Monday, January 9, 2012

இது வேறு உலகம்-தனி உலகம்

வீட்டு வரியைக் கட்டச் சொன்னா
முறைச்சுப் பார்க்கிறன்-எங்க
வீடு ஓடு அதுக்குப் போயி
நூறா என்கிறான்-தினமும்
ரோட்டு ஓர ஒயின்ஸ் கடையில்
டேரா   போடுறான்-அவன்
கேட்ட காசை கொடுத்துக் குடிச்சு
"மட்டை " ஆகுறான்

வீட்டுச் செலவு விஷமாய் ஏற
கையப் பிசையரான்-பழைய
பாக்கி வேற கழுத்தைப் பிடிக்க
நொந்து சாகறான்-எதுக்கும்
நேத்திக்கடனை தீர்த்துப் பார்க்க
"குறிகள் " கேட்டதும்-கடனை
சேத்து வாங்கி கோவில் போயி
"மொட்டை " போடறான்

நாட்டு நடப்பு குறித்து தினமும்
விளாசித் தள்ளுறான்-பேப்பர்
பாத்துப் பாத்து  நாட்டு நிலையை
நன்றாய் அலசரான்-தேர்தலில்
ஓட்டு கேட்டு  வந்தால் போதும்
எல்லாம் மறக்கறான்-நைசா
ஓட்டு வீட்டில் எட்டு என்று
"நோட்டு "கறக்கிறான்

காற்றின் போக்கில் துடுப்பை வலிக்க
பயணம் சிறக்குமே-என்றும்
நேர்மை போக்கில் செயலும் தொடர
வாழ்வு சிறக்குமே-இந்த
ஏற்ற மிக்க செய்தி அவர்கள்
அறியச் செய்குவோம்-"அவர்கள் "
ஏற்றம் காண நம்மால் ஆன
பணியைத தொடருவோம்

76 comments:

  1. //காற்றின் போக்கில் துடுப்பை வலிக்க
    பயணம் சிறக்குமே-என்றும்
    நேர்மை போக்கில் செயலும் தொடர
    வாழ்வு சிறக்குமே//

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். தமிழ்மணம்: 2

    ReplyDelete
  2. நடப்பு கவிதை..

    (நாட்டு நடப்பு குறித்து தினமும்
    விளாசித் தள்ளுறான்-பேப்பர்
    பாத்துப் பாத்து நாட்டு நிலையை
    நன்றாய் அலசரான்-தேர்தலில்
    ஓட்டு கேட்டு வந்தால் போதும்
    எல்லாம் மறக்கறான்-நைசா
    ஓட்டு வீட்டில் எட்டு என்று
    "நோட்டு "கறக்கிறான்)

    அருமையாகச் சொன்னீர்கள்..
    இப்படித்தான் நம் குடிமகன்கள்..என்ன செய்வது..

    த.ம-2

    கொக்கரக்கோ

    ReplyDelete
  3. நாட்டுபுற பாடல் பாணியில் அழகிய படைப்பு....

    ReplyDelete
  4. குடிகாரனும் , மூடநம்பிக்கைவாதியும் ,
    நல்ல?ஓட்டுக்காரனும் திருந்த நயமாய்
    புத்தி சொல்லும் உங்கள் கவிதை மிக
    நன்று ரமணி சார் .

    ReplyDelete
  5. அருமையாக சொல்லி இருக்கீங்க சார்.புஷ்பவன்ம் குப்பு சாமியை வைத்து இந்தப்பாடலை பாடச்சொன்னால்..அற்புதமாக இருக்கும்.

    ReplyDelete
  6. அவரவர் வாழ்வு அவரவர் கையில்தான்!
    நாம் வழியை வேண்டுமானால் காட்டலாம்!
    வாயில் ஊட்டிவிடக்கூடாது!

    த.ம 5!

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. மதுமதி //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. அருமை. இது ஏதோ ஒரு பழைய பாடல் பாணியை (பாணியை மட்டும்தான்) நினைவு படுத்துகிறது.

    ReplyDelete
  10. கவிதை வீதி... // சௌந்தர் //
    //
    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. ஸ்ரவாணி //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. ஸாதிகா //.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. நாட்டு நடப்பை விளக்கும் நல்ல கவிதை.

    ReplyDelete
  14. Nayamaana Padaippu. Kiraamathu paani manathai allukirathu Sir!

    TM 7.

    ReplyDelete
  15. ரமேஷ் வெங்கடபதி //

    மிகச் சரி
    இருளில் வழியறியோதோருக்கு வழிகாட்டும் விளக்காகவும்
    திசையறியாதோருக்கு திசை காட்டும் மைல் கல்லாகவும் மட்டுமே இருக்க இயலும்
    தங்கள் வரவுக்கும் சிந்தனையை தூண்டிப்போகும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. ஸ்ரீராம். //

    மிகச் சரி
    சந்தப் பாடல்கள் எனில் நாம் புதிதாகச் செய்வதற்கு எதுவும் இல்லை
    முன்னவர்கள் எல்லா வகைகளில் முயற்சி செய்து
    அழகாக்க் கொடுத்துப் போனதை கெடுக்காமல் மட்டும் இருந்தாலே போதும்
    வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. சூப்பரா சொல்லிட்டீங்க. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், அருமை.

    ReplyDelete
  21. அமர பாரதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. வணக்கம் நண்பரே
    தன் நிலை தவறும் மனிதனின்
    அவலம் மற்றும் அசுத்தமான வாழ்வை
    சுடரொளியில் காட்டும் கவிதை.

    அருமை அருமை.

    ReplyDelete
  24. அர்த்தமுள்ள‌ அருமையான கவிதை இது!!

    ReplyDelete
  25. மனோ சாமிநாதன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. உழைத்து ஓடாய்ப்போனாலும் ஓட்டுவீட்டுவாசிகளின் நிலை அங்குலமும் முன்னேறாமைக்குக் காரணங்களை அழகாய் பட்டியலிட்டு உரைத்துள்ளீர்கள். வீட்டு வேலை செய்யும் பல பெண்களின் கணவன்மார்கள் தம் சம்பாத்தியத்தோடு இவர்களுடையதையும் அடித்துப் பிடித்து வாங்கிக் குடிக்கும் நிலை மாறவேண்டும். பிள்ளைகளைப் பட்டினி போட்டு சேமிக்கும் பணத்தில் நிறைவேற்றும் நேர்த்திக்கடன் என்ன பயனளித்துவிடப்போகிறது?

    இப்படிப்பட்ட மக்களின் அறியாமையை மூலதனமாக்கி ஓட்டுவேட்டை நடத்தும் அரசியல்வாதிகளின் முகத்தில் காறி உமிழத் தானே முன்வரவேண்டும். அப்போதுதான் இவர்கள் நிலையில் முன்னேற்றம் காணமுடியும்.

    நல்லதொரு விழிப்புணர்வுண்டாக்கும் கவிதை. பாராட்டுக்கள் ரமணி சார்.

    ReplyDelete
  28. யதார்த்தம் பேசிய கவிதை! மிக நன்று!

    ReplyDelete
  29. கீதா said...

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. பலவாறாக சிந்திக்க வைத்தது கவிதை.

    ReplyDelete
  32. நண்டு @நொரண்டு -ஈரோடு //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. தமிழ் உதயம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. Chitra //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. இதை அப்படியே பாட்டாக படிச்சு பார்த்தேன் வரிகள் அழகாக அமையுது...

    ReplyDelete
  37. மது மயக்கத்தில் மன மயக்கத்தில் இவர்கள் செய்வது இவர்களுக்கே தெரியாது, இவர்களை ஏற்றிவிட மது அரக்கனை ஒழிக்க அந்த ஆண்டவனே அவதாரம் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  38. நாட்டு நடப்பை மிகவும் யாதார்த்தமாக கவிதையில் சொல்லி இருக்கீங்க.அருமை.

    ReplyDelete
  39. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. G.M Balasubramaniam said...

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ””எதுக்கும்
    நேத்திக்கடனை தீர்த்துப் பார்க்க
    "குறிகள் " கேட்டதும்-கடனை
    சேத்து வாங்கி கோவில் போயி
    "மொட்டை " போடறான்””

    முரட்டு மூட நம்பிக்கையை
    முடிவுக்கு கொண்டுவரும்
    முத்து வரிகள்
    முழுமை.

    த ம 14

    ReplyDelete
  44. வணக்கம்!
    டாஸ்மாக் சென்றாலும் ஜனநாயகம் மறவாத “நல்ல” குடிமகனைப் பற்றிய நடுக்கமில்லாத கவிதை.

    ReplyDelete
  45. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  46. மாதேவி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. A.R.ராஜகோபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. எதார்த்தமாய் கடந்து செல்லும் கனமானக் கவிதை!!

    ReplyDelete
  50. வைகறை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. சரியான கொட்டுதான்.
    பலே பலே

    ReplyDelete
  52. ''வீட்டுச் செலவு விஷமாய் ஏற
    கையப் பிசையரான்-பழைய
    பாக்கி வேற கழுத்தைப் பிடிக்க
    நொந்து சாகறான்-எதுக்கும்
    நேத்திக்கடனை தீர்த்துப் பார்க்க
    "குறிகள் " கேட்டதும்-கடனை
    சேத்து வாங்கி கோவில் போயி
    "மொட்டை " போடறான்''
    சாமிக்காகவும் சேர்த்து கடன் வாங்கிவிட்டால் கடனைக்கட்டுவது அவர்பாடு என்று இருக்கலாம்
    போலும். இனிய கவிதைக்கு நன்றி சார்

    ReplyDelete
  53. dhanasekaran .S //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. அருமையான கவிதை சார்

    ReplyDelete
  55. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. ரஹீம் கஸாலி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. ரஹீம் கஸாலி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. யதார்த்தமாய் நடப்பினைச் சொல்லிப் போகும் அருமைக் கவிதை....

    ReplyDelete
  59. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரமணி சார்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..


    யதார்த்தத்தை
    உரக்கச் சொல்லும் வரிகள்...

    வாழ்த்துக்கள் ரமணி சார்...

    ReplyDelete
  61. வயதுக்கேற்ற உலகம் அவர்களுக்கு இப்போ.அவர்கள் உலகமும் மாறும்தானே.அதுவரை கஸ்டம்தான் !

    ReplyDelete
  62. ''..நேர்மை போக்கில் செயலும் தொடர
    வாழ்வு சிறக்குமே-..''இது மட்டும் புரிந்தது. முதலில் புரியவில்லை. பின்னூட்டங்களை வாசிக்கப் புரிந்தது. அரசியலில் நான் சூன்யம் தான். கணவரிடம் சந்தேகங்கள் கேட்டு அறிவேன். நாட்டுப் பாடல் பாணியில் எழுதியுள்ளீர்கள் மிக மிக நன்று. எனக்கு உங்கள் ஆக்கத்தில் பிடித்தது. அளவாக வரிகள் கூடிவிடாமல், பாரதமாக நீட்டாமல் (மனுசருக்கு விசர் வராமல்)சிறு ஆக்கமாக முடிக்கிறீர்கள்.பொறுமையாக ஒரு தரத்திற்கு இரண்டு தடவை கூட வாசித்து மகிழலாம்.அப்படியே செய்கிறேன். நன்கு மனதில் பதிக்கலாமே! அதற்கு முதலில் நான் வாழ்த்துகளைக் கூறுகிறேன் . இரண்டாவது இந்த நல்ல ஆக்கத்திற்கும் வாழ்த்துகள். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  63. காற்றின் போக்கில் துடுப்பை வலிக்க
    பயணம் சிறக்குமே-என்றும்
    நேர்மை போக்கில் செயலும் தொடர
    வாழ்வு சிறக்குமே-

    சிறப்பான சிந்தை கவரும் அருமையான வரிகள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  64. யதார்த்தம்.
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இரு தரப்புக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. ஏமாறும் வர்க்கம் கூட தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வர்க்கம் என்ற பார்வையில்.

    ReplyDelete
  65. ரெவெரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. kavithai (kovaikkavi) //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. எம்மோடு பயணிப்பவர்கள் பற்றி ரொம்ப இயல்பா சொல்லியிருக்கிறீங்க. ரசிக்க வைக்குது.

    ReplyDelete
  71. KANA VARO //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. சராசரி மனிதர்களின் வாழ்வியலை அற்புதமாக படம் பிடித்துள்ளது உங்கள் கவிதை! தன்னுடைய சிந்தனையயும், செயலையும் ஆக்கபூர்வத்திற்கு பங்கிடாமால், போதையாகவும், பேதையாகவும் வாழவே விரும்புகின்றனர் பெரும்பான்மையான மக்கள் என்பது வேதனையான உண்மை. எதுகை மோனையைக் கண்டும் கவிதை பல முறை படித்து மகிழ்ந்தாலும் அவ்வரிகளிலுள்ள உண்மை என்னவோ மனதை பிசைகின்றது.

    ReplyDelete
  73. நெல்லி. மூர்த்தி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. நாட்டுப் புறமெட்டில் பாடல் அருமை!
    தாளம் தட்டாது ஒலிக்கிறது!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  75. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete