Saturday, March 10, 2012

கொலைவெறி

குடல் எரிய உடல் கருக
குடிகெடுக்கும் குடியை ஊரெங்கும்
எளிதாய் பரப்பிவைத்து
தலைக் கவசத்தை கட்டாயமாக்கி
மக்கள் தலையை மட்டும் காப்பதில்
அரசு அக்க்றை புல்லரிக்க வைக்கிறது

மின்வினியோகத்தை முடமாக்கி
மின்கட்டணத்தையும் இரட்டிப்பாக்கி
அனைவரையும் அவதிக்குள்ளாக்கிவிட்டு
இலவச மிக்சியும் கிரைண்டரும் கொடுக்கும்
அரசின் வள்ளல்குணம்
மெய்சிலிர்க்கச் செய்கிறது

பஸ் கட்டண உயர்வையும்
விலைவாசி உயர்வையும்
பிணச்சுமையாக மேலேற்றிவிட்டு
விலையில்லா அரிசி கொடுத்து
ஏழைகளின் துயர் சுமை குறைக்க எண்ணும்
அரசின் பெருந்தனமை
ஆச்சரியப்படவைக்கிறது

பசுமாட்டின்முன் பக்க உரிமையை விட்டுக் கொடுத்து
பின் பக்க உரிமையை மட்டும் வைத்துக்கொள்ளும்
சாமர்த்திய கொடையாளிபோல்
தொலைக்காட்சியை இலவசமாய்க் கொடுத்து
கேபிள்உரிமைகளை
தன் குடும்பத்திற்குள் வைத்துக்கொள்ளும்
சாணக்கியத்தனம் நினைத்து நினைத்து
மனம் பெருமையில்
திக்குமுக்காடிப் போகிறது

இதையெல்லாம் விட
வைக்கோல் கன்றுக்குக் குட்டியைக்
காட்டிக் காட்டியே
ஒட்டப் பால கறக்கும்
கெட்டிக்கார கற வைக்காரன்போல்
எத்தனை முறை ஏமாற்றியபோதும்
வகை வகையாய் ஏமாற்றிய போதும்
அடுத்தமுறை அதிகமாக ஏமாற
ஆவலாய்க் காத்திருக்கும்
நம் அருமை ஜனங்களின்
முட்டாள்தனத்தை நினைக்கையில்
மட்டும் ஏனோ மனம்
வித்தியாசமாய்
கொலைவெறி கொள்கிறது


87 comments:

  1. உங்கள் கொலைவெறி நியாயமானதுதான்.

    ReplyDelete
  2. நெஞ்சு பொறுக்குதில்லையே
    இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்...

    இந்த நிலை கெட்ட மனிதர்களில் நானும் ஒருவனாய் வெட்கப்படுகிறேன்...

    சரியாகும் என்ற நம்பிக்கையில்
    சரியானவரா என்று தெரியாமல்
    சரியான இடத்தில்
    சரியில்லாதவரை அமர்த்தி இருக்கும் நாம்
    எப்போது சரியாவோம்.....

    ReplyDelete
  3. இந்தக் கொலை வெறிகளால் நிலைமாறும் நீதி எந்த தர்ம வெறிகளால் மறுநிலைக்கு வருமோ? புதிய அவதாரம் வந்தாலும் தர்மப் போர் புரிந்தாலும் வெல்ல முடீயுமோ? அப்படி நிலை மாறியுள்ள உலகு. யதார்த்த விவரணம் அருமை வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. விச்சு //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. மகேந்திரன் //..

    சரியாகும் என்ற நம்பிக்கையில்
    சரியானவரா என்று தெரியாமல்
    சரியான இடத்தில்
    சரியில்லாதவரை அமர்த்தி இருக்கும் நாம்
    எப்போது சரியாவோம்.....//

    நாம் சரியானால் தான் எல்லாம் சரியாகும்
    என்பதுதான் சரியோ ?
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. kovaikkavi .


    நிலை மாறியுள்ள உலகு. யதார்த்த விவரணம் அருமை வாழ்த்துகள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ ......

    ReplyDelete
  8. சரியான வரிகள்!
    சாட்டையாக சுழற்றி அடிக்கும்-
    வரிகள்!

    ReplyDelete
  9. நியாயமான கேள்வி தான்....

    த.ம 4

    ReplyDelete
  10. ஆதங்கம்.....ரொம்ப அழகா தெளிவா சொல்லிபுட்டீகே.

    இன்னும் என்னமெல்லாம் அனுபவிகனுமோ?

    ம்.

    ReplyDelete
  11. அது
    சரியா இல்லை
    இதாவது
    சரியா இருக்கும்
    மக்களின் நம்பிக்கை
    ஏனோ கானலாகிறது
    அரசியலில் மட்டும்

    மக்களில்
    புரட்சி வெடித்தல்
    விடியல் பிறக்கும்
    போர்க்களம் என்றால்
    பின்முதுகே அதிகம் காணப்படிகிறது
    நம் தேசத்தில்

    இங்கு
    சரி இல்லை
    ஆட்ச்சியாளர்கள் அல்ல
    குடிமக்கள்

    என்ற கவிஞரின் கூற்று முற்றுலும் உண்மை
    சிந்திக்க வேண்டிய விஷயம்

    உணர்த்திய கவிஞருக்கு நன்றி

    ReplyDelete
  12. ஆதங்கத்தில் எழுந்த பதிவு மிக அருமை.

    ReplyDelete
  13. இந்த கொலை வெறி தவறில்லை. நியாயமான கொலை வெறி.

    ReplyDelete
  14. எத்தனை முறை ஏமாற்றியபோதும்
    வகை வகையாய் ஏமாற்றிய போதும்
    அடுத்தமுறை அதிகமாக ஏமாற
    ஆவலாய்க் காத்திருக்கும்
    நம் அருமை ஜனங்களின்
    முட்டாள்தனத்தை நினைக்கையில்
    மட்டும் ஏனோ மனம்
    வித்தியாசமாய்
    கொலைவெறி கொள்கிறது
    //

    நியாயமான கொலை வெறி.

    ReplyDelete
  15. மிகச் சரியாக சொன்னிர்கள்

    ReplyDelete
  16. இன்றைய அரசியல் சூழலை அருமையாக விவரித்து அனைவரையும் சிந்திக்க வைகின்ரீர்..

    ReplyDelete
  17. koodal bala //


    தங்கள் உடன் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. Seeni /

    சரியான வரிகள்!
    சாட்டையாக சுழற்றி அடிக்கும்-
    வரிகள்!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. கோவை2தில்லி //

    நியாயமான கேள்வி தான்....//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. செய்தாலி //

    இங்கு
    சரி இல்லை
    ஆட்ச்சியாளர்கள் அல்ல
    குடிமக்கள்
    என்ற கவிஞரின் கூற்று முற்றுலும் உண்மை
    சிந்திக்க வேண்டிய விஷயம்
    உணர்த்திய கவிஞருக்கு நன்றி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கணேஷ் //

    ஆதங்கத்தில் எழுந்த பதிவு மிக அருமை.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. தமிழ் உதயம் //

    இந்த கொலை வெறி தவறில்லை. நியாயமான கொலை வெறி.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. ஸாதிகா //

    நியாயமான கொலை வெறி.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. கொலைவெறி கொள்கிறது

    ReplyDelete
  25. அட! இந்தக் கொலைவெறி பாடல் ரொம்ப நல்லாயிருக்கே!

    ReplyDelete
  26. // அடுத்தமுறை அதிகமாக ஏமாற
    ஆவலாய்க் காத்திருக்கும்//
    இதில் எனக்கு உடன்பாடில்லை
    மக்களை குறைசொல்லி பயனில்லை
    பலருக்கு நாம் எமற்றபடுகிறோம் என்ற புரிதல் இல்லை
    புரிந்த நம் போன்ற சிலருக்கு புலம்பத்தான் முடிகிறது
    ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்த ஆட்சி அதிகாரம் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு
    அவர்களின் வாழ்க்கையை பற்றிய அறியாமை தான் இதற்கு காரணம்
    செய்தாலி அவர்கள் சொன்னது போல் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் அது வரை ........

    ReplyDelete
  27. நியாயமான கொலைவெறி.... எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே தான் தொடர்கிறது....

    ReplyDelete
  28. தலைவர்கள் மட்டும் அல்ல..
    மக்களும் சுயநலமாகிவிட்டனர்!..
    எல்லாம் நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு!
    யாரை நொந்து என்ன செய்ய?

    ReplyDelete
  29. கவிதைக்கேற்ற தலைப்பு.கொலைவெறி ஆதங்கம்.சரியாகுமா !

    ReplyDelete
  30. மக்களுக்கு வேறு ஆப்ஷன் இல்லையே....! நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி...

    ReplyDelete
  31. உங்காஅதங்கத்தை மிகச்சரியானவார்த்தையில் சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  32. ஒவ்வொரு வரிகளிலும் நம் ஆதங்கத்தை சாட்டையடியாக கொடுத்துள்ளீர்கள். நியாயமான சொற்கள். சிந்திக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  33. //பசுமாட்டின்முன் பக்க உரிமையை விட்டுக் கொடுத்து
    பின் பக்க உரிமையை மட்டும் வைத்துக்கொள்ளும்
    சாமர்த்திய கொடையாளிபோல்//

    - வரிகள் அசத்தல். பின்பக்கம்தானே பலன் அதிகமா கிடைக்குது. அதனால்தான் இப்படி ஏமாற்றுகிறார்கள். இந்தக் கொலைவெறி அவசியம்தான். தேர்தல் வரும்போது இக்கவிதையை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்து விநியோகித்தால் நன்றாக இருக்கும். அருமையான கவிதை. தொடர்க!

    ReplyDelete
  34. சின்னப்பயல் //

    கொலைவெறி கொள்கிறது //

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. RVS //

    அட! இந்தக் கொலைவெறி பாடல் ரொம்ப நல்லாயிருக்கே!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. வேர்கள் //

    செய்தாலி அவர்கள் சொன்னது போல் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் அது வரை ......//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. வெங்கட் நாகராஜ் //

    நியாயமான கொலைவெறி.... எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே தான் தொடர்கிறது..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. ரமேஷ் வெங்கடபதி //

    எல்லாம் நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு!
    யாரை நொந்து என்ன செய்ய? //

    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. ஹேமா //
    ...
    கவிதைக்கேற்ற தலைப்பு.கொலைவெறி ஆதங்கம்.சரியாகுமா !//


    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. ஸ்ரீராம். //

    மக்களுக்கு வேறு ஆப்ஷன் இல்லையே...//

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. Lakshmi //

    உங்காஅதங்கத்தை மிகச்சரியானவார்த்தையில் சொல்லி இருக்கீங்க.//

    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. வை.கோபாலகிருஷ்ணன் s //
    id...
    ஒவ்வொரு வரிகளிலும் நம் ஆதங்கத்தை சாட்டையடியாக கொடுத்துள்ளீர்கள். நியாயமான சொற்கள். சிந்திக்க வைக்கிறது. பாராட்டுக்கள்//

    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. துரைடேனியல் //

    தேர்தல் வரும்போது இக்கவிதையை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்து விநியோகித்தால் நன்றாக இருக்கும். அருமையான கவிதை. தொடர்க!//

    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. வணக்கம்!இந்தக் கவிதை, தன்னைச் சுற்றி நடக்கும் போலிகளின் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இதயத்தின் புலம்பல்!

    ReplyDelete
  45. தி.தமிழ் இளங்கோ //

    வணக்கம்!இந்தக் கவிதை, தன்னைச் சுற்றி நடக்கும் போலிகளின் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இதயத்தின் புலம்பல்!//

    மிகச் சரி
    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. முத்தாய்ப்பாக குறைகள் நம்மிடம் என்பதை உணர்த்திச் சொன்ன விதம் நன்று.

    ReplyDelete
  47. G.M Balasubramaniam //

    முத்தாய்ப்பாக குறைகள் நம்மிடம் என்பதை உணர்த்திச் சொன்ன விதம் நன்று./

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. எல் கே //

    saatai

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. ஏனெனில் செய்யாத குற்றத்திற்கு நாமும் அனுபவிப்பதால் தோழரே

    ReplyDelete
  50. மக்கள் எத்தனை முறை பட்டாலும் புத்தி வருவதில்லையே ஏன்?

    ReplyDelete
  51. கொலைவெறி கொண்டாலும் தவறான தலைமையை மக்களால் சீர்செய்ய முடியாது. ஜனநாயகத்தில் கூட!!

    " தீக்குள் விரலைவைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்ய நந்தலாலா" என்று பாடி வெயில்காலத்தை அனுபவிப்போம்.

    ReplyDelete
  52. அருமை அன்பரே..
    தங்கள் சிந்தனை மெய்சிலிர்க்கச் செய்கிறது!!

    ReplyDelete
  53. அரசின் வள்ளல்குணம்
    மெய்சிலிர்க்கச் செய்கிறது

    நிதர்சன உண்மைகள்..

    ReplyDelete
  54. இதுதான் உண்மையான கொலைவெறி.. இந்த கொலைவெறி நியாயமாகப் பார்த்தால் நம் மக்களுக்கு வந்து இந்த கொள்ளையர்களை அடித்து துவைத்து இருக்க வேண்டும். என்ன செய்ய தங்களைப் போன்ற தர்மாத்மாக்களுக்கு மட்டும் வருவதுதான் கலியின் சோகம்/நிஜம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  55. suryajeeva //

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. ராக்கெட் ராஜா //

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. VENKAT //

    " தீக்குள் விரலைவைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்ய நந்தலாலா" என்று பாடி வெயில்காலத்தை அனுபவிப்போம்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் சிந்திக்கத் தூண்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. guna thamizh //
    . //
    அருமை அன்பரே..
    தங்கள் சிந்தனை மெய்சிலிர்க்கச் செய்கிறது!//

    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. இராஜராஜேஸ்வரி ///

    அரசின் வள்ளல்குணம்
    மெய்சிலிர்க்கச் செய்கிறது //

    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. Sankar Gurusamy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் சிந்திக்கத் தூண்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. கொலைவெறி நியாயமே!
    ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை!
    உவமைகள் அருமை!
    சா இராமாநுசம்

    ReplyDelete
  62. ஆதங்கத்தில் தோய்த்தெடுத்தக் கத்தியால் அறியாமையை அறுக்க முயன்றிருக்கிறீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  63. புலவர் சா இராமாநுசம் //

    உவமைகள் அருமை!//

    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. கீதமஞ்சரி ///

    ஆதங்கத்தில் தோய்த்தெடுத்தக் கத்தியால் அறியாமையை அறுக்க முயன்றிருக்கிறீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.//

    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. கவிதையில் அரசியல் சொல்லும் விதம் அசத்தல்

    ReplyDelete
  66. !♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!


    கவிதையில் அரசியல் சொல்லும் விதம் அசத்தல் //

    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. ஆம் தோழரே..!
    புல்லரித்து காயமானதுதான் மிச்சம்..
    மெய்சிலிர்த்து வாய் பிளந்ததுதான் மிச்சம்..
    கொலைவெறிக்கு மனநிம்மதி பலியானது தான் மிச்சம்..!

    ReplyDelete
  68. நியாயமான கொலைவெறி பாடல் ரொம்ப நல்லாயிருக்கு...

    ReplyDelete
  69. இதையெல்லாம் விட
    வைக்கோல் கன்றுக்குக் குட்டியைக்
    காட்டிக் காட்டியே
    ஒட்டப் பால கறக்கும்
    கெட்டிக்கார கற வைக்காரன்போல்//உவமைகள் அருமைஅருமையான கவிதை. தொடர்க!

    ReplyDelete
  70. அரசியல் என்பது நம்மை சுற்றிய சிலந்திவலை தானோ??

    அருமைக்கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  71. இதுதான் இப்பஒழுது நடந்து கொண்டிருக்கிறது,வைக்கோல் கன்றுக்குட்டி அல்ல.ஹைஜீனிக்காக செய்யப்பட்ட பிளஸ்டிக் கன்றுக்குட்டியை காண்பிக்கிறார்கள்,அல்லது கன்றுக்குட்டிகளாய் நம்மை ஆக்கி வைத்திரிக்கிறார்கள்.

    ReplyDelete
  72. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

    ReplyDelete
  73. மின்சாரம் இல்லாவிட்டால் கஷ்டம் தான். எப்ப விடிவு வருமோ???
    அருமையான வரிகள்.

    ReplyDelete
  74. ரமணி,

    கொலைவெறி ஊழல் பெருச்சாளிகளின் உச்சந்தலையில் நச்சென்று இறக்கப் பட்ட கவிக்கத்தி. இன்றைய சமூக அவலத்தினை குறி பார்க்கும் பாட்டுத் துப்பாக்கி. அற்புதமான கவிதை.

    ReplyDelete
  75. ShankarG //...

    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. !vanathy //

    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. கீதமஞ்சரி //

    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. விமலன் //


    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  79. Sekar //

    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. மாலதி //

    !தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. பழனி.கந்தசாமி //

    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. ரெவெரி //


    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  83. திவ்யா @ தேன்மொழி //...

    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  84. Chitappa, neegal oru vidi velli

    ReplyDelete
  85. Balaji //


    தங்கள் வரவுக்கும் அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete