Sunday, February 26, 2012

காதல் கடலில் படகே ஊடல்


ஆண்
 :
அகில உலகும் சுத்திப் பாத்தேன்
அகிலா போல பொண்ணே இல்லை
உலகம் முழுசும் தேடியும் பாத்தேன்
ஷகிலா போல ஃபிகரே இல்லை
சல்லடை போட்டு அலசியும் பாத்தேன்
ஷண்முகி போல சிக்கவே இல்லை-அட
என்னவோ சொல்லுநீ பொண்ணை விட்டா
பூமிக்கு அழகு இல்லவே இல்லை

வீதி வீதியா சுத்தியும் பாத்தேன்
விமலா போல பொண்ணே இல்லை
மாடி வீடா போயும் பாத்தேன்
மாலா போல  அமையவே இல்லை
கோவில் குளங்கள் சுத்தியும் பார்த்தேன்
கமலா போல கிடைக்கவே இல்ல-நீ
ஆயிரம் சொல்லு பொண்ணு போல
அழகு உலகில் எதுவுமே இல்லை

பீச்சு பூங்கா அலசியும் பாத்தேன்
பாமா போல பார்க்கவே இல்லை
பீட்சா கார்னர் போயும் பார்த்தேன்
பமீலா போல யாருமே இல்லை
நாத்து நடுகிற வயலும் போனேன்
நமீதா போல எவளுமே இல்லை-யாரும்
மாத்திப் பேச வழியே இல்லை
பொண்ணை விட்டா உலகே இல்லை


பெண்
 ;
செக்ஸ் கதைகள் நாலு ஐஞ்சு
எனக்கும் கூட தெரியும் மச்சான்
சிக்ஸ் பேக் உடம்புக் காரன்
மூனு பேரைத் தெரியும் மச்சான்
அத்தை ம்கனே அர்ச்சுனன கூட
என்னைக் கேட்டு தவமாய் கிடக்கான்
மொத்த பொண்ணையும் கனவிலே பாரு-நான்
ஊரு போரேன் உருப்படா மச்சான்

செக்கு மாடு போல என்னை
தினமும் சுத்தி வார மச்சான்
கிக்கு கொஞ்சம் ஏறிப் போனா
திமிரும் கொஞ்சம்  ஏறுமோ மச்சான்
மத்த பொண்ணை நினைச்சு நாயாய்
நாடு பூரம் சுத்தும் மச்சான்-உன்
ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்-உன்னை
விட்டுப் போறேன் விளங்கா மச்சான்

ஆண்
 :
மேலே சொன்னது எல்லாம் டூப்பு
போதை செஞ்ச எடக்கு மடக்கு
நீயே எனக்கு என்றும் டாப்பு
வைச்சுப் புடாதே எனக்கு ஆப்பு
கையைக் காலாய் நெனைச்சுப் புட்டேன்
கண்ணில் நானும் ஒத்திக் கிட்டேன்
போதைச் சனியனை விட்டும் புட்டேன்-என்னை
விட்டுப் புடாதே அழிஞ்சித் தொலைப்பேன்

இருவரும்

குஞ்சு உடம்பில் கோழி மிதித்து
காயம் இதுவரை வந்ததே இல்லை
அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை:
வாழ்வில் காதல் கடலைப் போல
அதிலே ஊடல் படகைப் போல
தாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்
வாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்

 (ஒரு பபூன் வேஷம் கட்டும் நண்பருக்காக
மேடையில் பாடி ஆடி நடிக்க வென எழுதிக் கொடுத்தது
ஆணை சு.பானா கெட்டப்பிலும் பெண்ணை
கோவை சரளா கெட்டப்பிலும் கற்பனை செய்து
எழுதியது )


65 comments:

  1. செம கலக்கலான எடக்கு மடக்கு பாடல். கருத்து ஒத்துப்போனா துன்பமே இல்லை.

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது நண்பரே.
    ஹாஸ்யமாக இருந்தாலும்..
    விஷயம் இருக்கிறது கருவில்..

    " ஒத்த நெல்லை வைச்சுகிட்டு
    ஊரு பூராம் விதைக்காதய்யா
    விதைநெல்லு வீணாப்போகும்
    தகுந்த நிலத்தில் விதைச்சுடய்யா..."

    ஒருவனுக்கு ஒருத்தி...
    குடி குடியைக் கெடுக்கும்...
    பகலெல்லாம் அடிபிடின்னாலும் இரவு வந்த மடி சேர்ந்திடு..

    அப்படின்னு ஏகப்பட்ட விஷயங்கள்...

    அழகாக இருக்கிறது..

    ReplyDelete
  3. அட, ரமணி சாரிடமிருந்து இப்படி ஒரு பாடலா என்று வியப்புடன் விரிந்தன புருவங்கள். வழக்கம்போல் நல்லதொரு கருத்துடன் முத்தாய்ப்பாய் முடித்தவிதம் கண்டு முறுவலில் விரிந்தது இதழ்.

    உண்மைக்காதல் உடல் பார்க்காது, உள்ளம்தானே நோக்கும். நல்லக் கருத்துடன் நவீனக் கலைவாணர் பாணியில் நகைச்சுவையாகவும் எழுதிய விதம் வெகுநன்று. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  4. தெம்மாங்கு பாடல்தான் நம் அண்மையில் உள்ளது:மரபுக் கவிதையை விட! ஸ்டீரியோத்தனமாக எப்போதும் ஒரு கவி எழுதவேன்டும் என்பதல்ல! வழக்குமொழியில் எழுதுவது பிழையல்ல!

    சமுதாயத்தின் ஒவ்வொரு சாராருக்கும் ஊடலுக்கும்,கூடலுக்கும் உரிமை உண்டு!அவர்களின் மனநிலையோடு எழுதிய கவியின் வரிகளில் உவகையுண்டு!

    பாடல் மிகநன்று!

    ReplyDelete
  5. Wow superb 5 tharam paddu paduvathu pola vasochan

    ReplyDelete
  6. படிக்க ஆரம்பித்தவுடன் மனதில் ஓடிய கேள்விக்கு பதில் கிடைத்தது பதிவின் முடிவில்....

    நல்ல கருத்துடன் இருக்கும் பாடல்....

    நல்லதோர் பகிர்வு...

    ReplyDelete
  7. ரசித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. செமையான குத்து நாட்டுபுற பாடல்..... உங்ககிட்ட இருந்து அருமை.


    //அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
    வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை//

    உண்மை நேசம் எப்பவும் வெல்லும்

    ReplyDelete
  9. மிகவும் அருமையான பாடல்.

    //வாழ்வில் காதல் கடலைப் போல
    அதிலே ஊடல் படகைப் போல
    தாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்
    வாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்//

    மிக அருமையான வரிகள்.

    ஒவ்வொருபதிவும் மிகவும் மாறுபட்ட கருத்தை கொண்டு வருகிறது...வாழ்த்துக்கள் ரமணிசார்

    ReplyDelete
  10. நீங்கள் நம்ம ஊர் மட்டும் அன்றி அயல்தேசப் பெண்ணையும்
    சேர்த்துப் பாடி இருப்பது நாயகியைப் பெரிதாக
    ஊடல் கொள்ளச் செய்து விட்டது போலும் .
    அப்போதே பிசாவும் பமீலாவும் எப்படி வந்தனர் ?
    [ மகி அண்ணா உங்கள் கருத்துக் கவியிலும்
    ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன...]

    ReplyDelete
  11. //அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
    வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை://
    ரசித்த வரிகள் !

    ReplyDelete
  12. இது கூட நல்லாதான் இருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. உங்களிடம் இருந்து மாறுப்பட்ட பாடல். ரசித்தேன்.

    ReplyDelete
  14. ayyaaaa kalakuringaaaaaaaaaaaaaalllllllll ponga....

    ethirpparkkave illai ippudi oru sema paattu ungalidam irunthu...chance illai....


    sema superaa irukku

    ReplyDelete
  15. வாழ்வில் காதல் கடலைப் போல
    அதிலே ஊடல் படகைப் போல
    தாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்
    வாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்
    அருமையான வரிகள் ஐயா.

    ReplyDelete
  16. விச்சு //
    செம கலக்கலான எடக்கு மடக்கு பாடல்.//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. மகேந்திரன் //

    அருமையாக இருக்கிறது நண்பரே.
    ஹாஸ்யமாக இருந்தாலும்..
    விஷயம் இருக்கிறது கருவில்..//

    உங்கள் பாணியில் ஒருசிறு முயற்சி
    தங்களால் பாராட்டப் பட்டது
    மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது

    ReplyDelete
  18. கீதமஞ்சரி //

    உண்மைக்காதல் உடல் பார்க்காது, உள்ளம்தானே நோக்கும். நல்லக் கருத்துடன் நவீனக் கலைவாணர் பாணியில் நகைச்சுவையாகவும் எழுதிய விதம் வெகுநன்று. பாராட்டுகள் ரமணி சார்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. ரமேஷ் வெங்கடபதி //

    சமுதாயத்தின் ஒவ்வொரு சாராருக்கும் ஊடலுக்கும்,கூடலுக்கும் உரிமை உண்டு!அவர்களின் மனநிலையோடு எழுதிய கவியின் வரிகளில் உவகையுண்டு!
    பாடல் மிகநன்று!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. வெங்கட் நாகராஜ்

    நல்ல கருத்துடன் இருக்கும் பாடல்....
    நல்லதோர் பகிர்வு...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கவி அழகன் //

    Wow superb 5 tharam paddu paduvathu pola vasochan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. G.M Balasubramaniam //

    ரசித்தேன். பாராட்டுக்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. மனசாட்சி //

    செமையான குத்து நாட்டுபுற பாடல்..... உங்ககிட்ட இருந்து அருமை. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. ஸ்ரவாணி //

    நீங்கள் நம்ம ஊர் மட்டும் அன்றி அயல்தேசப் பெண்ணையும்
    சேர்த்துப் பாடி இருப்பது நாயகியைப் பெரிதாக
    ஊடல் கொள்ளச் செய்து விட்டது போலும் .
    அப்போதே பிசாவும் பமீலாவும் எப்படி வந்தனர் /

    இன்றைய நிலையில் பழக்கத்தில் உள்ள
    பெயருக்கு ஏற்றார்போல
    கடைசி பத்தியை மாற்றி உள்ளேன்.அவ்வளவே
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. Avargal Unmaigal //

    மிக அருமையான வரிகள்.
    ஒவ்வொருபதிவும் மிகவும் மாறுபட்ட கருத்தை கொண்டு வருகிறது...வாழ்த்துக்கள் ரமணிசார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. ஆரம்பத்தில் பாடல் படிக்கும்போதே சிரிப்பை தந்தது. இறுதியில் நல்ல கருத்தைத்தருகிறது.

    மேடையில் பாடி ஆட அருமையான பாடல்.

    ReplyDelete
  27. ஸாதிகா

    கலக்கல் கவிதை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. கே. பி. ஜனா... //

    //அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
    வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை://
    ரசித்த வரிகள் !//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. Lakshmi //

    இது கூட நல்லாதான் இருக்கு வாழ்த்துகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. தமிழ் உதயம் //

    உங்களிடம் இருந்து மாறுப்பட்ட பாடல். ரசித்தேன்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. கலை //

    ethirpparkkave illai ippudi oru sema paattu ungalidam irunthu...chance illai..../


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. சசிகலா //

    அருமையான வரிகள் ஐயா. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. மாதேவி //

    ஆரம்பத்தில் பாடல் படிக்கும்போதே சிரிப்பை தந்தது. இறுதியில் நல்ல கருத்தைத்தருகிறது.

    மேடையில் பாடி ஆட அருமையான பாடல். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. சிறப்பான நாட்டுப்புற பாடல்.கோவை சரளாதான் சரியானவர் இதை பாடி நடிக்க..

    ReplyDelete
  35. எளிமையான நாட்டுப்புறப் பாடல் போல இருக்கிறது..

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  36. அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
    வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை:
    வாழ்வில் காதல் கடலைப் போல
    அதிலே ஊடல் படகைப் போல
    தாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்
    வாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்

    ரசிக்கவைத்த அருமையான வரிகள்..

    ReplyDelete
  37. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. இராஜராஜேஸ்வரி //

    ரசிக்கவைத்த அருமையான வரிகள்.. //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. Sankar Gurusamy //

    எளிமையான நாட்டுப்புறப் பாடல் போல இருக்கிறது..பகிர்வுக்கு மிக்க நன்றி...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. எல்லாரும் உள்ள வந்துட்டாங்க.தெருவோர பாடல் அருமை.

    ReplyDelete
  41. RAMVI //

    சிறப்பான நாட்டுப்புற பாடல்.கோவை சரளாதான் சரியானவர் இதை பாடி நடிக்க..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. DhanaSekaran .S //

    எல்லாரும் உள்ள வந்துட்டாங்க.தெருவோர பாடல் அருமை.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. அய்யா !அருமை!!!!

    ReplyDelete
  44. Seeni //
    அய்யா !அருமை!!!!//



    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. //வாழ்வில் காதல் கடலைப் போல
    அதிலே ஊடல் படகைப் போல
    தாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்
    வாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்//

    இன்றைய வாழ்க்கைக்கு தேவையான வரிகள்.

    ReplyDelete
  46. கோவை2தில்லி //

    இன்றைய வாழ்க்கைக்கு தேவையான வரிகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. பாத்திரங்களை அதன் அளவுக்கேற்ப நிரப்ப முடிகிறது உங்களால். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  48. சுந்தர்ஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. இதுவரை நீங்க எழுதிய கவிதைகளிலிருந்து வித்யாசமாக இருக்கிறது. ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  50. ஆணை சு.பானா கெட்டப்பிலும் பெண்ணை
    கோவை சரளா கெட்டப்பிலும் கற்பனை செய்து
    எழுதியது..

    -:)

    நல்லாயிருந்தது ரமணி சார்...

    ReplyDelete
  51. vanathy //

    இதுவரை நீங்க எழுதிய கவிதைகளிலிருந்து வித்யாசமாக இருக்கிறது. ரசித்தேன். அருமை.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. ரெவெரி //

    நல்லாயிருந்தது ரமணி சார்...


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. மிகமிக எளிமையான வரிகள்! ஆனால் ஆழமான கருத்து! அருமை ஸார்! (த.ம.9)

    ReplyDelete
  54. மிகவும் ரசித்தேன் ரமணி. அபாரம். எளிமையான யதார்த்தம்.

    ReplyDelete
  55. கணேஷ் //


    மிகமிக எளிமையான வரிகள்! ஆனால் ஆழமான கருத்து! அருமை ஸார்! (த.ம.9)

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. அப்பாதுரை //

    மிகவும் ரசித்தேன் ரமணி. அபாரம். எளிமையான யதார்த்தம்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. பிரமாதம் .ரசித்தேன்.நன்றி.

    ReplyDelete
  58. சென்னை பித்தன்

    பிரமாதம் .ரசித்தேன்.நன்றி.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
    வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை//

    ந‌ல்ல‌ ச‌ர‌க்கு!

    ReplyDelete
  60. நிலாமகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. படிக்க ரசனையாய் இருந்தது. அபாரம்.

    ReplyDelete
  62. ஸ்ரீராம்...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete