Thursday, November 10, 2011

அந்த அந்த நொடி..


வினு சக்கரவர்த்தி போன்ற ஆஜானுபாவமான
 உடற்கட்டும்பெரிய மீசையும் கிரீடமும்
கையில் கதாயுதமும் கொண்டு
மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும்
 உள்ளேவந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று
இவர் "எமதர்மன்தான் " என்று

ஆமை புகுந்த வீடு அமீனா புகுந்த வீடு
எமன் புகுந்தவீடும்உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
.இருந்தாலும் மரியாதை நிமித்தமாக
"வாருங்கள் வாருங்கள்
நான் ரெடி போவோமா ?"என்றேன்

எமர் (ன் )என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை யுகங்களோ எவர் எவர் உயிரையோ
எடுத்திருக்கிறேன்இதுவரை யாரும் உன்போல
 நான் ரெடி போவோமா எனச் சொன்னதில்லை
உனக்கு சாவென்றால் பிடித்தமா இல்லை
வாழ்வு வெறுத்துப் போயிற்றா "

"இல்லை இல்லை நீங்களும் மூன்று தபால்
 போட்டுவிட்டீர்கள்நான் தான் பதில் போடமுடியவில்லை.
ஆனாலும் மனத்தளவில் ரெடியாகிவிட்டேன்
அதுதான் தங்கள் வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை "என்றேன்

"நீர் எழுத்தாளர் எனத் தெரியும் அதுதான்
பொடிவைத்துப் பேசுகிறீர்நான் கோடிவீட்டுக்
 குப்புசாமியைத்தான் கொண்டுபோக வந்திருக்கிறேன்
உம்மைக் கொண்டுபோக இல்லை
என்வே பதற்றப் படாமல் அமரும்
உன்னிடம் எமக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும்
ஒளிக்காமலும் பயப்படாமலும் பதில் சொல்லும் " என்றார்

நான் சாகப் போவதில்லை எனத் தெரிந்ததும்
எப்படித்தான்தைரியம் வந்தது எனத் தெரியவில்லை
சோஃபாவில் நன்றாக
சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
 எதற்குப் பயப் படவேணும்

பின் எமரே தொடர்ந்தார் "இந்திரலோகத்தில்
எல்லோரும்என்னைஏகமாகப் பேசுகிறார்கள்.
சாவின் கடைசி நிமிடங்களில் யாரையும்பேசவிடாது
 அவர்களைக் கொன்றுவிடுகிறேனாம்
.இதனால் அவர்கள் வாழ்ந்த வாழ்வில்
அறிந்து கொண்டதைபுரிந்து கொண்டதை
சொல்ல முடியாமலே போகிறதாம்
அதனால்தான் பூமியில்பஞ்சமா பாதகங்கள்
பெருத்துப் போனதாகச் சொல்லுகிறார்கள்
எனக்கு அது உடன் பாடில்லை
நீ என்ன சொல்கிறாய் "என்றார்

"அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம்
பரீட்சித்துப் பார்க்கலாமே " என்றேன்

"அதைச் செய்யாமல் உன்னிடம் வருவேனா.
ஒருவனிடம் கனவில் தோன்றிஅடுத்தவாரம்
 உன் உயிர் எடுக்கப் போகிறேன் எனச் சொன்னேன்
அதுவரை யோக்கியனாக இருந்தவன்
அந்த ஒருவாரத்தில் ஆடித் தீர்த்துவிட்டான்
முப்பது வருடம் செய்யாத பாவங்களை
ஒரு வாரத்தில் முடித்துவிட்டான்
சரி. அடுத்தவனிடம் சொல்லிப் பார்த்தேன்.
அவன் அந்த ஒரு வாரமும்
செத்த பிணமாகத்தான் உலவிக் கொண்டிருந்தான்.
சரி அதுதான் போகட்டும் என
கடைசி நிமிடங்களில் ஒருவனுக்கு தகவல் சொல்லி
அரை மணி நேரம்கெடு கொடுத்தும் பார்த்தேன்
முழு நேரத்தையும் 'பினாத்தியே "தீர்த்துவிட்டான்
இதுவரை எவனுக்கும் தான் வாழ்வில்
 புரிந்து கொண்டதை அடுத்தவருக்குச்
சொல்லிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம்
 சுத்தமாக இல்லை " என்றான்

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை

"அதுதான் இப்போது அடுத்த முயற்சியாக
 உன்னிடம் வந்துள்ளேன்உன்னை இப்போது
 கொண்டு போகப் போவதில்லை
உன்னை கொண்டுபோகப் போகும் நாளையும்
 சொல்லப் போவதில்லை
என்வே பயப்படாமல் சொல்லு . நீ இப்போது
சாகப் போகிற நொடியாக இருந்தால்
வாழ்வை அர்த்தப் படுத்துவதாக ஒரு செய்தி
சொல்லும்படியாகச் சொல்
எனச் சொன்னால் என்ன சொல்லுவாய் " என்றான்

இது நான் வாழ்க்கையில் சந்தித்த கேள்விகளிலேயே
கடினமான கேள்வியாகவும்
புதிரான கேள்வியாகவும் பட்டது.
சிறுவயது முதல் இன்றுவரை நடந்த அனைத்து
 நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக
அசைபோட்டுப் பார்த்தேன்
நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க
பள்ளியில் மெனக்கெட்டது
வேலைக்கான தயாரிப்புக் கூடமாக
கல்லூரியை க் கருதியது
நல்ல இல்லறம் அமையவே
வே லை எனக் கொண்டது
குழந்தைகளின் எதிர்காலம் கருதியே
பகலிரவாய் உழைத்தது ....
யோசிக்க யோசிக்க மர்மம் விலகுவது போலப் பட்டது
இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
இருந்திருக்கிறேனே ஒழிய
அந்த அந்த காலங்களில் வாழவே இல்லை
என்கிற உண்மை புரிய வெட்கிப் போனேன்

" ஞாழிகை ஆகிறது ஏதும் உன்னால்
 சொல்ல முடியுமா ' என்றான்

" முடியும் ஒரு வாக்கியமாகச் சொல்லவா
 விவரித்துச் சொல்லவா " என்றேன்

"விவரித்தல் வேண்டியதில்லை
 நான் புரிந்து கொள்வேன் இரத்தினச் சுருக்கமாய் சொல் "

"நேற்றும் இல்லை நாளையும் இல்லை
அந்த அந்த நொடியில்
வாழுதலே வாழ்க்கை " என்றேன்

எமன் முகத்தில் பரவசம் படரத்துவங்கியது

"சபாஷ் சபாஷ் "எனக் கூச்சலிட்டபடி என் முதுகில்
 ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு
மறைந்து போனான் நான் நடு நடுங்கிப் போனேன்

வலி பொறுக்காது நான் லேசாக உடல் அசைக்க
 உடல் பாரமாகத் தெரிந்தது
கண்களை கஷ்டப்பட்டு திறக்க என்னைச் சுற்றி
ஒரு பெரும் கூட்டமே நின்று கொண்டிருந்தது

"அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்
இனி பயமில்லை ..  இன்னும் என்ன என்னவோ
சொல்லிக் கொண்டிருந்தார் குடும்ப டாக்டர்


85 comments:

  1. வினு சக்கரவர்த்தி போன்ற ஆஜானுபாவமான
    உடற்கட்டும்பெரிய மீசையும் கிரீடமும்
    கையில்கதையும் கொண்டு
    மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும்
    உள்ளேவந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று
    இவர் "எமதர்மன்தான் " என்று.

    ....கதாயுதம் எண்ணுகிறேன் ..........கற்பனைக்கு ஒரு சபாஷ்

    ReplyDelete
  2. நிலாமதி //

    கதாயுதம் என மாறுதல் செய்துவிட்டேன்
    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை " //அருமை வரிகள்!அபார கற்பனை!

    ReplyDelete
  4. அருமையானா விஷயம் சார் ஏற்கனவே கேட்டதாய் இருந்தாலும் நீங்கள் சொன்ன விதம் அருமை

    ReplyDelete
  5. கதையா... கவிதையா... வாழ்க்கையை அழகாக விளக்கியது.

    ReplyDelete
  6. வாழ்க்கையை புரி வைத்திருக்கிறது

    ReplyDelete
  7. வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
    எதற்குப் பயப் படவேணும்


    அதுதானே!
    தைரியமாக கதாயுதத்துடன் வந்தவருட்ன் கதை ஆயுதத்துடன் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்!!

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. ஜ.ரா.ரமேஷ் பாபு //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை " /

    அருமையான வாழ்ந்து படித்த வாழ்க்கைத் தத்துவம்..

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. மிழ் உதயம் //

    லேபில் கொடுத்துள்ளேன்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்களித்தமைக்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை//

    ஒரு வரியில்...வாழ்வின் அர்த்தம்...பலே...

    இறுதிக்காட்சிக்கு கொண்டுவந்து நிகழ்காலத்தோடு இணைத்த விதம் அருமை ரமணி சார்...

    ReplyDelete
  16. அழகான, அசத்தலான வரிகள். தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. கண்டிப்பாக அந்தந்த நொடியிலே வாழ்வதுதான் வாழ்வை வளப்படுத்தும்.
    கங்கையிலே குளிக்கையிலே
    காவிரியில் மனது வைத்தால்
    அந்த சுகம் இது தருமோ
    இந்த சுகம் அது தருமோ

    இந்த பாடலும் இதைதான் உணர்த்துகிறது.
    எவ்வளவு முக்கியமா விசயத்தை
    எளிதாக சொல்லிவிட்டீர்கள் நன்றி சார்.

    ReplyDelete
  18. நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை "//

    வாழ்க்கையின் பூரணத்துவம்..

    ReplyDelete
  19. என்ன சொல்ல நண்பரே....
    தங்களின் சிந்தனைத் திறன் கண்டு வியந்துநிர்கிறேன்...
    காலனின் கேள்விக்கு தகுந்த பதில் சொல்லியிருக்கிறீர்கள்...
    வாழ்வை நன்கு புரிந்து...
    இதுதான் வாழ்வு என முற்றுப்புள்ளி வைத்தபின்னர்
    வரும் ஒரு தெளிவு இந்த பதில்..
    மிகவும் அருமை..
    தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்குது...

    ReplyDelete
  20. வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
    எதற்குப் பயப் படவேணும்

    நிஜமாகவே எமனுடன் உரையாடினால் கூட இத்தனை தெளிவாக பேச முடியுமோ..

    மிகவும் ரசித்துப் படித்தேன். வாழ்க்கை குறித்த தெளிவு அற்புதம்.

    ReplyDelete
  21. ஒரே ஒருவரியில் எமனையும் வென்றுவிட்ட உமது சிந்தனையே சிறுகதையாக மலர்ந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது..!!

    ReplyDelete
  22. உயிர் வாழ்தல் பற்றிய அந்த தெளிந்த சிந்தனையே சிறுகதையின் சிறப்பு. பகிர்வுக்கு நன்றி..!!

    ReplyDelete
  23. ரெவெரி //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. எனது வலையில் இன்று:

    உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்

    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  25. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. சாகம்பரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. வேடந்தாங்கல் - கருன் * //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. மகேந்திரன் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ரிஷபன் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. தங்கம்பழனி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  32. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  33. ரமணி சார் மிக அருமையான சிந்திக்க தூண்டிய பதிவு. வாழ்த்துக்கள்
    மரணத்தை கண்டு நான் அஞ்சுவதில்லை ஏனென்றால் நான் அதை நம்புவதில்லை.மரணம் என்பது நம்மை இரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு அழைத்து செல்வதுதான். நான் எப்படி இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தேனோ அது போலத்தான் நான் இந்த உலகத்தில் இருந்து வேறு உலகத்திற்கு இடம் மாறுகிறேன். இதற்க்காக நான் சந்தோஷப்பட வேண்டுமே தவிர அழுதுவதில் எனக்கு இஷ்டம் இல்லை
    உங்கள் பதிவை படித்த பின் என் மனதில் தோன்றியவைதான் மேலேயுள்ள கருத்து. மேலும் என் மனதில் தோன்றியவைகளை எனது அடுத்த பதிவாக போடலாம் என்று நினைக்கிறேன். நேரம் இருந்தால் வந்து படித்து கருத்து கூறவும்

    ReplyDelete
  34. முடிந்தால் எனது அனானி பின்னுட்டத்தை நீக்கிவிடுங்கள் நன்றி

    ReplyDelete
  35. MaduraiTamilGuy (மதுரைதமிழன்)

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  36. "நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை " என்றேன்

    ஆகா அருமையான பதில்தான் வாழ்த்துக்கள்
    ஐயா சுவாரசியமான பகிர்வுக்கு .........

    ReplyDelete
  37. ம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. Avargal Unmaigal //

    தாங்கள் கேட்டுக் கொண்டதால்
    அதை நீக்கம் செய்துள்ளேன்

    ReplyDelete
  39. அந்தந்த நொடியில் வாழும் அழகிய வாழ்க்கை குறித்து அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ரமணி சாரின் முத்திரை பளிச்சிடுகிறது, ஒவ்வொரு வரிகளிலும்.

    ReplyDelete
  40. வாழும் அந்த நொடியின் முக்கியத்துவம் பற்றிய கதை
    அருமை நண்பரே

    த.ம 9

    ReplyDelete
  41. //வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
    எதற்குப் பயப் படவேணும்//

    //"நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில் வாழுதலே வாழ்க்கை//

    அந்த நொடியில் வாழ்வதே வாழ்க்கை என்ற எல்லோருக்கும் தெரிய வேண்டிய முக்கியமான விஷயத்தை, யமனுடன் துணிச்சலான ஓர் சம்பாஷணையாக்கித் தந்துள்ளது அருமை. பாராட்டுக்கள். தமிழ்மணம்: 9 vgk

    ReplyDelete
  42. Murugeswari Rajavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. M.R //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. கலக்கிட்டிங்க சார்!
    உண்மையிலே பலவித உணர்வுகளுக்கு போய் வந்தேன்
    இந்தக்கதையிநூடே.
    வார்தைப்பிரயோகங்கள் யாவும் அருமை.
    வாழ்க்கைக்கான தத்துவம் அதை புரியும் போதே வாழ்வை மனிதன் வெல்கிறான்!

    ReplyDelete
  46. வாழ்க்கையின் தத்துவம் அன்றைய கனப் பொழுதை இனிதாக வாழ்வோம் என்று கூறி அருமையாக
    கதை சொல்லியிருக்கிறீங்கள் .

    ReplyDelete
  47. சார்! நீங்க ரொம்ப பெரிய ஆளுதான்.அந்த எமர் சார் கிட்டயே இம்புட்டு தகிரியமா பேசிப்புட்டீங்களே!

    அந்தந்த நொடி வாழும் வாழ்வு இனிமை நிறைந்த
    கட்டங்களே.

    அப்பறம் அந்த வினுச் சக்கரவர்த்தி கற்பனை மிகவும் ரசித்தேன்.

    @சாகம்பரி

    உங்க கமென்ட் சூப்பர் :-))

    ReplyDelete
  48. வாழ்க்கையின் ரகசியத்தை சுவாரஸ்யமாக விளக்கிவிட்டீர்கள்.. அற்புதமான கற்பனை!

    ReplyDelete
  49. எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது.
    மிகவும் வித்தியாசமான , யோசிக்க வைத்த பதிவு.
    அருமை ரமணி சார்.

    ReplyDelete
  50. நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை " //

    உண்மையில் ரத்தின சுருக்கமான வார்த்தைகளானாலும்.. இதை உணர்ந்தால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்... செம்மறிகள் செல்லும்பாதையிலே சென்றுக்கொண்டிருக்கிறோம்.. வாழ்வின் உன்னதத்தை எப்பொது உணரபோகிறோம்... இந்த நொடியின் அற்புதத்தை எப்பொழுது உணரபோகிறோம்.. எல்லோரும் வாழும் இந்த எந்திர வாழ்க்கையா... இல்லை உன் மனம் ரசித்து அனுபவித்து வாழும் சீராக மூச்சுவிடும் முத்தான வாழ்க்கையா... உண்மையில் மிகப்பெரிய அற்புதமான வரிகள்... அசத்திவிட்டீர்கள் கதை நடையில்... மிக அருமை சகோ!

    ReplyDelete
  51. கோகுல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. தனிமரம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. raji //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. bandhu //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. சிவகுமாரன் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. மாய உலகம் //

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. / நீங்களும் மூன்று தபால்
    போட்டுவிட்டீர்கள்நான் தான் பதில் போடமுடியவில்லை/. எனக்கும் ஒரு தபால் அல்ல, நேரிலேயே வந்து கூப்பிட்டிருக்கிறான் ஏதோ தவறுதலாக வந்துவிட்டான் என்று அறிந்ததும் நானே அவனை “என்னருகில் வாடா, காலா, சற்றே மிதிக்கிறேன் உன்னை என் காலால் “என்று கூறினேன்.
    “ நேற்று என்பது திரிந்த பால், நாளை என்பது மதில் மேல் பூனை; இன்றென்பது கையில் வீணை “ மீட்டி மகிழ்தலே சிறந்தது. அந்த நொடியை உணர்ந்தவன் சொல்கிறேன், இந்த நொடியில் வாழ்வதே வாழ்க்கை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  58. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  59. //நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை// நல்லதோர் கருத்தினை அழகிய சிறுகதையாகச் சொன்ன பாங்கு நேர்த்தி....

    நல்ல பகிர்வு தந்தமைக்கு உங்களுக்கு ஒரு ஷொட்டு....

    ReplyDelete
  60. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. மாய உலகம் //

    தங்கள் மனங்கனிந்த வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    எங்கள் வாழ்த்துக்களை சமர்ப்பித்துக் கொள்கிறோம்
    ஒரு இனிய நாளில் நம்மையும் நினைத்துக் கொள்வதற்கு
    இனிய உறவுகள் இருக்கிறது என எண்ணிக் கொள்ளத்தான் எத்தனை
    சந்தோஷமாக இருக்கிறது.வாழ்த்துக்கள்
    தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  64. அன்பின் ரமணி - அருமையான தத்துவம் - இந்த நொடியில் வாழ்வதே வாழ்க்கை. காவிரியில் கால் வைக்கும் போது கங்கையையும் - அங்கே கால் வைக்கும் போது இதனையும் நினைவில் கொள்வது வாழ்க்கை அல்ல, எதை எதைச் செய்கிறோமோ அதனை மட்டும் அங்கே அப்போது அனுபவித்துச் செல்வது சாலச் சிறந்தது.

    காலனைச் சந்தித்து மீண்டு வந்து - அபாய கட்டம் தாண்டியது - அடடா என்ன கற்பனை வளம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  65. cheena (சீனா) //

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.அதையொட்டிய கற்பனை அற்புதம்.என்றும் சமூகத்தையே சுற்றிச் சுழன்று வருகிறீர்கள் !

    ReplyDelete
  67. கொஞ்ச நேரம் பயப்பட வச்சிட்டீங்க

    ReplyDelete
  68. ஹேமா //
    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. rufina rajkumar //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. //நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை//

    வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய
    தத்துவ உண்மை!

    எடுத்துச் சொல்லிமுறை
    மிகவும் அருமை

    த ம ஓ 16

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  71. தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. அந்த, அந்த நொடி வாழ்க்கையின் அர்த்தத்தை அருமையாகச் சொல்கிறது. மிகவும் அற்புதம். வாழ்க. வளர்க.

    ReplyDelete
  73. vetha.Elangathilakam.November 11, 2011 at 12:49 PM

    நல்லாய் குத்திவிட்டாரோ காலன்! மிக அருமையான கருத்து. பிடித்துள்ளது. ஒரு சிறு கதை போல இருந்தது. நல்ல அனுபவம் உங்களுக்கு அருமையாக சிந்தித்து எழுதுகிறீர்கள். வாழ்க வளமுடன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  74. //இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
    இருந்திருக்கிறேனே ஒழிய அந்த அந்த காலங்களில் வாழவே இல்லை//

    இதுதான் யுகம் யுகமாய் தொடர்கிறது.

    எல்லோருக்கும் ஒரு “குட்டு”.

    ReplyDelete
  75. ShankarG //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. புலவர் சா இராமாநுசம் /

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. vetha.Elangathilakam. //

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. சத்ரியன் //

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  79. "நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை " என்றேன்

    நிஜமாகவே அருமையான வரிகள் சார் இவை நீங்கள் சொல்ல வரும் கருத்தை அழகாக ரசிப்பது போல் சொல்கிறீர்கள் பாருங்கள் அதில் தான் உங்கள் வெற்றி இருக்கிறது

    தாமதமாக படிக்க வருவதற்கு மன்னிக்கவும் சார்

    ReplyDelete
  80. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. //இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
    இருந்திருக்கிறேனே ஒழிய
    அந்த அந்த காலங்களில் வாழவே இல்லை//

    நிதர்சனமான அப்பட்டமான உண்மை .
    நிலையற்ற வாழ்க்கையில் செய்யவேண்டியவற்றை அந்தந்த நேரத்தில் செய்துவிட வேண்டும் .அனுபவித்து இன்னும் மனதில் புழுங்கி கொண்டிருக்கிறேன் .
    காலம் கடந்து செய்யும் எதுவானாலும் வீண்
    //
    "நேற்றும் இல்லை நாளையும் இல்லை
    அந்த அந்த நொடியில்
    வாழுதலே வாழ்க்கை " என்றேன்//
    வைர வரிகள் .மிகவும் அருமை

    ReplyDelete
  82. jayaram thinagarapandian //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  83. angelin //

    தங்கள் வரவுக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete