Wednesday, June 6, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்(சிவாஜி)3

முதல் மரியாதை படம் வெளியான சமயம்
நடிகர் திலகம் அவர்கள்  அளித்தபே ட்டியில்
குறிப்பிட்ட பல்வேறு அதி முக்கிய விஷ்யங்களில்
இது மிக முக்கியமானது

"இப்போது இருக்கிற இயக்கு நர்கள்
இப்போது க்ளோசப்தான் எடுக்கிறோம்
முக பாவனை மட்டும் இப்படி இருந்தால் போதும்
என்கிற மாதிரிச் சொல்லி சூட் செய்கிறார்கள்
உடல் முழுவதும் நடிக்காமல்
முகம் மட்டும் நடிக்கச் சாத்தியமா ?
மன்னன் என்று சொன்னால் கால நுனி முதல்
உச்சம் தலைவரை வரை மன்னனாக
இருத்தல் தானே சரி. "எனச் சொல்லி
இடது காலைதரையில் அழுத்தி ஊன்றி
நெஞ்சை நிமிர்த்திகம்பீரமாகப் பார்த்தபோது
அங்கே ஒரு நொடியில் நடிகர் திலகம் மறைந்து போய்
ஒரு சக்கரவர்த்தி அங்கே அமர்ந்திருந்தார்

இப்படி ஒரு கதாபாத்திரம் என்றால்
அதுவாகவே அனைத்திலுமாக மாறிப்போகும்
அசாத்திய வல்லமை படைத்திருந்ததால்தானே
இன்றுவரை நடிப்பிற்குஒரு இலக்கண நூலாக
நடிகர் திலகம் அவர்களின் படங்கள்
விளங்கிக் கொண்டிருக்கின்றன

ஆலயமணியில் நண்பனுடன் வெளியே போன
மனைவியை சந்தேகித்து அந்த ஈசி சேரில்
வெறிகொண்டு அமர்ந்திருக்கையில்
ஒரு வெறிபிடித்த சிங்கத்தை நினைவுறுத்தும் காட்சி..

பாபுவில் மிகக் கடினப்பட்டு பள்ளிக்காண கட்டணத்தை
கட்ட வகுப்பு வகுப்பாகத்தேடி அலைந்து முடிவில்
துணியில் முடிந்து வைத்த காசுகளைக் கொடுக்கையில்
அந்த்ச் சிறுபெண் ஏன் இங்கே வந்தீர்கள்
எனக் கேட்கையில் முகத்தில் காட்டும் மனோபாவம்...

பாசமலரில் மனம் வெறுத்து வெளியேறி
ஊர் உலகெல்லாம் சுற்று மீண்டும் வீடு நுழைகையில்
நான் உள்ளே போகலாம என அவர் வீட்டு வாட்ச்மேனிடமே
கேட்கும் அந்த நொடி..

 கவரிமானில் தனது ஆசைமனைவியை அடுத்தவனுடன்
 கட்டிலில் பார்த்ததும் கொண்ட அதிர்ச்சியை
வெளிப்படுத்தும் வித்தியாசமான நடிப்பில்

அப்பராகவே திருவருட்செல்வரில்...
வ.வூ. சி யாக்வே கப்பலோட்டிய தமிழனில்

 பதறவைக்கும்வில்லனாக அந்த நாளில்,
பெண்ணின் பெருமையில், ரங்கோன் ராதாவில்

இப்படியே சொல்லிக் கொண்டு போனால்
குறைந்த பட்சம் ஐம்பது படங்களையாவது
நிச்சயம் சொல்லவேண்டி இருக்கும்

சுருக்கமாகச் சொன்னால் சிவாஜி நடித்த
 மோசமான படங்கள் உண்டு
ஆனால் சிவாஜி மோசமாக நடித்த படம்
 ஒன்று கூட நிச்சயம்   இல்லை என
உறுதியாகக் கூ றலாம்

இப்படி நடிப்பின் அனைத்து அம்சங்களையும்
விரல் நுனியில் வைத்திருந்தவர்
நடிப்பைப் பொருத்தவரை ஒரு
சர்வகலாசாலையாகவே விளங்கியவர்
சினிமா அரசியல் குறித்தும்
அரசியல் பித்தலாட்டங்கள் குறித்தும்
அதிகம் அறிந்து கொள்ளவிரும்பாததாலோ
என்னவோஒருசினிமாவை இயக்கவோ
குறைந்த பட்சம்ஒரு சட்டமன்ற
 உறுப்பினராகவோ ஆகக் கூட
கடைசிவரையில் முடியாமலே போனது

 இதற்கு நேர்மாறாக சினிமா குறித்தும்
அரசியல் குறித்தும் மிகத் தெளிவான கருத்தை
கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்
அதனால்தான் அவரால் ரிக்சாக் காரனுக்கு
சிறந்த நடிகருக்கான அவார்டையும்
மூன்று படங்களை தயாரித்து இயக்கவும்
ஒரு மா நிலத்தின் முதல்வராகவும் ஆக முடிந்தது
என்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை

(தொடரும் )


46 comments:

  1. நடிப்பின் சிகரம் என்று கூறுவதில் தப்பில்லை என்றுதான் அந்த சிறப்புப் பெயரை அவருக்கு வைத்திருக்கிறார்கள் போலும்...

    ReplyDelete
  2. நல்ல அலசல்....

    தொடர்கிறேன்....

    த.ம. 2

    ReplyDelete
  3. இந்த தொடரை நான் தவற விட்டு விட்டேன் ரமணி சார்...தொடருங்கள்...

    ReplyDelete
  4. என் அப்பாவுக்கு சிவாஜி மிகவும் பிடித்த நடிகர். நல்ல அலசல்.

    ReplyDelete
  5. சிவாஜி மனைவி இறந்த காட்சியில் அழுதுபுலம்பி சோகமாக நடித்துவிட்டு வந்து சோவிடம் எப்படி என் நடிப்பு என்று கேட்க அவர் இத்தனை மிகை நடிப்பு தேவையா என்றிருக்கிறார். உடனே சிவாஜி அதே காட்சியை மிக இயல்பாக நடித்துக் காட்டிவிட்டு, நீர்தான் ஜாக்ஸன் துரையோ காட்சியையும் இயல்பாக நடித்துக் காட்டி சோவை அசத்திவிட்டு சொன்னாராம். இப்படி நடிச்சா நீ ஒருத்தன்தான் ரசிப்பே. அப்படி நடிச்சாத்தான் எல்லாரும் ரசிப்பாங்க என்று. நடிப்பை அளந்து வைத்திருந்தார் சிவாஜீ. மக்களின் ரசனையை அளந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். சுவையான உங்கள் அலசல் தொடரட்டும். (த.ம.4)

    ReplyDelete
  6. நல்ல அலசல்!விசில் பார்ட்டிகள் எல்லாம் எம்ஜிஆர் பின்னால் சென்றனர்! நடிப்பின் ரசிகர்கள் எல்லாம் சிவாஜி பக்கம்! இறுதியில் விசில்களே எண்ணிக்கையில் அதிகம்!

    ReplyDelete
  7. சிவாஜி பற்றிய அலசல்கள் நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. சிவாஜியை சினிமா பயன்படுத்திகொண்டது..
    எம்.ஜி.ஆரோ,சினிமாவைப்பயன்படுத்திக்கொண்டார்.

    சிவாஜி, ரசிகனின் அறிவைத்தொட்டார். எம்.ஜி.ஆரோ,ரசிகனின் மனதைத்தொட்டார்...

    முடிவாக மற்றும் முக்கியமாக..
    முன்னவருக்கு காமிராவின் பின்னால் நடிக்கத்தெரியாது..

    ReplyDelete
  9. நன்றாக ரசிக்கிறீர்கள். நன்றாக விமர்சனமும் செய்கிறீர்கள். உங்களின் பதிவுகள் பொதுவாக வாசிக்க சுகம் தருபவை. சுவையானவை.

    ReplyDelete
  10. நான் ரமேஷ் வெங்கடபதி ,கண்பத் கூட்டு சேர்ந்துக்கிறேன்.

    ReplyDelete
  11. சிவாஜி அரசியலில் முன்னேற முடியாததற்கு காரணம் மிக மிக சுயநலவாதியாக இருந்து கையில் உள்ள காசை செலவழிக்காமல் இருந்ததுதான் . மீனை தூண்டில் பிடிக்க வேண்டுமென்றால் அதில் அதை பிடிப்பத்ற்கென புழுவையும் சேர்த்து விசினால்தான் பிடிக்க முடிய்ம் என்ற சூத்திரம் தெரியாதவர் அதனால்தான் சட்ட மன்ற உறுப்பினராக கூட ஆக முடியவில்லை

    ReplyDelete
  12. @அவர்கள் உண்மைகள்

    உண்மையை புட்டுபுட்டு வைக்கிராரே .. ?

    ReplyDelete
  13. சிவாஜிக்கு மட்டுமே நடிக்க தெரிந்தது, எம்ஜிஆருக்கு நடிக்க தெரியவில்லை என்று பேசுவதெல்லாம், மிகை நடிப்பின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பே.

    கண்கலங்க வைக்கும் நடிப்பினையே நடிப்பு என ந்ம்புவது எல்லாம் இந்திய மனோபாவம்.

    மற்றபடி இருவரின் பொதுவாழ்வு வெற்றிக்கு பின்னால் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம், கதையமைப்பும் ஒரு காரணம்.

    சிவாஜி-மைக்ரோ சப்ஜெக்ட். பெரும் பணக்காரராக நடித்தாலும் அவரது குடும்ப பிரச்சினைகளையே கதை பேசும்.

    பொண்டாட்டி கூட மனஸ்தாபம், பையன் பிரச்சினை ,அப்பா,அம்மா என ஹீரோவோட குடும்பம் அது சார்ந்தே கதை நகரும்.ஹீரோ பாடுபடுவது எல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்காக என்பதாக இருக்கும்.

    எம்ஜிஆர்- மேக்ரோ சப்ஜெக்ட்.

    ரிக்‌ஷாகாரனாக நடிச்சாலும் அவரோட சொந்த பிரச்சினைகளை கதை பேசாது.ஊரார் பிரச்சினைகளையே ஹீரோ தீர்த்துவைப்பார்.ஹீரோவின் உழைப்பு ஊராருக்காக என்பதாக இருக்கும்.

    பெரும்பாலும் அடித்தட்டு மக்களில் ஒருவராக கதாபாத்திரம் அமையும்.

    உ.ம்:ரிக்‌ஷாகாரன், படகோட்டி, மீனவ நண்பன்,விவசாயி.

    எனவே ஊருக்கு உழைப்பவர் என இமேஜ் படங்களில் உருவானது. அதை சொந்த வாழ்விலும் கட்டிக்காத்தார்.

    சிவாஜி சொந்த வாழ்வில் நடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டால் பின் எதற்கு அவருக்கு பொது வாழ்வில் எதுவும் கிடைக்கவில்லை என குறைப்பட்டுக்கொள்ள வேண்டும்.

    எம்ஜிஆர் வீட்டுக்கு யார் போனாலும் சாப்பிட சொல்வார் ,கொடுத்து சிவந்தவர் என்றெல்லாம் இமேஜ் உண்டு.

    சிவாஜி வீட்டுக்கு யாரும் செல்லவும் முடியாது,கொடுப்பவர் என்ற பெயரும் இல்லை.ஒரு நடிகராக ரசிகர்களை படம் ஓட மட்டும் பயன்ப்படுத்திக்கொண்டார்.

    இன்றும் பல ஹீரோக்களின் ஃபார்முலா எம்ஜிஆர் ஃபார்முலா தான் என்பதை கவனிக்க வேண்டும்.

    யாராவது மூஞ்சில ஒன்றரை கிலோ மேக் அப் போட்டுக்கொண்டு நடித்தால் சிவாஜி ஃபார்முலா :-)).

    ReplyDelete
  14. பே ட்டியில் .. கொஞ்சம் நீளமான பேட்டியோ...! :))
    சிவாஜியைப் பற்றிச் சொல்லியிருப்பதும் கடைசியில் எம் ஜி ஆராயத் தொட்டிருப்பதும் சுவாரஸ்யம் ப்ளஸ் ஆவலைக் கூட்டுகிறது.

    கணேஷின் பின்னூட்டமும் சுவை. கண்பத் பின்னூட்டமும்.

    எம் ஜி ஆர் 'ஒரு காலம் வரும் ஏன் கடமை வரும்..' என்று திட்டம் போட்டு உழைத்தார். இருவரும் ஒரே மாதிரி நடித்திருந்தால் சுவையும் இல்லை, வெற்றியும் இல்லை, இன்று விவாதமும் இல்லை!

    சிவாஜி பற்றி நீங்கள் சொல்லியுள்ள வரிகளுக்கு அப்பாதுரை பின்னூட்டத்தை எதிர்பார்த்து... [த் ம ஓட்டெல்லாம் எப்போதுமே போட்டு விடுவேன்! :))) ]

    ReplyDelete
  15. சிட்டுக்குருவி //
    .
    நடிப்பின் சிகரம் என்று கூறுவதில் தப்பில்லை என்றுதான் அந்த சிறப்புப் பெயரை அவருக்கு வைத்திருக்கிறார்கள் போலும்...//

    தங்கள் முதல் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. வெங்கட் நாகராஜ் //

    நல்ல அலசல்....
    தொடர்கிறேன்....//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. ரெவெரி //
    .
    இந்த தொடரை நான் தவற விட்டு விட்டேன் ரமணி சார்...தொடருங்கள் //

    தங்களின் விரிவான பின்னூட்டத்தை எதிர்பார்த்திருக்கிறேன்
    தங்கள் வரவுக்கு நன்றி

    ReplyDelete
  18. vanathy //

    என் அப்பாவுக்கு சிவாஜி மிகவும் பிடித்த நடிகர். நல்ல அலசல்.//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. .பா.கணேஷ் //

    இப்படி நடிச்சா நீ ஒருத்தன்தான் ரசிப்பே. அப்படி நடிச்சாத்தான் எல்லாரும் ரசிப்பாங்க என்று. நடிப்பை அளந்து வைத்திருந்தார் சிவாஜீ. மக்களின் ரசனையை அளந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். சுவையான உங்கள் அலசல் தொடரட்டும் //

    தங்களின் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. ரமேஷ் வெங்கடபதி //

    நல்ல அலசல்!விசில் பார்ட்டிகள் எல்லாம் எம்ஜிஆர் பின்னால் சென்றனர்! நடிப்பின் ரசிகர்கள் எல்லாம் சிவாஜி பக்கம்! இறுதியில் விசில்களே எண்ணிக்கையில் அதிகம்!//

    தங்களின் மனம் திறந்த
    அருமையான பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. Lakshmi //

    சிவாஜி பற்றிய அலசல்கள் நல்லா இருக்கு.//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. Ganpat //

    சிவாஜி, ரசிகனின் அறிவைத்தொட்டார். எம்.ஜி.ஆரோ,ரசிகனின் மனதைத்தொட்டார்...//

    ஒரு கட்டுரையில் சொல்லி முடிக்கவேண்டியதை மிக அழகாக
    ஒரு சொற்றொடரில் சொல்லி முடித்தது அருமை

    தங்க்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. ஹ ர ணி //

    நன்றாக ரசிக்கிறீர்கள். நன்றாக விமர்சனமும் செய்கிறீர்கள். உங்களின் பதிவுகள் பொதுவாக வாசிக்க சுகம் தருபவை. சுவையானவை.//

    தங்களால் பாராட்டப்படுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. கோவை நேரம் //

    நல்ல தகவல்கள் //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. ராஜ நடராஜன் //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. .Avargal Unmaigal //

    மீனை தூண்டில் பிடிக்க வேண்டுமென்றால் அதில் அதை பிடிப்பத்ற்கென புழுவையும் சேர்த்து விசினால்தான் பிடிக்க முடிய்ம் என்ற சூத்திரம் தெரியாதவர் //

    தங்கள் பதிவுகளைப் போலவே
    வித்தியாசமான அருமையான உண்மையான
    கருத்தைச் வலியுறுத்திப்போகும்
    பின்னூட்டம் அருமை,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. வரலாற்று சுவடுகள் //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. சிவாஜி
    நடிப்பில் (மட்டும் ) மாமேதை

    எம் ஜி ஆர்
    மனிதத்தில் மாமேதை

    ஐந்தாண்டு
    சினிமா தேடல் வாழ்கையில் கேட்டு உணர்ந்தது

    நல்ல அலசல் சார்

    ReplyDelete
  29. நல்ல தகவல்களைத் தரும் தங்கள் அரட்டை தொடரட்டும் ஐயா . தொடர்கிறோம் .
    Tha.ma.7

    ReplyDelete
  30. நடிப்பின் சிகரத்தைப் பற்றிய இன்றைய அரட்டை
    மிகக் கச்சிதமாக இருந்தது...
    "முதல் மரியாதை" படத்தின் நடிகர் திலகத்தின்
    இயல்பான நடிப்பு நெஞ்சில் ரீங்காரமிடும் ...

    இலக்கணம் வகுத்த மாபெரும் நடிகர்
    அவரின் சிரத்தை இன்றுள்ளோருக்கு
    கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..

    ReplyDelete
  31. நடிக்கும்போது நடிப்பதுபோல் தோன்றக் கூடாது. சிவாஜி கணேசன் நடித்த படங்களை இப்போது பார்த்தால் பெரும்பாலான படங்களில் அவர் மிகைப் படுத்தியே நடித்தார் என்று புரியும். எம்ஜீயார் படங்களை இப்போது பார்க்கும் போது எல்லாமே காமெடியாகத்தான் தெரிகிறது. மற்றபடி இருவருமே அவர்களுக்கென்று ஒரு இமேஜ் வளர்த்துக் கொண்டார்கள். சிவாஜி கணேசன் திருப்பதிக்குப் போய் வந்தார், திராவிட கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டார் என்றும் அதனாலேயே அவருக்கு எதிராக ஒரு கும்பல் அவரைத் தூற்றிக் கொண்டு இருந்திருக்கிறது. காங்கிரசில் செர்ந்து அரசியல் செல்வாக்கு தேட முயன்றார். தோல்வி அடைந்தார். காங்கிரெஸ்ஸே தோற்று விட்டதே. நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  32. வவ்வால் //

    சிவாஜிக்கு மட்டுமே நடிக்க தெரிந்தது, எம்ஜிஆருக்கு நடிக்க தெரியவில்லை என்று பேசுவதெல்லாம், மிகை நடிப்பின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பே.

    கண்கலங்க வைக்கும் நடிப்பினையே நடிப்பு என ந்ம்புவது எல்லாம் இந்திய மனோபாவம்.//

    தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களுமே அருமை
    ஒரு பதிவிற்குரிய விஷய கனமும்
    பரந்த விஷய ஞானமும் பிரமிக்கச் செய்கிறது
    தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    மற்றபடி இருவரின் பொதுவாழ்வு வெற்றிக்கு பின்னால் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம், கதையமைப்பும் ஒரு காரணம்.

    ReplyDelete
  33. செய்தாலி //

    ஐந்தாண்டு சினிமா தேடல் வாழ்கையில் கேட்டு உணர்ந்தது நல்ல அலசல் சார் //

    வித்தியாசமான அருமையான உண்மையான
    கருத்தைச் வலியுறுத்திப்போகும்
    பின்னூட்டம் அருமை,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. Sasi Kala //
    .
    நல்ல தகவல்களைத் தரும் தங்கள் அரட்டை தொடரட்டும் ஐயா . தொடர்கிறோம் .//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. மகேந்திரன் //
    .
    நடிப்பின் சிகரத்தைப் பற்றிய இன்றைய அரட்டை
    மிகக் கச்சிதமாக இருந்தது...//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. G.M Balasubramaniam //


    நடிக்கும்போது நடிப்பதுபோல் தோன்றக் கூடாது. சிவாஜி கணேசன் நடித்த படங்களை இப்போது பார்த்தால் பெரும்பாலான படங்களில் அவர் மிகைப் படுத்தியே நடித்தார் என்று புரியும். எம்ஜீயார் படங்களை இப்போது பார்க்கும் போது எல்லாமே காமெடியாகத்தான் தெரிகிறது. மற்றபடி இருவருமே அவர்களுக்கென்று ஒரு இமேஜ் வளர்த்துக் கொண்டார்கள்//

    தங்களின் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. கோவி //
    .
    sivaji.. great ji..//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. ***இதற்கு நேர்மாறாக சினிமா குறித்தும்
    அரசியல் குறித்தும் மிகத் தெளிவான கருத்தை
    கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்
    அதனால்தான் அவரால் ரிக்சாக் காரனுக்கு
    சிறந்த நடிகருக்கான அவார்டை***

    எனக்கு இன்னும் புரியவில்லை, எம் ஜி ஆருக்கு நடிக்கத் தெரியும்னு நம்புறது சரி. ஏன்னா கேமரா முன்னால நின்னு என்ன செஞ்சாலும் நடிப்புத்தான்! ஆனால் இந்த ரிக்ஷாக்காரன்ல அவரு நடிச்ச நடிப்புக்கு இந்த தேசிய விருதுனு கேலிக்கூத்து பண்ணியிருக்காங்களே, அந்த கமிட்டில இருந்த காமெடியனுகள் யாரு யாருனு வெளியிட்டாங்கனா நல்லாயிருக்கும்.

    எந்த அடிப்படையில் இந்த தேசிய விருது வழங்கப்பட்டது?

    யாராவது ஒர் வலையுலக மேதை விளக்கினால் நல்லாயிருக்கும்!

    சிவாஜி, முகமெல்லாம் மேக்-அப் போட்டாராம், மேக்-அப் பே போடாமல் எம் ஜி ஆர் விக் வைக்காமல் நடிச்சாராம்!! ஆமா எந்த எம் சி ஆர் பத்தி பேசுறாங்க இங்கே? :))

    ReplyDelete
  39. மிக அருமையான அலசல். தொடருங்கள்

    ReplyDelete
  40. "சிவாஜி நடித்த மோசமான படங்கள் உண்டு
    ஆனால் சிவாஜி மோசமாக நடித்த படம்
    ஒன்று கூட நிச்சயம் இல்லை"

    -அருமையான பதிவு

    S.R.Seshan...

    ReplyDelete
  41. வருண் //

    எனக்கு இன்னும் புரியவில்லை, எம் ஜி ஆருக்கு நடிக்கத் தெரியும்னு நம்புறது சரி. ஏன்னா கேமரா முன்னால நின்னு என்ன செஞ்சாலும் நடிப்புத்தான்! ஆனால் இந்த ரிக்ஷாக்காரன்ல அவரு நடிச்ச நடிப்புக்கு இந்த தேசிய விருதுனு கேலிக்கூத்து பண்ணியிருக்காங்களே, அந்த கமிட்டில இருந்த
    காமெடியனுகள் யாரு யாருனு வெளியிட்டாங்கனா நல்லாயிருக்கும்.
    எந்த அடிப்படையில் இந்த தேசிய விருது வழங்கப்பட்டது?
    யாராவது ஒர் வலையுலக மேதை விளக்கினால் நல்லாயிருக்கும்!


    தங்கள் தார்மீகக் கோபம் மிகச் சரியே
    அதையே ரிக்சாக்காரனுக்கு சிறந்த நடிகருக்கான
    அவார்ட் கொடுக்கப்பட்டதைஒரு உறுத்தும் செய்தி போலகுறிப்பிட்டிருந்தேன்.அந்த ஆண்டுதான்
    பாபு படமும் வந்த ஞாபகம்
    சிவாஜி அந்தப் படத்தில் நடிப்பில் பல உச்சங்க்களைத்
    தொட்டிருப்பார்..நான் அடுத்த பதிவில்
    குறிப்பிட்டிருப்பதைப் போல
    இரண்டு வீறு மிக்க குதிரைகளில் லாவகமாக
    பயணிக்கும் சூட்சுமமும் ஒன்றில் உள்ள செல்வாக்கை
    அடுத்ததில் சரியாகப் பயன்படுத்திக்கிக் கொள்ளும்
    ராஜ தந்திரமும் (?)அவரிடம்தான் இருந்தது
    தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. ஸ்ரீராம். //

    எம் ஜி ஆர் 'ஒரு காலம் வரும் ஏன் கடமை வரும்..' என்று திட்டம் போட்டு உழைத்தார். இருவரும் ஒரே மாதிரி நடித்திருந்தால் சுவையும் இல்லை, வெற்றியும் இல்லை, இன்று விவாதமும் இல்லை!//

    இந்தக் கருத்தைமிகச் ச்ரியாகச் சொல்லத்தான்
    புரட்சித் தலைவர் குறித்து மட்டும் இரண்டு பதிவுகள்
    எழுதி உள்ளேன்

    தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. சிவகுமாரன் //

    மிக அருமையான அலசல். தொடருங்கள் //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. S.R.Seshan...//

    "சிவாஜி நடித்த மோசமான படங்கள் உண்டு
    ஆனால் சிவாஜி மோசமாக நடித்த படம்
    ஒன்று கூட நிச்சயம் இல்லை"

    -அருமையான பதிவு

    இந்தப் பத்தியை யாராவது குறிப்பிட்டுச் சொல்லமாட்டார்களா
    என்கிற ஆதங்கம் எனக்கு அதிகம் இருந்தது
    மிகச் சரியாக கவனித்து பாராட்டியமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete