Tuesday, April 24, 2012

சின்னச் சின்ன குறிப்புகள்..


மார்பினை மீறித் துருத்தாத வயிறு
அவன் ஆரோக்கியத்தை
பறைசாற்றிப் போனது

வரவினை மீறாதஅவன் செலவு
அவன் செல்வந்தனாவதை
உறுதி செய்துப் போனது

எல்லை மீறாத அவனது பரிச்சியங்கள்
அவனது வளர்ச்சியை
நிச்சயித்துப் போனது

அறிவினை மீறாத அவனது மனது
அவனது நடத்தைக்கு
வழி சமைத்துப் போனது

சமூக மனிதனுக்கு அடங்கிய அவனது
தனிமனித செயல்பாடுகள்
அவன் தரம் சொல்லிப் போனது

தகுதி மீறாது அவனடையும் பதவிகள்
அவன் வெற்றிகள் தொடருமென
பறைசாற்றிப் போனது

பொது நலம் மறக்காத  அவனது சிந்தனைகள்
அவன் சராசரி இல்லையென்பதை
நிரூபித்துப் போனது

இலக்கினுள் அடங்கிய அவன் படைப்புகள்
காலத்தை எளிதாய் கடக்கும் என்பதை
சூசகமாய்ச் சொல்லிப் போனது



60 comments:

  1. இதைத் தங்களின் சுயவிமர்சனம் என்பதை உறுதிபடுத்தி உளம் மகிழுகிறேன்! நன்று..வாழ்த்துகளுடன்!

    ReplyDelete
  2. இலக்கினுள் அடங்கிய அவன் படைப்புகள்
    காலத்தை எளிதாய் கடக்கும் என்பதை
    சூசகமாய்ச் சொல்லிப் போனது

    மிக அழகான வரிகள். த். ம. 3

    ReplyDelete
  3. பெரிய விஷயங்களைச் சொல்கின்றன சின்னச் சின்னக் குறிப்புகள். அருமை.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் உங்களுக்குதான்.

    ReplyDelete
  5. ஒரு மனிதனுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்களை சின்ன சின்ன குறிப்புகளாய் விளக்கிய விதம அருமை ஐயா .

    ReplyDelete
  6. //இலக்கினுள் அடங்கிய அவன் படைப்புகள்
    காலத்தை எளிதாய் கடக்கும் என்பதை
    சூசகமாய்ச் சொல்லிப் போனது//

    இலக்கினுள் அடங்கும் படைப்புகளே என்றும்
    இல்க்கியமாகக்கூடும்.

    அவை காலம் காலமாகப் பலராலும் புகழ்ந்து பேசப்படும். ;)))))

    அழகான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. சின்னச் சின்ன குறிப்புகள்..

    Arumayana pakirvu

    ReplyDelete
  8. சின்னச்சின்ன குறிப்புகள் சொல்லிப் போவது பெரிய பெரிய விஷயங்களை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ரமணி ஐயா,

    கட்டுக்குள் இருந்துக்கொண்டால் எல்லாவற்றிலும் நலமே விழையும் என்பதை அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  10. நல்ல கருத்துள்ள கவி ..!

    ReplyDelete
  11. அவசியமான சின்னச் சின்னக் குறிப்புக்கள்.ஆனால் பெரிய விஷயம் !

    ReplyDelete
  12. அய்யா!
    அழகான விசயங்களை-
    அசால்டாக சொல்லிடீங்க!

    சின்ன குறிப்புகள் அல்ல!
    சிறந்த குறிப்புகள்!

    ReplyDelete
  13. இவை வாழ்க்கை தத்துவங்களை சொல்கிற குறிப்புகள்.

    த.ம - 7

    ReplyDelete
  14. இலக்கினுள் அடங்கிய அவன் படைப்புகள்
    காலத்தை எளிதாய் கடக்கும் என்பதை
    சூசகமாய்ச் சொல்லிப் போனது
    ///


    உண்மை..உண்மை... அருமையான வரிகள் அண்ணா..

    ReplyDelete
  15. சின்னச் சின்னக் குறிப்புகள் என்றாலும்
    உயர்வான வாழ்க்கைக்கு மிகவும் தேவையான குறிப்புகள் ஐயா உங்களின் இந்த படைப்பு.

    ReplyDelete
  16. ஒரு பெரிய கல் யானைக்குத் துரும்பாயும், எறும்புககு மலையாகவும் தெரிவது போல... உங்கள் வார்த்தைகளில் இவை சின்னச் சின்னக் குறிப்புகள். எங்கள் கண்களில் இவை பெரிய பெரிய விஷயங்கள்! அசரவைத்தன என்னை! (த.ம.8)

    ReplyDelete
  17. அறிவிற்கு அகங்காரம் (EGO) விடும் சவால்கள் அத்தனையையும் சில வரிகளிலே அடக்கி இருப்பது உங்களுடைய சாமர்த்தியம்.

    பெரிய பெரிய விஷயங்கள், சின்னச் சின்னக் குறிப்புகள் அல்ல இவை.

    ReplyDelete
  18. வழக்கம் போலவே அசத்தல்.

    ReplyDelete
  19. ரமணி சார் வணக்கம்.

    எப்பவும் மாறாத இளமையுடன் உங்கள் பதிவுகள். எனக்கு ஔவையின் ஆத்திசூடியைப் படிப்பதுபோல இத்துணை எளிமையான எத்துனை ஆழமான செய்திகளைப் பதிவிடுகிறீர்கள். அருமை. வாசிக்க சுகமாக உள்ளது. நலமாக உள்ளது. உங்களை இளைஞர்கள் வாசிக்கவேண்டும் ரமணி சார். தமிழ்மொழீயின் இலக்கியப் பரப்பில் பல்வகைப் புதுமைகள் விரிந்துபோகின்றன. உங்களுக்கென்று ஒரு மைல்கல் உண்டு ரமணி சார்.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. ரமேஷ் வெங்கடபதி //...


    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. Lakshmi s..


    மிக அழகான வரிகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. ராமலக்ஷ்மி //.
    .
    பெரிய விஷயங்களைச் சொல்கின்றன சின்னச் சின்னக் குறிப்புகள். அருமை.//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. மனசாட்சி™ //

    வாழ்த்துக்கள் உங்களுக்குதான் //

    .தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. சசிகலா //
    ஒரு மனிதனுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்களை சின்ன சின்ன குறிப்புகளாய் விளக்கிய விதம அருமை ஐயா //.

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. வை.கோபாலகிருஷ்ணன் //

    அழகான பகிர்வு. பாராட்டுக்கள்//

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. Balaji //

    Arumayana pakirvu //



    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. G.M Balasubramaniam //

    சின்னச்சின்ன குறிப்புகள் சொல்லிப் போவது பெரிய பெரிய விஷயங்களை. வாழ்த்துக்கள் //.

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. சத்ரியன் //...

    கட்டுக்குள் இருந்துக்கொண்டால் எல்லாவற்றிலும் நலமே விழையும் என்பதை அழகாகச் சொன்னீர்கள். //

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. வரலாற்று சுவடுகள் //
    .
    நல்ல கருத்துள்ள கவி ..!//

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. Madhavan Srinivasagopalan //

    Beautiful.. very much meaningful //

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. ஹேமா //

    அவசியமான சின்னச் சின்னக் குறிப்புக்கள்.ஆனால் பெரிய விஷயம் //

    !.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. Seeni //

    சின்ன குறிப்புகள் அல்ல!
    சிறந்த குறிப்புகள்! //

    !.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. கோவை2தில்லி //

    இவை வாழ்க்கை தத்துவங்களை சொல்கிற குறிப்புகள்/


    !.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. பி.அமல்ராஜ் //

    உண்மை..உண்மை... அருமையான வரிகள் அண்ணா..//

    !.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. நான் உங்கள் பதிவை படித்துமுடித்ததும் நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே ரமேஷ் வெங்கடபதி அவர்கள் சொல்லி இருக்கிறார் என்பதை பார்த்தது எனக்கு மிக வியப்பு

    //இதைத் தங்களின் சுயவிமர்சனம் என்பதை உறுதிபடுத்தி உளம் மகிழுகிறேன்///!
    நன்று..வாழ்த்துகளுடன்!

    ReplyDelete
  37. சின்னச் சின்னக் குறிப்புகள் என்று தலைப்பு சொன்னாலும் கவிதை தந்த பொருள் பெரியது.... நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி. [த.ம. 10]

    ReplyDelete
  38. vanathy //
    s.
    வழக்கம் போலவே அசத்தல்.//

    !.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. VENKAT //...


    பெரிய பெரிய விஷயங்கள், சின்னச் சின்னக் குறிப்புகள் அல்ல இவை.//

    !.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. ஹ ர ணி

    உங்களை இளைஞர்கள் வாசிக்கவேண்டும் ரமணி சார். தமிழ்மொழீயின் இலக்கியப் பரப்பில் பல்வகைப் புதுமைகள் விரிந்துபோகின்றன. உங்களுக்கென்று ஒரு மைல்கல் உண்டு ரமணி சார். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டிப் போகும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. கணேஷ் //

    ஒரு பெரிய கல் யானைக்குத் துரும்பாயும், எறும்புககு மலையாகவும் தெரிவது போல... உங்கள் வார்த்தைகளில் இவை சின்னச் சின்னக் குறிப்புகள். எங்கள் கண்களில் இவை பெரிய பெரிய விஷயங்கள்! அசரவைத்தன என்னை!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டிப் போகும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. Avargal Unmaigal //

    நான் உங்கள் பதிவை படித்துமுடித்ததும் நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே ரமேஷ் வெங்கடபதி அவர்கள் சொல்லி இருக்கிறார் என்பதை பார்த்தது எனக்கு மிக வியப்பு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டிப் போகும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. வெங்கட் நாகராஜ் //

    சின்னச் சின்னக் குறிப்புகள் என்று தலைப்பு சொன்னாலும் கவிதை தந்த பொருள் பெரியது.... நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டிப் போகும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. உலக நடைமுறை வரம்புக்கு கட்டு பட்டவன் வாழ்விலும் ஜெயிப்பான் என்பதற்கு உங்க கவிதையே சான்று. படைத்து பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  45. சிறப்பை அடைவத்ற்குச் சிறப்பான குறிப்புகள்
    என் வலைப்பக்கம் வாருங்களேன் --
    http://shravanan.blogspot.in/2012/04/blog-post.html

    ReplyDelete
  46. ரசிக்க வைத்த பதிவு. நான் சொல்ல நினைத்ததை ராமலக்ஷ்மி உட்பட நிறைய பேர் சொல்லி விட்டார்கள்.

    ReplyDelete
  47. சுருக்கமாக சொல்லியது பெரியவிடயத்தை மிகவும் தேவை இந்தக் குறிப்புக்கள் ஐயா. நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  48. சின்னச் சின்னக் குறிப்புகள்
    பென்னம் பெரிதாக மனதில் இறங்கின.
    எல்லோரும் இப்படிச் சிறு
    சிறு பதிவுகளாகப் போட்டால்
    நாம் இன்னும் நிறைய
    தளங்கள் வாசிக்கலாமே!
    மிக அருமைப் பதிவு!
    வாழ்த்துகள்!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  49. ராஜி //

    உலக நடைமுறை வரம்புக்கு கட்டு பட்டவன் வாழ்விலும் ஜெயிப்பான் என்பதற்கு உங்க கவிதையே சான்று. படைத்து பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டிப் போகும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. மதுரை சொக்கன் //
    ..
    சிறப்பை அடைவத்ற்குச் சிறப்பான குறிப்புகள் //

    தங்கள் பதிவுப் பூங்காவினுள் நுழைந்தேன்
    அனவரும் அவசியம் படித்துப் பயனுறவேண்டிய
    அருமையான பதிவுகளாக உள்ளன
    தங்க்ள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. ஸ்ரீராம். //


    தங்க்ள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. தனிமரம் //

    சுருக்கமாக சொல்லியது பெரியவிடயத்தை மிகவும் தேவை இந்தக் குறிப்புக்கள் ஐயா. நன்றி பகிர்விற்கு //

    .தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டிப் போகும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. மோகன் குமார் //
    .
    Arumai //

    தங்க்ள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. kovaikkavi //


    சின்னச் சின்னக் குறிப்புகள்
    பென்னம் பெரிதாக மனதில் இறங்கின.
    எல்லோரும் இப்படிச் சிறு
    சிறு பதிவுகளாகப் போட்டால்
    நாம் இன்னும் நிறைய
    தளங்கள் வாசிக்கலாமே!
    மிக அருமைப் பதிவு! //

    தங்க்ள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. வெகு அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.நன்று நன்று.

    ReplyDelete
  56. ஸாதிகா //


    வெகு அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.நன்று நன்று.//

    தங்க்ள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete