சிறுவயதில் ஏதோ ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை
கேட்ட இடம் வயது சொன்னவர் என எதுவுமே
சுத்தமாகஎன் நினைவினில் இல்லை.
ஆயினும் கதை மட்டும் எப்படியோ
என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது
அதுவும் என்னை விடவில்லை
எனக்கும் அதை விட இஷ்டமில்லை
இன்றும் கடலுக்கடியில் பழைய இலங்கை
இருப்பதாகவும்அதை விபீஷணன்
ஆண்டு கொண்டிருப்பதாகவும் வருஷத்தில்
ஒரு குறிப்பிட்ட நாளில் ந்ள்ளிரவில் அரக்கர்கள்
புடை சூழஇராமேஸ்வரம் வந்து ராமர் பாதம்
தரிசித்துப்போவதாகவும்அந்த உபன்யாஸ்கர் மிக
அழகாக விளக்கினார்
அப்படி ஒரு சமயம் அவர்கள் ராமேஸ்வரம் வந்து
திரும்பிக் கொண்டிருக்கையில்அதை பார்த்துக்
கொண்டிருந்தகிராமவாசி ஒருவன் எங்குதான்
போகிறார்கள்எனப் பார்த்துவிடுவோம் என்கிற
ஆர்வ மிகுதியால்அரக்கர்கள் சுமந்து வந்த பெரிய
பூக் குடைக்குள்ஏறி ஒளிந்து கொள்கிறான்
என்ன நடக்கிறது எங்கு போகிறார்கள்
எப்படிப் போகிறார்கள் என்பது எதுவும்
அவனுக்குத் தெரியவில்லை.இரவெல்லாம்
கடலோசை மட்டும்கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அப்படியே அசந்து தூங்கியும் போகிறான்
விடிந்து கூடைக்குள் இருந்து வெளியேறிப்
பார்த்தால் மிகப் பெரியதங்கத்தாலேயான ஆன
அரண்மனைக்குள் அவன் இருப்பது தெரிகிறது
அதன் பிரமாண்டம் அதன் வசீகரம் இவற்றில் மயங்கி
வாய்பிளந்து
நின்று கொண்டிருந்தவனை காவல் புரிந்து
கொண்டிருந்த அரக்கர்கள்பார்த்துவிடுகிறார்கள்.
நரன் இங்கு வர சந்தர்ப்பம் இல்லையே
எப்படி வந்தான் எனத் தீவீரமாக விசாரிக்க
அவன் நடந்ததையெல்லாம்விரிவாகச் சொல்லி
அழ அவனை நேராக விபீஷன
மகாராஜாவிடம்கொண்டுபோய் சேர்க்கிறார்கள்
அவன் வந்த முழு விவரத்தையும் கேட்டறிந்த
விபீஷண மகராஜா"சரி ஏதோ ஆர்வ மிகுதியால்
இந்த மனிதன் எப்படியோ நம் நகருக்கு
வந்து விட்டான்.நம் நாடு வந்தவன் நமக்கு
விருந்தாளி போலத்தான்அவனுக்கு நம் நாடு
முழுவதையும் சுற்றிக் காண்பியுங்கள்
ஒருவாரம் முடிந்து அவனை நாமே
அனுப்பிவைக்கலாம் "என்றார்
ஒருவாரம் அவனுக்கு ராஜாங்க விருந்து
உபச்சாரம் தடபுடலாக நடந்தது
அரண்மனை ,அசோக வனம் என என்ன என்ன
பார்க்க முடியுமோஅதையெல்லாம்அவன் ஆசை
தீரும் மட்டும் சுற்றிக் காட்டினார்கள்.
தொட்டிக்குள் மீனை நாம்வெளியில் இருந்து
பார்ப்பதுபோல் இவர்கள் வெட்டவெளியில் இருக்க
இவர்களைச் சுற்றி கடலிருப்பதைப் பார்க்க
மலைத்துப் போனான்என்ன புண்ணியம் செய்தோம்
எனத் தெரியவில்லையே எனஎண்ணி எண்ணி
மிகவும் குதூகலம் கொண்டான்அந்த கிராமவாசி.
இப்படியே ஒருவாரம் மிக மகிழ்ச்சியுடம் முடிந்ததும்
அரக்கர்கள் மீண்டும் அடுத்த உத்தரவுக்காக
மகராஜாவிடம் கொண்டு நிறுத்தினார்கள்
"மகிழ்சியா " என விசாரித்த விபீஷண மகாராஜா
முதுகில்சுமக்கும் அளவுபொன்னும்
பொருளும் கொடுத்துஅரண்மனை வாயில் வரை
வந்து "சென்று வா " எனஅனுப்பிவைத்தான்.
அதுவரை மகிழ்சியில்திக்கு முக்காடிக்கொண்டிருந்த
கிராமத்தானுக்கு மேலேகடல் இருப்பதும்
தான் கடலுக்கு அடியில் இருப்பதுவும்
அப்போதுதான் லேசாகப் புரியத் துவங்கியது
" மகாராஜா மன்னிக்க வேண்டும் தங்களுக்கு
தெரியாது இல்லைநான் சாதாரண மானிடன்.
இந்தப் பெரும் கடலை எப்படிக் கடந்து
கரை சேர இயலும் யாரையாவது துணைக்கு
அனுப்பினால்புண்ணியமாய்ப் போகும் "என்றான்
" ஓ அதை மறந்து போனேனோ " எனச் சொல்லி
அருகில்இருந்த அமைச்சரை அழைத்து
ஏதோ காதில் கிசு கிசுக்க
அவர் உள்ளே சென்று எதையோ எடுத்துவந்து
விபீஷணன் கையில் விபீஷண மகாராஜா அதை
அந்தக் கிராமத்தானின்கையில் மறைத்து மடக்கி
"இதற்குள் ஒரு உயரிய பொருள் இருக்கிறது
அதை கரை சேரும் வரை திறக்காமல் போனால்
கடல் உனக்குவழிவிட்டுக் கொண்டே போகும்
எக்காரணம் கொண்டும் இடையினில்
திறக்கவேண்டாம் " என அறிவுறுத்தி
அனுப்பி வைத்தார்
கிராமத்தானுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
அவன் நடக்க கடல்அவனுக்கு மிக அழகாக
அகலமான பாதை அமைத்துக் கொடுத்தது
இருபுறமும் கடலும் நடுவில் பாதையுமாக
நடக்க நடக்க அவனுக்கு
பெருமிதம் பிடிபடவில்லை.
பாதிக்கடல் கடக்கையில் அவனுக்கு கையில்
அப்படி என்னதான்உயரிய பொருள் இருக்கக் கூடும்
என்கிற ஆவல்பெருத்துக் கொண்டே போனது.
உள்ளங்கையில் நடுவில்மிகச் சிறிதாக்
இருந்து கொண்டு இந்தக் கடலையே நகர்த்தி
வழி விடச் செய்யும் அந்த அதியப் பொருளை
அவசியம்பார்த்துதான ஆகவேண்டும் என்கிற
ஆசை வெறியாகக் கிளம்ப ஒரு வெறிபிடித்தவன்
போல் அவன் உள்ளங்கையை விரிக்கிறான்
உள்ளங்கையில் "ஸ்ரீ ராமஜெயம்" என எழுதப்பட்ட
ஓலை மட்டு மே உள்ளது வேறேதும் இல்லை
அவன் ஏமாற்றமடைந்தவன் போலாகி
"சே.இவ்வளவுதானா .." எனச்
சொல்லி முடிக்கவும் கடல் அவனை அப்படியே
அள்ளிக் கொண்டு உள்ளே கொண்டு போகவும்
சரியாக இருந்தது
இதைச் சொல்லி முடித்த உபன்யாசகர் "நீங்கள்
பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான் "
எனச் சொல்லி முடித்தார்
மிகச் சிறுவயதில் இந்தக் கதையை கேட்டபோது
பெரியவர்கள் சொல்கிற எதையும் நம்பிச் செய்தால்
நிச்சயம் நல்லது என்கிற நம்பிக்கைஎன்னுள்
ஊறிப் போனதால் தைரியமாக எதையும் செய்யும்
துணிச்சல் எனக்கு இருந்தது
அறிவா அல்லது ஆணவமா என மிகச் சரியாகச்
சொல்லத் தெரியவில்லைகல்லூரி நாட்களில்
இக்கதையில் லாஜிக்கே இல்லாதது போலப் பட்டது
அந்த கிராமத்தான்தான் கடலோடு போய்விட்டானே
பின்னே இந்தக் கதையை யார் அந்த உபன்யாசகருக்கு
சொல்லி இருப்பார்கள்என நினைத்து
கேலியாகச் சிரித்திருக்கிறேன்
இப்போது யோசித்துப் பார்க்கையில் இந்தக் கதை
தரும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை
சிறுவர்களுக்கு அறிவும் லாஜிக்கும்தருமா
என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது
நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் ?
//உள்ளங்கையில் "ஸ்ரீ ராமஜெயம்" என எழுதப்பட்ட
ReplyDeleteஓலை மட்டு மே உள்ளது வேறேதும் இல்லை//
நம்பிக்கைதான் வாழ்க்கை என்று நம்ப வைக்கும் நல்ல கதை. புரிபவர்களுக்குப் புரியும். அனுபவித்தவர்கள் அறிவார்கள். மற்றவர்களுக்குப்புரிய வைப்பதோ, நம்ப வைப்பதோ அவ்வளவு சுலபம் இல்லை தான்.
நல்ல பகிர்வு. த.ம: 0 to 1 vgk
எட்டாவது குழந்தையால் தான் மரணம் என்று தெரிந்த பின் கம்சன் எதற்கு முதல் ஏழு குழந்தைகளை கொன்றான்? தேவகியின் குழந்தையால் தான் மரணம் என்றால் கணவர் மனைவி இருவரையும் என் சேர்த்து வைத்தான் என்றெல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்க்க ஆரம்பித்து விட்டனர்
ReplyDeleteஇதைச் சொல்லி முடித்த உபன்யாசகர் "நீங்கள்
ReplyDeleteபெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான் "
எனச் சொல்லி முடித்தார்//
முதியோர் சொல்கேட்டு நடந்தால் நன்மையில்தான் முடியும் இல்லையா....!!!
அடப்பாவி சொல்பேச்சு கேட்டுருந்தால் இப்போ பெரிய பணக்காரனா ஆகியிருப்பியே ஹா ஹா ஹா ஆர்வமிகுதி வெறி ஆகிபோச்சு கிராமத்தானுக்கு...!!!
ReplyDeleteநம்பிக்கையில் பலன் இருக்கிறதோ இல்லையோ முழுமையாய் நம்பினால் நம் பொறுப்பு என்று ஏதும் இல்லை என்னும் நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது மழை வேண்டி யாகம் செய்த போது நிர்மலமான வானம் ,மழை எங்கே வரப் போகிறது என்று எல்லோரும் திறந்த வெளியில் யாகத்தில் பங்கெடுக்க வந்தபோது, ஒரே ஒருவர் மட்டும் கையில் குடையுடன் நம்பிக்கையோடு வந்தாராம் . யாகம் முடிந்ததும் மழையும் வந்ததாம். கேட்ட கதை நினைவுக்கு வந்தது. .நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வருவது அனுபவம் கற்றுக்கொடுப்பதைப் பொறுத்தது.பாராட்டுக்கள்.
ReplyDeleteசின்ன வயதில் அப்பா பக்கத்தில உட்கார்ந்து வாய் பிளந்து கதை கேட்ட உணர்வு
ReplyDeleteதெய்வம் என்றால் தெய்வம். கல் என்றால் கல் தான். எல்லாம் நம்பிக்கை. கதையை ஆர்வமாய் வாசித்தேன்.
ReplyDeleteநம்மிக்கை தான் வாழ்க்கை,
ReplyDeleteஆனால் இப்போதுள்ள குழந்தைகள் எடக்கு,மடக்காக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்..
அண்ணே பெரியவர்கள் சொல்வது ஒரு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் என்பதே உண்மை...லாஜிக் பார்த்தால் வாழ்கை எனும் மேஜிக்கில் ஜெயிப்பது எப்படி ஹிஹி!
ReplyDeleteநீங்கள்
ReplyDeleteபெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான்///அருமையான வரிகள்.பிள்ளைகளுக்கு சொல்லித்தரவேண்டிய கதை.
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
suryajeeva //
ReplyDeleteஅதற்கும் கதையுள்ளது
ஆயினும் கதைக்கான காரணத்தில்தான்
நான் அதிகம் கவனம் செலுத்துவேன்
கதை லாஜிக்காக இருக்கவேண்டும் என்றால்
நிச்சயம சுவாரஸ்யம் இழக்கும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் நன்றி
MANO நாஞ்சில் மனோ //
ReplyDeleteதங்கள் வரவும் பின்னூட்டமும் எப்போதும் பதிவருக்கு
உற்சாக மூட்டுவதாகவும் மகிழ்வூட்டுவதுமாகவே இருக்கும்
இந்த பின்னூட்டமும் அப்படியே .நன்றி
G.M Balasubramaniam //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
ReplyDeleteதங்கள்வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
rufina rajkumar //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருன் *! //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
ReplyDeleteதங்கள்வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Rathnavel //
ReplyDeleteதங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பாட்டிகளின் ஃபேன்டஸி கதை போலத்தான், இவையும்!
ReplyDeleteபழங்காப்பியங்களில், மத நூல்களில் இடைச்செருகல் இருக்கத்தான் செய்யும்!
நம்பிக்கை ஊட்டும் நல்ல கதை
ReplyDeleteசொல்லிய விதமும் அருமை!
நம்பிக்கைதான் வாழ்க்கை
அதில் ஐயமில்லை!
புலவர் சா இராமாநுசம்
இந்த கதைகளில் உள்ள லாஜிக்கை நம்மால்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை சார். ஒருவேளை இதற்கு பதில் கிட்டினால் நமக்கு விளங்குமா என்பதுதான் கேள்வி. நல்ல பகிர்வு சார்.
ReplyDeleteசந்தேகம் இல்லாம முழுமையா நம்பிக்கை வைக்கனும்.
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சாகம்பரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இது போன்ற கதைகளெல்லாம் கடவுள் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகச் சொல்லப்படுபவை.இதில் லாஜிக் பார்க்கலாமா?!நன்மை சேர் நாமத்தின் மகிமையைச் சொல்லும் கதை.
ReplyDeleteத.ம.8
ReplyDeleteசென்னை பித்தன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இந்தக் காலப் பிள்ளைகள் எக்கச்சக்கமான கேள்விகள் கேட்கிறார்கள் என்ன சொல்வதெனத் தெரியவில்லை.அருமையாகக் கதை சொன்னீங்க. அவன் தான் அவசரத்தில் கையைத் திறந்து விட்டான்.
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரரே.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சொல்லப்பட்டது முரணாக இருந்தாலும்... சொல்லியது ஒரு நன்முறைபாடம் அவ்வளவோ!
ReplyDeleteஅதில் ஆராயக்கூடது... அது அரு ஒழுக்கனெறிக்காக சொல்லப்பட்டது...
மிக ரசித்தேன்.
kovaikkavi //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சி.கருணாகரசு //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கிராமத்தான் கையைத் திறந்து பார்த்ததால் வந்த வினையா? படிக்கத் தெரிந்திருந்ததால் வந்த வினையா?
ReplyDeleteஅப்பாதுரை //
ReplyDeleteபடிக்கத் தெரியாதிருந்தால்
வெறும் இந்த ஓலைக்கா என நினைத்திருப்பான்
தங்கள் வரவுக்கும் யோசிக்கவைக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிறு வயதில் இது போன்று நானும் கதைகளும் உபன்யாசமும் கேட்டிருக்கிறேன்.வளர்ந்ததும் லாஜிக் தேடி இப்பொழுதுதான் லாஜிக் நமக்குத்தான் புரிந்து கொள்ள தெரியவில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளேன்.அருமையான பகிர்வு.நன்றி
ReplyDeleteraji //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல பகிர்வு... பெரியவர்கள் சொல்லிப் போன கதைகளில் நிறைய விஷயம் சொல்லியிருக்கிறார்கள்... நாம் தான் லாஜிக் பார்த்து நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோமோ...
ReplyDeleteநல்ல கதை.... பகிர்ந்தமைக்கு நன்றி.
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கதை சொன்னவிதமும், கதையும் நினைவில் நிற்கின்றன..
ReplyDeleteவாழ்த்துகள் திரு.ரமணி
நம்பிக்கை புதிய சிந்தனையின் வெளிப்பாடு. அறிவு மட்டுமல்ல, பணிவும் கூட காரணம் என்றே கருதுகிறேன். இன்றைய சந்ததியினரிடம் அரிதாய் காணப்படும் பணிவு தவறான முடிவிற்கு இட்டுச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.
ReplyDeleteநிகழ்காலத்தில்... //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ShankarG //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Interesting Story.
ReplyDeleteதுரைடேனியல் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல கருத்து நண்பரே ,அறிந்தவர் வழிகாட்டின் படி கேட்டால் நல் வழி பிறக்கும் ,நல் கருத்து
ReplyDeleteத.ம 12
ReplyDeleteM.R //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எல்லாம் நம்பிக்கை தான்...
ReplyDeleteபெரியவர்கள் சொல்லிப் போன கதைகளில் நிறைய விஷயம் சொல்லியிருக்கிறார்கள்...பகிர்ந்தமைக்கு நன்றி ரமணி சார்...
ரெவெரி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முன்பெல்லாம் பெரியோர் சொல்வதெல்லாம் வேதம் என்று அனைத்தையுமே அவர்கள் சொல்படி நடந்ததால் இந்தக் கதை அந்தக் காலத்திற்கு மிகவும் பொருத்தமான கதை. ஆனால் இன்றைக்கு ஐந்து வயசு குழந்தை கூட கேல்வி கேட்கிறது. நமக்குத்தான் பதில் சொல்லத் தெரிவதில்லை!
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்!!
மனோ சாமிநாதன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
நம்பி கைகொடுக்கும் செய்திகளை
ReplyDeleteபுராணங்கள் வழியாக சொல்லியிருக்கிறார்கள்..
சிற்சில முரண்பாடுகள் இருந்தாலும்
பெரும்பாலும் நம் வாழ்வாதாரத்துக்கு
நம்பிக்கை ஊட்டுபவையாகவே
இருக்கின்றன..
அருமையாக அலசி அதன் முடிவை
கருத்தாளர்களிடம் விட்டிருப்பது
சாதுர்யம் நண்பரே...
கதை சொல்ல்லும் புராணங்கள் ஏன் நம்பிக்கையை வளர்க்கவில்லை வாழ்வியல் நம்பிக்கையை என்பது ஒரு புறம் இருக்க இன்றைக்கு சிறுவர்களுக்கான இலக்கியம் நிறைய வந்து விட்டது.
ReplyDeleteமகேந்திரன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
விமலன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இக்கதையை இப்போதுள்ள காலத்திற்கு சொன்னால் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது முழிக்கத்தான் வேண்டும்.கடலுக்குக் கீழ் ஒரு இலங்கை. கடலுக்கு மேல் ஒரு இலங்கை, கூடைக்குள் எரிச்செல்லுதல் இப்படியெல்லாம் கதை சொல்ல முடியாது. திருப்பிக் கேட்க முடியாததனாலேயே இன்று நாம் பல விளக்கங்களை இழந்து நிற்கின்றோம்.
ReplyDeleteசந்திரகௌரி said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
//வெறும் இந்த ஓலைக்கா என நினைத்திருப்பான்
ReplyDeleteஅதுவும் சரிதான்!
அப்பாதுரை //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கதைகள் சொல்லி, சிந்தனைகளை குழந்தைகளுக்கு வளர்ப்பது என்பது ஒரு பெரிய கலைதான்.மதம் சார்ந்ததா?அறிவு சார்ந்ததா? என்பது இரண்டாம் கட்டம்தான்.இப்போதுள்ள பெற்றோர்களுக்கு குழந்தைகளை கவனிக்கவே நேரமிருப்பதில்லை.எங்கே கதை சொல்வது.கதைகள் கேட்டு வளரும் குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் அதிகமாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.கதை சொல்லியே அனைத்திற்கும் விளக்கம் அளிப்பது என் தந்தையின் வழக்கம்.உங்கள் கதையினையும் அப்படித்தான் கதாப் பாத்திரங்களை கற்பனை செய்து கொண்டே ரசித்தேன்.என் அப்பா இறந்த பின் நான் கேட்கும் முதல் கதை இது.அருமையான பதிவு.
ReplyDeleteதென்காசித் தமிழ்ப் பைங்கிளி //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
//நீங்கள்
ReplyDeleteபெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்//
இந்த unquestioning faith தான் நாம் இளமையில் பலவற்றை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறது. இல்லையேல், ஒவ்வொரு விஷயத்தையும் இதை கற்றுக்கொண்டால் என்ன பலன், புத்தகத்தில் உள்ளது உண்மையாக இருக்குமா, அப்பாவுக்கு என்ன தெரியும்.. என்று கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தால், எதையும் கற்றுக்கொள்ள மாட்டோம்.
மிக அருமையான கதை. என் குழந்தைகளுக்கு சொல்ல எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது.. அரிய கருத்தும்..
bandhu //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
நம்பிக்கை தான் வாழ்க்கை ..:)
ReplyDeletesuper sir..
jayaram thinagarapandian //
ReplyDeleteதங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கேள்விப்படாத அருமையான உபன்யாச கதை! நல்ல விசயங்களை கண்மூடித்தனமாக நம்பினால், எந்த காலத்திலும், யாருக்கும் நிச்சயம் நல்ல பலனை தரும்
ReplyDeleteநம்பிக்கைபாண்டியன் //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி