Thursday, September 8, 2011

சைத்தான் இருப்பது மெய்

                     

"சைத்தான் என்பது பொய் அப்படி எதுவும் இல்லை"
இப்படிச் சொல்பவனை தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

கரிய இருள்போர்த்தியபடி குழிவிழுந்த கண்களோடு
கோரைப் பற்களை கடித்தபடி கர்ஜித்து வரும் சைத்தான்
அழிந்து பல காலமாகிவிட்டது

முன்பு போல அவன் முட்டாள் சைத்தான் இல்லை
அவன் புத்திசாலி ஆகி பலயுகங்களாகிவிட்டது
முன்பு போல கோடாலி கொண்டு மரத்தை வெட்டி அவன்
நொந்து சாவதில்லை
மாறாக வேரை பிடுங்கி வெந்நீர் ஊற்றிவிட்டு விழுவதை
வேடிக்கைப் பார்க்கிறான்

நம்மை வீழ்த்தக் கூட இப்போதெல்லாம் அவன்
தன் கோரைப் பற்களையும் கூரிய நகங்களையும் நம்புவதே இல்லை

நம் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து
நம்மை பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்

பின் வீண் கனவுகளில் கற்பனைகளில் மூழ்கவிட்டு
நோக்கமற்று அலையவிட்டு
நாவுக்கும் மனதிற்கும் குடலை பலியாக்கி
ஆசைக்கும் உணர்வுக்கும் நம் உடலை பலிகொடுத்து
நம் சக்தி முழுவதையும் உறிஞ்சிக் கொள்கிறான்

முடிவாக உல்லாசங்களில் கேளிக்கைகளில்
தேவையற்ற ஆடம்பரங்களில், போலி கௌரவங்களில்
நம்மை முழுமையாக மூழகவிட்டு
நம் வளத்தையெல்லாம் அபகரித்துக் கொள்கிறான்

இப்படி தேரிழந்து ஆயுதமிழந்து சக்தியிழ்ந்து
மண்பார்த்து நிற்கும் மாமன்னனாக ஆனபின்னே
சக்தியற்றவன் உடலில் சட்டெனப் புகும் நோயினைப் போல்
நமக்குள் முழுமையாய் நிறைந்து கொள்கிறான்

நம்மிடம் இப்போது எதுவுமே இல்லை ஆயினும்
தொடர்ந்து வாழ எல்லாமும் வேண்டியதாயும் இருக்கிறது

இப்படியோர் இடியாப்பச் சிக்கலில்
ஆப்பசைத்து மாட்டிய குரங்கு போல் மாட்டி
செய்வதறியாது கைபிசைந்து நிற்கும்வரை
நமக்கு அன்னியன் போலிருந்த சைத்தான்
இப்போது நமக்குள் நாமாகவே மாறி
நமக்கே புதிய வேதம் ஓதுகிறான்

" பணத்தை கொண்டு எதை வேண்டுமானாலும்
செய்ய முடியும்,வாங்க முடியும் என்கிற
இந்த கேடுகெட்ட உலகில்
பணம் சம்பாதிக்க
எந்த கேடு கெட்ட செயலைச் செய்தால்தான் என்ன ?"

சுயநலமாகவும் தர்கரீதியாகவும் யோசித்துப் பார்க்கையிலும்
உலக நடப்பை கூர்ந்து பார்க்கையிலும்
அவன் சொல்வது சரியாக மட்டும் படவில்லை
நிலை தவறிய நமக்கு புதிய கீதை போலவே படுகிறது
வேறு வழியின்றி நம்மை அறியாது
நாமே சாத்தானாக உரு மாறத் துவங்குகிறோம்

எனவே
"சைத்தன் என்பது பொய் அப்படி எதுவும் கிடையாது"
இப்படிச் சொல்பவனைத் தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

97 comments:

  1. நம்மிடம் இப்போது எதுவுமே இல்லை ஆயினும்
    தொடர்ந்து வாழ எல்லாமும் வேண்டியதாயும் இருக்கிறது



    ஆமா சைத்தான் இருப்பது மெய்தான்

    ReplyDelete
  2. நம்முடைய மனதுதான் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது....

    தன்னுடைய மனதில் அத்தனை வஸ்துகளும் அனைத்து தீய சக்திககளும் தெய்வங்களும் அடங்கிக்கிடக்கிறது...

    அதை நாம் எதை வெளியில் விடுகிறோம் என்பதை பொறுத்தே நமது வாழ்க்கை அமைகிறது...

    மிருகத்தை வெளியில் விட்டால் மிருகம் நம்மை ஆட்டிப்படைக்கிறது...

    தெய்வத்தை வெளியில் விட்டால் நாம் தெய்வம் நம்மை ஆட்கொள்கிறது...

    ReplyDelete
  3. //////
    "சைத்தன் என்பது பொய் அப்படி எதுவும் கிடையாது"
    இப்படிச் சொல்பவனைத் தொடராதே
    அவன் அறியாது பேசுகிறான்
    //////////


    உண்மைதான்...

    ReplyDelete
  4. //சுயநலமாகவும் தர்கரீதியாகவும் யோசித்துப் பார்க்கையிலும்
    உலக நடப்பை கூர்ந்து பார்க்கையிலும்
    அவன் சொல்வது சரியாக மட்டும் படவில்லை
    நிலை தவறிய நமக்கு புதிய கீதை போலவே படுகிறது
    வேறு வழியின்றி நம்மை அறியாது
    நாமே சாத்தானாக உரு மாறத் துவங்குகிறோம்//

    ஆம் உண்மை.

    ReplyDelete
  5. //நம் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
    உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து
    நம்மை பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
    முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்

    பின் வீண் கனவுகளில் கற்பனைகளில் மூழ்கவிட்டு
    நோக்கமற்று அலையவிட்டு
    நாவுக்கும் மனதிற்கும் குடலை பலியாக்கி
    ஆசைக்கும் உணர்வுக்கும் நம் உடலை பலிகொடுத்து
    நம் சக்தி முழுவதையும் உறிஞ்சிக் கொள்கிறான்
    // சகோ அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.மனிதன் உண்மையில் மிக பலவீனமானவன்.இந்த சைத்தானின் நோக்கத்தில் இருந்து தப்பி வருவது மனிதனுக்கு கிடைத்த ஆற்றல் எனலாம்.இதையே இஸ்லாத்தில் அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம் - பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.என்று தொழுகையின் ஆரம்பம் முதற்கொண்டு எந்த வித காரியங்கள் செய்யும் பொழுதும் இப்பிரார்த்தனையை செய்யும் படி வலியுறுத்தப்பட்டு அதனை இஸ்லாமியர் பின் பற்றி வருகின்றனர.

    ReplyDelete
  6. மணம் செல்லும் பாதையில் கூடவே பிரயாணம் செய்து...அதனை ஆராய்ந்து.... தற்போதைய வாழ்க்கையில் வாழ்வதற்க்கு நம்மையறியாமல் தீயவைகளுக்கு துணையாய் போய்... செய்வதை ஞாயத்தை கற்பித்து... தவறாய் சென்ற மணம் நம்மில் உள்ள இன்னொரு மணததை தன் வழிக்கு இழுத்து பார்த்து தோற்று போய்... அந்த மணம் தன்னை வருத்திக்கொண்டு... யோக்கிய நாடகம் ஆடுவதை ... இப்படி ஒரு மன இயல் சம்பந்தமாக அசத்தியது சாதாரண விசயம் அல்ல.... அற்புதமாக அசத்தியுள்ளீர்கள்... உண்மையான ஒன்று.... வாழ்த்துக்கள் சகோதரரே

    ReplyDelete
  7. தீதும் நன்றும் பிறர் தர வாரா..
    சைத்தானும் அது போலத்தான்.
    நாமே நமக்கு சைத்தான்!

    என்பதை வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். தொடருங்கள்.

    தமிழ்மணம்: 5 to 6 vgk

    ReplyDelete
  8. மனிதனின் மனம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை தெள்ள தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா.

    ReplyDelete
  9. Lakshmi //

    தங்கள் முதல் வரவுக்கும்
    மணியான வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. கவிதை வீதி # சௌந்தர் //

    தங்கள் வருகைக்கும் அருமையான
    தொடர் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. RAMVI //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. மாய உலகம்
    தங்கள் வரவுக்கும் விரிவான அலசலுடன் கூடிய
    பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. ஸாதிகா

    தங்கள் வரவுக்கும் கவிதையின் கருவை
    மிகத் தெளிவாக அறிந்து மிக விரிவான
    பின்னூட்டம் அளித்ததற்கும் வாழ்த்தியமைக்கும்
    உள்ளம் கனிந்த நன்றி

    ReplyDelete
  14. வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. காந்தி பனங்கூர்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. எல்லாருக்குள்ளும் ஒரு சைத்தான் உண்டு நீங்கள் சொல்வது சரி தான் ரமணி

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  18. இன்றைய கவிதை//

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. " பணத்தை கொண்டு எதை வேண்டுமானாலும்
    செய்ய முடியும்,வாங்க முடியும் என்கிற
    இந்த கேடுகெட்ட உலகில்”

    ஆம். நாம் சைத்தான் இருப்பது மெய் தான் சார்.

    ஒவ்வொரு வரியும் அருமை சார்.

    ReplyDelete
  20. அன்று இருந்த சைத்தானை விட, இன்று இருக்கிற சைத்தானே ஆபத்தானவன். உயரிய சிந்தனையில் மலர்ந்த உயர்ந்த கவிதை.

    ReplyDelete
  21. உங்களை வழிமொழிகிறேன் ரமணி சார்.

    1. தகுதியற்றவர்களாக இருந்தும் நடிப்பவர்களிடம்.
    2. அதிகாரப் போதையில் மூழ்கிக் கிடப்பவர்களிடம்.
    3. சாதிமலத்தை உண்கிறவர்களிடம்.
    4. அடுத்தவர்களின் உணர்வுகளைச் சாகடிக்கும் வக்கிர மனம் படைத்தவர்களிடம்.
    5. அடுத்தவர் குடிகெடுப்பதே வாழ்வின் நோக்கமென அலையும் பித்தர்களிடம்.
    6. தவறான வழியில் பணம் சம்பாதிப்பதோடு அதை நியாயப்படுத்தும் அயோக்கர்களிடம்.
    7. நன்றிகெட்டவர்களிடம்.
    எனப்பலப்பல வடிவங்களில் சைத்தான்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. இதனை உணராமல் ஏமாந்த தன் மனதிடம் சைத்தானைக் குடியேற்றும் ஒரு விபரீதமும நடந்துகொண்டிருக்கிறது.

    காலத்தின் தேவை கருதிய பதிவு இது.

    ReplyDelete
  22. சைத்தான் இருப்பது உண்மைதான். அதன் வீடு 'நம்ம மனசு'

    ReplyDelete
  23. கோவை2தில்லி

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. தமிழ் உதயம்//

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. Harani //

    அங்குசத்திற்கு யானையை பரிசளித்தது போல
    எளிய கவிதைக்கு சீரிய பின்னூட்டமளித்தமைக்கும்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் வரவுக்கும் ஓரெழுத்து எனினும்
    அடிமனத்திலிருந்து உண்டான மகிழ்வானஒலியையே
    வாழ்த்தாக்கி பாராட்டியமைக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. அமைதிச்சாரல்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. ஒவ்வொரு வருயிலும் சைத்தானே-அதன்
    உருவம் தெரிவது மெய்தானே
    இவ்வரி என்றதை நானசுட்ட-இங்கே
    இயலா இயலா நானகாட்ட
    செவ்வரி தம்மைக் கவி ஆக்கி-நாம்
    செய்வன அன்னவன் செயலாக்கி
    எவ்வழி உய்வென கேட்டீரே-படிப்போர்
    இதயத்தில் நிலைக்க விட்டீரே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. அருமையான ஆக்கம் பகிர்வுக்கு நன்றி ஐயா .........

    ReplyDelete
  30. உண்மைதான்.சைத்தான் என்பது வெளியில் இல்லை.நம் மனதுக்குள் ஒளிந்து கொண்டு செயல்களில்
    வெளிப்பட்டு உலா வரத்தான் செய்கிறது.தெளிவான பகிர்வு.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  31. அருமை. எப்படி இப்படியெல்லாம் கற்பனை வருதோ என்று ஆச்சரியமா இருக்கு. தொடருங்கள்...

    ReplyDelete
  32. புலவர் சா இராமாநுசம்//

    தங்கள் மேலான வரவுக்கும்
    கவியால் பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கும்
    என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. அம்பாளடியாள் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. raji //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. சைத்தான் இருக்குதோ இல்லையோ படத்தை பார்த்தா பயம்மா இருக்குது

    ReplyDelete
  37. நாய்க்குட்டி மனசு

    தங்கள் வரவுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. Rathnavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. வணக்கம் அண்ணாச்சி
    நவீன சாத்தான், இவ் உலகில் நாம் செய்யும் ஒவ்வோர் வேண்டத்தாக செயல்களின் ஊடாகத் தான் இருக்கிறான், எம்மிடையே எம் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி, கேளிக்கை நிகழ்வுகள் எனப் பலவற்றின் ஊடாக வலம் வருகின்றான் என்பதனை அழகுறச் சொல்லி, நல்லதோர் விழிப்புணர்வுக் கவிதையினைத் தந்திருக்க்றீங்க.
    நன்றி அண்ணாச்சி,

    ReplyDelete
  41. தெரிந்த விசயமானாலும், வீண் போகத்தால் வீழ்ந்து விடக் கூடாதென்பதைத் தெளிவா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  42. சைத்தான் இருப்பது மெய்தான் ...

    நம் மெய்க்குள்ளே...

    வாழ்த்துக்கள்..
    ரெவெரி

    ReplyDelete
  43. பாஸ் அருமையா சொல்லி போறீங்க??? தரமான கவிதை எழுதுவதில் பதிவுலகில் உங்களை அடிச்சுக்கவே முடியாது பாஸ்,

    ReplyDelete
  44. நிரூபன்//

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. ந.ர.செ. ராஜ்குமார் //..

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. ரெவெரி

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. துஷ்யந்தன்//
    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. நிலை தவறிய நமக்கு புதிய கீதை போலவே படுகிறது
    வேறு வழியின்றி நம்மை அறியாது
    நாமே சாத்தானாக உரு மாறத் துவங்குகிறோம்/

    ஆழ்ந்த கருத்துக்கள்!

    ReplyDelete
  49. ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  50. இராஜராஜேஸ்வரி .

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. சைத்தான் இருப்பது கதையல்ல நிஜம் என்று நம்பவைத்து விட்டீர்கள். எவ்வளவு விதமான சைத்தான்கள்...விதம்விதமான குணவிசேஷங்களில்... அப்பப்பா... அற்புதமான கவிதையா? கட்டுரையா?... எதுவாக இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கு. :-)

    ReplyDelete
  52. RVS //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. தாமதமாய் வந்துவிட்டேன். சொல்ல நினைத்தவற்றையெல்லாம் நண்பர்களின் பின்னூட்டங்கள் சொல்லிவிட்டன. உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் வாழ்வியலின் சூத்திரத்தை மிகவும் அழகாகச் சொல்லி ஆழ்மனத்தில் பதியவைக்கின்றன. பாராட்டுகள்.

    ReplyDelete
  54. சாத்தான் பற்றிய உங்களின் ஆக்கம் உண்மையில் பாராட்டுகளுக்கு உரியது காரணம் சாத்தான் என்ன பெயரை சொல்லிவருகிறது என பர்க்கவேண்டுமேயன்றி ஒட்டுமொத்தமாக சாத்தான் இல்லை என வரட்டுத்தனமாக கூறுவது உண்மையில் கண்டிக்க வேண்டியதே இன்றைய சூழலில் இந்த ஆக்கம் தேவையான ஒன்றே உளம் கனிந்த பாராட்டுகள் தெடர்க.

    ReplyDelete
  55. "சைத்தன் என்பது பொய் அப்படி எதுவும் கிடையாது"
    இப்படிச் சொல்பவனைத் தொடராதே
    அவன் அறியாது பேசுகிறான்//இந்த ஆக்கம் தேவையான ஒன்றே உளம் கனிந்த பாராட்டுகள் தெடர்க

    ReplyDelete
  56. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. போளூர் தயாநிதி//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. தமிழ் மணம் 19

    ReplyDelete
  59. நம் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
    உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து
    நம்மை பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
    முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்

    இது உதாரணம் மட்டுமே இன்னும் உள்ளது பல

    இப்பொழுது சைத்தானை இஷ்டப்பட்டு தேடிக்கொள்கிறார்கள் (தன்னோடு சேர்த்துக் கொள்கிறார்கள் )
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  60. M.R //..

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. சாத்தான் பற்றிய உங்களின் ஆக்கம் உண்மையில் அருமையான கவிதை

    ReplyDelete
  62. நான் உங்கள் 152

    ReplyDelete
  63. ராக்கெட் ராஜா .

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    நண்பராக இணைந்து கொண்டமைக்கும்
    மனமார்ந்த நன்றி
    தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  64. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. ஐயோ பயமா இருக்கே ரமணி சார்....

    நமக்குள் இருக்கும் நல்லவை எல்லாம் மறைந்து இப்படி சைத்தானாய் முழுதாய் மாறுமுன் விழித்தெழுன்னு சொன்னமாதிரி இருக்கு ரமணி சார் உங்க வரிகள்....

    ஒன்னு கூட நீங்க மிஸ் பண்ணலை ரமணி சார்...

    தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்துட்டால் போதும்.. சீரியல்கள் எப்படி நம்மை மூழ்கடிக்குதுன்னு நமக்கே உணரமுடியும்... பிள்ளைகளின் பாடங்கள் கவனிக்கப்படாமல் நல்ல சமையல் சமைக்காமல் சீக்கிரமா எளிதா எது ஆகிடுமோ அதை சமைச்சு கொட்டிர வேண்டியது... அதுக்கு வசதியா சீரியலில் விடும் இடைவேளைகளும் அட்வர்டைஸ்மெண்டும்....

    சீரியல் பாத்தமாதிரியும் ஆச்சு அட்வர்டைஸ்மெண்ட் பார்த்து அது இதுன்னு வாங்க எளிதாவும் ஆச்சு....

    அதோட இப்ப அங்கங்க நிலம் விற்பதை எப்படி எல்லாம் காம்பயர் பண்றாங்கப்பா...

    நான் சீரியல் பார்ப்பவர்களை சீரியல் கில்லர்ஸ் என்று சொல்வேன்...எனக்கு அத்தனை பொறுமை கிடையாதுப்பா....

    நட்பு ரூபத்தில் படிப்பை மட்டும் பகிர்ந்தால் பரவாயில்லை.. ஆனால் சில கெட்ட பழக்கங்கள் இடம் விட்டு இடம்மாற இது ஒரு கொடுமை....இப்படி ஒரு கொடுமையால் ஒரு பிள்ளை தன்னுடைய ஒரு வருட படிப்பை இழந்து வீட்டில் இருக்கும் வேதனை நினைவுக்கு வருகிறது...பிள்ளைகளின் இந்த செயலால் பெற்றோருக்கு எத்தனை வேதனை என்பதை அறியக்கூட முயல்வதில்லை பிள்ளைகள்....

    வீட்டில் மனைவிக்கு சமையல் தெரியலையா? டைம் இல்லையா? வா பிஸ்ஸா கார்னர் போவோம் பர்கர் சாப்பிடுவோம்.. இப்படியே போவதால் கெடுவது வயிறு மட்டுமா? நோயை நாமே காசு கொடுத்து வாங்குவது போல...

    சைத்தான் வெளியே இல்லை..... நமக்குள் தான்னு நச் நு சொல்லிட்டீங்க ரமணி சார்....

    நம் தீய செயல்கள், பொறுப்பின்மை, போலி கௌரவமிதெல்லாம் தான் நமக்குள் மாற்றத்தை கொண்டு வருவது.... நல்லத்தன்மை விலகிவிட்டாலே அதனால் ஏற்படும் விளைவுகள் எத்தனை பயங்கரம் என்பதையும் ரொம்ப அழகா சொல்லிட்டீங்கப்பா..

    அசத்தல் வரி இதில் என்னன்னா இப்ப நமக்குள் நாமே கன்வின்ஸ் பண்ணிக்கிற விஷயமாக பணம் என்று ஒன்று இருந்துட்டால் அதை கொண்டு எல்லாமே நம்பக்கம் சாச்சுக்க முடியும் என்பதை தான்...

    உண்மை தானே :(

    நமக்குள் நல்லவையும் இருக்கு... ஆனால் ஒரு சில தருணங்களில் நல்லவை பலகீனமாகும்போது இந்த சைத்தான் சட்டுனு நம்மை ஆக்கிரமிக்க நாமே இடம் கொடுத்துவிடுகிறோம் நம்மை நாமே அறியாமல்...

    இதை சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் சொல்கிறார்? ஏன் நமக்கு உடம்புக்கு ஒவ்வாதுன்னுதானே? ஆனா ஒரு செகண்ட் மனசு சபலப்பட்டுபோகுது இனிப்பை பார்த்து நல்லதை அதை தொடாதேன்னு சொல்லும் குரல் பலகீனமாகி சைத்தான் எடுத்து சாப்பிட வெச்ச்சுடுது....

    இப்படியாக சைத்தான் நம்மை முழுமையாக ஆக்கிரமித்து புதிய வேதம் ஓதுவதாக நீங்க சொன்னது புதுமையாக இருந்தது ரமணி சார்...

    நல்ல சிந்தனைகளும் நல்லவைகளும் பிறழ்ந்தால் கூட மனிதனுக்குள் சைத்தான் ரூபமாய் மாற்றங்கள் எப்படி வருகிறது என்பதை அருமையா குறிப்பிட்டிருக்கீங்க...

    மனதை முதலில் கட்டுப்பாட்டோடு வைத்துக்கொண்டால் சைத்தானை நமக்குள் வரமுடியாம தவிர்க்கலாம்... நாமே சைத்தானாய் உருமாற வழி கொடுக்காமல் இருக்கலாம்.... முடியுமா? முடியனும்... நல்ல சிந்தனைகளும் கனிவான இதயமும் கருணை கண்களும் வைத்து நல்லவையே நினைத்து நல்லவையே பேசி முயற்சித்தால் என்னன்னு தோணுது ரமணி சார்...

    சைத்தானை முடிந்தவரை நுழைக்கமுடியாமல் தவிர்க்க முயல்வேன் ரமணி சார்.. கண்டிப்பாக உங்க வரிகள் தான் எனக்கு பாடமாக இருப்பது....

    புத்தனுக்கு ஞானம் எப்படி பிறந்தது?
    எனக்கு உங்க வரிகள் படிக்கும்போது தீயவைகளை, அவசியமில்லாதவைகளை, நல்லது அல்லாதவைகளை கிட்ட கூட அண்ட கூடாதுன்னு முடிவெடுக்க தோணியது ரமணி சார் அதுவும் உறுதியுடன்.....

    அன்பு நன்றிகள் ரமணி சார் பயனுள்ள என்னை சிந்திக்க வைத்த இந்த அருமையான பகிர்வை தந்தமைக்கு....

    என்னிக்காவது என் பதிவு உங்களுக்கு முதல்ல போட்டுடனும்னு பார்த்துக்கிட்டே இருப்பேன்..ஆனா எப்பவும் நான் தான் லேட்டா போடுகிறேன்.....:(

    ReplyDelete
  66. உங்கள் சிறு கட்டுரையின் சுருக்கம் - தீதும் நன்றும் பிறர் தர வாரா. எனக்குப் பிடித்த நல் மொழியும். உங்கள் வலையின் தலைப்பும். இதற்கும் மேலே இத்தனை கருத்தாளர்களும் நிறையவே கூறிவிட்டார்கள். நல் வாழ்த்துகள் சகோதரரே!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  67. ரமணி சார் உங்கள் வரவுக்காக என் தளம் காத்திருக்கின்றது.....

    ReplyDelete
  68. மஞ்சுபாஷிணி//

    உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
    நீங்கள் சொல்லிச் செல்லுகிற அத்தனை விஷயங்களையும்
    சொல்லத்தான் எழுதத் துவங்கினேன்
    ரொம்ப இறுக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி
    கவிதையாக எழுத இது ஒத்துவரவில்லை
    கட்டுரை போல எழுதவும் மனமில்லை எனவே
    இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒரு வடிவத்தை
    இதில் கையாண்டுள்ளேன்.பதிவுலகில் சுருக்கமாகவும்
    கொஞ்சம் உரை நடையை மீறிய கவித்துவமான சொற்களைக்
    கையாண்டு இதுபோல் கொடுக்கிற விஷயத்தை அனைவரும்
    மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.சிலர் கவிதையாக எதிர்பார்த்து
    சோர்ந்து போகின்றனர்.இதை கவிதைபோல் சொல்ல
    முயன்றிருந்தால் நிச்சயம் யானையைப் பிடித்து பானைக்குள்
    அடைக்க முயன்ற கதைபோலத்தான் இருக்கும்
    தங்கள் விரிவான பின்னூட்டமே மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறேனா
    என எனக்கு அறிவுறுத்தும் உரைகல் போல் உள்ளது
    தங்களது பின்னூட்டத்தின் காரணமாகவே எனது படைப்பு
    சிறப்பு பெறுகிறது.பிறரது படைப்புகளுக்கு நீங்கள் கொடுக்கிற
    பின்னூட்டங்களையும் தொடர்ந்து படிக்கிறேன்
    மிகச் சிறப்பாக உள்ளது.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  69. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. அம்பாளடியாள் //.

    தங்கள் வரவுக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. சமூக உணர்வோடு எழுதப்பட்ட கவிதை படித்து வெகு நாட்களாகி விட்டது... ஆழமான கரு.

    ReplyDelete
  72. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. நவீன யுகத்தில் வாழ்க்கைத்தரமும், வாழும் வயதும் கூடிக் கொண்டே இருப்பதால், அனைத்தும் சாஸ்வதம் என்பதும், மரணம் பிறருக்குத்தான் எனும் நினைப்பும்,சாத்தானை வளர விடும் காரணிகள்!

    ReplyDelete
  74. //நம் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து நம்மை பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
    முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்//

    சைத்தான் சத்தான்...!

    விழித்துக்கொள்ள வேண்டியது அறிந்திருந்தும் மனமின்றி வீழ்ந்தே கிடக்கிறோம்.

    விழித்தெழச் சொல்லும் கவி வரிகள்.

    ReplyDelete
  75. ரம்மி//
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. சத்ரியன்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. நமக்கு நாமே
    நம்மை தகர்க்கும்
    நம் குணங்களே
    நம்மை
    நம் இயல்பை
    நாசமாக்கும்
    சைத்தான்.!!
    அழகுபட கூறியிருக்கிறீர்கள் நண்பரே.

    இன்றுமுதல் தங்களை தொடர்பவர்களில்
    நானும் ஒருவன் ....

    ReplyDelete
  78. மகேந்திரன்// .

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    நண்பராக இணைந்துகொண்டமைக்கும்
    என் மனப்பூர்வமான நன்றி
    தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  79. இப்படியோர் இடியாப்பச் சிக்கலில்
    ஆப்பசைத்து மாட்டிய குரங்கு போல் மாட்டி
    செய்வதறியாது கைபிசைந்து நிற்கும்வரை
    நமக்கு அன்னியன் போலிருந்த சைத்தான்
    இப்போது நமக்குள் நாமாகவே மாறி
    நமக்கே புதிய வேதம் ஓதுகிறான்

    உண்மையான கருத்து அழகா சொன்னீர்கள்
    ரசித்து படித்தேன்

    ReplyDelete
  80. சைத்தானின் பேரரசு பற்றிய ஒரு விழிப்புணர்வுப் பதிவு. விஞ்ஞான வளர்ச்சியின் ஒவ்வொரு வசதியையும் முதலில் சைத்தான் தான் கைப்பற்றுகிறான். தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு சைத்தானின் தொழிற்சாலையாகத் திகழும் சீரியல்கள் மிக முக்கிய பங்குவகிக்கின்றன. வசதிகளும் வாய்புக்களும் பெருகுவது என்னவோ சைத்தானால் தான்.இல்லவிட்டால் 15 ரூபாய் பெறும் சத்துமாவை 100 ரூபாய் விலைகொடுத்து வாங்க மக்கள் எப்படித் தயார் ஆவார்கள்.

    அல்லவைத் தேய்ந்து தான் அறம் பெருகுவதாக திருவள்ளுவர் கூறுகிறார். அறம் தானே முளைப்பதில்லையோ?வெய்யிலில் அலைந்த பிறகு தான் நிழலின் அருமை தெரிகிறது.

    சைத்தானின் அசுர சாம்ராஜ்யத்தை வீழ்த்த முடியுமெனத் தோன்றவில்லை. ஆனால் விழிப்புணர்வு கொண்டு அவன் ஆளுமையிலிருந்து விடுதலைப் பெறலாம்.

    சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள் ரமணிசார்.

    ReplyDelete
  81. உண்மையில் நமக்கு வேண்டிய செய்திகள் வியக்கும் படியான சேதிகள் உலகம் எங்கு விலகுகிறதோ அங்கே விபரீதங்கள் தோற்றம் கொள்ளுகிறது தேவையான நல்ல சிறந்த பதிவு வாழ்த்த வயதில்லை வணங்கு கிறேன்

    ReplyDelete
  82. கவி அழகன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  83. மாலதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  84. VENKAT //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான மிகச் சரியான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  85. உங்கள் இந்த படைப்பு எப்படி பிறந்ததுன்னு நீங்க இப்ப சொன்னபோது தான் அறிந்தேன் ரமணி சார்.. உண்மையே.. இத்தனை சாராம்சங்களும் குட்டி கவிதையில் அடைக்க முடியாது... ஆனால் இந்த படைப்பை ரசித்து படித்த எத்தனையோ பேர்களில் நானும் ஒன்று... கவிதைன்னாலும் நறுக்குனு தான் எழுதுறீங்க..

    அன்பு நன்றிகள் ரமணி சார்.... என் பின்னூட்டங்கள் எங்கெல்லாம் எழுதப்படுகிறதோ அங்கே உங்கள் வரவு இருப்பதை அறியும்போது மகிழ்கிறேன் ரமணி சார்...

    ReplyDelete
  86. ''...நம் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
    உல்லாச உதவாக்கரை நண்பர்களாக....'''
    ஆக நம்ம உதவாத நண்பர்களும், அசிங்கத் தொலைக்காட்சித் தொடாகளையுமே சாத்தானாக நாம் தான் எமக்குள் உருவாக்குகிறோம்...நாம் தான்...நாம் தான்.....

    ReplyDelete
  87. மஞ்சுபாஷிணி//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  88. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  89. இப்படித்தான் சைத்தான் நம்மை ஏமாற்றி அவன் பிடியில் வைத்துக் கொள்கிறான்.. நாமும் அவன் வலையில் மாட்டிக் கொள்கிறோம்

    ReplyDelete
  90. ரிஷபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  91. ஆம்,நீங்கள் சொல்லியுள்ள அத்தனையும் சத்தியமான உண்மை.

    ReplyDelete
  92. Murugeswari Rajavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  93. முதலில் சாத்தான்களை வெளியில் தனியாகத் தேடி
    பின் அது நாமே சாத்தான்கள் என்று முடித்த விதம் மிக அருமை.

    ReplyDelete
  94. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete