Tuesday, November 8, 2011

விசித்திர பூமி


பஞ்சுப் பொதிபோல் பிய்ந்து கிடந்த
மேகத்தைக் கிழித்துக் கொண்டு
விமானம் தரை இறங்கத் துவங்கியது

பச்சைப் பசேலெனத் தெரிந்த பூமியைப் பார்த்ததும்
என்னையும் அறியாது ஆனந்தத்தில்
"வாவ்" எனக் கூச்சலிட்டுவிட்டேன்

அருகில் இருந்தவர் என்னை
ஒரு மாதிரியாகப் பார்த்தார்
"கழுகுப் பார்வையில் இப்போதுதான்
கேரளத்தின் அழகைப் பார்க்கிறீர்களா " என்றார்

ஒப்புக்கொண்டு தலையாட்டி வைத்தேன்
அவரே தொடர்ந்தார்
"எங்கள் தேசத்திற்கு மற்றுமொரு
காரணப் பெயர் உண்டு தெரியுமா ?"என்றார்

என் மௌனத்தைத் தொடர்ந்து அவரே தொடர்ந்தார்
"தெய்வத்தின் சொந்த தேசம்
அதுதான் இத்தனை அழகு " என்றவர்
"உங்கள் தேசத்திற்கு இப்படி ஏதும்
 காரணப் பெயர் உண்டா ?
இடத்தைப் பொருத்து ,மனிதர்கள் பொருத்து
புராணங்கள் குறித்து ..."
அவர் அடுக்கிக் கொண்டே போனார்

எதைச் சொல்வது ? எப்படிச் சொல்வது ?

எல்லா நகரங்களுக்கு வெளியில்
தந்தை பெரியாரின் சிலைகளும்
ஊருக்குள் நூறு கோவில்களும்

கலாசாரம் பண்பாடு குறித்து
அழகாகப் பேசும் தலைவர்களுக்கு
குறைந்த பட்சம் மூன்று மனைவிகளும்

ஊருக்கு மூன்று பள்ளிகளும்
முப்பது "பார் "களும்

இனமே அடியோடு அழிந்துகொண்டிருக்க
மானாட மயிலாட பார்க்கும் அவலமும்

பகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டே
குடும்பத்தை பரிகார பூஜைக்கு அனுப்பி வைப்பதுவும்

எண்ண எண்ண எண்ணிக்கை
கூடிக்கொண்டே போனது

அதற்குள் விமானம ஓடு தளத்தில்
ஓடத் துவங்கியதால்
விமானத்துள் பரபரப்பு படரத் துவங்கியது

அவர் விடாது "என்ன பதிலைக்காணோம் " என்றார்

அவசரமாக இறங்கத் தயாராகிற
 பாவனை செய்து கொண்டு
"விசித்திர பூமி " என்றேன்

நல்லவேளை அவர் விளக்கம் கேட்கவில்லை

87 comments:

  1. இனமே அடியோடு அழிந்துகொண்டிருக்க
    மானாட மயிலாட பார்க்கும் அவலமும்

    பகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டே
    குடும்பத்தை பரிகார பூஜைக்கு அனுப்பி வைப்பதுவும்

    எண்ண எண்ண எண்ணிக்கை
    கூடிக்கொண்டே போனது


    சாட்டையடி வார்த்தைகள்,

    ReplyDelete
  2. அட..விசித்திரபூமி...உண்மைதான்..அழகிய கவிதை.

    //இனமே அடியோடு அழிந்துகொண்டிருக்க
    மானாட மயிலாட பார்க்கும் அவலமும்// சரியா சொல்லி இருக்கீங்க சார்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ரமணிசார் அமைதியாக கவிதை எழுதி வந்த உங்களிடம் சாட்டையை கொடுத்தது யார்? கவிதை மூலமே வெளுத்து வாங்க ஆரம்பிக்கிறீர்கள். குடும்பத் தலைவராக இருக்கும் நீங்கள் வெகு விரைவில் சமுக தலைவராகி விடுவீர்கள். அப்போ இந்த சாதாரணமான இந்த தமிழ்காரனை மறந்து விட்டாதீரகள்

    ReplyDelete
  4. அது God's Own Country ஆயினும்...அவர்களும் நம்மைப்போன்று தானே ரமணி சார்...

    நல்ல வேளை 'விசித்திர பூமி' என்று நிறுத்தி விட்டீர்கள்...

    கேரளாவின் அழகு தனி தான்...இருந்தாலும் என் தாய்,மனைவி...மகள் அழகுக்கு அதெல்லாம் கால் தூசு..என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும்...

    அஞ்சு நிமிஷம் யோசிச்சதுல வந்த பதில் இது ரமணி சார்...-:)

    ReplyDelete
  5. அதிசயிக்க வைக்காத அலங்கோலத்தையும் விசித்திர பூமி எனலாம்...

    ReplyDelete
  6. நிறைய சங்கதிகள். ஓசைப்படாமல் வாழைப்பழத்தில் ஊசியேற்றியது போல.... அற்புதம்... :-))

    ReplyDelete
  7. வில்லங்கம் விமானம் ஏறி வந்ததோ!

    ReplyDelete
  8. ஸ்பார்க் கார்த்தி //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. ஸாதிகா //.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. Avargal Unmaigal //


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. ரெவெரி //

    இது நம் அவலத்தைச் சொல்லும் பதிவு
    நம் அருமையைச் சொல்ல நேரும்போது இதைவிட
    மிகச் சிறப்பாக நிச்சயம் சொல்வேன்
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. தமிழ் உதயம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. RVS //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. //எதைச் சொல்வது ? எப்படிச் சொல்வது ?//
    என்று சொல்லியே சொல்ல வேண்டியவைகளை ஒன்று விடாமல் எங்களுக்குச் சொல்லிவிட்டு, அவரிடம் மட்டும் விசித்திரபூமி என்று சொல்லிவிட்டது, அழகு.

    தமிழ்மணம் 5 vgk

    ReplyDelete
  16. விசித்திரமும் ஒரு அழகுதானே :-)

    ReplyDelete
  17. சொல்ல வேண்டியதை சுவைபடச் சொல்லிவிடீர்கள்.

    ReplyDelete
  18. ஹா ஹா... கடைசியில் எஸ் ஆகிட்டீங்களே.... lol

    ReplyDelete
  19. பயணம் இனிதாக அமைந்த்ததா

    ReplyDelete
  20. சகோ
    தமிழினத்தின் அவலத்தை
    தனித்தனியே படம்பிடித்து
    அமிலத்தில் வீழ்ந்ததுபோல்
    ஆனதனை ஆய்ந்தெடுத்து
    அன்னை தமிழ்தன்னில்
    அழகுபெற தந்துள்ளீர்
    என்னை கவர்ந்தனவே
    இருக்குமதை இயம்பிடவே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. வணக்கமய்யா./
    உங்க நல்ல காலம் விமானம் தரையிரங்கீற்று இல்லையென்றால்???? ஹி ஹி உங்க நிலமையை யோசித்து பாக்கிறேன்..

    ReplyDelete
  22. வணக்கம்,
    பயணம் ... பாடமாகிறது.

    நல்லத் தாக்குதல்!

    ReplyDelete
  23. அவர் என்ன சொன்னாலும் கடைசியில் நீங்கள் நழுவி விட்டீர்கள் பாருங்க அதான் உங்க சிறப்பு

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. அமைதிச்சாரல் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. நிலாமதி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. துஷ்யந்தன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. கவி அழகன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. விசித்திர பூமியில் மனிதர்கள் தங்களை தாங்களே தொலைத்துக் கொண்ருப்பார்கள். நல்ல கவிதை சார்.

    ReplyDelete
  30. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. கவி அழகன்

    நாம்தான் அழகா ஜகா வாங்கிட்டோம் இல்லை
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. காட்டான் //

    நல்ல வேளை கடைசி நேரத்தில்
    கேள்வி கேட்டார்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. K.s.s.Rajh //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. சி.கருணாகரசு //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. சாகம்பரி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. நீங்க சொல்லும் விசித்திரபூமி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. எனக்கு லாயக்குனு வைங்க.

    ReplyDelete
  37. //எல்லா நகரங்களுக்கு வெளியில்
    தந்தை பெரியாரின் சிலைகளும்
    ஊருக்குள் நூறு கோவில்களும்//

    முரணான விஷயத்தைனை அழகாய் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    விசித்திரபூமி என்பது மிக அழகான பெயராக இருக்கு.

    ReplyDelete
  38. உண்மைகளை உரித்துள்ளிர்கள் ,என்ன செய்வது

    ஆனால் ஒன்று நண்பரே மது எனும் பேய் இப்பொழுது அங்கும் "ஆக்ரோசமாக "ஆக்ரமிக்க தொடங்கி விட்டது

    ReplyDelete
  39. சபாஷ்... சாட்டையடி வார்த்தைகள்... அடுத்த மாநிலத்திலும் பிரச்சனைகள் இருந்தாலும், நமது மாநிலத்தின் பிரச்சனைகள் அதிகமே....

    மானாட மயிலாட - கஷ்டம்... :(

    ReplyDelete
  40. உண்மை சார் முரண்கள் நிறைந்த விசித்திர பூமி தான்

    ReplyDelete
  41. அப்பாதுரை //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. RAMVI //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. M.R //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. வெங்கட் நாகராஜ் //.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. ஜ.ரா.ரமேஷ் பாபு //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. வந்தாரை வாழவைக்கும் தேசம் நம்முடையது. இடத்தைப் பொருத்தும் புராணங்களைப்பொருத்தும் கூடப் பெருமைக்குக் குறைவில்லை.

    அரசியலாலும் மனித முரண்பாடுகளாலும் அசிங்கப்பட்டுக்கிடக்கிறது.

    விசித்திரபூமி, இந்தப்பெயரும்கூட நன்றாகத்தான் இருக்கிறது :)

    ReplyDelete
  47. ஊருக்கு மூன்று பள்ளிகளும்
    முப்பது "பார் "களும்//

    அடி பெண்டை களத்திட்டீங்க போங்க....

    ReplyDelete
  48. இனமே அடியோடு அழிந்துகொண்டிருக்க
    மானாட மயிலாட பார்க்கும் அவலமும்//

    கொலைஞருக்கு சாட்டை.......

    ReplyDelete
  49. ஏ யப்பா குரு செம கோவமா இருக்காருடோய்...

    ReplyDelete
  50. கேரளத்துக்குப் பரசுராம க்ஷேத்திரம் என்று பெயர் புராண கதைகளின் அடிப்படையில் வந்தது. மற்றபடி கடவுளரின் தேசம் என்பதெல்லாம் பிற்காலத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக சூட்டப்பட்டது. அங்கும் நீங்கள் பட்டியலிட்டுள்ள விசித்திரங்கள் உண்டு. நம் தேசம் கேரளம் உட்பட, கடவுளர் பூமிதான். மற்றபடி உங்கள் கவிதை ஆதங்கங்களின் வெளிப்பாடே என்றுதான் கருதுகிறேன். அதனை அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. வணக்கம் ரமணி அண்ணா,
    நலமா இருக்கிறீங்களா?

    கேரளத்திற்குப் போக வேண்டும் எனும் உணர்வினை உங்களின் அழகு நிறை கவிதை தந்துள்ளது!

    ReplyDelete
  52. சுந்தரா //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. G.M Balasubramaniam //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. நான் கூட சென்றிருக்கிறேன்... குணாதிசயங்கள் எப்படியோ.. ஆனால் உண்மையில் விசித்திர பூமி தான்.. பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  56. மாய உலகம் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. இன்றுதான் உங்கள் வலைப்பூ வருகிறேன்.அருமையாக எழுதறீங்க.விசித்திர பூமி தான்..

    ReplyDelete
  58. நல்லவேளை அவர் விளக்கம் கேட்கவில்லை
    >>>
    கேட்டிருந்தால் உங்க நிலமை

    ReplyDelete
  59. asiya omar //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாக்களித்தமைக்கும்
    மனமார்ந்த நன்றி
    கருத்தை ப் பதிவு செய்திருந்தால்
    இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    ReplyDelete
  62. விசித்திர பூமி மட்டுமல்ல .. தரித்திர பூமி.

    இனமே அழிந்தாலும் , மனம் கலங்காத தலைவனைக் கொண்ட பூமி.
    ரொம்ப சரியாய் சொன்னீங்க ரமணி சார்

    ReplyDelete
  63. சிவகுமாரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. vetha.ElangathilakamNovember 9, 2011 at 10:37 AM

    ''...எல்லா நகரங்களுக்கு வெளியில்
    தந்தை பெரியாரின் சிலைகளும்
    ஊருக்குள் நூறு கோவில்களும்

    கலாசாரம் பண்பாடு குறித்து
    அழகாகப் பேசும் தலைவர்களுக்கு
    குறைந்த பட்சம் மூன்று மனைவிகளும்...'
    இப்படி யெல்லாம் கூறி மிகுதியை நீங்கள் யோசியுங்கள் என்ற மாதிரி முடித்து விட்டீர்கள். விசித்திர உலகம் தான்..மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  65. விசித்திர பூமி...இந்த ஒற்றைச் சொல்லே போதும் !

    ReplyDelete
  66. நல்லதொரு கவிதை. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  67. vetha.Elangathilakam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. சமூக அவலங்களை அழகாக, ஆழமாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே..

    ReplyDelete
  70. விசித்திரமான மனிதர்களால் விசித்திரமாகி விட்டது பூமியும்.மனசாட்சியை உலுக்கும் பதிவு.

    ReplyDelete
  71. contrast country
    முரண்களின் தேசம் என்று வேண்டுமானால் அழைக்கலாம்..
    ஆனால் இது உலகம் எங்கும் பொருந்தும்

    விசித்திர பூமி - utopia

    ReplyDelete
  72. மேற்குமலைத் தொடர்ச்சியின் அழகிய வனப்பை
    மாதமாதம் ரசித்து வருபவர்களில் நானும்
    ஒருவன். அழகிய மலைத்தொடர்பின் வனப்பு,
    நம்மை மறக்கச் செய்துவிடும்..
    அப்படிப்பட்ட அழகு ...
    இயற்கை வனப்புகள் நம் நாட்டில் குறைவு தான்
    ஆனாலும் நீங்கள் கூறியதுபோல
    இத்தனை மாற்பட்ட சமூக அழகுகள்
    அவர்களிடம் உண்டா??!!

    உங்கள் மன ஓட்டங்கள் நிதர்சனமானவை நண்பரே....
    நாகரீகம் பேசுபவனெல்லாம் பிறன்மனை நோக்கும்
    பேராண்மை படைத்தவன்.....
    விசித்திர தேசம் என்பது சரியான சொற்செறிவே....

    ReplyDelete
  73. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. சுந்தர்ஜி //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  75. suryajeeva //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. அருமையான கவிதைஅன்றே படித்தேன்!ஆயின்
    கருத்துச் சொல்ல எங்ஙனம் மறந்தேன்?
    பொருத்தமான பெயர் விசித்திர பூமி
    மறுத்துச் சொல்ல முடியாது எவரும்!

    ReplyDelete
  78. விசித்திர பூமி....நல்ல பெயர் சூட்டல்தான்!

    ReplyDelete
  79. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. விசித்திர பூமிதான்.. இல்லாவிட்டால் எல்லா முரண்களுக்கும் இங்கு இடம் இருக்கிறதே..

    ReplyDelete
  82. ரிஷபன் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  83. உண்மைதான். விசித்திரங்களும், விநோதங்களும் மலிந்து கிடக்கிற பூமிதான் இது. நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  84. ShankarG //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  85. ஊருக்கு மூன்று பள்ளிகளும்
    முப்பது "பார் "களும்

    இனமே அடியோடு அழிந்துகொண்டிருக்க
    மானாட மயிலாட பார்க்கும் அவலமும்

    பகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டே
    குடும்பத்தை பரிகார பூஜைக்கு அனுப்பி வைப்பதுவும்

    வார்த்தைகள் ஒவவௌன்றும் இடி போல் இருக்கிறது

    ReplyDelete
  86. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete