Friday, March 30, 2012

பாம்பின் கால்


 மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தும்
படைப்பின்
ஆன்மா புரிந்த அளவு
அதன் அர்த்தங்கள் புரியவே இல்லை

படைப்பின்
ஒவ்வொரு வரியிலும் துடிக்கும்
விழியற்றவனின்
புதிய இடத்துப் பயணப் பதட்டமும்....

கருவானதை
விழுங்கவும் உமிழவும் முடியாது தவிக்கும்
திரு நீல கண்ட மயக்கமும்

ஒட்டுமொத்த படைப்பிலும் ஊடாடும்
இறுதி மூச்சுக்காரனின்
பிடிதேடும்  அவலமும்...

என்னுள்ளும்
பதட்டத்தையும்
தவிப்பையும்
அவலத்தையும்
பரவ விட்டுப் போகிறது

படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
அர்த்தங்கள் அவசியமா என்ன ?

68 comments:

  1. பாட்டுடன் உரையையும் கொடுத்து விட்டால் நல்லது.
    அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற அர்த்தம் புரிந்து விடும்.
    இப்போதெல்லாம் புதுக்கவிதைக்கு தான் உரைநுால் அவசியம் தேவைப்படுகிறது ரமணி ஐயா.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு சார்

    ReplyDelete
  3. கருவின் உட்கருத்தை புரிந்துகொண்டவர்களுக்கு
    பொருளின் விளக்கம் தேவையில்லை என்பதை
    ஒரு படைப்பாளியின் நிலையில் இருந்து
    எழுதிய கருப்பொருள் கவிதை நன்று நண்பரே...

    ReplyDelete
  4. படைப்பின் ஆன்மாவை புரிந்தாலும் அகராதி தேவைப்படுகிறது.

    ReplyDelete
  5. அந்த ரகசியத்தை அறிந்துக்கொண்டுவிட்டால்
    நாமும் கடவுளாகிவிடுவோம்...

    ReplyDelete
  6. அர்த்தமுள்ள அழகிய கவிதை

    தமிழ்மணம் 5

    ReplyDelete
  7. பிரமாதம்!

    ReplyDelete
  8. படைப்பின் ஆன்மா புரிந்துவிட்டதல்லவா? அது போதுமே. ஆனாலும் இந்த நவீனத்துவ கவிதைகளை நான் அதிகமாக விரும்பாததற்கு இந்த 'இருண்மை' யும் ஒரு காரணம் சார். காலச்சுவடு, கணையாழி, தீராநதி,etc. இன்றும் சிற்றிதழ்கள் பலவற்றிலும் உள்ள கவிதைகளை படிப்பதோடு சரி. அவற்றைப் போல படைக்க முயல்வதில்லை. தங்களது ஆன்மா தூய ஆன்மா. அதனால்தான் கவிதையின் ஆன்மாவையும் புரிந்துகொள்கிறது. உங்கள் ஆன்மாவையும் நான் புரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  9. படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ?

    அழகான வரிகளில் அசத்தலான கவிதை வாழ்த்துகள்/

    ReplyDelete
  10. மிக ரசித்தேன்! துரை டேனியலின் கருத்தை வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  11. சூப்பர்

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
    ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

    ReplyDelete
  12. உடலற்ற ஆன்மா அதன் பாவ புண்ணியங்களைக் கரைத்தல் இயலாது.
    அர்த்தங்கள் அவசியமற்ற படைப்பின் ஆன்மா
    உருவானதற்கு அர்த்தமற்றுப் போய் விடுமல்லவா??

    ReplyDelete
  13. மிக மிக அருமை.படைப்பின் இரகசியங்கள் படைப்பவனிடம் மட்டுமே.புரிந்துகொண்டால் எங்களுக்கும் கலக்கமும் குழப்பமும்தான் !

    ReplyDelete
  14. ''...படைப்பின்
    ஆன்மா புரிந்த அளவு
    அதன் அர்த்தங்கள் புரியவே இல்லை...''
    o.k..அர்த்தங்கள் புரியவில்லை.
    1.பயணப் பதட்டமும்....
    2.திரு நீல கண்ட மயக்கமும்
    3.பிடிதேடும் அவலமும்...
    பதட்டத்தையும்
    தவிப்பையும்
    அவலத்தையும்
    பரவ விட்டுப் போகிறது.....சரி.!
    ''...படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ?...''
    மேலே குளப்பம், பிறகு கேள்வி. மிகக் குளப்Vetha. Elangathilakam.

    ReplyDelete
  15. ரீராம். //


    தங்கள் முதல் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. AROUNA SELVAME

    தங்கள் . உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. தமிழ் உதயம் //

    நல்லா இருக்கு சார் //


    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. விச்சு //

    தங்கள் . உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. மகேந்திரன் //

    ஒரு படைப்பாளியின் நிலையில் இருந்து
    எழுதிய கருப்பொருள் கவிதை நன்று நண்பரே.//.

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. கவிதை வீதி... // சௌந்தர் //

    அர்த்தமுள்ள அழகிய கவிதை //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. Madhavan Srinivasagopalan //

    good one..//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. மீனாக்ஷி //

    பிரமாதம்! //
    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. துரைடேனியல் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    விளக்கமான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. Lakshmi

    அழகான வரிகளில்
    அசத்தலான கவிதை வாழ்த்துகள்/

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. கணேஷ் //

    மிக ரசித்தேன்! துரை டேனியலின் கருத்தை வழிமொழிகிறேன்!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. sathish krish //

    சூப்பர் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ?

    ReplyDelete
  28. அழகான, அர்த்தம் நிறைந்த வரிகள். தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. படைப்புகள் தருகிற சந்தோசங்கள் நிறையவே கற்றுத்தரவும்,நிறைய தேடுதலை உருவாக்கவுமாய்/நல்ல பதிவு,நன்றி.வணக்கம்.

    ReplyDelete
  30. படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ?
    >>>
    அவசியமே இல்லை ஐயா. படைப்பாளியின் போக்கில் வந்த கவிதைக்கரு வித்தியாசமுடன் அருமையாய் உள்ளது.

    ReplyDelete
  31. ஒட்டுமொத்த படைப்பிலும் ஊடாடும்
    இறுதி மூச்சுக்காரனின்
    பிடிதேடும் அவலமும்...//

    எழுத்துக்கள் மிகவும் மெருகேறி உருக்குதே மனசை குரு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  32. படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ?//

    அருமையான கேள்வி...
    கவிதை அருமை

    ReplyDelete
  33. பிரமாதம் பிரமாதம் அர்த்தங்கள் தேவை இல்லைதான் .

    ReplyDelete
  34. //படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ?//

    ;))))) அருமை. தேவையில்லை தான்.

    ReplyDelete
  35. வணக்கம் ஐய்யா நலமா? படைப்பை பற்றி அருமையான கவிதை பகிர்வு..!!!!

    ReplyDelete
  36. அருமையாக இருந்தது சார்.
    த.ம.12

    ReplyDelete
  37. படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ?

    அர்த்தமும் ஆன்மாவும் இணைந்தால்
    பூரணத்துவம் கிடைக்குமே !!

    ReplyDelete
  38. அருமையான படைப்பு!

    ReplyDelete
  39. பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்!அதுபோல
    படைத்தவன் தான்,தன் படைப்பைப் பற்றி
    அறிய முடியும் என்பதை தலைப்பே மிகப் பொருத்தமாக உணர்த்துகிறது
    அருமை!
    நேற்று முழுவதும் தங்கள் வலை திறக்கவில்லை!

    ஓ 16

    சா இராமாநுசம்

    ReplyDelete
  40. சின்னப்பயல் //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. vanathy ////

    அழகான, அர்த்தம் நிறைந்த வரிகள். தொடர வாழ்த்துக்கள்.//


    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. விமலன் //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ராஜி .. >>>


    அவசியமே இல்லை ஐயா. படைப்பாளியின் போக்கில் வந்த கவிதைக்கரு வித்தியாசமுடன் அருமையாய் உள்ளது.//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. MANO நாஞ்சில் மனோ //


    எழுத்துக்கள் மிகவும் மெருகேறி உருக்குதே மனசை குரு வாழ்த்துக்கள்....!


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. அருமையான கேள்வி...
    கவிதை அருமை //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. jayaram thinagarapandian //

    அருமையான கேள்வி...
    கவிதை அருமை //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. சசிகலா //

    பிரமாதம் பிரமாதம் அர்த்தங்கள் தேவை இல்லைதான் .//

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. காட்டான் //.

    படைப்பை பற்றி அருமையான கவிதை பகிர்வு..!!!!

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. இராஜராஜேஸ்வரி //


    அர்த்தமும் ஆன்மாவும் இணைந்தால்
    பூரணத்துவம் கிடைக்குமே !! //

    தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. Murugeswari Rajavel

    அருமையான படைப்பு!//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. புலவர் சா இராமாநுசம் //

    தலைப்பே மிகப் பொருத்தமாக உணர்த்துகிறது
    அருமை!//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. அர்த்தங்களைத் தவிர்க்க அனுபவங்கள் தேவை!
    அதுவரை பொறுமையும் தேவை!
    நன்று!

    ReplyDelete
  53. கருவானதை
    விழுங்கவும் உமிழவும் முடியாது//அருமையான படைப்புமனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. #படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ?# ஆழமான கேள்வி ! அருமையான வரிகள் !

    ReplyDelete
  55. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. மாலதி //

    கருவானதை
    விழுங்கவும் உமிழவும் முடியாது//அருமையான படைப்புமனமார்ந்த நன்றி //


    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. ananthu //

    ?# ஆழமான கேள்வி ! அருமையான வரிகள் //!

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. அர்த்தங்கள் புரிந்தால்தான் ஆன்மாவை ரசிக்க முடியும். அர்த்தமில்லாப் படைப்பால் யாருக்கு லாபம். படைப்பே அர்த்தத்தை உண்ர்த்தத்தான். இல்லாவிட்டால் மூன்று வயதுக் குழந்தை எண்ணியதைச் சொல்ல முடியாமல் கோர்வையின்றி பேசினாலும் பெற்றோர் மகிழ்வதைப் போல் படைப் பாளியே பெருமிதப் பட வேண்டியதுதான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. G.M Balasubramaniam //

    வெட்டவெளிச்சமாகத் தெரிவதைவிட
    கூர்ந்து பார்க்கும்படியாக இருப்பதுதான் நம கவனத்தில் நிற்கிறது
    அறிந்து கொள்ளும்படியாகச் சொல்வதைவிட
    உணரும்படியாகச் சொல்வதே மிகக் கடினம்
    வார்த்தைகளைவிட பல சமயம் மௌனம் தான்

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    நிறையச் சொல்லிப் போவதைப் போல

    ReplyDelete
  60. படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
    அர்த்தங்கள் அவசியமா என்ன ? அருமையான வரிகள்,,,,,

    ReplyDelete
  61. அன்பை தேடி,,,அன்பு //

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete