Tuesday, March 6, 2012

ஒரு சிறு யோசனை

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

புராண காலங்களில்
மன்னர் பரம்பரைகளில்
வ்ம்சமற்றுப் போகையில்
மன்னர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு
பட்டத்து யானைகள்
ஒரு வரப் பிரசாதமாகவே
இருந்திருக்கின்றன

எனவே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

யானைகளில் ஜாதி உண்டுதான்
ஆயினும் அவைகளுக்கு
ஜாதி பார்க்கத் தெரியாது
யானைகளுக்கும் மதம் பிடிக்கும்தான்
ஆனால நம் மதம் பற்றித் தெரியாது
தனியாக அதனிடம்மாட்டினால்
மாட்டியவர்கள் பிரியாணிதான்
ஆனால் அது சைவம்தான்

ஆகையால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

அதனைப் பராமரிக்க
அதிகம் செலவில்லை
தேர்தல் காலங்களில் ஒரு நாளின் செலவு
அதற்கு ஓராண்டுக்குப் போதும்
தேர்தல் பணியாளர்கள் பாதுகாப்புப் பணி
எல்லாவற்றையும் கூட்டிப் பார்க்க
செலவே இல்லாதது போலத்தான்

அதனால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

அதனிடம் உள்ள பெரும் நிறை
எடை மட்டுமல்ல
நம்மைப் போல தலைவர்களைத் தேடி
அந்தப் புறங்களிலும்
தர்பார் மண்டபங்களிலும்
தலைவர்களின் ரகசிய வீடுகளிலும் அலையாது
மாட வீதிகளிலும்
மக்கள் கூடும் இடங்களிலேயேதான்
மாலையோடு தேடித் திரியும்

அதற்காகவாவது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

ஒரே ஒரு குறை
அதற்கு ஐந்தறிவு
நமக்கு ஆறு
அறிவு இருந்து பயன்படுத்தாதற்கும்
அது இல்லாமல் இருப்பதற்கும் கூட
அதிக வித்தியாசமில்லை
என்வே அது கூடஒரு குறையில்லை

இதை உணர்ந்தாவது
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்

ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

இலவச பிச்சை
மாறி மாறிக் கூட்டணி
ஜாதி வெறித் தூண்டல்
பரஸ்பர சாக்கடைச் சேறு வீச்சு
சவால் சவுடால் பேச்சு
இத்தனை சனியங்களையும்
ஒட்டுமொத்தமாய் ஒழித்துத் தொலைக்கவாவது
நாம் நிம்மதியாய் இருந்து தொலைக்கவாவது

இனி வரும் காலங்களிலேனும்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை 
வளர்க்கத் துவங்குவோமா ?



53 comments:

  1. இன்னொன்றை விட்டுட்டி்ங்களே... யானை லஞ்சம் வாங்காது, பாரபட்சம் பாக்காது. அதற்காகவேனும் அவசியம் யானை வளர்க்கலாம்தான்! (த.ம.2)

    ReplyDelete
  2. இனி வரும் காலங்களிலேனும்
    ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
    ஒவ்வொரு பட்டத்து யானையை
    வளர்க்கத் துவங்குவோமா ?//
    அருமையான வரிகளில் கோர்க்கப்பட்ட கவிதை.

    ReplyDelete
  3. ///ஒரே ஒரு குறை
    அதற்கு ஐந்தறிவு
    நமக்கு ஆறு
    அறிவு இருந்து பயன்படுத்தாதற்கும்
    அது இல்லாமல் இருப்பதற்கும் கூட
    அதிக வித்தியாசமில்லை///

    மிகச்சரியாக சொன்னிர்கள்

    ReplyDelete
  4. சரியாக சொன்னிர்கள்..

    ReplyDelete
  5. எந்த அளவுக்கு மனம் வெறுத்திருந்தால் ஆறறிவு மக்களால் உருவான சனநாயகம் ஒதுக்கி, ஐந்தறிவு யானைக்கு அறிவு இடம் கொடுத்திருக்கும் என்று புரிகிறது. மின்சாரமில்லாது மக்கள் புழங்குவதற்கு பழம்பொருட்களை மீண்டும் நாடும் நிலை போல் இப்படியும் ஓர் நிலை ஒரு நாளில் உருவாகலாம். இல்லையென்று உறுதியாய் மறுப்பதற்கில்லை.

    வேடிக்கையானாலும் அர்த்தமுள்ள சிந்தனை. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  6. நாட்டின் நிதர்சனங்களை புட்டு புட்டு வைக்கும் கவிதை. உண்மையில் ஒவ்வொரு தொகுதிக்கும் யானை வளர்க்கலாம்தான்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  7. ரொம்ப சரியா சொன்னீங்க.

    ReplyDelete
  8. ரொம்ப சந்தோசஷம்.பெரிய தொல்லை போயிடும்.
    நாமளும் எது நாளும் யானையை குறை சொல்லி விடலாம்.


    அருமை நகைச்சுவை கலந்த கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இருக்கும் நிலை கண்ட ஏமாற்றத்தின் எதிரொலியே இந்தப் பதிவு.மக்கள் தேர்ந்தெடுப்போரைவிட யானையால் வரிக்கப் படுபவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை.?

    ReplyDelete
  10. தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. கவி அழகன்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  12. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  13. Avargal Unmaigal //


    மிகச்சரியாக சொன்னிர்கள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  14. மனசாட்சி //

    சரியாக சொன்னிர்கள்..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  15. கீதமஞ்சரி //

    வேடிக்கையானாலும் அர்த்தமுள்ள சிந்தனை. பாராட்டுகள் ரமணி சார்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  16. Sankar Gurusamy //

    நாட்டின் நிதர்சனங்களை புட்டு புட்டு வைக்கும் கவிதை. உண்மையில் ஒவ்வொரு தொகுதிக்கும் யானை வளர்க்கலாம்தான்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  17. அரசியலுக்கு வந்தால் யானைக்கும் மதம் பிடிக்குமோ ..?
    அருமையான பதிவு ஐயா.

    ReplyDelete
  18. கிண்டலாக இருந்தாலும் உண்மையான ஆதங்கம் !

    ReplyDelete
  19. Lakshmi //

    ரொம்ப சரியா சொன்னீங்க.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  20. //ஒரே ஒரு குறை
    அதற்கு ஐந்தறிவு
    நமக்கு ஆறு
    அறிவு இருந்து பயன்படுத்தாதற்கும்
    அது இல்லாமல் இருப்பதற்கும் கூட
    அதிக வித்தியாசமில்லை//

    ஆஹா!

    இதற்காகவேணும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு யானை வளர்க்கலாம் ஐயா.

    ReplyDelete
  21. அருமையா இருந்தது சார்.

    //இலவச பிச்சை
    மாறி மாறிக் கூட்டணி
    ஜாதி வெறித் தூண்டல்
    பரஸ்பர சாக்கடைச் சேறு வீச்சு
    சவால் சவுடால் பேச்சு
    இத்தனை சனியங்களையும்
    ஒட்டுமொத்தமாய் ஒழித்துத் தொலைக்கவாவது
    நாம் நிம்மதியாய் இருந்து தொலைக்கவாவது

    இனி வரும் காலங்களிலேனும்
    ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
    ஒவ்வொரு பட்டத்து யானையை
    வளர்க்கத் துவங்குவோமா ?//

    நிச்சயமாக.... த.ம 6

    ReplyDelete
  22. அருமை சார். நல்ல யோசனை.

    ReplyDelete
  23. அருமையான சாட்டையடி வார்த்தைகள்.

    ReplyDelete
  24. சத்ரியன் //

    ஆஹா!

    இதற்காகவேணும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு யானை வளர்க்கலாம் ஐயா.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  25. கோவை2தில்லி //

    அருமையா இருந்தது சார். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  26. துரைடேனியல் //


    அருமையான சாட்டையடி வார்த்தைகள்.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  27. Seeni //

    sema adi!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  28. சசிகலா //
    அரசியலுக்கு வந்தால் யானைக்கும் மதம் பிடிக்குமோ ..?
    அருமையான பதிவு ஐயா.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  29. ஹேமா //

    கிண்டலாக இருந்தாலும் உண்மையான ஆதங்கம்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    !

    ReplyDelete
  30. மதம் பிடிச்சாலே(யானைக்கும், மனிதனுக்கும்) மற்றவர்களுக்குத்தான் தீங்கு.

    ReplyDelete
  31. விச்சு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //
    ...

    ReplyDelete
  32. நாட்டின் அவல நிலையைக் குறித்ததை
    ஏட்டில் எடுத்தே இயற்றினீர்! - காட்டிலே
    வாழ்கின்ற யானையும் உங்களை வாழ்த்தும்
    சூழ்ந்திருக்கும் சூழலைக் கண்டு!

    ReplyDelete
  33. நல்ல ஆலோசனையாக இருக்கிறதே!அதுதான் பாக்கி!

    ReplyDelete
  34. மேலும் ஒரு கருத்து!

    தொகுதிகளை ஏலம் விட்டுவிடலாம்..! தேர்தல் மூலமாக வருமானமாவது வரும்!

    நல்ல சிந்தனை..தொடரட்டும் உங்களது கற்பனை!

    ReplyDelete
  35. நல்ல சாடல்....

    நிச்சயம் யானை வாங்கிடலாம்....

    நல்ல பகிர்வு சார்.

    ReplyDelete
  36. பழமையாக இருந்தாலும் அன்று
    நேர்மை இருந்தது என்பதை
    அருமையாக சொல்லிவிட்டீர்கள்...
    அதையும் இப்படி சொல்ல உங்களால் மட்டுமே முடியும்....

    ReplyDelete
  37. நன்றாய் சொன்னீர்கள் ஐயா. பட்டத்து யானையே நம்மைவிட சிறந்தவர்களை தேர்ந்தெடுக்கும்.

    ReplyDelete
  38. வித்தியாசமான கவிதைக்கு 11வது ஓட்டு பரிசாய்

    ReplyDelete
  39. பேசாமல் உண்மையாகவே செயல்படுத்தலாம்...நல்ல யோசனை...!

    :)))))

    ReplyDelete
  40. AROUNA SELVAME //...

    நாட்டின் அவல நிலையைக் குறித்ததை
    ஏட்டில் எடுத்தே இயற்றினீர்! - காட்டிலே
    வாழ்கின்ற யானையும் உங்களை வாழ்த்தும்
    சூழ்ந்திருக்கும் சூழலைக் கண்டு!


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  41. சென்னை பித்தன் //
    ...
    நல்ல ஆலோசனையாக இருக்கிறதே!அதுதான் பாக்கி!/

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி ///

    ReplyDelete
  42. guna thamizh //

    நயமான சாடல் நன்று..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி ///

    ReplyDelete
  43. ரமேஷ் வெங்கடபதி //


    நல்ல சிந்தனை..தொடரட்டும் உங்களது கற்பனை!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி ///

    ReplyDelete
  44. வெங்கட் நாகராஜ் //

    நல்ல சாடல்.... //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி ///

    ReplyDelete
  45. மகேந்திரன் //


    பழமையாக இருந்தாலும் அன்று
    நேர்மை இருந்தது என்பதை
    அருமையாக சொல்லிவிட்டீர்கள்...
    அதையும் இப்படி சொல்ல உங்களால் மட்டுமே முடியும்....

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  46. ராஜி

    வித்தியாசமான கவிதைக்கு 11வது ஓட்டு பரிசாய்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  47. ஸ்ரீராம். //

    பேசாமல் உண்மையாகவே செயல்படுத்தலாம்...நல்ல யோசனை...!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  48. நல்ல பகிர்வு நன்றி பாஸ்

    ReplyDelete
  49. ANBUTHIL //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி //

    ReplyDelete