள் அவரவர் கடமையை சிறப்புடன் செய்துவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது உறுதி....

    இங்கே குவைத்தில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய பெருமக்களை பிள்ளைகளின் பெற்றோர்களில் சிலர் கேவலமாக பார்ப்பதையும் டீச்சர்களை மிரட்டுவதையும் நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். வயதில் எத்தனை சிறியவர்களாக இருந்தாலும் ஆசிரியர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்... மரியாதையுடன் பார்க்கவேண்டும் என்பதை அறிவதில்லை... அதற்கு காரணம் குவைத் ரூல்... பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்க கூடாது என்பதே...

    நான் மாறுதலாக சொல்லிவிட்டு வருவேன்.. என் பிள்ளை தப்பு செய்தால் கண்டிக்கவும் தண்டிக்கவும் உங்களுக்கு பூரண உரிமை இருக்கிறது... நீங்க நல்லபடி மோல்ட் செய்தால் தான் என் பிள்ளை நலமுடன் படித்து வெற்றிகளோடு ஒழுக்கமும் கற்று சிறப்பான் என்பதால்.....

    அன்புடன் நினைவுகூர்ந்து கவிதை வரைந்ததற்கு அன்பு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள் ரமணி சார்....

    ReplyDelete
  31. "திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
    புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
    அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா"

    ஆமாம் சார்.
    மாண்டிசோரிக்கு ஒரு கவிதை அருமை சார்.

    ReplyDelete
  32. பாஸ் கவிதை நன்று,
    அழகான பாடல் வரிகள் போன்று உள்ளது.

    ReplyDelete
  33. வணக்கம் அண்ணாச்சி,

    மாண்டிச்சோரி அவர்களால் சிறப்பிக்கப்பட்ட கல்வி முறை, பள்ளிகளின் தரம் முதலியவற்றைப் பற்றிப் பேசும் கவிதை சிறப்பாக இருக்கிறது.

    (தவறான பின்னூட்டமாக இருந்தால் மன்னிக்கவும், இக் கவிதை பற்றிய என் புரிந்துணர்வு இவ்வளவு தான் அண்ணாச்சி, முயன்று பார்த்தேன், காத்திரமான கருத்துரையினை வழங்கும் அளவிற்கு என் சிற்றறிவிற்கு முடியவில்லை)

    ReplyDelete
  34. நாய்க்குட்டி மனசு .//.
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    விரிவான வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. வெங்கட் நாகராஜ்//

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. விக்கியுலகம்

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. G.M Balasubramaniam //


    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. Lakshmi //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. சந்திரகௌரி //


    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. கோவை2தில்லி //
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. துஷ்யந்தன்//

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. நிரூபன் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. மாண்டிச்சோரி
    பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்...

    அவர்கள் சிறுவயதிலே இருந்தே தன் வேலையை தானே செய்ய பழக்கும் விதம் எனக்கு பிடிக்கும்...உங்கள் கவிதையும் தான்...ரமணி சார்...

    ReplyDelete
  46. ரெவெரி//
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. அனைத்துப் பள்ளிகலும் வீட்டுச்சூழ்நிலைக்கு மாறிவிட்டால் நல்லதுதான். . .அருமையான படைப்பு. . .

    ReplyDelete
  48. அன்பார்ந்த சுபாஷிணி அவர்களுக்கு
    தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றி
    உண்மையில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
    மாண்டிசோரி அவர்கள் குறித்த கவிதை எழுத அவருடைய
    வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துப்பார்க்கையில்
    அவர் குழந்தைகளின் கல்விக்கான விஷயங்களில்
    12 விஷயங்களை பிரதான விஷயங்களாக முன்வைக்கிறார்.
    நான் பதிவின் நீளம் கருதி 4 விஷயங்களை மட்டும்
    எடுத்துக்கொண்டேன்,ஆனால் நான் விட்டுவிட்ட
    விஷயங்களையெல்லாம் நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில்
    மிகச் சரியாகச் சொல்லி ஆச்சரியப் படுத்திவிட்டீர்கள்.நன்றி

    ReplyDelete
  49. பிரணவன் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. இத்தனை நுணுக்கமாக விஷயங்களை கவிதையில் வரைய நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை எனக்கும் ஆச்சர்யத்தை தருகிறது.... உங்கள் கவிதை வரிகளே என்னை எழுத வைத்தது....உங்க கவிதையை பார்த்ததுமே எனக்கு முதல்ல ஷாக்.... ஏன்னா பிள்ளைக்கு தேடி தேடி இந்த ஸ்கூலுக்கு அலைந்த தினங்கள் சட்டுனு நினைவுக்கு வந்தது...

    அன்பு நன்றிகள் ரமணி சார்...

    ReplyDelete
  51. திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
    புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
    அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
    வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா


    ..... மிகவும் அருமையாக - சில கவிதை வரிகளில் - essence of education பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதம், சூப்பர்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  52. Chitra //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
    தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
    சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
    இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா//

    நிச்சயம் நினைவு கூர்வோம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  54. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. அருமையான கவிதை ,என்னுடைய வாழ்த்தும்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    t.m votted

    ReplyDelete
  56. M.R //


    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
    தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
    சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
    இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா

    உங்கள் நன்றி உணர்வைப் பாராட்டுகின்றேன் .
    தமிழ்மணம் 15

    ReplyDelete
  58. அம்பாளடியாள் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. வாழ்த்துக்கள் ஐய்யா சகோதரி மஞ்சுவின் பின்னூட்டத்தினை பார்த்துவிட்டு கவிதையை மீண்டும் வாசித்தேன் நன்றாக விளங்கிக்கொண்டேன் அருமை ஐய்யா..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  60. காட்டான் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
    புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-

    ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. இராஜராஜேஸ்வரி//

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  64. ''...திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-''
    நல்ல கவிதை. என் தொழிலின் ஆதி கர்த்தா. என்னைப் பற்றியில் காணலாம். பாராட்டுகள் சகோதரா!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  65. மனோ சாமிநாதன்

    தங்கள் மேலான வரவுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. kovaikkavi //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரரே

    ReplyDelete
  68. மாய உலகம் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. இலக்கிய தரமிக்க கவிதை. வார்த்தைகள் அழகான விளக்கம் தருகின்றன.

    ReplyDelete
  70. சாகம்பரி //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. குழந்தைகளுக்கு அவர்கள் போக்கிலேயே சென்று கற்றுக்கொடுக்கும் கல்வியே நிலைக்கும் என்பதை அழகாக உணர்த்தியவர் மாண்டிசோரி அம்மையார். அவரைப் பற்றிய கவிதையும் குழந்தைகள் பாடக்கூடிய வகையில் பாடலாகவே அமைத்தது மிகவும் சிறப்பு.

    ReplyDelete
  72. கீதா //
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
    புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-

    உண்மை. சிறப்பான வாழ்த்துப்பா.

    ReplyDelete
  74. ரிஷபன் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete