Friday, November 4, 2011

பார்க்கத் தெரிந்தால்....

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ அல்லது
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"என்றான்

எல்லோரும் அமைதியாக என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில் நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே
ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்
அவருக்கும்  நம்மைப் போல் கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை

 போக்குவரத்து சீராகி இருந்தது


81 comments:

  1. பதில் நமக்கு புரிகிறது.

    ReplyDelete
  2. அருமையான கேள்வி அதற்கு தகுந்த அருமையான பதில்

    ReplyDelete
  3. வாழ்க்கையோடு பொருந்தும் உவமைகளோடு நீங்கள் சொல்லும் பாங்கே அழ்கு ரமணி அண்ணா.

    ReplyDelete
  4. அழகான கேள்வி,அருமையான பதில்.

    ReplyDelete
  5. கார் ஓட்டத் தெரிந்திருந்தால் அது இன்னும் நலமான வழிகாட்டலுக்கு ஏதுவாகலாம்.உயரத்தில் இருப்பவர்கள்
    அனைவரும் தங்கள் குடும்பத்தை சீராக்காதவர்கள் அல்ல I think we should not generalise.எதுவானாலும் நீங்கள் சொல்லிப் போகும் பாங்கு அழகாய் இருக்கிறது

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. போக்குவரத்து சீராகி இருந்தது//

    எங்கள் மனதும் சீரானது உங்கள் பதிவில்...!!!

    ReplyDelete
  8. உங்கள் எழுத்தின் தரம் பாங்கு எல்லாமே மாறுபட்டு அசத்தலாக வருகிறது குரு...!!!

    ReplyDelete
  9. இந்த பதில் பொது வாழ்வில் பலரின் மேல் தனி மனித வாழ்க்கைச்சேற்றை தெளிக்கும் அன்பர்களுக்கு சரியாக் பொருந்தும் ரமணி சார்...

    ReplyDelete
  10. கார் ஓட்ட தெரியாமல் இருந்தாலும் போக்குவரத்தை சீராக்க தெரிந்த அவருக்கு, அரை மணி நேரம் கையை கட்டிப் போட்டது அல்லவே அதிகாரம்.. நான் சொல்வதும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  11. தமிழ்மணம் : 6
    அருமையான கேள்வியும் பதிலும். பாராட்டுக்கள்.
    எல்லோருக்கும் எல்லாமே தெரியாவிட்டாலும், பொது மக்களுக்குத் தொல்லை இல்லாமல், போக்குவரத்துப் பாதை சீர் ஆனால் சரியே. vgk

    ReplyDelete
  12. எப்டி சார் அது அசாதாரணமான விஷயத்தை சாதாரணமாக சொல்லுகிறீர்கள். அமர்க்களம். :-)

    ReplyDelete
  13. இப்படி அழகாகவும் அக்கறையாகவும் உங்களால் மட்டுமே சொல்ல முடியும்

    ReplyDelete
  14. என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம்
    என்ன செய்கிறார்கள் என்பது நமக்கு தேவை இல்லை
    இல்லையா ரமணி சார் ?

    ReplyDelete
  15. அழகிய கேள்வி அழகிய பதிலென்பது இதுதானோ?//சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
    சீர் செய்யும் காவலருக்கு//சொல்லாடல் அருமை!!இனிமை!!

    ReplyDelete
  16. தங்கள் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. அது சரி.....நன்றாக சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  18. ஸாதிகா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. K.s.s.Rajh //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. அருமையான கேள்வி அதற்கு தகுந்த அருமையான பதில்

    ReplyDelete
  21. எளிமை. அருமை. யோசிக்க வைக்கிறது ரமணி சார். இதேபாணியில் இன்னும் சில சமுக நிகழ்வுகளைத் தாருங்கள்.

    ReplyDelete
  22. Harani //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. Lakshmi //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. rufina rajkumar //

    தங்கள் உடன் வரவுக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. துஷ்யந்தன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. RVS //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. suryajeeva //

    நீங்கள் சிந்திக்கிற கோணமும் அருமை
    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ரெவெரி //
    உங்கள் கருத்து மிகச் சரி
    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. G.M Balasubramaniam //

    தங்கள் கருத்து மிகச் சரி
    ஒருசிலர் என அர்த்தம் தொனிக்கிறவகையில்
    மாற்றம் செய்து விடுகிறேன்
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. RAMVI //
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. Abdul //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. ராக்கெட் ராஜா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. சுந்தர்ஜி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. அனைவருக்கும் அனைத்தும் வேர்வரை தெரிந்திருக்க வேண்டும்
    என்ற அவசியம் இல்லை. அதைப்பற்றிய ஒரு கண்ணோட்டம் இருந்தாலே போதும்,
    அந்த கண்ணோட்டத்தை நல்ல நோக்கில் செலுத்தினால் சாதித்துவிடலாம்...

    கண்ணில் கண்ட சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வை வைத்து
    நண்பருக்கு புரிய வைத்தது அருமை......

    ReplyDelete
  38. நல்ல விளக்கம். ஆனால், பொது வாழ்வில் சரியான தலைமையாக இல்லாமலும், தனி வாழ்வில் எந்த ஒழுக்கமும் இல்லாமலும் இருப்பவர்களே நமக்கு வாய்க்கிறார்கள். என்ன செய்வது!

    ReplyDelete
  39. அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்

    எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லையே!

    தன் துறையில் நுணுக்கமான திறமை பெற்றிருப்பதை ரசிப்போமே!!

    ReplyDelete
  40. ஒற்றை கேள்வியில் உலகை உணர்த்திவிட்டீர்

    ReplyDelete
  41. அந்த கேள்விக்கான பதில் நமக்கு புரியும் ..
    கவிதை அருமை ...

    ReplyDelete
  42. நல்ல கருத்துகள் பொதிந்திருக்கிறது உங்களின் கேள்வி பதிலில் அருமையான கருத்தை சொல்லும் எளிமையான பதிவு

    ReplyDelete
  43. வாழ்வோடு ஒட்டியே உங்கள் கவிதைகள் மனதைக் கவர்கிறது.வரவேற்கிறேன் !

    ReplyDelete
  44. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. bandhu //
    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. jayaram thinagarapandian //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  52. எனக்கும் புரிகிறது. நல்ல கேள்வி நல்ல பதில் சார்.

    ReplyDelete
  53. அமர்க்களம் போங்க.

    ReplyDelete
  54. உலக சினிமா ரசிகன்

    தங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. சாகம்பரி //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. தங்கள் பார்வை இரசிக்கத்தக்கது அன்பரே..

    ReplyDelete
  58. நல்லதோர் கேள்விக்கு சிறப்பானதோர் எடுத்துக்காட்டு....

    உங்கள் சிந்தனைகளைத் தொடர்ந்து பகிருங்கள்....

    ReplyDelete
  59. சொல்ல வரும் கருத்தை நீங்கள் சொல்லும் விதமே ஒரு அழகு தான் ரமணி சார்

    நான் தாமதமாய் வருவதற்கு மன்னியுங்கள் ரமணி சார்

    ReplyDelete
  60. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. கேள்விக்கு பதில் அருமை !.....வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆக்கங்கள் சமூகத்திற்கு ஓர் நல்ல செய்தியை எடுத்துச் செல்லும்விதம் நிட்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று .தொடருங்கள் உங்கள் அழகிய அனுபவப் பகிர்வுகளையும் .அத்துடன் ஓர் சின்ன வேண்டுகோள் .நான் என் ஆரம்பகாலக்
    கவிதைகளை இப்போது தமிழ் 10 ல் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன் .அவை அனைத்தும் காத்திருக்கும் பகுதியில் உள்ளன .தயவு செய்து
    சிரமம் கருதாமல் முடிந்தவரை அந்தக் கவிதைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் அவை அனைவரையும் சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி ஐயா தாங்கள் எனக்கு இதுவரை
    வழங்கிவரும் ஊக்குவிப்புகளிற்கு .

    ReplyDelete
  64. எல்லாவற்றிற்குமான தீர்வும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. நாம் சுயத்தில் இருப்பதில்லை. தீர்வுகளைத் தொலைவில் தேடுகிறோம்.

    சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  65. அம்பாளடியாள் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. சத்ரியன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. Madhavan Srinivasagopalan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லைத்தான். தெரிந்ததை ரசிக்கலாம். எல்லாம் தெரிந்திருப்பது இன்னும் சிறப்பு. உலகே இப்படித்தான் உள்ளது. வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www. kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  69. kovaikkavi //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. மிகச் சரியான பதில்!

    பாராட்டுக்கள் சார்!

    ReplyDelete
  71. சுந்தரா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. சரியான புரிதலுடன் அவரவர் கடைமையை முறையாக செய்தாலே.. எல்லாம் புரிந்துவிடும்... பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  73. மாய உலகம் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. ஒன்றை எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தானே அது அறியப்படுகிறது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  75. ShankarG //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. வணக்கம் நண்பரே! புதிய பதிவர் நான்... யோசிக்க வைக்கும் பதிவு.... வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  77. திண்டுக்கல் தனபாலன் said... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete