Monday, October 3, 2011

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
என்னைத் தனியே  விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை

வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் ,படிமங்களின் தோல்கள்
கடினமானவையே

என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு


118 comments:

  1. சுதந்திரக் காற்றை ஸ்வாசிக்க ஆசைப்படுவது இயற்கைதானே!!

    ரொம்ப நல்ல கவிதை சார்! :-)

    ReplyDelete
  2. நல்ல கவி!

    ReplyDelete
  3. சீக்கீறம் ஞானம் பெருங்கள்...

    அர்த்தப்படும் கவிதை

    ReplyDelete
  4. //ஒரு சித்தனாய்
    ஒரு புத்தனாய்
    என்னை மலரவிடு
    என்னை நானே அறிய விடு//

    பட்டறிவே தேவையென பகரும் உங்கள் கவி அழகு சார்.

    ReplyDelete
  5. அண்ணே கவிதை super!

    ReplyDelete
  6. நன்று! தொடரட்டும் உமது கலைச்சேவை!

    ReplyDelete
  7. /விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி/

    அருமை.

    ReplyDelete
  8. விடுவதற்கு மனம் தயாராகவில்லையே சார். பாதுகாப்பான எல்லைகளை அறிவாரோ என்று பயப்படுகிறதே. கவிதை இளைய மனதின் வேண்டுதலாக பிடிபடுகிறது. அருமை சார்.

    ReplyDelete
  9. அழகாய்
    ஆழமாய்
    எளிமையாய்

    ஒரு வாழ்வியல் தத்துவத்தைச் சொல்லிவிட்டீர்கள் நண்பரே..

    விட்டு விடுதலையாகி...

    ReplyDelete
  10. ஒரு சித்தனாய்
    ஒரு புத்தனாய்
    என்னை மலரவிடு
    என்னை நானே அறிய விடு/

    ஆம். பட்டும், சுட்டுமே அறியும் அனுபவமே வாழ்க்கை.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. RVS //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. ஷீ-நிசி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. கவிதை வீதி... // சௌந்தர் ///

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. கடம்பவன குயில் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. விக்கியுலகம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. ராமலக்ஷ்மி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. சாகம்பரி //

    முன்பு நான் பத்திரிக்கைகளுக்கு எழுதுகையில்
    ஒரு மறைபொருள் தன்மையை பயன்படுத்துவேன்
    இப்போது பதிவுகளில் எளிதாக சொல்ல முயல்வதால்
    என் படைப்பு நீர்த்துப் போவதாக நண்பன்
    வருத்தப்பட்டுப் பேசினான்.அவன் வருத்தத்தைப்
    பதிவு செய்யலாமே என இதை எழுதினேன்
    இதற்கு முரண்பாடாக எளிமையாக எழுது
    அதுதான் சரி என ஒரு நண்பன் அறிவுறுத்துகிறான்
    அதை அடுத்த பதிவாகத் தரலாம் என நினைக்கிறேன்
    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. விழாதிரு என எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

    அருமையான வரிகள்!

    ReplyDelete
  22. "விவேகத்திற்குப் பின் வேகம் வர
    சந்தர்ப்பமே இல்லை"

    - அனுபவ உண்மை!
    -----------------------
    ”விழாதிரு என எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி”

    -தன்னம்பிக்கையூட்டும் வரிகள்!

    ---------------------------

    ”எத்தகைய சுவையான பழமாயினும்
    உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
    கசக்கவே செய்கின்றன”

    -சுயமே சுகமான வாழ்வு!

    --------------

    அருமையான வாழ்வியல் வரிகள். மனதிற்கு புத்துணர்வூட்டுகின்றன.

    நெல்லி. மூர்த்தி
    http://nellimoorthy.blogspot.com

    ReplyDelete
  23. மனோ சாமிநாதன் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. புரிதலும், அறிதலும் சுயமாய் இருத்தல் வேண்டும், அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் இனிமையான அனுபவமாக அமையும். . .

    ReplyDelete
  25. என்னை இனியேனும்
    அலைய விடு
    தேட விடு
    அறியவிடு
    பூசாரியாய் புத்த பிட்சுவாய்
    வாழ்வைத் தொடராது
    ஒரு சித்தனாய்
    ஒரு புத்தனாய்
    என்னை மலரவிடு
    என்னை நானே அறிய விடு


    ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  26. பதிவுலக பித்தனே ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க. நன்றாக இருக்கீறது

    ReplyDelete
  27. //விழாதிரு என எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி//
    அருமையான வரிகள்.. இப்போதைய இளைய தலைமுறையும் இதைத்தான் விரும்பறாங்க.

    ReplyDelete
  28. அருமை சார். பலரின் மனதிலுள்ளது.

    ReplyDelete
  29. என்னை இனியேனும்
    அலைய விடு
    தேட விடு
    அறியவிடு
    பூசாரியாய் புத்த பிட்சுவாய்
    வாழ்வைத் தொடராது
    ஒரு சித்தனாய்
    ஒரு புத்தனாய்
    என்னை மலரவிடு
    என்னை நானே அறிய விடு
    // அற்புதமான வரிகள்,
    அசத்தலான கவிதை , பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  30. //
    என்னை இனியேனும்
    அலைய விடு
    தேட விடு
    அறியவிடு
    பூசாரியாய் புத்த பிட்சுவாய்
    வாழ்வைத் தொடராது
    ஒரு சித்தனாய்
    ஒரு புத்தனாய்
    என்னை மலரவிடு
    என்னை நானே அறிய விடு//

    ஆஹா..என்ன அருமையயான வரிகள்.தன்னிச்சையாய்,சுதந்திரமாக செயல் படத்துடிக்கும் மனித மனதின் அழகிய புலமபலை கவிதையில் வடித்திருப்பது அருமை.

    ReplyDelete
  31. நெல்லி. மூர்த்தி
    http://nellimoorthy.blogspot.com

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. பிரணவன் . //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. கவி அழகன் s //
    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. ரம்மி //

    தங்கள் உடன் வரவுக்கும்
    .. வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. Lakshmi //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. Avargal Unmaigal //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. அமைதிச்சாரல் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. தமிழ் உதயம் //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. !* வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி


    நல்ல வார்த்தை ,விழாமல் இருக்க முடியாது ஆனால்
    விழுந்தால் கலங்காமல் எழுவதற்கு தெரியவேண்டும்


    தமிழ்மணம் 13

    ReplyDelete
  42. மிக அருமையான கவிதை. அதிலும் இறுதி வரிகள் மிக அற்புதம். கவிதை மீதும் காதல் கொள்ள வைக்கிறது உங்கள் கவிதைகள்.

    ReplyDelete
  43. நரேன் என்ற வீரமாந்தன் அழகாக கூறுவார் நீ எதுவாக ஆக என்னுகிரையோ அதாகிறாய் என்கிறார் உங்களின் இந்த ஆகத்தின் வழி விடுத்துள்ள வேண்டுகோள் மிகசிரன்தவை இந்த எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை மிகசிலறல் எண்ணப் படுகிறது எனவேதாம் நாட்டின் நலன் பற்றி எண்ணுபவர்கள் குறைவாகவும் தநலன் பற்றி எண்ணுபவர்கள் மிகையாகவும் இருகின்றனர் பாராட்டுகள் வணக்கங்கள் ....

    ReplyDelete
  44. இன்று இலக்கில்லாத மனிதர்களே அதிகம் உங்களின் வேண்டுதல் மனிதரில் புனிதரவதைக்கட்டுகிறது ஒருகடுந்தவத்தின் பின்னணியில் இருக்கும் அமைதிபோல மனிதகுலத்தில்விடியலை வேண்டுவனபோல ....பாராட்டுகள் எனகூறி விலகி நிற்காமல் வணங்கி வேண்டுகிறேன் .

    ReplyDelete
  45. //ஒரு சித்தனாய்
    ஒரு புத்தனாய்
    என்னை மலரவிடு
    என்னை நானே அறிய விடு//

    ஆம். பட்டால் தானே நாலும் தெரிந்து கொள்ள முடியும்.

    நல்ல கவிதை.

    ReplyDelete
  46. ஆம். பட்டும், சுட்டுமே அறியும் அனுபவமே வாழ்க்கை என்பதை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். தமிழ்மணம்: 15

    ReplyDelete
  47. போளூர் தயாநிதி //

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  48. மாலதி //

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  49. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. சிவானந்தம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. M.R //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  53. திரும்ப திரும்ப படிக்கிறேன் இந்த வரிகளை.....எனக்கா? எனக்காக வரையப்பட்டதா இந்த கவிதை வரிகள்? எப்படி இது சாத்தியம்? இன்னும் எல்லாத்துக்கும் நான் டிப்பெண்ட் பண்ணி இருக்கேனே எப்பவும் அதனாலயா? எல்லோரும் இப்பவும் கிண்டல் செய்கிறார்களே.. ரோட் கிராஸ் செய்ய கூட யாரையாவது எதிர்ப்பார்க்கிறியே என்று....

    என்னை ஏன் இப்படி தனித்துவமா இருக்க பழக்கலை?

    கண்டிப்பா சொல்றேன் இது எனக்கே எனக்குன்னு எழுதப்பட்ட வரிகள் போலவே இருக்கு ரமணி சார்.... பொத்தி பொத்தி பார்த்து பார்த்து பிள்ளையை வளர்த்து இப்பவும் அப்படியே இருக்கு ஒரு குழந்தை.... தான் மட்டும் இப்படி இருப்பது போதாதுன்னு தன் பிள்ளைகளையும் அப்படியே கொண்டு வர பாடுபடுது..... அதில் ஒரு பிள்ளை மட்டும் எப்படியோ தப்பித்து அப்பாவின் அறிவுரையால் கொஞ்சமே கொஞ்சம் விலகி 3 வருடம் தனிமையில் உழண்டு தாயின் அன்பை அறிந்து அனுபவங்களில் மெருகேறி இப்ப தகப்பன் சாமியாய் தன் தாய் கைப்பிடித்து நடக்கவைத்து வழி சொல்கிறது... எல்லாவற்றுக்குமே தன் தாய் தன்னையே எதிர்ப்பார்க்கும்படி வைத்துவிட்டது...

    இன்றைய காலக்கட்டத்தில் நல்லவை விட தீயவை அதிகம் உலகில் சூழ்ந்திருக்கு என்பதை சூக்‌ஷுமமாக சொல்லி செல்கிறது வரிகள்....
    கர்ப்பத்தில் இருந்தவரை பாதுகாப்பும் அரவணைப்பும் கொடுத்தது போதும் அம்மா எனக்கு.. வெளிவந்து உலகில் கால் பதித்தப்பின் இனி எனக்கு கற்றுத்தெளிய தனியே விடு என்று தைரியத்துடன் குழந்தை சொல்லும் காலம் இது....

    எத்தனை காலம் பிள்ளைகளுக்கு துணை வருவது. நம் காலம் வரை தானே? அதன்பின்? உலகை எதிர்நோக்கவேண்டாமா பிள்ளை? உலகில் நல்லவர் மட்டுமா இருக்கின்றனர்? சிரித்துப்பேசி துரோகிப்பவரும் உடன் இருந்தே குழி பறிப்போரும் முகத்துக்கு முன் சிரித்து முதுகுக்கு பின் பரிகசிக்கும் இத்தனையும் பிள்ளை அறியவேண்டாமா? அறிந்து அதன்படி அவரவருக்கு ஏற்றபடி நடக்கவேண்டாமா? அதற்கு சொல்லி கொடுப்பதை விட தானே அறிந்து தெளிந்தால் தானே வெற்றிக்கு வலிகளை படிகளாக்கும்?

    ReplyDelete
  54. எந்த தாய்க்கு தான் தன் குழந்தை விழட்டும் அடி படட்டும் பட்டு படிக்கட்டும்னு பார்த்துட்டு இருக்க முடியும்? ஆனால் குழந்தையே இங்க தாய்க்கு சொல்லும் வரிகளாக கவிதை அமைப்பை படிக்கும்போது நிறைவது கண்கள் மட்டுமில்லை மனமும் தான் ரமணி சார்....

    பிறக்கும்போது ஒன்றும் தெரியாமல் இருக்கும் குழந்தை ஒரு காலக்கட்டத்திற்கு பின் தாய் தந்தை துணை தேவைப்படுகிறது கைப்பிடித்து நடக்க பழக.... அம்மா என்று தானே சொல்ல அறிவதில்லை அம்மாவே ஆரம்பிக்கிறா.. எங்க சொல்லு அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா சொல்லு சொல்லு அம்ம்ம்ம்மா.... அப்படி கற்க ஆரம்பிக்கும் குழந்தை கொஞ்சம் பழகினதுமே அம்மாவின் வார்த்தைகளுக்காக காத்திருப்பதில்லை... தானே எல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறது... நடக்க சொல்லிகொடுத்தால் ஓட ஆரம்பிக்கிறது.. பொம்மையை காட்டினால் அதை உடைக்க கற்கிறது.....உடைத்து சேர்க்க பார்க்கிறது... முடியாதபோது வீரிட்டு அழுகிறது... வீசி எறிகிறது... பின் அழுகை முடிந்து திரும்ப நிதானமாக வந்து எப்படி இதை சேர்ப்பது என்ற மூளையை கசக்குகிறது.... பிரித்த பொம்மையை சேர்த்தப்பின் என்னவோ உலகையே வென்ற பெருமை முகத்தில் தென்படுகிறது... ஓடி வந்து தத்தக்கா பித்தக்கான்னு அம்மா புடவை முந்தானையை பிடித்து இழுக்கிறது... தன் வெற்றியை அம்மாக்கு புரியவைக்க முயல்கிறது....


    இன்றைய ஜெனரேஷனின் தேவைகளை தான் இப்ப அழகா கவிதையில சிறப்பா சொல்லிட்டீங்க ரமணி சார்... உவமை எல்லாமே புதுமை எப்போதும்போல்... அடர்ந்த காட்டில் நண்பகல் கூட கண்டிப்பா இருட்டா தான் காட்டும்... கண்ணை கட்டி காட்டில் விட்டமாதிரி இருந்திச்சுன்னு சொல்வோமே அது போல... வழி தெரியாது... வெளிச்சமும் இல்லை... இருட்டென்றால் பயம்... அதனால் அந்த காட்டில் இருக்கமுடியாது... அப்ப என்ன செய்வோம்? கண்டிப்பா வெளியேற எதுனா முயற்சி கண்டிப்பா செய்வோம் தானே? அதை உவமையாக தந்து பிரமிக்க வைத்திருக்கீங்க ரமணி சார்....

    சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னா விழாம கத்துக்கணும் இது தாய்மார்களின் பாலிசி... விழுந்தாலும் அடி பட்டாலும் உருண்டாலும் விழுப்புண் வாங்கினாலும் சரி சைக்கிள்ல குரங்கு பெடலாவது போட்டு ஓட்டிரனும்டா.. இது பிள்ளைகளின் பாலிசி... அம்மாவுக்கு பயம் பிள்ளை அடிபட்டுருவானேன்னு.. பிள்ளைகள் கண்ணில் நீரையோ உடலில் அடியோ பார்த்தால் அம்மா மனசே துண்டாகிடுமே.... அப்ப தைரியம் எப்படி தான் வருவது பிள்ளைக்கு? பிள்ளையை வெளியே ஸ்கூலுக்கோ அல்லது விளையாடவோ அனுப்பிட்டால் அடிக்கொருதரம் பிள்ளை பத்திரமா இருக்கானான்னு பார்த்துட்டே இருப்பது அம்மாக்களின் வேலையாகிவிட்டது....

    பிள்ளைகளுக்கு தைரியம் வேணும்னா அப்பாக்கூட கைக்கோர்த்தா தான் வேலையாகும் போல.. விழட்டும்டி.. அடிபடட்டும்... எழுவான் பாரு தைரியமா... திரும்ப விழாம ஓட்ட கத்துப்பான் பாரு.. இது அப்பாவின் வாதம்....

    ReplyDelete
  55. வளர்ந்தப்பின்னும் பிள்ளைக்கு ஊட்டிவிட எந்த தாய்க்கு தான் பிடிக்காது? ஆனால் அதுவே சோம்பலாக்கிவிடுமே பிள்ளையை... வயிற்றுப்பசியை விட முதலில் அறிவுப்பசியை கொடுக்கணும் பிள்ளைக்கு... எப்பவும் பிள்ளைக்கு ஊட்டி ஊட்டி மந்தமாக்கி ஒரே இடத்தில் உட்காரவெச்சுடாம இருக்க... பிள்ளையே என்ன க்யூட்டா சொல்றது... என்னை பசி அறியவிடு அம்மா.... ஊட்டிக்கொடுத்தது எல்லாம் போதும் என்று.... ரசித்து ரசித்து வாசிக்கிறேன் ரமணி சார் வரிகளை.... என் பிள்ளையே வந்து சொல்வது போல இருக்கு வரிகள்....

    தேடல் எப்போது ஏற்படுகிறது?
    தேவை ஏற்படும்போது
    தேவை எப்போது அவசியமாகிறது?
    இல்லாமை எனும்போது
    இல்லாததை தேடி அலைந்து
    அதை பெற்று பெற்றப்பின் அதன் வெற்றியில் மிதந்து
    ரசித்து சுவைக்கும்போது தான்
    நம் உழைப்பும் முயற்சியும் தேடலுக்கான அவசியமும் புரியவருகிறது....


    கண்ணுக்கு எதிரே நாம் கேட்கும் முன்னாடியே எதிர் நிற்பது நமக்கு விருப்பமில்லை... கண்ணுக்கு தெரியாத சூட்சுமத்தில் மனம் அலைபாய்கிறது... அங்கே என்ன இருக்கும்? எப்படி இருக்கும்? கிடைக்குமா? கிடைக்காதா? முயல்வோமா? முயன்று பார்ப்பதில் தோல்வியே கிடைத்தாலும் அதை தோல்வியா ஒப்புக்காது மனம். அனுபவமாய் நினைத்து இன்னும் வேகத்துடன் வெறியுடன் நம்மால் முடியலன்னா அப்ப யாரால் முடியும் என்ற உத்வேகத்துடன் முயலும்... வெற்றியின் விளிம்பை தொடும் வரை உறக்கம் ஊண் ஒதுக்கும்....

    22 வயசு பிள்ளை இன்னமும் என் கண்ணுக்கு குழந்தையாவே தெரிவது ஏன்? ஆனால் என் பிள்ளை என்னை கிண்டல் செய்வான். மம்மா இப்படி செய்யாதீங்க. நான் வளர்ந்துட்டேன் என்று சொல்வான். அட என்னை கைப்பிடித்து பத்திரமா ரோட் கிராஸ் செய்ய வைப்பான். இந்த வரிகள் என் பிள்ளை என்னை பார்த்து சொல்வது போலவே உணர்கிறேன் ரமணி சார்....

    ReplyDelete
  56. ஒரு படைப்பு கூட உங்களுடையது மேம்போக்காக படித்துவிட்டு போகும்படி இருப்பதில்லையே... ஏன்? ஈர்த்துவிடுகிறது கருத்தில் ஆழ்த்திவிடுகிறது.... சிந்திக்கவும் வைத்துவிடுகிறது... இந்த கவிதை படிக்கும் தாய்மார்கள் ஒவ்வொருவரும் தன் பிள்ளையை பெருமையாய் நினைக்காமல் இருக்கமாட்டாங்க. அதுவே வெற்றி இந்த கவிதைக்கு ரமணி சார்....

    குழந்தை குழந்தையாய் இருக்கும்வரை தான் அதற்கு துணை அவசியம்.... அதன்பின் வழிக்காட்டுதலோடு நிறுத்திக்கொண்டு அதன் யோசனைகளை உன்னிப்பாய் கவனிக்கவேண்டும்.. அது செயல்படுத்தும் திறனை வியந்து ரசிக்கவேண்டும்... என்னமா சொல்கிறது... அப்பப்பா என்னை நானே அறியவிடு....என் சல்யூட் ரமணி சார் இந்த படைப்புக்கு....

    சிந்தனை சிற்பியின் மற்றுமொரு முத்து இந்த அற்புத படைப்பு....

    ReplyDelete
  57. Ramani Sir "THE GREAT".உங்களின் ஒவ்வொரு கவிதை படிக்கும் போதும்,இப்படித் தானே சொல்லத் தோன்றுகிறது.பாரதியின் படைப்பு படிக்கப் படிக்க பிரமிப்பை ஏற்படுத்தும்.அதைப் போலிருந்தது என்னை நானே அறிய விடு.மிகைப்படுத்துவது போலிருக்குமோ என்று எண்ணிக் கொண்டாலும், தோன்றியதைச் சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  58. சூப்பர் வரிகள் & அழகான கவிதை.

    ReplyDelete
  59. பட்டுத் தெரிந்து கொள்வதில் இருக்கும் சுகம் வேறெதில்... நல்ல கவிதை....

    ReplyDelete
  60. அருமையான வாழ்வியல் வரிகள்...அழகான கவிதை...

    ReplyDelete
  61. இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,

    கட்டுக்களினுள் அகப்பட்டு வாழாது சுதந்திரமாய்ச் சிறகடித்துப் பறவை போன்று வாழ்ந்து தன் நிலையினை அறியத் துடிக்கும் மனிதனின் உணர்வுகளை உங்களின் இக் கவிதை சொல்லி நிற்கிறது. நல்ல கவிதை.

    தமிழ்மணம் 19

    ReplyDelete
  62. வல்லிய வரிகள்!
    சுயத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது!

    ReplyDelete
  63. பிள்ளைகள் அவர்களுக்காகவே பிறந்தவர்கள். எமக்கூடாகப் பிறந்தவர்கள் என்பதற்காக எமது எண்ணங்களை அவர்களில் புதைக்க வேண்டாம். அவர்களை அவர்களாகவே விடவேண்டும். அவர்களுக்கு என்று ஒரு உலகம் இருக்கின்றது. என்னும் எனக்குப் பிடித்த கருத்தையே இக்கவிதை மூலம் வலியுறுத்தியுள்ளீர்கள். உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் எண்ணக்கருத்தை தூண்டுவனவாக இருக்கின்றது. இக்கவிதை ஒவ்வொரு பெற்றோருக்கும் உறைக்கச் சொல்வதாய் அமைகின்றது. தொடருங்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
  64. இப்போதெல்லாம் எனக்கு
    பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
    வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
    விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
    உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
    காயம்பட்டு தழும்பாகட்டும்
    விவேகத்திற்குப் பின் வேகம் வர
    சந்தர்ப்பமே இல்லை
    விழாதிரு என எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

    அருமை திடமான வாழ்விற்கு ஒரு வழிகாட்டி
    இவ்வாறு இருத்தலும் நன்றே என உணர்த்திய
    கவிதை வரிகள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
    என் தளத்திலும் உங்கள் ஆசியினைப் பெற
    புதிய பாடல்வரி காத்திருக்கின்றது .முடிந்தால்
    வாருங்கள் உங்கள் கருத்தையும் தாருங்கள்

    ReplyDelete
  65. Murugeswari Rajavel //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  66. vanathy //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  67. வெங்கட் நாகராஜ் //
    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  68. ரெவெரி //
    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  69. கோகுல் //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  70. நிரூபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. அம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. Madhavan Srinivasagopalan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. நெருப்பு சுடும் என்று சொல்லித்தெரிவதில் தவறில்லை. அனுபவங்கள் சிந்தனைக்கும் செயலுக்கும் மெருகூட்டும். ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவித்துத்தான் தெரிந்து கொள்வேன் என்று சொல்வது REINVENTING THE WHEEL என்பதுபோல் இருக்கும். எண்ணங்கள் மாறுபடவில்லை. அணுகுமுறையில் சிந்தனை சற்றே வேறுபடுகிறது. தொடர்ந்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  75. அருமையான கவிதை சகோ. ஒவ்வொரு வரிகளும் சிந்திக்க வைக்கின்றன.

    ReplyDelete
  76. நல்ல கவிதை. நன்றி

    ReplyDelete
  77. உம்மை அறிய கவிஎழுதி-பிறர்
    உம்மையும் அறிய கவிஎழுதி
    செம்மை வாழ்வுக்கு அனுபவமே-மிக
    சிறப்பெனச் சொல்வதும் அனுபவமே
    இம்மை வாழ்வில் எதுவொன்றும்-தானே
    ஏற்றது பட்டே அறிவென்றும்
    நம்மை உயர்த்தும் எதிர்நாளில்-என
    நவின்றது உண்மை வாழ்நாளில்

    ஊட்டி வளர்த்தல் உதவாது-துன்பம்
    உற்றால் தாங்க இயலாது
    காட்டி பயப்பட வளர்க்காதீர்-துணிவு
    காட்டீன் அதனைத் தடுக்காதீர்
    பாட்டின் கருத்தே பட்டறிவே-இதனை
    பாடமாய் எண்ணில் நல்லறிவே
    நாட்டின் போக்கு தெரிவாரே-வாழ
    நலமிகு வழியும் அறிவாரே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  78. G.M Balasubramaniam //

    சராசரிகள் வழித்தடத்தில் நடக்கவே விரும்புவார்கள்
    சித்தர்கள் விரும்புவதில்லை
    அவர்களுக்கான பதிவாக இதைக் கொள்ளலாம்
    தங்கள் வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  79. காந்தி பனங்கூர் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. tamil //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் மேலான வரவுக்கும் விரிவான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. சொல்வதற்கு வார்த்தைகள் அகப்படவில்லை.

    ReplyDelete
  83. விழாதிரு என எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி...

    என்னை இனியேனும்
    அலைய விடு
    தேட விடு
    அறியவிடு....

    தேடுதல் தேடுதல்... எல்லைகளற்ற தேடுதல்தான் வாழ்வை முழுமையானதாக்கும்.

    ReplyDelete
  84. கடுமையான தேடலுக்குப் பின் ஒரு ஞானி உணர்ந்து ஊருக்குச் சொல்வதை எளிய கவிதை வாயிலாக அருமையாகச் சொல்லி இருப்பதற்கு ரமணி அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  85. வணக்கமையா என்றைக்குமே  வாழ்வியலை பேசும் உங்கள் கவிதைகள் இன்று சுதந்திரமாய் செயல்பட விடுங்கள்ன்னு தொக்கி நிற்கிறது வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  86. வணக்கமையா என்றைக்குமே  வாழ்வியலை பேசும் உங்கள் கவிதைகள் இன்று சுதந்திரமாய் செயல்பட விடுங்கள்ன்னு தொக்கி நிற்கிறது வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  87. ShankarG //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  88. காட்டான் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  89. வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரிடம் எரிச்சலுறுவது போல், காதலெனும் போர்வைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் துணையிடம் இணை பிதற்றுவதைப் போல், அன்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட வளர்ப்பு மிருகங்களின் வாய்மொழி போல்... வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்கத் துடிக்கும் மனத்தின் பிரதிபலிப்பாயொரு கவிதை. கட்டுப்பாட்டின் தீவிரம் குறைக்கும் வகையில் சற்றே அழுத்தமான வார்த்தைப் பிரயோகம். பாராட்டுக்கள் ரமணி சார், வாழ்வின் எல்லாப் பரிமாணங்களிலும் பார்வையைச் செலுத்திப் பதிவுகள் படைப்பதற்கு.

    ReplyDelete
  90. //விழாதிரு என எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி//

    அருமை.
    அனுபவம் ஒரு சிறந்த பாடம்.

    ReplyDelete
  91. கீதா //

    தங்கள் மேலான வரவுக்கும் விரிவான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  92. RAMVI //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  93. சூப்பர் கவிதை

    நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க

    பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

    ReplyDelete
  94. வைரை சதிஷ் //.
    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  95. //என்னை நானே அறிய விடு//

    அறிந்துவிட்டால் அப்புறம் இந்த உலகை அறிவது மிக எளிதாகிவிடும். மிக அருமையான கவிதை அய்யா..வாழ்த்துகள்..

    ReplyDelete
  96. அன்புடன் மலிக்கா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  97. எப்படி இதை மிஸ் பண்ணினேன்?
    அருமை,அருமை!

    ReplyDelete
  98. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  99. வணக்கம் ஐயா தங்கள் ஆசி பெற என் தளத்தில் இரண்டு விசயம் காத்திருக்கின்றது தவறாமல் வாருங்கள் மிக்க நன்றி ....

    ReplyDelete
  100. அம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  101. இளைய தலைமுறையின் இயல்பான வேண்டுகோள்தான்.
    ஆனாலும் இதை எல்லா சமயங்களிலும் நடைமுறைப் படுத்த மூத்த தலைமுறையினரால் இயலாதே

    ReplyDelete
  102. //ஒரு சித்தனாய்
    ஒரு புத்தனாய்
    என்னை மலரவிடு
    என்னை நானே அறிய விடு//
    அருமை வரிகள்...

    ReplyDelete
  103. பிறரை அறிந்து கொள்ள வாழ்ந்து
    நம்மை நாம் அறிந்து கொள்ள மறந்து விடுகிறோம்

    ReplyDelete
  104. raji //

    தங்கள் வரவுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  105. jayaram thinagarapandian . //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  106. என்னை நானே அறிய விடு,
    மிக கடினமானதும் கூட,ஆனால் அடைந்து விட்டால் அதை விட கடினம் எதுவுமில்லை.மிகவும் நன்றாக இருக்கிறது திரு. ரமணி அவர்களே!!

    ReplyDelete
  107. GOPI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  108. ஒரு சித்தனாய் என்னை மலரவிடு.... அருமை சகோ!

    தன்னை அறிய விடாமல் தடுக்கும் முதல் வில்லங்களே பெற்றோர்கள் தான்... இதை தான் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம்ரவி கேரக்டர் பிரகாஷ்ராஜிடம் எதிர்பார்த்திருப்பது... அருமையான மனப்போராட்டப் பகிர்வு வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  109. சகோதரர்! 102வது பின்னூட்டமாக வந்து கருத்திட்டேன். எனக்கு ஏதொ பிரச்சனை கணனியில் தானாகவே அழியுது. மின்னஞ்சலில் அனுப்பினேன் அதுவும் சேரவில்லைப் போல தெரிகிறது. இங்கு பிள்ளை வளர்ப்பு என்னை விடு நான் செய்கிறேன் தான். நாம் அருகில் துணைக்கு நிற்க வேண்டியது தான். நாம் சொல்லிக் கொடுப்பது பிள்ளைகளுக்குப் பிடிக்காது. எனக்குத் தெரியும் நானாகச் செய்வேன் விடு என்பார்கள். எமது மக்கள் தான் அருகில் நின்று எடுத்துக் கூறிய படி இருப்பார் இக்கருத்தையே நீங்கள் கூறுகிறீர்கள் 93யிலிருந்து 2008 வரை இப்படியாக பிள்ளைகளோடு பழகினேன். மிக்க நன்றி பதிவிற்கு.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  110. மாய உலகம் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  111. kavithai (kovaikkavi) //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  112. ஒரு கவிதைக்குள் இத்தனை தத்துவங்களா,மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  113. நம்பிக்கைபாண்டியன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  114. இதை விட அழகாய் எளிமையாய் அழுத்தமாய் சுய பலம் உணர்த்த முடியாது.. அருமை.
    ஒரு வாரமாய் கணினி தொல்லைப் படுத்தி இப்போதுதான் சரியானது.. இனி எல்லோர் வலைத்தளமும் பார்க்கலாம்.

    ReplyDelete
  115. ரிஷபன் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete