Friday, April 6, 2012

மாற்றான் தோட்டத்து மல்லிகை


அந்த ஜவுளிக் கடலில் நானும் என் மனைவியும்
பட்டுச் சேலைகளைஅலசியெடுத்துக் கொண்டிருந்தோம்
விற்பனையாளரும் சலைக்காமல்சேலைகளை
எடுத்துப் போட்டபடியே இருந்தார்.

எங்களுக்கு அடுத்தும் ஒரு தம்பதியினர்
எங்களைப் போலவே அலசி எடுத்துக் கொண்டிருந்தனர்

இடையிடையே என் மனைவிஅவர்களைப் பார்ப்பதும்
அந்தக் குவியலைப் பார்ப்பதுமாய் இருந்தார்

அதைப் போலவேஅந்தப் பெண்மணியும்துணிகளையும்
என் மனைவியை ப் பார்ப்பதுமாக இருந்தார்

"அவர்கள் தெரிந்தவர்களா " என்றேன்

" இல்லை " என்றார

முடிவாக நான்கு சேலைகளைத்
தேர்ந்தெடுத்து அதையே புரட்டிப் புரட்டிப் பார்த்து
ஒன்றை ஒதுக்கு வைத்தார்[

அதைப் போலவே அடுத்திருந்த பெண் மணியும்
மூன்று சேலைகளத் தேர்ந்தெடுத்து புரட்டி புரட்டிப்
பார்த்து ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்

பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச்
சிரித்துக் கொண்டனர்

என் மனைவி பின் அருகில் இருந்த பெண்மணியின்
பக்கம் போய் அவர் வேண்டாம் என
ஒதுக்கிவைத்திருந்தஇரண்டு சேலைகளில்
ஒன்றை எடுத்து "இது வேண்டாம் தானே ..
 நான் எடுத்துக் கொள்ளவா " என்றார்

அந்தப் பெண்மணியும் என் மனைவி
முடிவாக ஒதுக்கி இருந்த ஒரு பச்சை நிறச்
சேலையை எடுத்துக் கொண்டு
"எனக்கு பச்சை என்றால் ரொம்ப இஷ்டம்
இதை எடுத்துக் கொள்கிறேன் " என்றார்

உடன் வந்த கணவர்மார்கள் இருவரும்
சிரித்துக் கொண்டோம்
விற்பனையாளரும் எங்களைப் பார்த்து
லேசாகச் சிரித்தார்
அவர் அருகில் போய் " என்ன காரணம் "என்றேன்

"என் அனுபவத்தில் எல்லா பெண்களும்
தான் கலைத்துப் போட்ட சேலைகளில் இருந்து
தேர்ந்தெடுப்பதைவிட அருகில் இருப்பவர்கள்
தேர்ந்தெடுப்பதில் இருந்துஒன்றை எடுப்பதில்தான்
அதிகம் சந்தோஷம் கொள்கிறார்கள்"என்றார்

"நல்ல வேளை இத்தோடு முடிந்ததே " என்றேன்

விற்பனையாளர் " இது கிளைமாக்ஸ் இல்லை
கிளைமாக்ஸ் உங்கள் வீட்டில்தான் " என்றார்

எனக்கு காரணம் புரியவில்லை

வீட்டில் அனைவரிடமும் சேலையை பலமுறை
புரட்டிக் காண்பித்து அவர்கள் கருத்தில்
சந்தோஷம் கொண்டிருந்த மனைவி மெதுவாக
என்னருகில் வந்து " நாம் எடுத்து வைத்திருந்த
 பச்சைசேலை இதை விட நன்றாக இருந்ததாக
எனக்குப் படுகிறது.அந்த அம்மணி
அதை விடாப்பிடியாக்எடுக்கையிலேயே
 நான் யோசித்திருக்க வேண்டும் " என்றார்

" நான் இல்லையில்லை இதுதான்
உனக்கு மிக நன்றாக இருக்கிறது"என்றேன்

" நீங்கள் அந்த சேலைக்கும்
அப்படித்தான் சொன்னீர்கள்
இதற்கும் இப்படித்தான் சொல்கிறீர்கள்
அதற்குத்தான் சேலை எடுக்க
பெண்களாகப் போகவேண்டும் என்பது
என் தங்கை கூட வந்திருந்தால் நிச்சயம்
அந்தச் சேலையைத்தான்
 எ டுக்கச் சொல்லி இருப்பாள் "என்றார்

எனக்கு விற்பனையாளர் சொன்ன கிளைமாக்ஸ்
அர்த்தம் இப்போதுதான் புரிந்தது

பாவம் அந்தப் பெண்மணி கூட வந்திருந்த
அவருடைய கணவர் கூட இந்த சமயம்
 இதுபோன்றஅவஸ்தையை
அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடும்

அண்ணா அவர்கள் " மாற்றான் தோட்டத்து
 மல்லிகைக்கும்மணமுண்டு " எனச்
சொன்ன மொழி ஆண்களுக்கு
மட்டும்தான் எனப் புரிந்து கொண்டேன்

பெண்களுக்கு என்றால் நிச்சயம்
"மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு " எனச்
சொல்லி இருப்பார் எனப் பட்டது எனக்கு


56 comments:

  1. அனுபவம் பேசியது அருமை. (இந்த அனுபவம் உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஹி... ஹி...)

    ReplyDelete
  2. எல்லா பெண்களும்
    தான் கலைத்துப் போட்ட சேலைகளில் இருந்து
    தேர்ந்தெடுப்பதைவிட அருகில் இருப்பவர்கள்
    தேர்ந்தெடுப்பதில் இருந்துஒன்றை எடுப்பதில்தான்
    அதிகம் சந்தோஷம் கொள்கிறார்கள்//

    நிஜம்!

    நாம் எடுத்து வைத்திருந்த
    பச்சைசேலை இதை விட நன்றாக இருந்ததாக
    எனக்குப் படுகிறது.அந்த அம்மணி
    அதை விடாப்பிடியாக்எடுக்கையிலேயே
    நான் யோசித்திருக்க வேண்டும்//

    அதைவிட நிஜம்.

    தலைப்பும் உரை நடை கவிதையும் அருமை.

    ReplyDelete
  3. அண்ணா அவர்கள் " மாற்றான் தோட்டத்து
    மல்லிகைக்கும்மணமுண்டு " எனச்
    சொன்ன மொழி ஆண்களுக்கு
    மட்டும்தான் எனப் புரிந்து கொண்டேன்

    பெண்களுக்கு என்றால் நிச்சயம்
    "மாற்றான் தோட்டத்து
    மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு " எனச்
    சொல்லி இருப்பார்

    அண்ணா அவர்கள் புடைவைக்காக மட்டும் இப்படிச் சொல்லி இருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும் ரமணி ஐயா.

    ReplyDelete
  4. :) Hilarious one! Enjoyed indeed! You revealed the real attitude and mentality of women..

    Lali
    http://karadipommai.blogspot.in/

    ReplyDelete
  5. //விற்பனையாளர் " இது கிளைமாக்ஸ் இல்லை
    கிளைமாக்ஸ் உங்கள் வீட்டில்தான் " என்றார்//

    அனுபவசாலி!

    கஷ்டமில்லை... அந்த வீட்டிலும் அதே கதைதான் நடந்திருக்கும்...ரிடர்னுக்கு இந்தப் புடைவையை எடுத்துப் போனால் அங்கு அந்தப் புடைவை வந்திருக்கும்...எக்சேஞ் செய்து எடுத்து வந்து விடலாம்!! :))))

    ReplyDelete
  6. பெண்களின் மனம் ஒரு சேலையில் படமாகிறது இல்லை கவிதையாகிறது.உண்மையென்று ஒத்துக்கொள்வதைத் தவிர வழியில்லை !

    ReplyDelete
  7. பெண்களுக்கு என்றால் நிச்சயம்
    "மாற்றான் தோட்டத்து
    மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு "
    உண்மை அன்பரே..

    ReplyDelete
  8. ஸாதிகா //


    தலைப்பும் உரை நடை கவிதையும் அருமை //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. koodal bala //.

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. AROUNA SELVAME //

    அண்ணா அவர்கள் புடைவைக்காக மட்டும் இப்படிச் சொல்லி இருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும் ரமணி ஐயா.

    இது ஒரு ஜாலி பதிவாக எழுதினேன்
    அவ்வளவே//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. Lali .//

    :) Hilarious one! Enjoyed indeed! You revealed the real attitude and mentality of women..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. ஸ்ரீராம். //

    கஷ்டமில்லை... அந்த வீட்டிலும் அதே கதைதான் நடந்திருக்கும்...ரிடர்னுக்கு இந்தப் புடைவையை எடுத்துப் போனால் அங்கு அந்தப் புடைவை வந்திருக்கும்...எக்சேஞ் செய்து எடுத்து வந்து விடலாம்!! :))))//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. ஹேமா //
    .
    பெண்களின் மனம் ஒரு சேலையில் படமாகிறது இல்லை கவிதையாகிறது.உண்மையென்று ஒத்துக்கொள்வதைத் தவிர வழியில்லை //!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. guna thamizh //
    .
    பெண்களுக்கு என்றால் நிச்சயம்
    "மாற்றான் தோட்டத்து
    மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு "
    உண்மை அன்பரே..

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. கவிஞ்சரின் மனம் பெண்களை நன்றாக படம் பிடித்துள்ளது . அருமை ஐயா.

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா!
    ஹா ஹா இதுக்குதானய்யா நான் புடவை கடை பக்கமே போவதில்லை.!!!!! ;-)

    ReplyDelete
  18. // " நீங்கள் அந்த சேலைக்கும்
    அப்படித்தான் சொன்னீர்கள்
    இதற்கும் இப்படித்தான் சொல்கிறீர்கள் //

    இனிமேல் கவிஞருக்கு சேலைக் கடையில் வேலை இருக்காது. நல்லதுதான்.

    ReplyDelete
  19. இதெல்லாம் வேண்டாம் என்றுதான் பெண்கள் இப்பொழுதெல்லம் சுடிதார் போடுகிறார்கள்.அதையும் நிச்சயம் ஆண்களுடன் சென்று எடுக்காமல் தோழி சகோதரி என்று அழைத்துப் போய் விடுகிறார்கள் :-))

    ReplyDelete
  20. மல்லிகைக்கும்..... மல்லிகைக்கு..... ஒரு எழுத்தில்தான் எவ்வளவு அர்த்த‌மாற்றம்,

    ReplyDelete
  21. சேலையின் அனுபவம் வேறுபட்டாலும் குணம் ஒன்றுதான் போல!

    ReplyDelete
  22. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம்..
    அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் நண்பரே...
    அருமை அருமை...

    ReplyDelete
  23. ஆயிரம் புடவை இருந்தாலும் 1001 வது புடவைதானே என்று எப்படி இருந்தால் என்ன என்று விட்டு விட மனது வராது பெண்மைக்கு. அவர்கள் சிறப்பே அதுதானே.

    ReplyDelete
  24. இந்த பேஜாருக்கு தான் நான் புடவை கடைக்கு போவதில்லை!

    ReplyDelete
  25. அனுபவம்.......பகிர்வுக்கு நன்று - இனி உசாரா இருபோமில

    ReplyDelete
  26. அருமையான கவிதை வடித்துவிட்டீர்கள்..

    ReplyDelete
  27. ' மாற்றான் தோட்டத்து மல்லிகை ' உங்களின் உரைநடை கவிதையில் புது விதமாக மணம் வீசுகிறது!!

    ReplyDelete
  28. அருமையான சிந்தனை. அதை பதிவாக்கிய விதம் அருமை. சாதாரண விஷயங்களையும் கூட அற்புதமாய் பதிவாக்குகிற வித்தையை உங்கள் விரல்கள் கற்று வைத்திருக்கின்றன.

    ReplyDelete
  29. வீட்டில் இந்தப் பதிவு பற்றித் தெரிவித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  30. நல்ல நகைச்சுவை உண்மை. ரசித்தேன் பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  31. இது ஒரு மனோ நிலை ஈர்ப்பு போலும்.

    ReplyDelete
  32. உப்புமடச் சந்தியில் உங்கள் கவிவரிகள் வேண்டி நிற்கிறேன்.வாங்கோ !

    ReplyDelete
  33. மணம் உண்டு! மனமும் உண்டு!! :-)

    ReplyDelete
  34. மாற்றாள் கைவிட்ட சேலையின் மகத்துவம் பற்றி அழகிய வரிகளில் எழுதி அசத்திவிட்டீர்கள். இந்த அதிருப்தி எல்லாம் யாராவது சேலை அழகாயிருக்கிறது என்று சொன்ன கணத்தில் மறைந்துபோய்விடும். ரசனையான பதிவு. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  35. சாதாரணமாய் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், பெண்களின் மனதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. G.M Balasubramaniam //

    சாதாரணமாய் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், பெண்களின் மனதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. RVS //

    மணம் உண்டு! மனமும் உண்டு!! :-)//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. ஹேமா //

    உப்புமடச் சந்தியில் உங்கள் கவிவரிகள் வேண்டி நிற்கிறேன்.வாங்கோ !//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. விமலன் //

    இது ஒரு மனோ நிலை ஈர்ப்பு போலும்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. kovaikkavi //

    நல்ல நகைச்சுவை உண்மை. ரசித்தேன் பாராட்டுகள்./

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. மனோ சாமிநாதன் //

    ' மாற்றான் தோட்டத்து மல்லிகை ' உங்களின் உரைநடை கவிதையில் புது விதமாக மணம் வீசுகிறது!!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. மாதேவி //

    அருமையான கவிதை வடித்துவிட்டீர்கள்..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. மனசாட்சி™ //

    அனுபவம்.......பகிர்வுக்கு நன்று //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. நம்பள்கி! //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. T.N.MURALIDHARAN //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. மகேந்திரன் //

    பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம்..
    அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் நண்பரே...
    அருமை அருமை...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. தனிமரம் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. நம்பிக்கைபாண்டியன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. raji //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. தி.தமிழ் இளங்கோ //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. காட்டான் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. சசிகலா //


    கவிஞ்சரின் மனம் பெண்களை நன்றாக படம் பிடித்துள்ளது . அருமை ஐயா.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. Lakshmi //

    கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. கீதமஞ்சரி //

    ரசனையான பதிவு. பாராட்டுகள் ரமணி சார்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் ம்னமார்ந்த நன்றி

    ReplyDelete