Friday, March 2, 2012

பரஸ்பரம்

நேற்று இதே பரபரப்பான காலை நேரம்
இதே சூழல்
பஸ் கூட இதே
"பெண்களுக்கு என்ன அவசரம்
அரை மணி நேரம் கழித்து
கிளம்பித் தொலைத்தால் என்ன் ?" என்றவன்

 இன்று
"பெண்களுக்கு வழிவிட்டுத் தொலைங்கப்பா "
என மாறிக் கத்தினான்
காரணம் புரியாது திகைத்தபோது
நண்பன் சொன்னான்
"அதோ கூட்டத்தில்
பஸ் ஏறத் திணரும் அந்தப் பச்சை சேலை
அவன் பொஞ்சாதி " என்றான்

எதற்கெடுத்தாலும் சீறி விழும்
மேனேஜர் இரண்டு நாளாய்
சிரித்தபடி பேசுகிறார்
காரணம் அறியாது திகைத்தபோது
ஆபீஸ் பியூன் காதைக் கடித்தான்
"அடுத்த மாதம் அவர் பெண்ணுக்கு கல்யாணம்
ஆபீஸிலிருந்து ஐந்து பேர் கூட போகாட்டி
அசிங்கமில்லையா " என்றான்

எப்போதும் ஆளுங் கட்சியை
தரக் குறைவாகப் பேசித் தாக்கும்
அந்த தலைமை நிலையப் பேச்சாளர்
கொஞ்சம் நாகரீகமாகவே பேச
பலர் குழம்பிப் போனார்கள்
காரணம் விசாரித்தபோது
"தலைமைக்கும் அவருக்கும்
கொஞ்சம் டெர்ம்ஸ் சரியில்லை
கட்சி மாறினாலும் மாறலாம் "
எனச்சொன்னார்கள்

" எங்களுக்கு பதவி துண்டு
மாநிலத்தின் தன்மானம்தான் வேட்டி " என
பொரிந்து தள்ளினார் தலைவர்
நிருபர்கள் கூட்டம் குறைந்தபின்
தலைவர் தனித்திருந்தபோது சொன்னார்
"மந்திரிகளின் எண்ணிக்கையைத் தருகிறவர்கள்
வாய்ப்புள்ள துறையை தர மறுக்கிறார்கள் "என்றார்

வீதி முதல் கோட்டைவரை
மிகச் சரியாக எல்லோரையும்
ஏமாற்றிக் கொண்டிருக்கிற
 திருப்தியில் இவர்களும்

சமயம் வருகையில்பார்த்துக் கொள்வோம்
அதுவரையில் நம்புவது போலவே
நடித்துக் கொண்டிருப்போம் என்கிற
முட்டாள் மனோபாவத்தில் இவர்களும்

பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
வெகு காலமாக இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களை அவர்களே
ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்..


67 comments:

  1. யாரும் யாரிடமும் ஏமாறலாம் தற்காலிகமாக ஆனால் யாரும் தமிழரைத்தவிர வேறு யாரையும் ஏமாற்ற முடியாது நிரந்தரமாக...

    ReplyDelete
  2. லாபமென்னவோ ஏமாற்றுபவருக்குத்தான்! ஆனால், தற்போது ஏமாளியும் கொள்ளையில் பங்கு வாங்கிவிடுகிறான்!

    ReplyDelete
  3. அவர்களை அவர்களே
    ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்..


    அழகாகச் சொன்னீர்கள் அன்பரே

    ReplyDelete
  4. அவர்களை அவர்களே
    ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்..//சரியாக சொன்னீர்கள் இனிய உதாரண வரிகளுடன்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. மிக அழகான கவனிப்பும், அதற்கேற்ற வர்ணனைகளும். அரசியலில் மட்டுமல்ல, வாழ்வியலிலும் அதுபோல் பல நாடகங்கள் அன்றாடம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன என்னும் செய்தியை அரங்கம் கொண்டுவந்து, அதனூடே மறைந்திருக்கும் பரஸ்பர ஏமாற்றுதல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியவிதம் அற்புதம். ஏமாற்றுவதை அறிந்து தானும் ஏமாறுவதுபோல் நடிப்பது, ஏமாற்றுதலை விடவும் கேவலம் அல்லவா? ஆயினும் தொடர்ந்து நாமும் அதையே செய்துகொண்டிருக்கிறோம், வேறு வழியற்று.

    மனம் தொட்டப் பதிவு ரமணி சார். பாராட்டுகள்.

    ReplyDelete
  6. //"தலைமைக்கும் அவருக்கும்
    கொஞ்சம் டெர்ம்ஸ் சரியில்லை
    கட்சி மாறினாலும் மாறலாம் "
    எனச்சொன்னார்கள்///

    //" எங்களுக்கு பதவி துண்டு
    மாநிலத்தின் தன்மானம்தான் வேட்டி " என
    பொரிந்து தள்ளினார் தலைவர்//

    பரஸ்பரம் விஷயங்கள் யாவும் வெகு அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பரஸ்பரம் ஏமாற்றிக்கொள்கிறோம்.... எத்தனை ஒரு கூர்ந்த கவனிப்பு....

    பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அழகிய கவிதையாகத் தர உங்களால் முடிகிறது....

    பாராட்டுகள்....

    ReplyDelete
  8. நல்லாவே சொன்னிர்கள் பரஸ்பரம்

    ReplyDelete
  9. பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
    வெகு காலமாக இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

    அவர்களை அவர்களே
    ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்..

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் ..

    எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டே!!

    ReplyDelete
  10. யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. நம்மை நாம் ஏமாற்றி கொள்கிறோம். இதை புரிய வைக்கிறது கவிதை. அருமை.

    ReplyDelete
  11. மேலாண்மை வகுப்பில் பர்சனாலிட்டி பற்றி ஒரு உதாரணம் சொல்வோம், ஒரு கோட் ஸ்டாண்டில் தொங்கவிடப்பட்டிருக்கும் கோட்டுகள்தான் மனிதனின் நடவடிக்கைகள். சூழ்நிலைக்கு ஏற்ப உடையை தேர்ந்தெடுப்பதும் அதற்கேற்ற உடல் அமைப்பை கொண்டிருப்பதும்தான் பர்சனாலிட்டி என்பது.

    தங்களது பகிர்வும் இதையேதான் சொல்கிறது. Survival of fitness. நம்மை போன்றவர்களுக்கு நெருடினாலும் இதுதான் பிழைத்திருக்கும் வழி.(....?)

    ஆற்றக்குள் பாறையில் அமர்ந்து காலை வருடிச் செல்லும் நதி நீரில் இது போன்ற முடிவறியாத சிந்தனைகள் எழுவது உண்டு. இப்போது அப்படித்தான் தோன்றுகிறது. பகிர்விற்கு நன்றி சார்.

    ReplyDelete
  12. உண்மையில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு தானிருக்கிறோம் - சில விஷயங்களில் தெரியாமலும், சில விஷயங்களில் தெரிந்தும். உன்னிப்பான கவனிப்புடன் கூடிய உங்களின் சமுதாயப் பார்வை வியக்க வைக்கிறது எப்போதும். அருமையான பகிர்விற்கு நன்றி ஸார். (த.ம.8)

    ReplyDelete
  13. பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
    வெகு காலமாக இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

    அவர்களை அவர்களே
    ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்..

    ஆமா ரொம்ப சரியா சொன்னிங்க.

    ReplyDelete
  14. பரஸ்பரம் நல்ல கவிதை.உண்மை நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  15. யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது.கண்டு பிடித்து பதிவிட ரமணி சார் மாதிரி தயாராய் இருக்கும்வரை.

    //அவர்களை அவர்களே
    ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்.//சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  16. அன்றாடம் சந்திக்கும், சுயநலத்திற்காக மாறும் பச்சோந்தி குணங்கள் கவிதைகளாய்! நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  17. Avargal Unmaigal //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. guna thamizh //

    அழகாகச் சொன்னீர்கள் அன்பரே

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. ஸாதிகா //

    ..//சரியாக சொன்னீர்கள் இனிய உதாரண வரிகளுடன்.வாழ்த்துக்கள்!//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கீதமஞ்சரி //

    மனம் தொட்டப் பதிவு ரமணி சார். பாராட்டுகள்.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    விரிவானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் //

    பரஸ்பரம் விஷயங்கள் யாவும் வெகு அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. வெங்கட் நாகராஜ் //

    பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அழகிய கவிதையாகத் தர உங்களால் முடிகிறது....
    பாராட்டுகள்....//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. மனசாட்சி //

    நல்லாவே சொன்னிர்கள் பரஸ்பரம் //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. தமிழ் உதயம் //

    யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. நம்மை நாம் ஏமாற்றி கொள்கிறோம். இதை புரிய வைக்கிறது கவிதை. அருமை.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. கவி அழகன் //

    Unmaiya soninka valthukal//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. கணேஷ் //

    உன்னிப்பான கவனிப்புடன் கூடிய உங்களின் சமுதாயப் பார்வை வியக்க வைக்கிறது எப்போதும். அருமையான பகிர்விற்கு நன்றி //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. Lakshmi //

    ஆமா ரொம்ப சரியா சொன்னிங்க.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. Murugeswari Rajavel //

    பரஸ்பரம் நல்ல கவிதை.உண்மை நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. G.M Balasubramaniam //

    யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது.கண்டு பிடித்து பதிவிட ரமணி சார் மாதிரி தயாராய் இருக்கும்வரை //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. நம்பிக்கைபாண்டியன் //
    .
    அன்றாடம் சந்திக்கும், சுயநலத்திற்காக மாறும் பச்சோந்தி குணங்கள் கவிதைகளாய்! நன்றாக இருக்கிறது!//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. சாகம்பரி //

    ஆற்றக்குள் பாறையில் அமர்ந்து காலை வருடிச் செல்லும் நதி நீரில் இது போன்ற முடிவறியாத சிந்தனைகள் எழுவது உண்டு. இப்போது அப்படித்தான் தோன்றுகிறது. பகிர்விற்கு நன்றி சார்.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. avarkale-
    avakalai emaatri kolvathu theriyaamal!

    sariyaa sonneenga!

    ReplyDelete
  35. Seeni //

    sariyaa sonneenga!//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. சந்தர்ப்பத்திற்கு ஏற்று நடிக்கும் மனிதனைக் கூறுகிறீர்கள் அருமை. பாராட்டடுள் பணி தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  37. அருமையான வரிகள்.

    ReplyDelete
  38. அவர்களை அவர்களே
    ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்..
    >>>
    மிகச்சரிதான் ஐயா, மற்றாவர்களை ஏமாத்டுறோம்ன்னு நினைச்சு இவங்க தன்னைதானே ஏமாத்திக்குறாங்க. அப்படி தான் ஏமாந்தது தெரிய வரும்போது யாரும் உடன் இல்லாம போவதுதான் வேதனை

    ReplyDelete
  39. வணக்கம்! பரஸ்பரம் ( MUTUAL ) என்பது ஒரு எல்லை வரைதான் என்பதை புரியும்படி சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  40. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. கோவை2தில்லி //

    அருமையான வரிகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. ராஜி //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. தி.தமிழ் இளங்கோ //

    வணக்கம்! பரஸ்பரம் ( MUTUAL ) என்பது ஒரு எல்லை வரைதான் என்பதை புரியும்படி சொல்லி விட்டீர்கள்.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. உண்மைதான் ரமணி சார்! யாரிடம் பழகினாலும் ஏதோ ஒரு இலாப நோக்கோடுதான் இந்த உலகம் பழகுகிறது. நெத்தியடியாய்ச் சொன்னீர்கள் போங்கள்! அருமையான பதிவு! நிதர்சனம் நெஞ்சைச் சுடுகிறது !

    ReplyDelete
  45. நடைமுறையை பிரதிபலிக்கும் கவிதை,நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்,பஸ் நிறுத்ததில் நிற்கிற வனின் மனது திரும்பத்திரும்ப இழுபடவும்,நினைத்து ப்பார்க்கப்படவுமாய் இங்கு,தான் பஸ்ஸிற்காக நிற்கை யில் தாமதமாக வருவது மாதிரியும்,பஸ்ஸிற்குள் நிற்கையில் அதே பஸ் வேகமாக செல்லவில்லையே என்கிற மனோநிலையும்தான் இன்றும் எல்லா இடங்களிலுமாய்,அதை கவிதை சொல்லிச்செல்கிறது,நன்றி, வணக்கம்.

    ReplyDelete
  46. //அவர்களை அவர்களே
    ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்..//
    இந்நாளில் நடப்பதை அழகாக கவிதையாக கொடுத்திருக்கீங்க.

    அருமையாக இருக்கு சார்.

    ReplyDelete
  47. அத்துமீறலைத் தணிக்கும் இயற்கை நெறி.

    ReplyDelete
  48. துரைடேனியல் //

    அருமையான பதிவு! நிதர்சனம் நெஞ்சைச் சுடுகிறது

    !தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. விமலன் //

    நடைமுறையை பிரதிபலிக்கும் கவிதை,நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்


    !தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. RAMVI //

    இந்நாளில் நடப்பதை அழகாக கவிதையாக கொடுத்திருக்கீங்க.
    அருமையாக இருக்கு சார்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. அப்பாதுரை //

    அத்துமீறலைத் தணிக்கும் இயற்கை நெறி //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. நிகழ்கால உண்மைகளை அழகிய கவிதையாக வெளிச்சம் போட்டுக் காட்டிடிருக்கிறீர்கள்!!‌

    ReplyDelete
  53. அட, இதுதான் உலகம் என்ற உணர்வு ஏற்பட்டது உங்கள் அழகிய கவிதையினைப் படித்து முடித்தபின்னர்! மிகவும் யதார்த்தமாகவும், நெற்றியடியாகவும் சொல்லியிருக்கீங்க! அழகிய கவிதை! வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
  54. சுற்றிலும் உள்ளவர்களை நன்றாகத்தான் கவனித்திருக்கிறியள்.

    ReplyDelete
  55. மனோ சாமிநாதன் /
    /
    நிகழ்கால உண்மைகளை அழகிய கவிதையாக வெளிச்சம் போட்டுக் காட்டிடிருக்கிறீர்கள்!!‌//

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW//

    ! மிகவும் யதார்த்தமாகவும், நெற்றியடியாகவும் சொல்லியிருக்கீங்க! அழகிய கவிதை! வாழ்த்துக்கள் அண்ணா //

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. அம்பலத்தார் //

    சுற்றிலும் உள்ளவர்களை நன்றாகத்தான் கவனித்திருக்கிறியள்.//

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. பெண்கள் நாளில் ஒரு சிறந்த ஆக்கம் பாராட்டுகள் உண்மையில் இந்த ஆக்கங்களை எல்லாம் சம்மந்தப் பட்டவர்களின் கண்களை போய் சேரவேண்டுமே ...

    ReplyDelete
  59. நாம ரொம்ப சுதாரிப்பா இருக்கிறோம்
    என்று நம்மை நாமே சில சந்தர்ப்பங்களில்
    ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று
    அழகாக ஒரு கவிதையில்
    அருமையா சொல்லிடீங்க நண்பரே...

    ReplyDelete
  60. மாலதி //..

    உண்மையில் இந்த ஆக்கங்களை எல்லாம் சம்மந்தப் பட்டவர்களின் கண்களை போய் சேரவேண்டுமே ../

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. மகேந்திரன் //

    நாம ரொம்ப சுதாரிப்பா இருக்கிறோம்
    என்று நம்மை நாமே சில சந்தர்ப்பங்களில்
    ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று
    அழகாக ஒரு கவிதையில்
    அருமையா சொல்லிடீங்கநண்பரே... //

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. நாட்டு நடப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது தங்கள் கவிதை.. ஏமாளி எப்போதுமே பொதுமக்கள்தான்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  63. சமயம் வருகையில்பார்த்துக் கொள்வோம்
    அதுவரையில் நம்புவது போலவே
    நடித்துக் கொண்டிருப்போம் என்கிற
    முட்டாள் மனோபாவத்தில் இவர்களும்

    பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
    வெகு காலமாக இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

    சீக்கிரம் விழிக்கும் காலம் வரட்டும்...

    ReplyDelete
  64. Sankar Gurusamy

    ..நாட்டு நடப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது தங்கள் கவிதை./

    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. seenivasan ramakrishnan //

    சமயம் வருகையில்பார்த்துக் கொள்வோம்
    அதுவரையில் நம்புவது போலவே
    நடித்துக் கொண்டிருப்போம் என்கிற
    முட்டாள் மனோபாவத்தில் இவர்களும்

    பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
    வெகு காலமாக இப்படி ஏமாற்றி //

    !தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    விரிவானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete