Wednesday, February 22, 2012

புரியாத பேரதிசயம்


அவன் குழந்தையும்
அவள் குழந்தையும்
அவர்கள் குழந்தைகளோடு
அளவளாவி மகிழ்வது
அவர்களுக்கு அதிசயமேயில்லை
நமக்குத்தான் அதிசய்ம்

ஆயினும்
பத்தாண்டுக்கு முன் எனினும்
முறையற்ற பாலியல் தொடர்புகொண்டவன்
பொதுவாழ்வில்
எத்தனை உயர் பதவியிலிருந்தாலும்
சகித்துக் கொள்ளாது
பதவி நீக்கம் செய்யத் துணிவது
அவர்களுக்கு அதிசயமேயில்லை
நமக்குத்தான் அதிசயம்

மனதால் மட்டுமே நினைத்திருந்தும்
வேரொருவனை மணக்க நேரின்
கற்பிழந்தவளாக கருதப்படுதலும்
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே
உன்னதக் கோட்பாடாகக் கொள்வதுமே
நமது பண்பாட்டு
இது அவர்களுக்கு அதிசயமே
நமக்கு இது அதிசயமேயில்லை

ஆயினும்
பட்டப் பகலில் கொட்டடித்து
விபச்சாரி வீட்டுக்குப் போனாலும்
ஊரறிய உறவறிய
இரண்டு மூன்று
வீடு வைத்துக் கொண்டாலும்
வேறு தகுதிகள் இருப்பின்
தலைவனாக்கி கொண்டாடுதல் என்பது
நமக்கு அதிசயமேயில்லை
ஆயினும் உலகிற்கு
இது ஒரு பேரதிசயமே

69 comments:

  1. அதிசயங்கள் என்னவென்று காண வந்தேன்.ஆம் குறிப்பிட்டதனைத்தும் அதிசயமே.. வாசித்தேன்.. வாக்கிட்டேன்..நன்றி.

    ReplyDelete
  2. அற்புதம்....

    இது உலகில் ஒழிக்கமுடியாத அதிசயம்...

    ReplyDelete
  3. அப்படி போடு.....நெத்தியடி வரிகள் - நன்னா சொன்னியேல் போங்கோ.

    "நல்லவர்கள் ஒண்ணை கட்டிக்கிட்டு நாள் முதல் கடைசி நாள்வரை
    கஷ்டப்படுகிறார்களே
    தீயவர்கள் ஒண்ணுக்கு இரண்டா மூன கட்டிக்கிட்டு கடைசி நாள்லில் மட்டும்
    கஷ்டப்படுகிறார்களே
    நாம் ஏன் நல்லவர்களாக இருந்து
    எப்போதும் கஷ்டப்படவேண்டும்"

    மேல் காணும் வரிகள் உங்ககிட்ட சுட்டது தான் கொஞ்சம் மாற்றத்துடன் அம்புட்டுதான்.

    //புரியாத பேரதிசயம்//

    யாருக்குங்க??? யாருக்கோ....ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. யதார்த்த அதிசயம்.

    ReplyDelete
  5. அதிசயங்கள் இடம் மாறி கொண்டிருக்கும் ரகசியத்தை அறிவீர்களா.

    ReplyDelete
  6. அப்படிப் போடுங்க!நன்று.

    ReplyDelete
  7. நாந்தான் அசிங்கம்..ஆனா
    எந்தலைவன் சிங்கம்!..இது அங்க!

    என்னால முடியாது அல்லது
    செய்யமாட்டேன்..ஏன்னா நான் ஒரு ஜீரோ!
    நான் ஏங்கிட்டு இருந்ததை பப்ளிக்கா தைரியமா
    செஞ்சவன் எனக்கு ஹீரோ! அப்ப
    அவந்தான் எனக்குத் தலைவன்!..இது இங்க!

    ReplyDelete
  8. வேறு தகுதிகள்.......? என் குழந்தை உன் குழந்தை, நம் குழந்தை என்று திரு. என்.எஸ்.கிருஷ்ணன் என்றோ சொன்னது நினைவுக்கு வருகிறது.எந்த நிகழ்வுமே இப்போது அதிசயம் இல்லை,ஆச்சரியமுமில்லை ரமணி சார்.!ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ, ஒருத்திக்கு ஒருவன் என்பதோ நம் இதிகாசங்களிலேயே மீறப் பட்டிருக்கிறதே.கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இங்கே சாமானியன் செய்ய முடியாததெல்லாம் அதிசயம்தான். அதை செய்பவன் எல்லாம் தலைவன் ஆக முடியும். அந்த கணக்குலதான் இந்த இரண்டு மூணு வச்சிருக்கரவங்களயும் தலைவனா ஏத்துக்கரது.

    அருமையான பார்வை.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  10. அதிசயங்கள் புரியாத பேரதிசயம்தான்.சிறப்பான பதிவு.

    ReplyDelete
  11. வறுத்து எடுத்து-
    விட்டது!

    ஒவ்வொரு வரியும்-
    எதார்த்தம் -
    ஆனாலும்-
    அதிசயம்!

    ReplyDelete
  12. மதுமதி //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. கவிதை வீதி... // சௌந்தர் // //

    அற்புதம்....
    இது உலகில் ஒழிக்கமுடியாத அதிசயம்... //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. மனசாட்சி //

    அப்படி போடு.....நெத்தியடி வரிகள் -
    காணும் வரிகள் உங்ககிட்ட சுட்டது தான் கொஞ்சம் மாற்றத்துடன் அம்புட்டுதான். //

    மாற்றம் நான் எழுதியதைவிட
    மிகச் சிறப்பாக உள்ளது

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. ஸாதிகா //

    யதார்த்த அதிசயம்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. தமிழ் உதயம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்சிந்திக்கத் தூண்டும்பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. சென்னை பித்தன் s //

    அப்படிப் போடுங்க!நன்று.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. ரமேஷ் வெங்கடபதி //

    பதிவின் பாணியிலேயே பின்னூட்டம்
    கொடுத்துள்ளதை மிகவும் ரசித்தேன்
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. G.M Balasubramaniam //

    ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ, ஒருத்திக்கு ஒருவன் என்பதோ நம் இதிகாசங்களிலேயே மீறப் பட்டிருக்கிறதே.கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
    எத்தனை பேரை சேர்த்துக் கொண்டாலும்
    அவனின் இரத்தமே ஆளவேண்டும் என
    விதிகள் இருந்த காலம் அது
    இப்போது நாம் வேறு யுகத்தில் அல்லவா
    இருக்கிறோம்
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்சிந்திக்கத் தூண்டும்பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. Sankar Gurusamy //

    இங்கே சாமானியன் செய்ய முடியாததெல்லாம் அதிசயம்தான். அதை செய்பவன் எல்லாம் தலைவன் ஆக முடியும். அந்த கணக்குலதான் இந்த இரண்டு மூணு வச்சிருக்கரவங்களயும் தலைவனா ஏத்துக்கரது.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்சிந்திக்கத் தூண்டும்பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    அருமையான பார்வை//.

    ReplyDelete
  21. Seeni //

    ஒவ்வொரு வரியும்-
    எதார்த்தம் -
    ஆனாலும்-
    அதிசயம்!

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. RAMVI //


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. நமது பண்பாட்டை சுட்டிக்காட்டியவிதமும் கொட்டிக்காட்டிய விதமும் அருமை.

    அருமைக்கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  24. DhanaSekaran .S //

    .நமது பண்பாட்டை சுட்டிக்காட்டியவிதமும் கொட்டிக்காட்டிய விதமும் அருமை

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  25. அட... இதல்லவா..
    அதிசயமே அசந்து போகும் 'அதிசயம்

    ReplyDelete
  26. அருமை. அழகா சொல்லியிருக்கிறீங்க. தொடரட்டும்..

    ReplyDelete
  27. Madhavan Srinivasagopalan //

    அட... இதல்லவா..
    அதிசயமே அசந்து போகும் 'அதிசயம்


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  28. vanathy //

    அருமை. அழகா சொல்லியிருக்கிறீங்க
    . தொடரட்டும்./
    .
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  29. ஆதங்கத்தின் வெளிப்பாடு .
    ஒவ்வொரு வரியும் அதிசயமே .

    ReplyDelete
  30. சசிகலா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  31. இத்தனை அதிசயங்களை நம் வசம் வைத்திருக்கும் நாம் இதற்காகப் பெருமைப்பட முடியவில்லையே... இது என்ன அதிசயம்? தங்களின் ஆதங்கப் பதிவு நன்று ஐயா! (த.ம.7)

    ReplyDelete
  32. பெருமைப்படமுடியாத அதிசயங்கள்.... :(

    தங்களின் ஆதங்கம் புரிகிறது....

    ReplyDelete
  33. //வேறு தகுதிகள் இருப்பின்
    தலைவனாக்கி கொண்டாடுதல் என்பது
    நமக்கு அதிசயமேயில்லை//

    இந்த ஆதங்க அதிசயத்தில் பற்பல அர்த்தங்கள் .விளக்கங்கள் ......

    ஆதங்கத்தை அழகிய கவிதையாக்கிதந்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  34. கணேஷ் //

    இத்தனை அதிசயங்களை நம் வசம் வைத்திருக்கும் நாம் இதற்காகப் பெருமைப்பட முடியவில்லையே... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  35. வெங்கட் நாகராஜ் //

    பெருமைப்படமுடியாத அதிசயங்கள்.... :தங்களின் ஆதங்கம் புரிகிறது..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  36. angelin //

    இந்த ஆதங்க அதிசயத்தில் பற்பல அர்த்தங்கள் .விளக்கங்கள் ......
    ஆதங்கத்தை அழகிய கவிதையாக்கிதந்திருக்கிறீர்கள்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  37. அதிசயங்கள் எப்போதுமே
    புரியாத புதிர்தான் போல...

    ReplyDelete
  38. Ungal aathangame en aathangamu kooda. Arumaiyana kavithai Sir.

    ReplyDelete
  39. unmaiye ayyaa..

    super

    ReplyDelete
  40. இந்த கரண்ட் கட்னால நான் படுற துன்பம் இருக்குதே. அதுக்கு ஒரு 10 பதிவு போடலாம் போல இருக்குது. ஒரு மணி நேரத்துக்கு மேல கணினியில ஒர்க் பண்ண முடியல. காலையில 3 மணி நேரம். இரவு 3 மணி நேரம். இடையில 2 மணி நேரம். அப்புறம் 2 மணி நேரம்னு 10 மணி நேரம் மின்சாரம் சப்ளை இல்ல. எப்படி பதிவுகளைப் படிச்சு கமெண்ட் போடுறது? நீங்களே சொல்லுங்க. எரிச்சலா இருக்கு ரமணி சார். என்னதான் பண்றதுன்னே தெரியல.

    ReplyDelete
  41. அதியமானவைகளை அதிசயமில்லாதவைகள் போல பார்க்கிறதற்கு நாம் பழகிவிட்டோம். இந்த கண்மூடித்தனமான மாயைக்குள் வாழ பழகிவிட்டோம். நமக்கு இது பெரிதாகப் படவில்லை. உங்கள் ஆதங்கம் நியாயமானது. இவர்களின் அளவுகோலும் தவறானதுதான் சார். அருமையான மனம் கவர்ந்த பதிவு.

    ReplyDelete
  42. மனத்திலோடும் எண்ணங்களைத் தயக்கமோ, கலக்கமோ இன்றி கவிதையாக்கிய தங்கள் பாங்கு பெரும் வியப்பையும், தங்கள்பால் இன்னும் மதிப்பையும் கூட்டுகிறது. இருவேறு கலாச்சாரங்களில் உள்ள அதிசய, அதிசயமில்லாத முரண்களைப் பட்டியலிட்டு, இடைப்பட்ட அதிசயத்தை அழகாய் உணர்த்தியுள்ளீர்கள், பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  43. மகேந்திரன் //

    அதிசயங்கள் எப்போதுமே
    புரியாத புதிர்தான் போல.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  44. கலை //
    .
    unmaiye ayyaa..//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  45. துரைடேனியல் //

    கண்மூடித்தனமான மாயைக்குள் வாழ பழகிவிட்டோம். நமக்கு இது பெரிதாகப் படவில்லை. உங்கள் ஆதங்கம் நியாயமானது. இவர்களின் அளவுகோலும் தவறானதுதான் சார். அருமையான மனம் கவர்ந்த பதிவு //
    .
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்சிந்திக்கத் தூண்டும்பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. கீதமஞ்சரி //
    .
    மனத்திலோடும் எண்ணங்களைத் தயக்கமோ, கலக்கமோ இன்றி கவிதையாக்கிய தங்கள் பாங்கு பெரும் வியப்பையும், தங்கள்பால் இன்னும் மதிப்பையும் கூட்டுகிறது//

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. அதிசயங்கள் எல்லாமே அற்புதங்களாகி விடாது என்று புரிகிறது!

    ReplyDelete
  48. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  49. மிகப் பெரிய விஷயத்தை மிக சிறிய பதிவில் விளங்க வைக்கும் உங்கள் எழுத்தும் நீங்களும் தான் எனக்கு பேரதிசயம்

    ReplyDelete
  50. வணக்கம்! உங்கள் விமர்சனம் சரிதான். தலைகீழாகப் போய்க் கொண்டு இருக்கும் இன்றைய தமிழர் பண்பாட்டில், பண்பாட்டுடன் வாழ்பவன் அதிசயமே!

    ReplyDelete
  51. என்னுடையத் தாழ்மையான கருத்து ,
    இந்த அதிசய அளவுகோலை
    முற்றிலும் அகிலத்திலிருந்து
    அகற்றி விடுதல் நலம்.

    ReplyDelete
  52. துளசி கோபால் //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  53. Avargal Unmaigal //

    மிகப் பெரிய விஷயத்தை மிக சிறிய பதிவில் விளங்க வைக்கும் உங்கள் எழுத்தும் நீங்களும் தான் எனக்கு பேரதிசயம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. தி.தமிழ் இளங்கோ //

    தலைகீழாகப் போய்க் கொண்டு இருக்கும் இன்றைய தமிழர் பண்பாட்டில், பண்பாட்டுடன் வாழ்பவன் அதிசயமே!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. ஸ்ரவாணி //

    இந்த அதிசய அளவுகோலை
    முற்றிலும் அகிலத்திலிருந்து
    அகற்றி விடுதல் நலம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    சிந்திக்கத் தூண்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. உலகிற்கு
    இது ஒரு பேரதிசயமே..

    பண்பாடு பண்பாடு என்று அதிரப் பேசிக்கொண்டு அதிசயமாய் நிகழ்வதுதான் அச்சரியம்!

    ReplyDelete
  57. இராஜராஜேஸ்வரி //

    பண்பாடு பண்பாடு என்று அதிரப் பேசிக்கொண்டு அதிசயமாய் நிகழ்வதுதான் அச்சரியம்!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    சிந்திக்கத் தூண்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்

    ReplyDelete
  58. அதிசயங்களை அழகாய் கோர்த்த விதம் அருமை.

    ReplyDelete
  59. யதார்த்த அதிசயங்கள் பற்றிய சிறந்த கவிதை!

    ReplyDelete
  60. மனோ சாமிநாதன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. இரமணி இப்படி சிந்திப்பதும், செப்புவதும்
    சிலருக்கு அதிசயம்! எனக்கு அதிசயமில்லை!
    வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  63. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. அதிசயங்களைக் கவனித்தாலும் அப்படியே கொட்டி எழுதுகிறீர்கள்.அதுவும் அதிசயம் !

    ReplyDelete
  65. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. செம கவிதை.. நல்லாருக்கு.

    ReplyDelete
  67. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete