Saturday, November 19, 2011

கவித்துவம்

"ஒவ்வொரு முறையும்
இலக்கணப்படி எல்லாம் சரி
செய்யுள் செய்யத் தெரிந்திருக்கிறாய்
கவிதை படைக்கப் பழகு என்கிறாரே
கவிதைக்கும் செய்யுளுக்கும்
அப்படியென்ன வித்தியாசம் "
ஆசிரியர் மேலிருந்த கோபம்
முகத்தில் கொப்பளிக்ககக் கேட்டான் நண்பன்

"கட்டிடம் என்பதற்கும்
வீடு என்பதற்கும் உள்ள
சிறு வித்தியாசம் போலிருக்குமோ ? "என்றேன்

"சமாளிக்காதே சரியாகச் சொல் "என்றான்

வீட்டினுள்ளே நண்பனின் அப்பா
"கன்னுக்குட்டி சின்னக் குட்டி தாத்தா பார்
அழகான பொம்மை பார் " என
என்ன என்னவோ சொலலிப்
பேரனைக் கொஞ்சிப் பார்த்தார்
அது அழுகையை நிறுத்தவே இ ல்லை
சப்தத்தை கூட்டிக் கொண்டே போனது

சிரித்துக் கொண்டே வந்த நண்பனின் தாயார்
குழந்தையை மடியில் கிடத்தி
"சுச்சு சுச்சு கிச்சு கிச்சு "என என்னன்னவோ
வினோதமான சப்தங்களை எழுப்பிக் கொஞ்ச
குழந்தை அழுகையை நிறுத்தி சிரிக்கத் துவங்கியது

நானும் பரவசமாகிப் போனேன்

அர்த்தம் பொதிந்த தாத்தாவின் வார்த்தைகளில்
இல்லாத ஏதோ ஒன்று
பாட்டியின் சப்தத்தில் இருந்தது
குழந்தைக்கும் புரிந்தது எனக்கும் புரிந்தது
நண்பன் முகத்தைப் பார்த்தேன்
அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை

88 comments:

  1. தமிழ் இலக்கணம் என்றாலே தலை தெறிக்க ஓடும் ஜாதி நான்.. என்னை விட்டுடுங்க

    ReplyDelete
  2. செய்யுளுக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடு பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன், நீங்கள் சுருக்கமாக,அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  3. மிக்க .நன்றி ஐயா சிறந்த பகிர்வுக்கு .வாழ்த்துக்கள்.
    முடிந்தால் இன்றைய என் ஆக்கத்திற்கு தவறாமல்
    கருத்திடுங்கள் .உங்கள் கருத்து இந்த ஆக்கத்திற்கு
    பாரபட்சம் அல்லாத நீதி சொல்ல வேண்டும் என்பது
    என் ஆவல் .

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. செய்யுளுக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடு பற்றி சுருக்கமாக கவிதை படைத்து தெளீவு படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  6. செய்யுளுக்கும்,கவிதைக்கும் உள்ள வித்யாசத்தை அழகான கவிதையில் தெளிவு படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  7. உவமையின் அர்த்தம் அருமை...

    ReplyDelete
  8. அருமையான விளக்கம் வாத்தியாரே

    ReplyDelete
  9. எனக்கு புரிகிறது இரண்டுக்குமான வித்தியாசம்...

    அழகிய விளக்கும்...

    ReplyDelete
  10. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. ஸாதிகா //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. suryajeeva //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. கவிதை வீதி... // சௌந்தர் // //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. கவி அழகன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. Thamizh //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. வாழ்க்கைத் தத்துவத்தைக் கவித்துவமாகப் புலப்படுத்தியிருக்கிறீர்கள் அன்பரே..

    அருமை..

    தங்கள் படைப்புகளுள் நான் விரும்பிப்படித்த மேலுமொரு படைப்பாக இப்படைப்பு அமைகிறது..

    நன்று.

    ReplyDelete
  21. Sir!
    Arumai. Marabu kavithaikkum pudhu kavithaikkum ulla vithiyasam kuritha Navamaana pathivu. Kalakkitteenga. Thodarungal. Vaalthukkal.

    TM 8.

    ReplyDelete
  22. அருமை சார்...
    கவித்துவத்தின்
    கவித்துவத்தை
    அழகாய் புரிய வைத்தீர்கள்

    ReplyDelete
  23. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. jayaram thinagarapandian //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. செய்யுள் என்றால் அர்த்தம் நிறைய இருக்கும் அது நமக்கு புரியாது அதற்கு நமக்கு கோனார் நோட்ஸ் நமக்கு தேவை அது போல கவிதை என்பது அழகாக இருக்கும் ஆனால் அர்த்தம் இருக்காது ஆனால் பதிவர்கள் இடும் பின்னூட்டம் மூலம் நாம் புது புது அர்த்தங்களை புரிந்து கொள்ளலாம்.

    ஆனால் உங்கல் பதிவின் மூலம் நல்ல அர்த்தத்தை புரிந்து கொண்டேன். ரமணி சார் நீங்க புரியாத பல விஷயங்களை மிக எளிதாக எல்லோருக்கும் புரிய வைக்கிறீர்கள் அதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்


    ரமணி சார் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள்தான் கோனார் நோட்க்கு உரிமையாளாரா அல்லது அதனை எழுதுபவர் நீங்கள்தானா என்று?


    இன்னொறு சந்தேகம் கோனார் நோட்ஸ் இன்னும் தமிழ்கத்தில் வந்து கொண்டு இருக்கிறாதா?

    ReplyDelete
  27. அருமையான விளக்கம் நண்பரே

    த.ம 10

    ReplyDelete
  28. சில கவிதைகளுக்கு எழுதுபவர்கள் ஒரு விளக்கமும் படிப்பவர்கள் ஒரு விளக்கமும் கொடுப்பார்.ஆனால் செய்யுள் அப்படி அல்ல.
    நல்லா சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  29. கவிதைக்கும் செய்யுளுக்கும் வேறுபாடு உண்டுதான்..வித்யாசமான கவிதை ரசித்தேன் திரு ரமணி

    ReplyDelete
  30. அர்த்தம் பொதிந்த தாத்தாவின் வார்த்தைகளில்
    இல்லாத ஏதோ ஒன்று
    பாட்டியின் சப்தத்தில் இருந்தது
    குழந்தைக்கும் புரிந்தது எனக்கும் புரிந்தது..

    எனக்கும் புரிந்தது..
    சிறந்த பகிர்வுக்கு .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. மிக நன்றாக இருக்கிறது.... இரண்டுக்குமான வித்தியாசம்!

    ReplyDelete
  32. காரிகை கற்று கவி படைப்பதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல் என்று என்றோ படித்த ஞாபகம்.காரிகை கற்று கவி படைப்பது விட கற்பனையில் எழும் எண்ணங்களுக்குக் கவி படைப்பது மேல். இதை இப்போது ஏன் எழுதுகின்றேன் என்றால் கவிதைக்கும் செய்யுளுக்கும் வித்தியாசம் புரிவதற்கு. குழந்தை ஓசையில் இன்பம் கண்டிருக்கின்றது. அது சொற்கள் பற்றியும் பொருள் பற்றியும் எங்கே அறிந்திருக்கப் போகின்றது . உங்கள் படைப்புக்கள் அளவில் சிறிது. பொருளில் பெரிது. அற்புதத்தில் அகன்றது. தொடருங்கள்

    ReplyDelete
  33. gal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி
    (தமிழிருக்கும் வரைக்கும்
    கோனார் நோட்சும் இருந்து கொண்டுதானே இருக்கும் ?)

    ReplyDelete
  34. M.R //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. கோகுல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. ஷைலஜா //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. Priya //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. சந்திரகௌரி //

    வெறும் சொற்களை செங்களை அடுக்குதல் போல்
    அடுக்கிப் போவதல்ல கவிதை என்பது
    அதையும் மீறி படைப்பாளியையும்
    படிப்பவரையும் இணைக்கும்படியாக
    ஒரு விஷயம் படைப்பில் இருக்கவேண்டும்
    என்பதை குறிப்பிட முயன்றிருக்கிறேன்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. செய்யுள்,கவிதையை விட செவி வழிப் பாடல் இன்பம் தரும்! கராணம் எளிமை..அது தரும் அருகாமை! தம 12

    ReplyDelete
  43. ரமேஷ் வெங்கடபதி

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. விச்சு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. தங்கள் வலைப்பூ இல்லத்தில் மற்றுமொரு விளக்கு மாடம். குழந்தையைக் குளிர்விக்கும் வித்தை அறிந்த பாட்டி தாங்கள்தாம். பழகுதமிழில் இலகுவாகக் கருத்துக்களை மனப்பரப்பில் விதைத்துச் செல்கிறீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  46. பாட்டி செய்யுள் தாத்தா கவிதையா?

    ReplyDelete
  47. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. உயிரோடு இருப்பதற்கும் உயிர்ப்போடு இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டினை அழகாக பகிர்ந்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete
  49. உள்ளத்தில் இருந்து வெளிப்படுவது கவிதை. சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுவது செய்யுள் எனக் கூறலாமா.?கவிதை செய்யுளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் செய்யுளில் கவிதை இருக்கலாம். உங்களையே குழப்புகிறேனோ.?

    ReplyDelete
  50. சாகம்பரி //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. G.M Balasubramaniam //

    தங்கள் பின்னூட்டமே மிகத் தெளிவான பின்னூட்டம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. பறக்கும் பட்டம் இலக்கியமென்றால்
    நூல் இலக்கணமாகவும் அதை ரசிக்கும்படி ஆட்டும் விரல்கள் கவிதையாகவும்...

    இப்படிப்பட்ட விஷயங்களை நீங்கள் அலசும் முறையே
    தனி சுகம்தான் நண்பரே..

    ReplyDelete
  54. //கவிதை என்பது
    அதையும் மீறி படைப்பாளியையும்
    படிப்பவரையும் இணைக்கும்படியாக
    ஒரு விஷயம் படைப்பில் இருக்கவேண்டும்
    என்பதை குறிப்பிட முயன்றிருக்கிறேன்//

    நிச்சயம் இதில் 100 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்! மனதிற்கு தாக்கங்கள் கொடுக்கும் பல கவிதைகளைப் படைத்திருக்கிறீர்கள்!
    இந்தக் கவிதையும் அப்படித்தான்!!

    ReplyDelete
  55. அருமையான விளக்கம் சார்.

    ReplyDelete
  56. கவிதைக்கு சந்தமே அழகு என்பதை
    மிக நுணக்கமாகச் சொன்னீர்
    அன்னையின் தாலாட்டு பொருள் உள்ளதானாலும் குழந்தை சந்த இசை கேட்டே
    உறங்குகிறது!
    பாராட்டுக்கள்!

    புலவர் சாஇராமாநுசம்

    ReplyDelete
  57. மகேந்திரன் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. மனோ சாமிநாதன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. செய்யுளுக்கும்...கவிதைக்கும் உள்ள வித்யாசத்தை கவிதையில் தெளிவு படுத்திவிட்டீர்கள் ரமணி சார்...

    ReplyDelete
  62. கவிதைக்கும் செய்யுளுக்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்து கொண்டேன் அய்யா சில சமயம் கவிதையும் செய்யுள் போல இருக்குமே புரியாத மாதிரி

    ReplyDelete
  63. ராக்கெட் ராஜா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. அய்யா தங்கள் பதிவுகளை இமெயிலில் அறிந்துகொள்ள முடியுமா அய்யா நான் இப்போது அதிகமாக இன்டர்நெட்டில் நேரம் ஒதுக்க முடியவில்லை

    ReplyDelete
  65. அர்த்தம் பொதிந்த தாத்தாவின் வார்த்தைகளில்
    இல்லாத ஏதோ ஒன்று
    பாட்டியின் சப்தத்தில் இருந்தது
    குழந்தைக்கும் புரிந்தது எனக்கும் புரிந்தது
    நண்பன் முகத்தைப் பார்த்தேன்
    அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை
    >>
    ஒருவேளை என்னைப்போல மக்குப்பிள்ளையோ

    ReplyDelete
  66. ராக்கெட் ராஜா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. ஜி எம் பி சார், சாகம்பரி, அப்பாதுரை...ராமானுசம் சார், எல்லோரது பின்னூட்டங்களையும் ரசிக்க முடிந்தது. பின்னூட்டம் படிக்கும் முன் நானும் மக்குதான்!

    ReplyDelete
  69. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அவையடக்கமான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. கவித்துவமான விளக்கம் மிகவும் அருமை!

    ReplyDelete
  71. சுந்தரா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. சில செய்திகள் இப்படித்தான் பலருக்கு பிரியாமல் போகிறது வாழ்க்கையும் பிடிபடாமல் போகிறது குழந்தையின் சகிக்கயியாலாத சத்தத்தை தாய்மையின் கட்டுப் பாட்டிற்கு மட்டுமே கட்டுப்படும் சிறப்பான ஆக்கம் பாராட்டுகளும் நன்றியும்

    ReplyDelete
  73. போளூர் தயாநிதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. இலக்கணம், எதுகை மோனை, மரபுக்கவிதைகளை எழுதி அசத்தினாலும் எங்களைப்போன்றோர் இலக்கணம் இலக்கியம் அறியாதோருக்கு இது கொஞ்சம் விழி பிதுங்கவைக்கும் சமாச்சாரமே....

    சிந்துபைரவில சுஹாசினி பாடுவாங்களே மரிமரி நின்னே.....

    சிவகுமார் பாடும்போது எதிர்ல உட்கார்ந்துக்கிட்டு அந்த பாட்டை ரசிக்காம (ஏன்னா அதன் ரசனை இல்லை என்று அர்த்தம் இல்லை தெரியலைன்னு எடுத்துக்கலாம்) புடவை பார்டர் நகைகளை பற்றி பேசிக்கொண்டு இருப்பாங்க... அது இசைக்கு செய்யும் ஒரு பங்கமாக சுஹாசினி உணர்ந்தார்... அதை சிவகுமாருக்கு பக்குவமா எடுத்து சொல்வாங்க பாருங்க பாடறியேன் படிப்பறியேன்னு பாடி பாடிக்கிட்டே மரி மரி நின்னே பாடுவாங்க.. உடல் எல்லாம் சிலிர்த்த காட்சி அது...

    ReplyDelete
  75. அது போல பக்கா ப்ரஃபொஷனல் எல்லோருமே பர்ஃபெக்டா செய்வாங்க வேலையை... ஆனால் அதில் ரசிக்கும்படியாக விஷயங்கள் மிஸ்ஸாகும்... அதை தான் ஆசிரியர் சொல்லி இருக்கார்...

    எப்படி.... எல்லாம் நல்லாதாம்பா செய்றே... ஆனா கவிதையை கொஞ்சம் படைக்க பழகு... அதாவது ரசிக்கும்படியா ரசனையா இப்படி.. உணர்வுகளும் தாக்கமும் அதில் பிரதிபலிக்கும்படி.....

    மேடைல ஜோடியா ஆடவேண்டிய பிள்ளைகள் இரண்டும் தனி தனியா ஆடினால் அது பார்க்க அழகா இருக்குமா? அது போல எழுதுவோரின் படைப்புகளை படிப்பவரை இணைக்கும்படியாக தனக்கு தெரிந்ததை மட்டும் எழுதாமல் மத்தவங்களுக்கு என்ன பிடிக்குமோ அதிலும் முயற்சித்து அதை எழுத பழகி அதில் வெற்றி பெறுவதில் இருக்கு சூட்சுமம்....

    ரெண்டே வரிகளில் வாழ்வியல் ரகசியங்கள் உலக அனுபவங்கள் எல்லாத்தையும் எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி அசால்டா எழுதிட்டு போன திருவள்ளுவர் சட்டுனு நம்ம நினைவுக்கு வரார் தானே? படிக்கும்போதே நம் மனம் அதில் ஈடுபடுவதை தடுக்க முடிவதில்லை தானே.. அதன்படி செயல்படுவோம் என்று மனம் நினைப்பதையும் உணரமுடிகிறது தானே?

    படிக்கும்போதே அட என்னமா எழுதி இருக்கான் பாருய்யா அப்டின்னு அந்த படைப்பாளிக்கு மட்டுமே ரசிகர் கூட்டம் சேரும்... அப்படி இருக்கணும் படைப்புகள் என்று சொல்ல வருகிறாரோ ஆசிரியர்?

    இதை தான் நண்பன் புரிஞ்சுக்க முடியாம தவித்து உங்க கிட்ட கேட்டிருப்பாரோ ரமணி சார்? ஆனாலும் உங்க கிட்ட இருக்கும் ஸ்பெஷாலிட்டியே உங்க கிட்ட எதுனா கேட்க வந்தால் அழகிய உவமானங்கள் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தங்களையே காரணமாக்கி உவமையாக்கி காண்பிப்பீங்களே...அது எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் ரமணி சார்...

    ReplyDelete
  76. தொலைதூரம் என்றால் வார்த்தைகள் அணைக்கும்.... அருகே என்றால் நூறு வார்த்தைகள் தரும் இதம் இன்பம் அன்பு பாசம் ஆறுதல் எல்லாமே ஒரே ஒரு குட்டி அணைப்பிலும் கிச்சு கிச்சு மூட்டுவதிலும் தெரிந்துவிடும்.... குழந்தைன்னா கிச்சுக்கிச்சு தான்...

    எத்தனை கோபமா இருந்தாலும் சரி எத்தனை பிடிவாதம் பிடித்து அழும் குழந்தையா இருந்தாலும் சரி, அம்முக்குட்டி உனக்கு இது வாங்கி தரேன் அது வாங்கி தரேன்னு தாஜா செய்தாலும் சரி எதுக்கும் மசியாத வாண்டுச்செல்லம் மடியில போட்டு கிச்சு கிச்சு மூட்டியதும் சிரிக்க தொடங்கினதுன்னா என்ன அர்த்தமா இருக்க முடியும்?

    இதை தான் வசூல் ராஜா எம் பி பி எஸ் ல சொல்லிட்டாங்க... பிரகாஷ்ராஜ் அவ்ளோ பெரிய ஹாஸ்பிடல் கட்டி வெச்சு எவ்வளவோ மருத்துவம் செய்தாலும் கட்டிப்பிடி வைத்தியம் கமல் செய்ததில் அங்கிருந்தோருக்குள் இருந்த வேற்றுமை விலகியதும் அன்பு பெருகியதும்...

    படித்தவர் படிக்காதவர் அறிந்தவர் அறியாதவர் இப்படி பெரும்பாலோர் எல்லோருமே உணரும்படி ரசிக்கும்படி தரும் படைப்புகள் சட்டுனு மனசுல பதியும்னு சொல்லாம சொல்லி இருக்கார் ஆசிரியர்....

    வரிகளில் எதுகை மோனை இலக்கணம் மட்டும் இல்ல முக்கியம்....

    எல்லோருக்கும் புரியும்படியும் எல்லோரும் ரசிக்கும்படியும் படைப்பது முக்கியம்......

    குட்டியூண்டு உவமை தான் ரமணி சார் சொல்லி இருக்கீங்க.... கட்டிடத்துக்கும் வீட்டுக்கும் இருக்கும் சிறு வித்தியாசம்.. அது எக்சாக்ட்லி கரெக்ட் உவமை...

    அதிலே புரிஞ்சுக்காத நண்பர் கண்டிப்பா இதிலும் புரிஞ்சுக்கலைன்னா.... ஆசிரியர் சொன்னமாதிரி தினமும் ஒரு மணி நேரம் மனிதர்களை அவர்கள் விருப்பங்களை, ரசனையை படிக்க செலவு செய்யவேண்டியது வரும்னு நினைக்கிறேன்...

    ஒருத்தரை இம்ப்ரெஸ் செய்யனும்னா வெறுமனே அது வாங்கி தரேன் இதை பாரு அதை பாரு இது இல்ல விஷயம்..... அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து காண்பித்தால் அசத்தலாம் இம்ப்ரெஸ் செய்யலாம்.....

    ஒவ்வொருவரின் சிந்தனைகள் மாறுப்பட்டது. ஒவ்வொருவரின் விருப்பங்கள் மாறுப்பட்டது...

    ஆனால் படைப்பாளி என்பவர் எல்லாருக்கும் பொதுவா ஒரு எழுதி முடிக்காமல்... வெரைட்டியாக ஒவ்வொருத்தருக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்யும் இல்லத்தரசிகள் போல ரசனையை உணர்வுகளை அழுத்தி அழகாய் சொல்லும்போது வரிகளில் இருக்கும் தாக்கம் படிப்பவரை சட்டுனு அதில் ஆழ்ந்து விட வைக்கும்.....

    இத்தனை நாள் கவிதைகளை படிக்கவோ கதைகள் படிக்கவோ வலைப்பூ பக்கம் வரவோ மனதில் திராணியற்று இருந்த எனக்கு இப்போது நாள்கழித்து எழுதுவதால் சரியாக எழுதுகிறேனோ என்று தெரியவில்லை.. ஆனால் நான் புரிந்துக்கொண்ட வரையில் இப்படி தான் இருக்கும் என்று நினைத்து பதிவு இட்டுவிட்டேன். இனி ரமணி சார் வந்து தரும் மார்க் பார்த்து தான்......

    அன்பு நன்றிகள் ரமணி சார், மனம் உடல் இரண்டும் நிலைகுலைந்து இருக்கும் சமயம் முதலில் ஓடிவந்து எனக்கு ஆறுதல் சொன்னமைக்கு..

    இறையருள் என்றும் பெற்று நீங்களும் அம்மாவும் தங்கள் பிள்ளைகளும் நலமுடன் இருக்க இறைவனிடம் என் அன்பு பிரார்த்தனைகள் ரமணி சார்....

    ReplyDelete
  77. Merwin S //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. ரமணி,

    கவித்துவம் மிக நன்று. வாழ்க்கையில் நடக்கும் நுண்ணிய விஷயங்களை தொட்டுச் செல்லும் கவிதைகளை படைத்தது வருவது மகிழ்ச்சிக்குரியது. தொடரட்டும் நற்பணி.

    ReplyDelete
  79. ShankarG //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. மஞ்சுபாஷிணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete