Monday, October 31, 2011

இருப்பதற்கு ஏனில்லை பெயர் ?

" முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர் "

"பழமொழி"யின் ஈற்றடி என்னை
மிகவும் கவர்ந்து போனது
இல்லாததற்கு எப்படி பெயர் இருக்க முடியும் ?

எத்தனை அழகான  சிந்தனை
கவிதையின் சிறப்பில் நான் வியந்து கிடக்க
 நண்பன் என்னை  ஏளனமாய்ப் பார்த்தான்

"இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு ஏன் பெயரில்லை " என்றான்

எனக்கேதும் விளங்கவில்லை
அவனே தொடர்ந்தான்

"வரனுக்கு தட்சணை உண்டு
அதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
வதூக்களுக்கு தட்சணை இல்லை
அதனால் வதூதட்சணை இல்லை சரி
இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
விபச்சாரன் ஏன் இல்லை ?
கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "

அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
நான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?

91 comments:

  1. அருமையான கவிதை.
    அருமையான கேள்விகள்.
    வாழ்த்துக்கள்.
    (கடந்த வாரம் முழுவதும் Dash Board இல் பதிவுகள் வரவில்லை. எனவே நிறைய பதிவுகளை படிக்க முடியவில்லை).
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

    ReplyDelete
  2. ஆதிக்க சக்திகளைக் கண்டு நடைமுறைகளும் ஒளிந்துகொள்கின்றன!
    த்.ம 3!

    ReplyDelete
  3. இருப்பதற்கு ஏன் இல்லை பெயர்... ம்ம்ம்ம். ஆகா! ரொம்ப யோசிக்கிறாரே உங்க நண்பர்?

    ReplyDelete
  4. ஏன் என்றால் 'அதற்கு' போன்ற பெயரை வைத்தவர்கள், 'இதற்கு' பெயர் வைக்காமல் விட்டுவிட்டார்கள். வைத்தாள் வரையறைகளுக்குட்பட வேண்டும். நம்மை நாமே 'லூசு' என்று சொல்லி அழைக்கமாட்டோமே?.
    உதாரணமாக விதவன் என்று அழைக்கலாம் என்று சொல்லிக் கொண்டர்கள் என்றால் அதற்கான வரையறைகளை சொல்ல வேண்டுமே? கட்டுப்பட வேண்டும்.
    சிந்திக்க வைக்கும் கவிதை Thank you Sir

    ReplyDelete
  5. விடை தெரியாத கேள்விகள் இப்படி எத்தனையோ இருக்கின்றன! கவிதை மிக‌ அருமை!

    ReplyDelete
  6. இருப்பதற்கு ஏனில்லை பெயர்கள்.... நல்ல கேள்வி ஐயா... அதுவும் சரிதான். எத்தனை எத்தனை இது போல இருந்தும் பெயரில்லாமல் இருக்கின்றன....

    நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. நல்ல சிந்தனை நண்பரே
    த.ம 5

    ReplyDelete
  8. Rathnavel //

    தங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. ரமேஷ் வெங்கடபதி //
    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. சாகம்பரி //

    தங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. மனோ சாமிநாதன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. M.R //
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. கேள்வி கவிதையாகி உள்ளது. கவிதை எங்களை யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  15. அருமையான கவிதை வரிகள் பாஸ்

    ReplyDelete
  16. "இல்லாததற்கு பெயரில்லை சரி
    இருப்பதற்கு ஏன் பெயரில்லை " என்றான்

    எனக்கேதும் விளங்கவில்லை
    அவனே தொடர்ந்தான்
    >>
    எனக்கும்தான் விளங்கவில்லை சமூகத்தின் போக்கு. ஒருவேளை ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணம்பு வைத்து பார்க்கின்றதோ இச்சமூகம்.

    ReplyDelete
  17. யோசிக்க வைங்க, இன்றைய கால கட்டத்திற்கு இது தான் முக்கியம்...

    ReplyDelete
  18. வதுக்களுக்கு தட்சிணை கொடுக்கும்சமூகங்களும் உண்டு. வருகிற தட்சிணை என்பதால் வரதட்சிணை எனக் கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்ட இரண்டு இருப்பவைகளுக்குப் பெயரில்லாத காரணம் என்னைப் பொறுத்தவரை நம் சமூக அவலமும், ஆணாதிக்க மனோபாவமும்தான். சிந்திகக வைக்கும் வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. அருமை.

    //கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
    மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "//

    ஆம் அது ஏன்?
    யோசிக்க வைக்கும் பதிவு. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  20. //இல்லாததற்கு பெயரில்லை சரி
    இருப்பதற்கு பெயரில்லை ஏன் ? //

    அது ஏன்?

    good kavithai

    ReplyDelete
  21. தமிழ் உதயம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. K.s.s.Rajh //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. suryajeeva //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. G.M Balasubramaniam //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. Madhavan Srinivasagopalan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. அப்பாதுரை .//

    தாங்கள் கவிஞர் என்றால் பொதுப்பெயர் இல்லையா என எழுப்பிய கேள்வியில் விளைந்த பதிவு இது
    இதன் சிறப்பு தங்களையே சாரும்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
    நான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
    இல்லாததற்கு பெயரில்லை சரி
    இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?// நல்ல வரிகள்,ஒரு அசத்தலான கவிதை ..

    ReplyDelete
  29. கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
    மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "//

    செவியிலே பளார்னு அறைஞ்சி கேக்குறா மாதிரி இருக்கு குரு...

    ReplyDelete
  30. சாட்டையடி சவுக்கடி கேள்விகள்...!!!!

    ReplyDelete
  31. வரனுக்கு தட்சணை உண்டு
    அதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
    வதூக்களுக்கு தட்சணை இல்லை
    அதனால் வதூதட்சணை இல்லை சரி
    இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
    அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
    விபச்சாரன் ஏன் இல்லை ?
    கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
    மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "//

    அடடா...!!!அசத்துகின்றீர்கள் சகோ.

    ReplyDelete
  32. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. சத்ரியன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. அருமையான கவிதை

    ReplyDelete
  37. அருமையாக சிந்தித்து சிறப்பாக எழுதப்பட்டுள்ள பதிவு.

    இதுபோலவே விடை தெரியாதக் கேள்விகள் எத்தனையோ?

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
    தமிழ்மணம் 12 vgk

    ReplyDelete
  38. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. சுசி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. இது நம்மவர்களின் ...நம் மொழியின் (?) ...நம் சமூகத்தின்...பிரச்னை மட்டும் தான் ரமணி சார்..

    காலம் மாறிவிட்டது...இந்த ஏற்றதாழ்வுகள் நடைமுறையில் குறைந்துகொண்டேதான்..தினமும்...

    ReplyDelete
  42. ரெவெரி //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. காலம் காலமாக தொடர்ந்து வரும் விடையற்ற கேள்வி
    பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  44. ஹையா!

    தொடர்ந்து ஆறு பதிவா என்னதான் கமென்ட் போட்டாலும் சைன் அவுட் கொடுத்து திரும்ப போடச் சொல்லியே வந்தது.இன்னிக்கு வெற்றிகரமா கமென்ட் போட்டுட்டேன் :-))

    ReplyDelete
  45. யோசிக்க வைக்கும் கேள்விகள்

    ReplyDelete
  46. raji //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. ராக்கெட் ராஜா //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. சுயநலத்தின் உச்சகட்டமாய்
    சில ஆதிக்கவாதிகளால் (ஆண்)
    உருவாக்கப்பட்ட சமுதாய சீர்கேடுகள்
    இவைகள்..
    இன்றும்... கல்வியும்.. தொழில்நுட்பமும்
    வளர்ந்துள்ள இவ்வேளையிலும்
    இவைகள் தொடர்வது..
    மனதிற்கு வேதனை அளிக்கக்கூடியதே.
    கேள்விகள் அத்தனையும் கணைகளாய்
    பாய்கின்றன...
    விடைகிடைக்கும் நாளை நோக்கி...

    ReplyDelete
  50. பெயர் வைத்தவர்கள்தான் பதில் சொல்லவேண்டும். சாகம்பரி சொல்வது போல் தங்களைத் தாங்களே யாராவது கட்டுப்படுத்தி கொள்வார்களா கடிவாளமிட்டு. இன்னும் சுமங்கலி, அமங்கலி, வாழாவெட்டி என்று எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன, இனி வரும் காலத்திலாவது இவை போன்ற பெயர்களால் பெண்களைக் குறிப்பிடாமை வேண்டும். நல்ல பதிவு ரமணி சார்.

    ReplyDelete
  51. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. கீதா //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. எழுதியது நீங்கள் தானே... எதிர்பார்க்காத முடிச்சு.. அருமை, அருமை!

    ReplyDelete
  54. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்த்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. இல்லாததற்கு பெயரில்லை சரி
    இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?

    மிகவும் சிந்திக்க வைக்கும் கேள்வி ..
    கவிதை அருமை

    ReplyDelete
  56. jayaram thinagarapandian //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. " முடிந்ததற்கு இல்லை முயற்சி//

    சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  58. உண்மை தான் இது ஒரு வகை ஆதிக்கம் தான்... இருப்பதை இல்லாமல் ஆக்கினால்.. அதற்கு பெயர் இல்லை என்ற கவலை இல்லாமல் போகும்... மிக அருமையாக யோசிக்க வைத்த பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  59. "வரனுக்கு தட்சணை உண்டு
    அதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
    வதூக்களுக்கு தட்சணை இல்லை
    அதனால் வதூதட்சணை இல்லை சரி
    இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
    அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
    விபச்சாரன் ஏன் இல்லை ?
    கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
    மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "

    அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
    நான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
    இல்லாததற்கு பெயரில்லை சரி
    இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?

    அருமையான கேள்வி .கேட்க்கப்படவேண்டிய கேள்வியும்கூட .ஆமா ஏன் இல்ல ...!!! சொல்ல முடியாதே ஐயா இந்த இடத்திலையும் நிறையவே ஆணாதிக்கம் கலந்திருப்பதை.வாழ்த்துக்கள் அரிய
    முயற்சிக்கு .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .வாருங்கள் என்தளத்திற்கும் .

    ReplyDelete
  60. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. மாய உலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. அம்பாளடியாள் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. மனைவியை இழந்தவனுக்குப் பெயர் இருக்கிறது ரமணிசார். மனைவியை இழந்தவன் தபுதாரன் என்று அழைக்கப்படுவான். பெயரில்லாமல் பல இருக்கின்றன. ஏனென்றால், அதில் யாரும்; கவனம் எடுக்கவில்லை. எனது மகளே ஒரு தடவை கேட்டிருக்கின்றாள், தமிழில் தான் 235 எழுத்துக்கள் இருக்கின்றனவே. ஏன் உங்கள் கூடப்பிறந்த சகோதரனையும் நான் மாமா என்று அழைக்கவேண்டும்? எங்கள் உறவுமுறை இல்லாத வேறு பெரியவரையும் மாமா என்று அழைக்க வேண்டும். அவருக்கு வேறு உறவுமுறைப் பெயர் வைத்திருக்கணாமே என்று கேட்டாள். இதுவரை நான் சிந்திக்காத இந்தக் கேள்வியை 9 வயதில் எனது மகள் கேட்டிருந்தாள். நானும் உடனடியாக விழிப்புடன் கூறினேன். எமது தமிழ் இனத்தில் தனது கணவன் தவிர்ந்த எந்த ஆணையும் பெண்கள் சகோதரர்களாகவே கருதுகின்றார்கள். அதனாலேயே அப்படி நீங்கள் அழைக்க வேண்டி இருக்கின்றது என்று கூறினேன். இது எந்த அளவிற்குச் சரியானதோ தெரியாது. ஆனால், எனக்கு இவ்விளக்கம் சரியாகப்பட்டது. உங்கள் எண்ணத் தூண்டலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  64. "வரனுக்கு தட்சணை உண்டு
    அதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு//
    சிறப்பான வரிகள் நல்ல தேர்ந்த ஆக்கம் பாட்டுகள் .

    ReplyDelete
  65. மாலதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. சரியான கேள்விகள்...பதில்தான் பலவற்றிர்க்கு இல்லை கவிதையின் சிந்தனை அருமை.

    ReplyDelete
  69. ஷைலஜா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. அழகிய கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  71. சின்ன சின்ன வரிகளில் பெரிய விசயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
  72. வணக்கமையா..
    அருமையான கவிதை உங்கள் கேள்விகளுக்குத்தான் பதில் இல்லை..

    ReplyDelete
  73. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. V.Radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  75. காட்டான் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. மிக நல்ல சமுதாயச் சிந்தனை. இரண்டு வரியில் விளங்கிட முடியவில்லை. கொஞ்சம் குளப்பமாகவும் உள்ளது . விளங்கிட்டுது, ஆனால் விளங்கவில்லை. கூடி அமர்ச்து பேச வேண்டியவைகளிது என்பது என் கருத்து. வாழ்த்துகள் சகோதரா.
    Vetha.Elangathilakm.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  78. இடக்குமுடக்கான கேள்விதான்.நிச்சயம் பதிலில்லை !

    ReplyDelete
  79. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. நல்ல பதிவு சார்...

    இது,பெண்கள் பலர் தங்களுக்குள் பேசிப் பொருமுகிற விஷயம்தான்.

    ReplyDelete
  82. சுந்தரா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  83. சிந்தனையைத் தூண்டுகிற கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  84. ShankarG //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  85. ஏன் என்றால் எப்படியும் பொதுவாக ஆண்கள் ஏதோ காரணம் காட்டி
    மறுமணம் செய்து கொள்வர் / கொள்ளப்படுவர் .
    'பூனையில் சைவம் கிடையாது .. ஆண்களில் ராமன் கிடையாது '
    நான் சொல்லவில்லை ... திரைப்பாடல் ஒன்று சொல்லுகிறது.
    எழுதியவர் ஆண் . அவர் கருத்தை மறுக்க இயலவில்லை.
    பெறுபவர் கொடுப்பவரை இகழ முடியாதே...
    என்ன செய்வது ..... உப்பிட்டதற்காக எவ்வளவு காலம் தான் பொறுப்பது ?

    ReplyDelete
  86. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete