Monday, September 19, 2011

லெட்சுமணக்கோடு


லெட்சுமணக் கோட்டில் நின்று
இருபுறமும் பார்த்த அனுபவம் உண்டா ?

சிற்றுண்டிச் சாலைகளில்
அன்னியர்கள் பிரவேசித்தல் கூடாது
என்கிற எல்லையின் வலதுபுறம்
இட்டிலியில் கிடந்த ஈயை
எடுத்துப் போடும் அசிங்கத்தையும்
வலதுபுறம் மிகப் பணிவாக
அவனே பறிமாறும் லாவகத்தையும்...

நாடக மேடையில்
திரைச்சீலையில் வலதுபுறம்
அவசர அவசரமாய்
முதுகு சொரியும் கண்ணனையும்
இடதுபுறம் முன் மேடையில்
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க
அருள் கொடுக்கும் அதே  கண்ணனையும்

திருமண மண்டபத்தின் பின்னறையில்
இரண்டு பவுன் குறைவதற்காக
ருத்ர தாண்டவமாடும் சம்பந்தியையும்
அது சரிபடுத்தப் பட்டபின்னே
மணவறை மேடையில்
நாகரீகமாய் நடந்துகொள்ளும்
அதே பச்சோந்தி சம்பந்தியையும்

இலக்கியக் கூட்டங்களில்
கற்பைப் பொதுவென வைப்பது குறித்து
அனல்பறக்க பேசிவிட்டு
கூட்டம் முடிந்தவுடன்
புதிதாகச் சேர்த்த சின்னவீட்டை
சிரித்து அணைத்தபடிச் செல்லும்
சிரு
ங்கார வேலர்களையும்

திருவிழாக் கூட்டங்களில்
மனைவி முன்செல்ல
காமக் கண்களைஅலைய விட்டு
பின் சேர்ந்து நடக்கையில்
கண்களில் காதலும் கனிவும   பொங்க
ராமனாய் காட்சி தரும்
அயோக்கிய சிகாமணிகளையும்...

இப்படி

இருளுக்கும் ஒளிக்கும்
பொய்மைக்கும் உண்மைக்கும்
இடையில் நின்று பார்க்கத் தெரிந்தவர்கள்தான்
தலைவர்களாக,
 கவிஞர்களாக
ஏன் ஞானிகளாகக் கூட மாறிப் போகிறார்கள்

நாம் அப்படியெல்லாம் கூட மாறவேண்டாம்
அவர்களைக் கண்டு மயங்கித் தொலையாதிருக்க
ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா

121 comments:

  1. ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா


    மிக
    ஆழமான
    தேவையான
    நுட்பமான
    பார்வை அன்பரே..

    ReplyDelete
  2. நாகரீகமாய் நடந்துகொள்ளும்
    அதே பச்சோந்தி சம்பந்தியையும்

    ஒருவிதத்தில் பார்த்தால் எல்லோருமே
    இப்படியொரு முகமூடி அணிந்தவர்களாகத் தான் வாழ்கிறோம் அன்பரே..

    என்ன வேறுபாடு

    சிலர் தம் முகமூடிகளை அவ்வப்போது கழற்றி வைக்கிறோம்..
    பலருக்கு முகமூடிகளே முகமாகிவிட்டது..

    ReplyDelete
  3. மனிதனின் இருமுகம்
    //திருமண மண்டபத்தின் பின்னறையில்
    இரண்டு பவுன் குறைவதற்காக
    ருத்ர தாண்டவமாடும் சம்பந்தியையும்
    அது சரிபடுத்தப் பட்டபின்னே
    மணவறை மேடையில்
    நாகரீகமாய் நடந்துகொள்ளும்
    அதே பச்சோந்தி சம்பந்தியையும்//
    அருமையான ரியாலிட்டி கவிதை அருமை சார்

    ReplyDelete
  4. //நாம் அப்படியெல்லாம் கூட மாறவேண்டாம்
    ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா//

    மிக அருமை. வித்யாசமான பார்வை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. குரு வித்தியாசமா பார்த்து வித்தியாசமா எழுதி இருக்கீங்க...!!!

    ReplyDelete
  6. செமையா உள்ளே கோபத்தையும் வச்சிருக்கீங்க....!!!

    ReplyDelete
  7. //நாம் அப்படியெல்லாம் கூட மாறவேண்டாம்
    ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா//

    வித்தியாசமான பார்வை.... சொன்ன கருத்துகள் அனைத்தும் உண்மை... நம் எல்லோருக்கும் தேவையான கருத்துகளும் கூட...

    ReplyDelete
  8. ///இப்படி இருளுக்கும் ஒளிக்கும்
    பொய்மைக்கும் உண்மைக்கும்
    இடையில் நின்று பார்க்கத் தெரிந்தவர்கள்தான்
    தலைவர்களாக, கவிஞர்களாக
    ஏன் ஞானிகளாகக் கூட மாறிப் போகிறார்கள்// ம்ம் பல இடங்களில் கண்ட உண்மை ஐயா (

    ReplyDelete
  9. ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா

    கண்டிப்பாக நண்பரே

    இரட்டை குணங்களை அழகாய் சொல்லி இருக்கீங்க நண்பரே

    ReplyDelete
  10. ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா.....

    உருளும் உலகில் நாமும் வாழ வேண்டி இருக்கிறது. அருமையான கண்ணோட்டம

    ReplyDelete
  11. மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமாக...

    மிக அருமை...

    ReplyDelete
  12. நாணயத்தின் இரு பக்கங்கள் போல மனித மனத்தின், முகங்களின் அசல், நகலை அழகாக, ஆணித்தரமாக சொன்னீர்கள். அருமை.

    ReplyDelete
  13. மாயக்கோட்டில் நின்றாவது ஏமாறாமல் இருப்போம்!

    உள்ளொன்று வைத்து புறமொன்று செய்பவர்களை அழகாக சொல்லியுள்ளீர்கள்!அருமை!

    ReplyDelete
  14. வாழ்வின் ஒவ்வொரு வழக்கிலும் இருவேறு கலங்கள் உண்டு
    அதை ஏற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டுமென்பதை
    அழகாச் சொல்லியிருகீங்க நண்பரே...
    இந்த இரண்டையும் குழப்பிக் கொள்பவர்கள்தான் வாழ்வின் நியதியை மறந்து
    போகிறார்கள்...
    உங்களின் சிந்தனை மகத்தானது நண்பரே..

    ReplyDelete
  15. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் முதல் வரவுக்கும்
    முத்தான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. ராக்கெட் ராஜா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. RAMVI //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கந்தசாமி.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. M.R //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. நிலாமதி //


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. ரெவெரி //
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. தமிழ் உதயம்

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்த்ற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. கோகுல் //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்த்ற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. மகேந்திரன்//

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. kobiraj //
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. எந்ததொரு கவிதையிலும்
    எனக்கென்று தனிப்பாணி
    சொந்தமெனக் கவிபாடி
    சொல்லிடவும் சுவைகூடி
    சிந்தனையில் தங்கிடவும்
    செம்மொழியாய் பொங்கிடவும்
    தந்துவரல் இரமணிக்கே
    தனிச்சிறப்பு மிக நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. புலவர் சா இராமாநுசம்//.

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. ஆஹா எத்தனையோ அயோக்கிய சிகாமணிகளும் , சபை நாகரீக பச்சோந்திகளும் முழுக்க முழுக்க 99 சதவீதம் நாட்டில் மாலை மரியாதையுடன் உலாவிக்கொண்டிருக்கின்றனர்... ஏனோ அவர்களை தூக்கி வைத்து பேசும் சமூகம் சும்மா இருக்கும் நல்லவரை தூற்றுகின்றனரோ..... அருமை சகோதரரே... நீங்கள் சொன்னது போ மாய கோட்டில் நிற்க பழகுவோம்

    ReplyDelete
  32. மாய உலகம் //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. "உள்ளொன்று வைத்து புற‌மொன்று பேசுவோர் உறவு கலவாமை வேன்டும் "என்ற வாக்குப்படி வாழ விரும்பினாலும் அந்த மாதிரி மனிதர்களிடையே வாழ்வது தானே வாழ்க்கை என்றாகிற‌து! நீங்கள் சொல்வது மாதிரி ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது இந்தலக்ஷ்மண ரேகையை பின்பற்ற முயற்சிக்கலாம்!

    சிற‌‌ப்பான‌ க‌விதை!

    ReplyDelete
  34. மனோ சாமிநாதன்//

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. சமயங்களில் அந்த மாயக்கோட்டில் நானும் நிற்கிறேன்..

    ReplyDelete
  36. யதார்த்த நிகழ்வுகளில் கோர்வையாக கவிதை

    சமுகத்தின் பீத்தல்கள் சிரிப்பின் மூலமும் நாகரிகம் மூலமும் மறைக்கப்படுகிறது

    ReplyDelete
  37. கே.ஆர்.பி.செந்தில்//

    தங்கள் வரவுக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. கவி அழகன் //

    தங்கள் வரவுக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. // பணிவாக
    அவனே பறிமாறும் லாவகத்தையும்..//

    //அருள் கொடுக்கும் அதே கண்ணனையும்//

    //நாகரீகமாய் நடந்துகொள்ளும்
    அதே பச்சோந்தி சம்பந்தியையும்//

    //சிரித்து அணைத்தபடிச் செல்லும்
    சிங்கார வேலர்களையும்//

    //ராமனாய் காட்சி தரும்
    அயோக்கிய சிகாமணிகளையும்...
    //
    என்ன அருமையான வரிகளை உவமானமாக்கிக்காட்டிஉள்ளீர்களய்யா!!!

    //அன்னியோன்யத்தைப் பிரிக்கும்
    லெட்சுமணக் கோடு
    அதைப் புரிந்து கொண்டாலே சந்தோஷத்தின்
    சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மாதிரிதான்// எனகிட்ட பின்னூட்டத்தில் குறிப்பிட்ட
    லெட்சுமணக் கோடு என்ற அழகிய வார்த்தையை தலைப்பாக கொண்டு அற்புதமான கவிதை படைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  40. வித்யாசமான பார்வை வித்யாசமான பகிர்வு

    ReplyDelete
  41. ஸாதிகா//

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. அருமையான விவாதம் மிக அழகாக தளப்பம் இன்றி
    தெளிவுபட உரைத்துள்ளீர்கள் .தங்கள் கவிதைவரியில்
    உண்மையின் நிதர்சனத்தைக் கண்டேன் வாழ்த்துக்கள் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .............

    ReplyDelete
  44. //நாம் அப்படியெல்லாம் கூட மாறவேண்டாம்
    ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா//

    கண்டிப்பாக சகோ. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலும் பிறன்மனை நோக்காமலும் இருந்தாலே சிறப்பு. அருமையான பதிவு சகோ.

    ReplyDelete
  45. அம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. காந்தி பனங்கூர் //

    தங்கள் வரவுக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. அழமான பார்வை இலட்சுமன் கோடு போடுவது எவ்வளவு கடினம் அதுவும் சாப்பாட்டுக்கடையில் ஈ அற்புதம் ஐயா வரிகள்!

    ReplyDelete
  48. பெரும்பாலான மனிதர்களின் உண்மை முகத்தையும், பொய் முகத்தையும் தகுந்த சில உதாரணங்களுடன் தோலுறித்துக் காட்டியுள்ளது அழகாகவே உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
    [தமிழ்மணம் : 18] அன்புடன் vgk

    ReplyDelete
  49. Thanimaram //

    தங்கள் வரவுக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்குக்கும் விரிவான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. அருமை ஐயா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. வித்தியாசமா இருந்தது சார். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  53. Rathnavel //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. //ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா//

    ஆஹா!!.. அருமை .. அருமை. ஒவ்வொரு வரியும் அசத்தல்.

    ReplyDelete
  56. அமைதிச்சாரல்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா//
    ரமணி அண்ணா, சூப்பர். ஒவ்வொரு வரியும் பொருத்தமா இருக்கு.

    ReplyDelete
  58. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. கட்டாயம் பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  60. தவறெனக் கொள்ளாவிடின் ஒரு சிறு கருத்து.

    //புதிதாகச் சேர்த்த சின்னவீட்டைசிரித்து அணைத்தபடிச் செல்லும் சிங்கார வேலர்களையும்//

    சிருங்கார என்றிருந்தால் சரியாக இருக்குமோ?
    சிங்கார வேலருக்கும் சிருங்கார வேலருக்கும் வித்தியாசம் உண்டென தோன்றுகிறது.

    கருத்து தவறெனில் மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  61. அபாரமான கவிதை சார்! லெக்ஷ்மன் ரேகா!! :-)

    ReplyDelete
  62. மாயக்கோட்டில் நின்றுபார்க்கும் கலையை அழகாகக் கற்றுத் தந்துள்ளீர்கள். ஒப்பனையற்ற முகங்களையும் அவ்வப்போது பார்த்துப் பழகிக்கொண்டால்தான் அதிரடி அதிர்ச்சிகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். அருமையான கருத்தை அதி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் ரமணி சார்.

    ReplyDelete
  63. raji //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல
    சிருங்கார என்பதுதான் சரி ஆயினும்
    இலக்கியத் தரமான வார்த்தையாக இல்லாமல்
    இருந்தால நல்லதோ என நினைத்துத்தான்
    சிங்கார எனக் குறிப்பட்டிருக்கிறேன்
    தங்கள் எப்போது கருத்து சொன்னாலும்
    மன்னிக்கவும் போன்ற வார்த்தைகளைப்
    பயன்படுத்தவேண்டாம். எனெனில் நான்
    எழுதியதுதான் சரி என்கிற எண்ணம்
    எப்போதுமே எனக்கு இல்லை
    படைப்பாளிக்கு பல சமயம் எட்டி நின்று பார்க்கத் தெரியாது
    எனவே தன் தவறும் தெரியாது

    ReplyDelete
  64. RVS //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  66. அண்ணே யதார்த்தத்தை உள்ளடக்கி மண்டையில கொட்டிய பதிவு நன்றி!

    ReplyDelete
  67. "ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா"

    ஏமாற்றுவது எப்படி சிலருக்கு சுகமோ அதுபோல் ஏமாந்து போவவதிலும் பலர் சுகமாய்தான் கருதுகின்றனர். இன்னார் இன்னன்னார் இப்படித்தான் என்று தெரிந்திருப்பவர்கள் கூட அவர்களை அரசியலிலோ, கலையுலகிலோ ஏன் நம் வாழ்வில் நம்மைக் கடந்து செல்பவர்களைக்கூட ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய சூழலும் வந்து தொலைகின்றது. - நெல்லி. மூர்த்தி

    ReplyDelete
  68. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. நெல்லி. மூர்த்தி //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா

    நிதர்சனமாய் கண்டு நொந்த காவியங்களை அருமையான கவிதையாய் வடித்து மனம் கவர்ந்த படைப்புக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  71. அட நாங்க பார்த்த விடயங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறீங்க... என்ன செய்ய இவர்களை திருத்த முடியாது நாங்க அந்த கோட்டை புரிந்து வைத்திருப்போம்.. அருமையான பதிவுக்கு நன்றி..,

    ReplyDelete
  72. இராஜராஜேஸ்வரி

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. காட்டான் //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. ரசித்துப் படித்தேன். லெட்சுமணக் கோடு என்றால் என்ன?

    (பின்னூட்டப் பிஎச்டி எங்கே காணோம்?)

    ReplyDelete
  75. சீதைக்காக லெட்சுமணன போட்டுப் போன
    ஒரு பாதுகாப்புக் கோட்டையே லெட்சுமணக் கோடு
    எனச் சொல்கிறோம். நன்மைக்கும் தீமைக்குமான
    உண்மைக்கும் பொய்மைக்கும்
    நடுக்கோடாக மாயக் கோடாக அது இருக்கிறது.அதிலிருந்து
    இரு பக்கமும் பார்க்கமுடியும் என்பதே அதன் வசதி
    அதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்
    தங்கள் குறிப்பிலிருந்து சரியாகச் சொல்ல்வில்லை என
    உணர்கிறேன்.இனி வரும் பதிவுகளில் கூடுதல் கவனம்
    செலுத்த முயல்கிறேன்.வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  76. மனிதமுகங்களைத் துல்லியமாகப் படம்பிடித்துக்காட்டும் ஆள ஊடுருவும் பார்வை

    ReplyDelete
  77. இலட்சுமின ரேகைபற்றி சிறப்பான ஆக்கம் உலம்நிறந்த பாராட்டுகள் உண்மையில் இப்படித்தான் பலர் வாழ்ந்து கொண்டு வேடதரியாக இருக்கிறார்கள் இவர்கள் பாதையை முறைப்படுத்த நீங்கள் எண்ணுவது உண்மையில் சிந்தனைக்குர்யது பரட்டுகளுக்குரியது இதில் இந்த இலட்சுமின ரேகையை தாண்டாதவர்கள் எத்தனைபேர் ? இலட்சுமிணன் இட்ட அந்த கோட்டை சீதை தாண்டாமல் இருந்து இருந்தால் தமிழ்மறவன் இராவணன் துரோகத்தனத்துடன் கொள்ளப்பட்டு இருக்கமாட்டன் .பேடிபோல வாலியை மறைந்து இருந்து கொள்ள முடிந்து இருக்கயியாலாது நல்ல சிந்தனை பாராட்டுகள் .

    ReplyDelete
  78. அம்பலத்தார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  79. போளூர் தயாநிதி//

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. ""ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா""

    -நிச்சயமாக பழகத்தான் வேண்டும்...
    நன்றி சகோ...

    ReplyDelete
  81. அருமை

    வாழ்த்துக்கள்.

    தமிழ்மணம் 24

    ReplyDelete
  82. கோட்டுக்கு இந்தப்புறமும் அந்தப்புறமும் இருப்பவர்கள் வெவ்வேறு விதமானவர்களா?
    கோட்டைத் தாண்டியதால் இங்கே சீதை தானே போலி? கோட்டைத் தாண்டியதால் தானே ராவணனை வில்லனாக அறிகிறோம்?

    ReplyDelete
  83. சின்னதூரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  84. ஆயிஷா அபுல்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  85. அப்பாதுரை //

    மனிதர்கள் எல்லோரும் இரண்டு நிலைகளை
    உடையவர்களாக உள்ளனர்
    இரண்டு நிலைகளையும் பார்க்கத் தெரிந்தவர்களாக
    நம்மைத் தயார்படுத்திக் கொள்ளதவரை
    பதிப்புக்குள்ளாகப் போவது நாமே
    இந்த வார்த்தையை மிக சரியாக
    இந்த அர்த்தத்தில் முன்னாள் பிரதமர்
    நரசிம்மராவ் அவர்கள் ஒருமுறை பயன்படுத்தினார்கள்
    அது முதல் அந்த வார்த்தை என்னுள்
    மிக நன்றாகப் பதிந்து விட்டது
    நீங்கள் முதலாவதாக குறிப்பிட்டுள்ள
    அர்த்தத்தில்தான் அதைப் பயன்படுத்தியுள்ளேன்
    வரவுக்கு கருத்துக்கும் மீண்டும் நன்றி

    ReplyDelete
  86. ஏமாந்து தொலையாமல் இருக்க இந்த லட்சுமணக்கோடு கட்டாயத் தேவை.வழக்கம் போல் அருமையான கவிதை.

    ReplyDelete
  87. Murugeswari Rajavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  88. தனி மனிதனுக்கு ஒரு முகம் மட்டும் இல்லை, சிலருக்கு மூன்று முகம், சிலருக்கு நூறு முகம், இவர்களில் தன் முகமே அறிந்திடாத பலர். இந்த நிலையில் மட்டும் தான் கடவுளுக்கும் நமக்கும் ஒற்றுமை. . .

    ReplyDelete
  89. பிரணவன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  90. அன்பின் ரமணி, உங்கள் பதிவுகள் இம்மாதம் எழுதியது அனைத்தும் படித்தேன். ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமிடாமல் ஒட்டு மொத்தமாக எழுதுகிறேன். ஒவ்வொரு பதிவுக்கும் பின்னால் ஏதோசிந்தனையால் உந்தப்பட்டு எழுதுகிறீர்கள். நடைமுறை நிகழ்வுகள் உங்கள் மனதில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் அபாரமாக எழுத்தாய் வந்து விழுகிறது. சீரிய சிந்தனை இல்லாவிட்டால் இப்படி எழுத முடியாது. எளிய நடையில் எண்ண ஓட்டங்கள் எழுத்தாய் பரிணமிக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  91. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  92. ரசித்துப் படித்தேன். லெட்சுமணக் கோடு என்றால் என்ன?

    (பின்னூட்டப் பிஎச்டி எங்கே காணோம்?)
    ஹா ஹா ஹா ஆமா எங்கே போட்டாங்க அவங்க பதிவிலும் ஆளைகானோமே...!!

    ReplyDelete
  93. காட்டான் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  94. இந்த கவிதை படைத்த அன்றே படித்துவிட்டேன் ரமணி சார்….
    தலைப்பில் தீர்க்கம், படைத்த வரிகளில் தீட்சண்யம், இது தான் ரமணி சார். இம்முறை தலைப்பு என்னை மிகவும் ஈர்த்துவிட்டது ரமணி சார்…. இடைவிடாத அலுவல் பணிகள், வீட்டுவேலை , உடல்நலம் சரியின்மை இதெல்லாம் சேர்த்து உடனடியா என்னால கருத்திடமுடியலை. ரெண்டு வரில என்னால கண்டிப்பா சொல்லமுடியாது ஏன்னா சொல்லவேண்டியது மனசுல நிறைய இருக்கு ரமணி சார் எனக்கு….
    இதே போல் மூன்றாம் சுழியில் ஒருமனசு கதை இன்னும் படிக்கலையே என்று மனம் அடித்துக்கொள்கிறது… இனி நம் படைப்புக்கு வருவோம்….

    லட்சுமண ரேகா கோடு போட்டதே அதை தாண்டி வரக்கூடாது… அந்த கோட்டின் எல்லைக்குள் இருந்தால் சேஃப்… மீறினால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்பதே…
    ஆனா இந்த கலியுகத்தில் மனிதருள் இருக்கும் தெய்வீகம் மறந்தோ மறைந்தோ போய்விட்டது எனலாம்… எங்கோ ஒரு சிலர் மட்டும் இன்னும் அப்படியே இருக்கலாம், இருப்பதா நினைக்கலாம், ஆனா எங்கயும் நீங்க மேலே சொன்னதும் நடக்கிறதை பார்க்கமுடிகிறது அருவெறுப்பா கூட இருக்கும் ஒரு சிலவிஷயங்கள்…

    ReplyDelete
  95. எனக்கு எப்பவுமே ஹோட்டல் உணவு சாப்பிட பிடிக்காததற்கு காரணம் இது தான். சுத்தமின்மை…. நீங்க அதை எளிமையா வரிகளில் அமைத்த விதம் மிகவும் அருமை ரமணி சார். இட்லில விழுந்த ஈயை லாவகமா விலக்கிட்டு அதே பவ்யத்துடன் பரிமாறும் ( அட இது தாம்பா பிசினஸ் டெக்னிக்) இல்லன்னா பரிமாறும் ஆளுக்கு அன்றைய சம்பளம் குறைக்கப்பட்டும் இல்லன்னா பிடுங்கப்படும்… நல்லவனா இருக்க நினைத்தாலும் அப்படி இருக்கவிடாத சங்கடங்கள் இப்படி தான்… படைக்கப்படும் உணவு வயிற்றையும் நிறைத்து மனதையும் நிறைக்கவேண்டும். அப்ப தானே அவங்க போய் இன்னும் பத்து பேருக்கு இந்த ஹோட்டலை காண்பிப்பாங்க? அங்க போய் சாப்பிடுங்க சார். ஹைஜினிக்கா இருக்கு…. அப்டின்னு? இதில் சுத்தம் என்பது மனிதரின் மனங்களில் என்பது நாம் பார்க்கவேண்டிய ஒன்று…..

    அந்த காலத்தில் எல்லாம் மனிதர்களின் மனதில் தொடங்கி எல்லாவற்றிலும் தூய்மை இருக்கும்…. இப்ப மனிதர்களின் தூய்மை மறைந்து வக்கிரம் குடிக்கொண்டுவிட்டது மனதில்…. அந்த வக்கிரங்கள் வெளிப்பட்டுட்டால் தன் கௌரவம் போய்விடுமே. தன் இமேஜ் என்னாவது? அதனால் வெளியே இனிப்பான ஒரு கனிவான புன்னகையும் பார்வையும்…. ஆனால் உள்ளுக்குள் வக்கிரம் தலைவிரித்தாடும்…. இது அரசியலில் ரொம்ப ரொம்ப சகஜமாக நடக்கும் ஒன்று….

    ReplyDelete
  96. மேடையில் அருள் பாலிக்கும் கண்ணன் திரைச்சீலைக்கு பின்னர் நின்று முதுகு சொறிவது கூட நமக்கு ரசிக்கும்படி இருக்கும். ஆனா சிகரெட் பிடிச்சாலோ??? நாம சாமி படம் பார்க்கும்போது நம்ம கண்ணுக்கு நடிகர்கள் தென்படுவதில்லை. ஸ்வாமியாவே நினைத்து தான் பார்ப்போம். அப்ப அவர் இதுபோன்ற தகாத செயலை செய்துவிடுவதை பார்த்துவிட நேரும்போது தெய்வபக்தியே நமக்குள் அகலும் அபாயமும் நடக்கும்…

    அந்த காலத்தில் எல்லாம் தெய்வப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கே ஆர் விஜயாம்மா அந்த படம் நடித்து முடிக்கும் வரை விரதத்தில் இருப்பாங்களாம். இதை படம் என்று நினைக்காமல் தான் ஒரு நடிகை என்று எண்ணாமல் தான் தெய்வமாக தென்படும்போது அந்த தெய்வத்தன்மை நம் மனதுள் குடிபுக நம்மால் முடிந்தது என்னவோ அதை தான் அவங்க செய்தாங்க. இப்ப அப்படியா? கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் 90 பர்செண்ட் வேலையை முடித்துவிடுகிறது. மீதி கருணை பார்வை பார்த்து அருள் பாலிக்கணும் அவ்ளோ தானே? அதையும் செய்துடுவாங்க. ஆனா எனக்கு பிடிப்பதில்லை… கொஞ்சம் வருஷத்துக்கு முன் வந்த அம்முடு தெலுகில், அம்மன் தமிழ்ல ஒரு படம் வந்தது… இப்பவும் அம்மனின் உக்கிர தாண்டவன் நினைக்கும்போது மனம் சிலிர்க்கிறது…. மனதின் தெய்வத்தன்மையே வெளிப்படுவது….

    எதிலும் எப்போதும் மனிதன் இரண்டு முகத்துடன் அலைவதை நாம் காணமுடியாமல் போவது துர்பாக்கியமே..

    ReplyDelete
  97. திருமண மண்டபத்தில் கண்ணுக்கு தெரிந்த சுகபோக கல்யாணமும் ஆனால் அதற்கு பின்னர் நடக்கும் பிரச்சனைகளையும் படிக்கும்போதே ஒரு சில கசப்பான நிகழ்வுகள் என்னுள் தோன்றியதை தடுக்க இயலவில்லை…. மாப்பிள்ளையின் அம்மா அப்பாவையும் அவர் சொந்தக்காரங்களையும் பார்த்தால் தலையில் வைரக்ரீடம் வைத்துக்கொண்டு எங்கே தலை குனிந்தால் அது விழுந்துவிடுமோ என்று நடப்பது போல தோன்றும்… இந்தப்பக்கம் பெண்ணை பெற்றோர் கண்ணீரும் கைகளை பிசைவதுமாக குறைந்த வரதட்சணை தொகையை சரிக்கட்ட மாப்பிள்ளை வீட்டாரிடம் எப்படி எல்லாம் தன்னை அடகு வைக்கலாம்னு மனதில் பயத்தை நிரப்பிக்கொண்டு அலைவதை காணலாம்…
    எப்பவுமே உங்க கவிதைகளில் நான் கவனித்த அருமையான விஷயங்கள் என்னன்னா இங்க பாருங்கப்பா இப்படி எல்லாம் நடக்குதுன்னு அழகா எளிமையா சொல்லிக்கிட்டே வந்து….. இறுதி பத்தியில் இப்படி நடப்பதில் இருந்து தப்பிக்க முயலுங்கள்னு சொல்லும் அழகிய அழுத்தமான ஆணித்தர வரிகள் முடிப்பதை நான் மிகவும் ரசிப்பதுண்டு.. இங்கும் அப்படி தான்….

    ReplyDelete
  98. இப்படி உண்மைக்கும் பொய்க்கும் இடையே நின்னு தீர்க்கமா ஆலோசித்து தெளியக்கூடியவர்கள் தான் ஞானத்தை பெறுகிறவர்கள் என்றும், நமக்கு அதெல்லாம் கூட வேணாம்யா ஆனா இப்படி ”ஙே” ந்னு ஏமாந்து போகாமலிருக்க நாமும் இனி மனிதர்களின் மனங்களை படிக்க முயல்வோமா??? அப்டின்னு நீங்க போட்டது நச் ரமணி சார்… சிந்திக்கவைக்கும் முத்தான சிந்தனை துளிகள் உங்கள் ஒவ்வொரு கவிதையும்…..
    உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றும் சொல்லி செல்லும் கருத்து இருக்கே அபாரம் ரமணி சார்…. தினப்படி நிகழ்வுகளில் அன்றாட இயல்புகளில் மனிதர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடம் நாம் காணும் நல்லவை, நல்லவை அல்லாதவையை நீங்க நுணுக்கமாக யோசித்து அதை இத்தனை பிரம்மாண்டமாக கவிதையாக படைத்து சிந்தித்து தெளியுங்கள் மக்களேன்னு அழகாய் எங்களை வழி நடத்துகிறது என்று சொன்னால் அது மிகையில்லை ரமணி சார். இன்றைய இந்த இயந்திர காலக்கட்டத்தில் எல்லோருக்கும் அவரவர் வேலை கவனிக்கவே நேரம் போதலை… ஆனால் தான் பெற்ற அனுபவங்களை பிறருக்கு பகிர்ந்து இனி கவனமாக இருங்கள் என்று சொல்லும் பக்குவமும் பண்பும் நல்ல உள்ளமும் ஒரு சிலருக்கே உள்ளது. அதில் நீங்களும் ஒருவர் என்பதை உங்கள் ஒவ்வொரு படைப்பும் சொல்லிவிடுகிறது….இது தான் சார் சமுதாய சிந்தனை…. தான் பெற்றதை பகிரும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கு?

    இந்த உங்க படைப்பு படிக்கும்போதே எப்படி எல்லாம் இதுபோன்ற பச்சோந்திகள் கிட்டே மாட்டி பாதிக்கப்பட்டோம் என்று நாம் நினைக்காமல் இருக்கமுடியாது கண்டிப்பா…

    தொடருங்கள் இதுபோன்று அருமையான படைப்புகளை ரமணி சார். என்னுடையது 100 வது கருத்துன்னு நினைக்கிறேன். என் அன்பு வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் ரமணி சார். நல்லோர் எல்லோரும் நன்றாய் இருக்கவேண்டும் என்றென்றும்…..

    ReplyDelete
  99. பின்னூட்ட பி எச் டி என்று அன்பாக என்னை அழைத்த சகோதரர் ஒரு மனசு கதையும் இன்னும் படிச்சு கருத்திடலை :( இடனும் சீக்கிரமாக இட முடியலையே...

    அன்பின் காட்டான் சகோதரரே... ரமணி சார் படைப்புக்கு என் கருத்து இல்லாமல் போவதாவது.... நான் இருக்கும் காலம் வரை என் கருத்து இடும் பணியும் கண்டிப்பாக தொடர்ந்துக்கொண்டே இருக்கும்பா... இடையில் முடியாத நிலை அதுவும் இல்லாம அதிகப்பணி ஆபிசுலயும் வீட்லயும்... அதனால் தான் இத்தனை தாமதம்...

    ஆல்வேஸ் லேட் கமர் மஞ்சு :( இதற்கு ரமணி சார் என்னை மன்னிப்பார் என்ற நம்பிக்கையுடன்....

    ReplyDelete
  100. ஓ!...105 இடுகைக்குப் பின்பு தான் வருகிறேன்...வெட்கமாக உள்ளது...என்ன செய்தேன் நான்?...´!...சரி விடயத்திற்கு வருவோம். எத்தனை அவலக் கோடுகளைக் காட்டியுள்ளீர்கள்!...எப்படி இப்படிச் சிந்தித்தீர்கள்!(இங்கு நிறுத்தி மறுபடி இடுகையை வாசித்து)
    ''...வலதுபுறம்
    இட்டிலியில் கிடந்த ஈயை
    எடுத்துப் போடும் அசிங்கத்தையும்
    வலதுபுறம் மிகப் பணிவாக
    அவனே பறிமாறும் லாவகத்தையும்...''

    இதை வாசிக்கும் போது சரியான அசிங்க உணர்வாக இருந்தது. இதை விட வாழ்வில் எத்தனை அசிங்கங்களைப் பார்க்கிறோம். மிக நல்ல இடுகை சகோதரரே! வாழ்த்துகள்!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  101. நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி சார்.
    நலமா?


    /நாம் அப்படியெல்லாம் கூட மாறவேண்டாம்
    ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
    இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா/

    நிச்சயமாக!!!!



    மனிதர்களின் நடிப்பின் நிஜங்களை அப்படியே கவிதையில்
    தெளிவாக காட்டியிருக்கிறீங்க.அந்தந்த இடங்களிற்கேற்றதாற் போல் மாற பழகி விட்டார்கள்,விட்டோம்.
    நல்ல பதிவு.பிடிச்சிருக்கு சார்.

    ReplyDelete
  102. மிக
    ஆழமான
    தேவையான
    நுட்பமான
    பார்வை

    ReplyDelete
  103. முரண்பாடுகள் கலந்துவிட்ட வாழ்க்கையின் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது லெட்சுமனக் கோடு. ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாய் கூறிச் செல்கிறது இந்தக் கவிதை. வாழ்க, வளர்க.

    ReplyDelete
  104. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  105. vidivelli //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  106. இராஜராஜேஸ்வரி//

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  107. ShankarG //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  108. மஞ்சுபாஷிணி//

    தங்கள் மேலான வரவுக்கும்
    விரிவான சரியான உற்சாகம் ஊட்டும்படியான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    பதிவுலகில் தங்கள் பின்னூட்டத்திற்கெனவே
    அதிக பின்தொடர்பவர்கள் இருப்பது
    தங்களுக்கு மட்டுமே என்பது இப்போது புரிந்திருக்கும்
    தாங்கள் பதிவுகள் அனைத்தையும் மிகச் ச்ரியாகப்
    புரிந்து கொண்டு மிக அழகாக ஆழமாக பின்னூட்டமிடுவது
    உண்மையில் பிரமிக்கவைக்கிறது
    வாழ்த்துக்களுடன் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  109. மாயக்கோடு என்றானபின் எங்கு நிற்பது என்பதே ஐயம் அதிலு கொஞ்சம் பின்னாடி நின்றால் ந்ம்மையும் ஏதேனும் குழிவில் (இரண்டில் ஒன்று) சேர்த்து விடுவாங்களே ரமணி சார்.

    கெட்டவனு திட்டினா பரவாயில்லை நல்லவனு முன்னாடி சொல்லி பின்னாடி போய் இவன் இருக்கானேனு இழுக்கறவங்களை அடையாளமே பார்க்க முடியலை சார் அந்த மாயக்கோடு தெரியவரைக்கும் நிறையவே ஏமாற்றம் தான் மிஞ்சும்
    என் அனுபவம் சார் தப்பாவும் இருக்கலாம் இருந்தா அப்படியே மாயைன்னு விட்டுங்களேன் ப்ளீஸ்\

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  110. இன்றைய கவிதை

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  111. கோட்டில் நிற்பதும் கோடு தாண்டப்படுவதை இயலாமையுடன் பார்த்துக்கொண்டு நிற்பதும் அடிக்கடி நடக்கின்ற நாடகம்தான். நாம் எப்போதும் பார்வையாளர்கள்தான் என்பதை சொல்லிவிட்டீர்கள். ஒருவேளை அதுவே பெரிய கொடுப்பினை போலும். ம்.., கவிதை சிந்தனையை தூண்டிவிடுகின்றது.

    ReplyDelete
  112. உண்மையே ரமணி சார்... இது கூட இறைவனின் கருணையும் உங்களைப்போன்றோரின் ஆசிகளும் தான் சார் காரணம்.....அன்பு நன்றிகள் ரமணி சார்...

    ReplyDelete
  113. சாகம்பரி //

    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  114. என் மனம் கவர்ந்த இந்தப்பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete
  115. RAMVI //

    பதிவை அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete