Thursday, October 13, 2011

எளிமையின் விலை

அரிதான விஷயங்களையெல்லாம் மிக இனியதாக
மட்டுமின்றிமிக மிக எளிமையாகவும் சொல்லிப்போன
ஔவைப் பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

ஆரம்ப நாட்களில் நானும் அப்படி எழுதிப் பழக எண்ணி
ஒரு கவிதை எழுதிஅந்த பத்திரிக்கை ஆசிரியரை அணுகினேன்

உறவினர் என்றாலும் அவர் முகத்தில் சிரிப்பு இல்லை
"அனைவருக்கும் தெரிந்ததைஅனைவருக்கும் புரியும்படி
எழுதியிருக்கிறாய் இது கவிதையே இல்லை" என
கிழித்து எரிந்து விட்டார்

சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கவிதையுடன் போனேன்
"ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்ததைத்தான் எழுதியிருக்கிறாய்
ஆயினும் அனைவருக்கும் புரியும் படியல்லவா இருக்கிறது
எங்கள் பத்திரிக்கைக்கென தரமான வாசகர் வட்டம் இருக்கிறது
அதற்கு இது சரியாக வராது "என்றார்

அப்புறம் யோசித்துப் பார்த்து வார்த்தைகளை எப்படியெல்லாம்
உடைக்கக் கூடுமோ அப்படியெல்லாம் உடைத்து அடுக்கி
படிமம் ,குறியீடு எனக் குழப்பி எனக்கே என்னவென புரியாதபடி
ஒன்று எழுதிக்கொண்டு அவரைப் பார்த்தேன்

முதன் முதலாக என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார்
" இது கவிதை  இப்படியே எழுது  "என்றார்

நானும் சராசரி நிலையைவிட்டு அதிகம் விலகி
எப்படியெல்லாம புரியாதபடி எழுத முடியுமோ
அப்படியெல்லாம் எழுதிவிஷயங்கள் ஏதுமின்றியே
வார்த்தை விளையாட்டில் விற்பன்னன் ஆகி
கவிஞனாகிப் போனேன் பிரபல்யமாகியும் போனேன்
ஆயினும் மனதின் ஆழத்தில் ஒரு உறுத்தல் மட்டும்
இருந்து கொண்டே இருந்தது

பின்னர் ஒரு நாள் அந்த ஆசிரியரே என்னைத்
 தொடர்பு கொண்டு
" தீபாவளி மலருக்கு கவிதை ஒன்று வேண்டும்" என்றார்
புதிதாக எழுத நேரமின்மையால் முதலில் அவர்
கிழித்துப் போட்டதையே மீண்டும் ஒருமுறை
எழுதிக் கொடுத்தேன்
பெற்றுக் கொண்டு அவர்"அருமை அருமை " என்றார்

"நன்றாகப் பாருங்கள் அதை உங்கள் வாசகர்களுக்கு
சரியாக வராதுகவிதையே அல்ல எனச்
சொல்லிக் கிழித்தெறிந்தது "என்றேன்

"அது  அப்போது  இப்போது உனக்கெனவே ஒரு
வாசக்ர் வட்டம் இருக்கிறதே
நீ எப்படி எழுதினாலும் சரி" என்றார்

முன்பு ஒருமுறை பாராளுமன்றத்தில்
"காந்தியை எளிமையாக வைத்துக்கொள்வதற்கு
நாங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது " என்றார்
ஒரு அரசியல் பெரும் தலைவர்

 எளிமைக்கு எதற்கு அதிகச் செலவு
எனக்கு அப்போது அதன் பொருள் புரியவே இல்லை

நான் எளிமையாக எழுதிய கவிதையை அரங்கேற்ற
ஆன நாட்களையும் அதற்காக  நான் எடுக்க வேண்டி ருந்த
அவதாரங்களையும்   எண்ணிப் பார்க்கையில் தான்
பொய்யர்கள் பூமியில் எளிமைக்கான விலை கூட
மிக மிக அதிகம் எனப் புரிந்து கொண்டேன்

84 comments:

  1. அப்புறம் யோசித்துப் பார்த்து வார்த்தைகளை எப்படியெல்லாம்
    உடைக்கக் கூடுமோ அப்படியெல்லாம் உடைத்து அடுக்கி
    படிமம் ,குறியீடு எனக் குழப்பி எனக்கே என்னவென புரியாதபடி
    ஒன்று எழுதிக்கொண்டு அவரைப் பார்த்தேன்

    முதன் முதலாக என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார்
    " இது கவிதை இப்படியே எழுது "என்றார்//////

    இதுதான் சூட்சுமமா?

    ReplyDelete
  2. "அது அப்போது இப்போது உனக்கெனவே ஒரு
    வாசக்ர் வட்டம் இருக்கிறதே
    நீ எப்படி எழுதினாலும் சரி" என்றார்//////

    கவிதை என்றில்லை சார்.சமையல்குறிப்பு,சமையல் போட்டி,கட்டுரை,சிறுகதை,துணுக்குகள் அனைத்துக்குமே இப்படியே தான்.அதுதான் பத்திரிகைகளில் புதியவர்கள் அதிகளவில் வலம் வரவில்லை.

    ReplyDelete
  3. நான் எளிமையாக எழுதிய கவிதையை அரங்கேற்ற
    ஆன நாட்களையும் அதற்காக நான் எடுக்க வேண்டி ருந்த
    அவதாரங்களையும் எண்ணிப் பார்க்கையில் தான்
    பொய்யர்கள் பூமியில் எளிமைக்கான விலை கூட
    மிக மிக அதிகம் எனப் புரிந்து கொண்டேன்////

    என்ன அழகானதொரு உவமானம்.வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  4. அருமையான கருத்து. எளிமைக்கும் விலை தர வேண்டியிருக்கிறது. நான் பட்டு உடுத்துவதில்லை என்று சிறிய வயதிலேயே சங்கல்பம் எடுத்துக் கொண்டேன். அந்த நாட்களில், இல்லாதவளின் வரவாகவே நிறைய இடங்களில் எனக்கு வரவேற்பு கிட்டியது. தான்கள் சொன்னபடி அவதாரங்கள் மேற்கொண்டபின்தான்

    ReplyDelete
  5. நூறு சதா விகிதம் உண்மை சார் , சாதாரண தொழிலாளியும் எளிமையாதான் இருக்கிறான் , பிச்சைக்காரனும் எளிமையாகத்தான் இருக்கிறான் , ஆனால் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் எளிமையாக இருப்பதைத்தான் இந்த உலகம் பாராட்டி பேசுகிறது . . . அப்படி பார்த்தல் நீங்கள் சொல்லுவது உண்மைதான் .
    நல்ல பதிவு சார் .
    நன்றி

    ReplyDelete
  6. அரிய விஷயத்தை எளிதாக சொல்லி விட்டீர்கள் ரமணி சார்

    ReplyDelete
  7. உங்கள் வெற்றிப்பயணம் தொடர்ந்து சிகரம் தொட வாழ்த்துக்கள் ரமணி சார்...

    உழைப்புக்கும் அறிவுக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கும் போது கிடைக்கும் ஆத்மதிருப்திக்கு அளவில்லையே...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாஸ்தவம்தான்.உண்மையும்,திரமையும் அங்கீகரிக்கப்பட நாளாகிறதுதான்.

    ReplyDelete
  9. பாருங்க, பிரபலம் ஆனபின்பு என்னவேனாலும் எழுதலாம் போல ஹா ஹா ஹா ஹா தப்பே கண்டுபிடிக்க மாட்டாங்களாம் என்னத்தை சொல்ல குரு, விடுங்க...

    ReplyDelete
  10. இனி நானும் எனக்கே புரியாத மாதிரி, கமல்ஹாசன் மாதிரி எழுதப்போறேன்...

    ReplyDelete
  11. பத்திரிகைக்கு எழுதுவதில் மட்டுமல்ல, வலையுலகில் எழுதியதைப் படிக்கவும் முதலில் வாசகர் வட்டத்தை உருவாக்க சில வழிமுறைகளைக் கையாள வேண்டும் போலிருக்கிறது. எளிமைக்கு செலவு எனும்போது அண்மையில் மோடியால் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரதம் நினைவுக்கு வந்தது. நினைப்பதை அழகாகச் சொல்லுகிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. பொய்யர்கள் பூமியில் எளிமைக்கான விலை கூட
    மிக மிக அதிகம் எனப் புரிந்து கொண்டேன்

    படிப்பினை ஊட்டும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. ஸாதிகா //

    தங்கள் முதல் வரவுக்கும் விரிவான தெளிவான
    அழகான் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. சாகம்பரி //

    தங்கள் உடன் வரவுக்கும் விரிவான தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. ♔ℜockzs ℜajesℌ♔™ //

    இருப்பவன் எளிமையையும் இல்லாதவன் எளிமையையும்
    மிக அழகாக ஒப்பிட்டு பின்னூட்டமிட்டமைக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. நாய்க்குட்டி மனசு //

    தங்கள் உடன் வரவுக்கும் தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ரெவெரி //
    தங்கள் உடன் வரவுக்கும் தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. விமலன் //

    தங்கள் உடன் வரவுக்கும் தெளிவான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. MANO நாஞ்சில் மனோ //

    யாருக்கும் புரியாதபடி எழுதினால் நடிகர் கார்த்திக்
    நமக்கே புரியாமல் எழுதினால் கமலஹாஸன்
    இரண்டுக்கும் இடையில் எழுதினால்
    தரமான எழுத்தாள்ர் என பெயரெடுத்து விடலாம்
    உடன் வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. G.M Balasubramaniam //

    தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சரி
    அனைத்து இடங்களிலும் நிலைகளிலும்
    இதுதான் நடக்கிறது
    தங்கள் மேலான வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. வைரை சதிஷ் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் உடன் வரவுக்கும் விரிவான தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. ரொம்ப சரியா சொன்னீங்க

    பிரபலம் ஆகாதவரை நாம நல்லா எழுதினாலும் கவனிக்கப்பட மாட்டோம்ன்னு !! அருமை

    ReplyDelete
  26. ஜ.ரா.ரமேஷ் பாபு //

    தங்கள் உடன் வரவுக்கும் விரிவான தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. யதார்த்தம்.முழுக்க முழுக்க உடன்படுகிறேன்.

    ReplyDelete
  28. ஜெயிக்கும் ரகசியம் அருமை நண்பரே

    ReplyDelete
  29. கருத்துள்ள பதிவு..
    அமாம்.. என்ன செய்வது.. மனிதர்கள் அப்படி.. ..

    ReplyDelete
  30. தமிழ்மணம் 9

    ரமணி சார், தங்கள் கையைக்கொடுங்கள். கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டும். இன்றைய ஒரு சில பத்திரிகைகளின் போக்கை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். நல்லதுக்கே காலம் இல்லை. யாருக்கும் லேசில் விளங்காதவைகளே A1 என்று ஏற்றுக் கொள்ளப்படும். நாமும் முதலில் கலங்கத்தான் வேண்டியிருக்கும். பிரபலமான பிறகு அவர்களே நம்மை நாடி வருவார்கள். பிறகு எந்தக் குப்பைகளும் அரங்கேற்றப்படும். வீட்டு வண்ணான் பில்லைக் தவறுதலாகக் கொடுத்தால் கூட மிகச்சிறந்த படைப்பென வெளியிடப்படும்.

    அருமையாகவே வெளிச்சம் போட்டு சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  31. வாவ்...... பிரமாதமாக உள்ளது கட்டுரை..

    நிதர்சனம்!!

    ReplyDelete
  32. எளிமையின் விலை அனுபவத்தைக் கலந்து அருமையாய் புனையப் பட்டிருக்கிறது. நல்ல பதிவு. தொடரட்டும் தங்கள் பணி.

    ReplyDelete
  33. எளிமைக்கான விலை கூட
    மிக மிக அதிகம் எனப் புரிந்து கொண்டேன்//

    அந்த எளிமைங்கிற பட்டத்துக்கான உழைப்பும், மெனக்கெடலுமே திறமையை மிஞ்சி ஜெயித்திருக்கிறது... மறைமுகமாக ஒளிந்துள்ள விசயமே உழைப்பும் தான்.. முதலில் தவிர்த்ததை பிறகு வாலிண்டிரியாக வாங்கியிருக்கிறார்கள்.. உங்களது மெனக்கெடலே திறமையை சவுட்டியிருக்கிறது... அருகில் இருக்கும்போது தெரியாத சூட்சமம் தூர போய் மின்னும்போது மிளிர்கிறது... பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  34. மாய உலகம் //

    தங்கள் உடன் வரவுக்கும் விரிவான தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. ShankarG //

    தங்கள் உடன் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. ஷீ-நிசி

    தங்கள் உடன் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. ஏற்கெனவே எனக்கு கவிதை என்றால் பயம். இப்படியெல்லாம் பயமுறுத்தினால் எப்படி!!

    ReplyDelete
  38. வை.கோபாலகிருஷ்ணன் .

    தங்கள் உடன் வரவுக்கும் விரிவான தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. அட, நெஞ்சைத் தொடும் நிஜம்.

    ReplyDelete
  40. புரியாதமாதிரி எழுதியே பெயர் வாங்கும் புலவர்கள்
    நடிகர் நாகேஷ் சொல்வது போலவே உள்ளது...

    பத்திரிக்கைகளின் பொருளாதாரத்தை மனதில் வைத்து
    படைப்பாளிகளின் திசையை மாற்றும் நிர்வாகிகளின்
    எண்ணத்தை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    அத்தனையும் நிஜம்...

    எளிமைக்கு விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கிறது..
    காதர் சட்டை அணிந்தால் எளிமை என சொல்கிறார்கள்,
    கடைக்குப் போய் காதர் சட்டை வாங்க வேண்டுமென்றால் நம்ம
    சட்டைப் பையில் காசு நிறைய வேண்டும்....

    எது எப்படியோ உங்கள் எழுத்துக்களில் எளிமை
    இருக்கிறது, கண்களை கவரும் வகையில்.

    ReplyDelete
  41. சென்னை பித்தன் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. M.R //


    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. Madhavan Srinivasagopalan //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. அலங்கார வார்த்தைகளில்
    குழப்பும்வார்த்தை ஜாலங்களில் எல்லாம் கவிதை இல்லை
    என்பதற்காகத்தான் இந்தப் பதிவே
    பயப் படாமல் ஜமாயுங்கள்
    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. கலாநேசன் //
    தங்கள் உடன் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. மகேந்திரன் //

    தங்கள் உடன் வரவுக்கும் விரிவான தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பிரபலம் ஆவதுதான் கடினம். ஆனபின்னால் அதைப் பேணுவது மிகச் சுலபம்.

    ReplyDelete
  48. கீதா //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. //பொய்யர்கள் பூமியில் எளிமைக்கான விலை கூட
    மிக மிக அதிகம் //

    உண்மையான வார்த்தைகள்... நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்...

    ReplyDelete
  50. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. // நான் எளிமையாக எழுதிய கவிதையை அரங்கேற்ற
    ஆன நாட்களையும் அதற்காக நான் எடுக்க வேண்டி ருந்த
    அவதாரங்களையும் எண்ணிப் பார்க்கையில் தான்
    பொய்யர்கள் பூமியில் எளிமைக்கான விலை கூட
    மிக மிக அதிகம் எனப் புரிந்து கொண்டேன்//

    அருமையான வார்த்தைகள்.
    எளிமையாக இருக்க பாடுபட வேண்டியிருக்கே?

    ReplyDelete
  52. ஒருவர் கொஞ்சம் பிரபலமாகி விட்டால் அவர் எப்படி மொக்கையாக எழுதினாலும் அரங்கு கிடைத்து விடுகிரதே? இதை என்ன சொல்ல?

    ReplyDelete
  53. அனுபவமே சிறந்த ஆசிரியர் நன்றி அய்யா

    ReplyDelete
  54. RAMVI //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. mohan //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. முன்னேற்றம் என்பது படிப்படியாகத்தான் வரும், அதுவரை முயற்சி செய்யவேண்டும் என்று வளரும் கவிஞர்களுக்க்கு வழி காட்டுவதுபோல் இருக்கிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  58. நம்பிக்கைபாண்டியன் //

    தங்கள் வரவுக்கும் தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. எளிமைக்கு எதற்கு அதிகச் செலவு
    எனக்கு அப்போது அதன் பொருள் புரியவே இல்லை

    எளிமை என்பது பேச்சில் மட்டுமே என்பதால் தான் அதன் விலை அதிகமாகி விட்டது

    ReplyDelete
  60. ரிஷபன் .//
    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. உங்கள் பதிவைப் படிக்கும் போது ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. சாதாரணமான ஒருவருடைய கவிதையை ஒரு பத்திரிகை ஒதிக்கிவிட்டது. அக்கவிதையை ஒரு மேடையில் கண்ணதாசன் வாசித்தபோது ஆகா அற்புதம் என்று பலரும் பாராட்டினர். ஒதுக்கிவிடட் பத்திரிகை கூடப் பாராட்டியது. அப்போது கண்ணதாசனே அதை எழுதியவரை அறிமுகப்படுத்தி வைத்தாராம். அதுதான் சொல்வார்கள். பிரபலம் அடைந்துவிட்டால், அதன்பின் குப்பையானாலும் குண்டுமணி போலாகும். அதுதான் சொல்வார்கள். நூல் வெளியிட்டுவிட்டால், அவர் பெரிய எழுத்தாளர் என்று கருதப்பட்டுவிடுவார். அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களில் அவசியம் வெளியுலகுக்குச் சொல்ல வேண்டிய கருத்துகளை அற்புதமாகச் சொல்லிச் செல்கின்றீர்கள். தொடருங்கள்

    ReplyDelete
  62. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. காகிதத்தில் மடித்து கொடுத்தால்
    அதன் தரம் குறைவு ..
    அதையே பையில் போட்டு கொடுத்தால்
    தரம் அதிகம் என நினைக்கும்
    மக்கள் வாழும் பூமி ...
    இங்கே எளிமையில்
    அவர்கள் தரத்தை பார்ப்பதில்லை ...

    ReplyDelete
  64. jayaram thinagarapandian //

    தங்கள் வரவுக்கும் தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. பெட்றோமாக்ஸ் வெளிச்சம் போட்டுக் காட்டீயுள்ளீர்கள். இப்ப மட்டும் என்ன வாழுதாம்! மிகப் பிரபலமான சஞ்சிகைக் கவிதைகள் உதவாது. வெறும் வரிகள் உள்ளே எதுவுமே இல்லை. ஆனால் அவை பிரபலமானவர்களின் கிறுக்கல் அதனால் எடுபடுகிறது. நானே எனக்குள் ஏசிவிட்டுத் தூரப் போடுவது உண்டு. ஒன்றுமே புரியல்லே உலகத்திலே....
    ஆனால் உங்களுக்கு வாழ்த்துகள். நல்ல பதிவு.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  66. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.
    என் இப்போதைய கவிதைக்கும் இந்த இடுகைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதைப் போல் உணர்கிறேன்.
    எளிமை தான் தங்கள் பலம்.

    ReplyDelete
  67. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் தெளிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. சிவகுமாரன் //

    தங்கள் வரவுக்கும் தெளிவானஅழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. உணர்ச்சியோடு எழுதியிருக்கிறீர்கள்; உணர்ந்துப் படிக்க முடிகிறது.
    சில சறுக்கல்கள் அப்படி இருக்கலாம் ரமணி. பிரபலத்தின் பின்னாலிருப்பது கடும் உழைப்பு என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  70. காந்தியின் எளிமைக்குப் பின் எத்தகைய திட்டம், தீவிரம், தீர்க்கம் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும். பின்னணியை மறந்து விட்டு வெளியே தெரியும் எளிமையை மட்டும் கையாள நினைக்கும் சாதாரணர்கள் இடறி விழுகிறார்கள். சத்தியாகிரகம் என்பது சோம்பேறிகளின் கைத்திறனாகிப் போனதன் காரணம் எளிமையின் பின்னணியைப் புரிந்து கொள்ளாதது தான் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  71. சிறு தோல்விகளுக்குத் துவண்டு விழும் சாதாரணர்கள் இடையில் குறிக்கோள் ஒன்றையே மனதில் நிறுத்தி துவளாமல் பயணம் செய்யும் வீரர்களைப் புரிந்து கொள்வது எளிதல்ல என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பிரபலத்தின் பின்னணியிலும் குறிக்கோள் விலகாத கடும் முயற்சி இருப்பதை மீண்டும் மீண்டும் அறிந்து வியக்கிறேன். பிரபலம் என்பது உழைப்பின் அங்கீகாரம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது சறுக்கல்கள் இயல்பாகவே தோன்றுகிறது. லான்டரிக் கணக்கு நினைவுக்கு வருகிறது. அதைப் படித்த போது ஏற்பட்ட உணர்வுகளை இன்னொரு ரங்கராஜனிடம் முறையிட்ட போது கிடைத்த அறிவுரை: 'அவர் இஷ்டத்துக்கு எழுதவில்லை. உங்க இஷ்டத்துக்கு எழுதியிருக்கார். ஆயிரமாயிரம் வார்த்தைகள் எழுதியிருக்கிறார். லான்டரிக் கணக்கு பத்து வார்த்தைகள். ஆயிரத்துல தெரியாத உழைப்பா பத்துல தெரியப் போறது?"
    பிரபலங்களும் மனிதர்கள் தானே? வளர்ச்சியின் பரிமாணத்துக்கும் பரிணாமத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் தானே?

    ReplyDelete
  72. ரிஷபன் சொல்வது முற்றிலும் சரி.

    ReplyDelete
  73. அப்பாதுரை //

    எளிமை என்பது எது என புரிந்து கொள்வதிலேயே
    குழப்பம் இருக்கிறது
    எளிமையாக இருத்தல் என்பதை எளிமையாக தன்னை
    வெளிக்காட்டிக் கொள்ளுவதுதான் என்கிற கருத்தில்தான்
    என அனைவரும் நினைக்கிறார்கள்
    தங்கள் வரவுக்கும் விரிவான தெளிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. இந்த post படித்தபோது, சிறு பிராயத்தில் படித்த "Emperor's New Clothes" கதை நினைவிற்கு வருகிறது. "அறிவாளிகளால் மட்டுமே கண்களால் காண முடியும்" என்று அரசரை ஏமாற்றி இல்லாத சால்வையை பெரும் பொன்னுக்கு விற்கும் ஒரு துணி வியாபாரியின் சாதுர்யத்தையும், அரசன் மற்றும் மந்திரிகள்- எங்கே அவர்கள் அறிவற்றவர்கள் என்று கூறப்பட்டு விடுவார்களோ- என்ற பயத்தில், இல்லாத சால்வை கண்ணிற்கு தெரிவதாக கூறி ஏமாருவதையும் - மிக அழகாக ஞாய படுத்திக் காட்டும் கதை.
    அழகான பகிர்வு... :)

    ReplyDelete
  75. எளிமைக்கு விலை அதிகம் தான்..ஏனென்றால் நான் பொய்யர்கள் வாழும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அல்லவா?

    ReplyDelete
  76. Matangi Mawley //

    தங்கள் வரவுக்கும் தெளிவானஅழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி //

    தங்கள் வரவுக்கும் தெளிவானஅழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. விலை மதிப்பில்லா கருத்துக்களுக்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது,எளிமையை.சிறப்பானவை என்றைக்கும் வெல்லும் என்பது உண்மை.

    ReplyDelete
  79. Murugeswari Rajavel //

    தங்கள் வரவுக்கும் தெளிவானஅழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. எளிமைக்கு எதற்கு அதிகச் செலவு !!!!
    எளிமையை சொன்ன விதம் அருமை நண்பா . வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  81. nadaasiva //

    தங்கள் வரவுக்கும் தெளிவானஅழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete