Saturday, June 23, 2012

பிரிதலும் பிரித்தலும், இணைதலும் இணைத்தலும்

பிரிதலுக்கும்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது

பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை

பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு

ஜாதி மதத்தில் இருந்து பிரித்து
இனத்தில் சேர்த்தவனாயினும்
இனத்திலிருந்து பிரித்து
தேசீயத்தில் சேர்த்தவனாயினும்
தேசீயத்திலிருந்து பிரித்து
வர்க்கத்தில் இணைத்தவனாயினும்...

அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்
அதிகப் பங்குகொண்டவன்
அவனாகத்தான் இருக்கிறான்
நிகழ்வில்
பங்கேற்பவனாக மட்டுமே நாமிருக்கிறோம்
பலனடைபவன் அவனாயிருக்கிறான்

இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில்  இனியேனும்
சுயமாய்  இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்

75 comments:

  1. சார் யார் மேலே கோபம்?

    ReplyDelete
  2. மிகமிக உண்மை. முடிவெடுப்பதில் சுயமாய் இருத்தலே நலம். அருமையாக உண்மையை உரைத்து மனம் கவர்ந்தது கவிதை.(3)

    ReplyDelete
  3. பிரிதலோ இணைதலோ
    முடிவெடுப்பதில் இனியேனும்
    சுயமாய் இருப்போம்//

    ந‌ன்றாக‌ச் சொன்னீர்க‌ள்; ந‌ய‌மாக‌வும்!

    ReplyDelete
  4. மோகன் குமார்//

    சார் யார் மேலே கோபம்?//

    புதிய மின் கட்டண ரீடிங் இன்றுதான் எடுத்தார்கள்
    அதுவாக இருக்கும் என நினைக்கிறேன்

    தங்கள் முதல் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. பா.கணேஷ் //

    மிகமிக உண்மை. முடிவெடுப்பதில் சுயமாய் இருத்தலே நலம். அருமையாக உண்மையை உரைத்து மனம் கவர்ந்தது கவிதை//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் //


    கவிதை பலவற்றை யோசிக்க வைக்குது ! நன்றி சார்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  7. உண்மை! திணிகப்படும் கருத்துகள், அயல் ஆக்கங்களின் தாக்கங்கள் வலிகளையே பரிசாகத் தரும்!

    ReplyDelete
  8. நிலாமகள் //

    ந‌ன்றாக‌ச் சொன்னீர்க‌ள்; ந‌ய‌மாக‌வும்!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  9. ரமேஷ் வெங்கடபதி //

    உண்மை! திணிகப்படும் கருத்துகள், அயல் ஆக்கங்களின் தாக்கங்கள் வலிகளையே பரிசாகத் தரும்//!

    நான் பதிவில் சொல்ல முயன்றது அதுவே
    அதை மிக மிக அழகாகவும் சுருக்கமாகவும்
    நேர்த்தியாகவும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தியமைக்கு
    மனமார்ந்த நன்றி

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. அப்பத்தை பங்கிடும் குரங்குகளின் அப்பட்டமான பக்கங்களையும் திணித்தல்களுக்கு ஆளாகி சுயத்தை இழக்கும் முகங்களையும் ஓரெழுத்து வித்தியாசம் கொண்ட வார்த்தைகளைப் பின்னி வெளிச்சப் படுத்தியமை நன்று

    ReplyDelete
  11. இழப்பதற்கு ஏதுமில்லாத கோவணாண்டியாக இருக்கும்போதுதான் சுயமாய் சிந்திக்க வேண்டுமா.?

    ReplyDelete
  12. இழப்பதற்கு கோவணம் தவிர
    ஏதுமில்லையாயினும்
    பிரிதலோ இணைதலோ
    முடிவெடுப்பதில் இனியேனும்
    சுயமாய் இருப்போம்
    சுய நலப் பிண்டங்களை
    இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்

    அர்த்தமுள்ளவரிகள்.

    ReplyDelete
  13. raji //

    ஓரெழுத்து வித்தியாசம் கொண்ட வார்த்தைகளைப் பின்னி வெளிச்சப் படுத்தியமை நன்று//

    மிகச் சரியாக படைப்பறிந்து பின்னூட்டமிட்டமைக்கு
    மனமார்ந்த நன்றி.எப்போதும் ஒரு நிகழ்வு ஒரு உணர்வு
    அல்லது ஒரு சொல் என்னப் பாதிக்க அதனை
    நுனியாகக் கொண்டு யோசிக்கத் துவங்குவேன்
    பிரிதலும் பிரித்தலிலும் உள்ள ஒரெழுத்து மாற
    அதன்அர்த்தம் அடியோடு மாறுவது ஆச்சரியமளித்தது
    அதன் தொடர்சியாகப் போக இது பிறந்தது
    தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. G.M Balasubramaniam //

    இழப்பதற்கு ஏதுமில்லாத கோவணாண்டியாக இருக்கும்போதுதான் சுயமாய் சிந்திக்க வேண்டுமா.?

    ஞான்ம் பிறந்ததும் அனைத்தையும் தூர எறிந்து
    கோவணாண்டியாக வேண்டும் அல்லது
    அனைத்தையும் இழந்து கோவணாண்டியாக ஆனபின்
    ஞானம் பெறவேண்டும்
    இங்கு இந்த் இரண்டு சாத்தியங்கள் தானே இருக்கிறது
    தங்கள் வரவுக்கும் சிந்திக்கச் செய்யும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. Lakshmi //


    அர்த்தமுள்ளவரிகள்.//

    தங்கள் வரவுக்கும் உற்சாக்மூட்டிப் போகும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. சூப்பரா இருக்கு.

    //புதிய மின் கட்டண ரீடிங் இன்றுதான் எடுத்தார்கள்
    அதுவாக இருக்கும் என நினைக்கிறேன்//

    ஓ அது தான் காரணமா?!

    ReplyDelete
  17. வித்தியாசமாக இருக்கிறது

    tha.ma 6

    ReplyDelete
  18. பிரிதல் பிரித்தல் வித்தியாசப் படுத்திய விதம் அருமை

    ReplyDelete
  19. ஆஹா.....என்னா ஒரு கவி...

    ReplyDelete
  20. தலைப்பு போட மறந்துட்டீங்களோ....இல்லை தெரிந்து தான் விட்டீர்களோ....

    ReplyDelete
  21. பிரித்தல் இணைத்தல்
    சோகமானதோ சுகமானதோ
    இதில் வன்முறையுண்டு
    கொள்கைத் திணிப்புண்டு
    அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு

    சுயம் உணர்த்தும் உன்னத கவிதை ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
  22. //இழப்பதற்கு கோவணம் தவிர
    ஏதுமில்லையாயினும்
    பிரிதலோ இணைதலோ
    முடிவெடுப்பதில் இனியேனும்
    சுயமாய் இருப்போம்
    சுய நலப் பிண்டங்களை
    இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்//

    நல்ல வரிகள்.... மோகன் குமார் கேட்ட கேள்வியே என் மனதிலும் இருந்தது.... அவருக்குச் சொன்ன பதில் படித்தேன். அதனால் கேட்கவில்லை....

    ReplyDelete
  23. எல்லாமே அந்த “த்“ செய்யிற வேலை என்பதை நன்றாகவே புரிய வைத்தீர்கள் ரமணி ஐயா.

    ReplyDelete
  24. பிரிதல் இணைதல் என்று இரண்டிருக்குறதா ?? இல்லை இரண்டில் ஒன்றின் இல்லாமைதான் இன்னொன்றா ??

    ReplyDelete
  25. பெயர்தான் ஜனநாயக நாடு. பெரும்பாலும் 'எல்லாம்' ஜனங்கள் மேல் திணிக்கப் படுபவையாகவே இருக்கின்றன.

    ReplyDelete
  26. பிரிதலும் பிரித்தலும் இனைதலும் இணைத்தலும் சுய லாபத்திற்காகவே செய்யப்படுகின்றன.நல்ல ஒப்பீடு.

    ReplyDelete
  27. இழப்பதற்கு கோவணம் தவிர ஏதுமில்லை/

    ReplyDelete
  28. ரமணி ஐய்யா,
    எப்போதும் போல் சமூக விழிப்புணர்வு ததும்பும் கருத்துக்களுடன் சிறப்பான ஆக்கம்.

    ReplyDelete
  29. நல்ல ஆழமா கருத்துகளை தாங்கி நிற்கும் கவிதை.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. தன் வினை பிற வினை வேறுபாடு வைத்து மிகவும் அருமையான, ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு!நன்று
    த ம ஓ 10

    சா இராமாநுசம்

    ReplyDelete
  31. vanathy //

    சூப்பரா இருக்கு.//

    தங்கள் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. வரலாற்று சுவடுகள் //

    வித்தியாசமாக இருக்கிறது //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. சீனு //

    பிரிதல் பிரித்தல் வித்தியாசப் படுத்திய விதம் அருமை//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. சிட்டுக்குருவி //
    .
    தலைப்பு போட மறந்துட்டீங்களோ....இல்லை தெரிந்து தான் விட்டீர்களோ...//

    மறந்துதான் போனேன்
    தங்கள் பதிவு பார்த்து இப்போது
    சரி செய்துவிட்டேன் நன்றி
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. இராஜராஜேஸ்வரி //

    சுயம் உணர்த்தும் உன்னத கவிதை
    ! பாராட்டுக்கள் !//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. இழப்பதற்கு கோவணம் தவிர
    ஏதுமில்லையாயினும்
    பிரிதலோ இணைதலோ
    முடிவெடுப்பதில் இனியேனும்
    சுயமாய் இருப்போம்
    சுய நலப் பிண்டங்களை
    இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்ஃஃஃஃஃஃஃஃஃஃ

    உணர வைத்த கவிதை இது.வாழ்த்துக்கள் சொந்தமே...

    ReplyDelete
  37. பிரித்தல் இணைத்தல்
    சோகமானதோ சுகமானதோ
    இதில் வன்முறையுண்டு
    கொள்கைத் திணிப்புண்டு
    அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு//

    வாவ் என்னே வார்த்தை பிரயோகம் மிகவும் ரசித்தேன் குரு....!!!

    ReplyDelete
  38. ""பிரித்தல் இணைத்தல்
    சோகமானதோ சுகமானதோ
    இதில் வன்முறையுண்டு
    கொள்கைத் திணிப்புண்டு
    அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு""
    முற்றிலும் உண்மை.பொருட்செறிவான கருத்து.
    உங்கள் கோட்டையான கவிதைக்குவந்துவிட்டீர்கள்.
    தூள் கிளப்புங்கள். மிக்க நன்றிசார்.

    ReplyDelete
  39. வரிகள் அனைத்தும் மிகவும் அர்த்தமுள்ளவையாக உள்ளன

    ReplyDelete
  40. வெங்கட் நாகராஜ்//

    நல்ல வரிகள்.... மோகன் குமார் கேட்ட கேள்வியே என் மனதிலும் இருந்தது.... அவருக்குச் சொன்ன பதில் படித்தேன். அதனால் கேட்கவில்லை.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. AROUNA SELVAME //
    .
    எல்லாமே அந்த “த்“ செய்யிற வேலை என்பதை நன்றாகவே புரிய வைத்தீர்கள் ரமணி ஐயா.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. எல் கே //

    பிரிதல் இணைதல் என்று இரண்டிருக்குறதா ?? இல்லை இரண்டில் ஒன்றின் இல்லாமைதான் இன்னொன்றா ??

    பிரிந்து ஒன்றில் இணையாமலும் இருக்கலாமே
    அப்போது அது வேறுதான் இல்லையா ?
    அருமையான சிந்திக்கத் தூண்டிய பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ஸ்ரீராம். //

    பெயர்தான் ஜனநாயக நாடு. பெரும்பாலும் 'எல்லாம்' ஜனங்கள் மேல் திணிக்கப் படுபவையாகவே இருக்கின்றன.//

    மிகச் சரியான கருத்து
    பல விசயங்களில் நாம் திணிக்கப் பட்ட்டதைத்தான்
    ஏற்றுக் கொண்டிருக்கிறோம்
    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. T.N.MURALIDHARAN //

    பிரிதலும் பிரித்தலும் இனைதலும் இணைத்தலும் சுய லாபத்திற்காகவே செய்யப்படுகின்றன.நல்ல ஒப்பீடு.//

    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. சின்னப்பயல் //

    இழப்பதற்கு கோவணம் தவிர ஏதுமில்லை/

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. சத்ரியன் //
    .
    ரமணி ஐய்யா,
    எப்போதும் போல் சமூக விழிப்புணர்வு ததும்பும் கருத்துக்களுடன் சிறப்பான ஆக்கம்.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. Seeni //
    .
    nalla kavithai ayya!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. மனசாட்சி™ //

    நல்ல ஆழமா கருத்துகளை தாங்கி நிற்கும் கவிதை.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. புலவர் சா இராமாநுசம்//
    .
    தன் வினை பிற வினை வேறுபாடு வைத்து மிகவும் அருமையான, ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு!நன்று//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. செய்தாலி //
    .
    அருமை சார் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. Athisaya //

    உணர வைத்த கவிதை இது.வாழ்த்துக்கள் சொந்தமே...//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. MANO நாஞ்சில் மனோ //..

    வாவ் என்னே வார்த்தை பிரயோகம் மிகவும் ரசித்தேன் குரு.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. radhakrishnan //

    முற்றிலும் உண்மை.பொருட்செறிவான கருத்து.
    உங்கள் கோட்டையான கவிதைக்குவந்துவிட்டீர்கள்.
    தூள் கிளப்புங்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. Avargal Unmaigal //

    வரிகள் அனைத்தும் மிகவும் அர்த்தமுள்ளவையாக உள்ளன//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. சுய சிந்தனையால் அல்லாது பிறரது விருப்பு வெறுப்புகளுக்குத் தன்னையே பலியிட்டுக் கொள்வதன் மூலம் சுயமிழக்கும் வலியையும் அதை மீட்கும் வழியையும் அழகாய் உணர்த்திய வரிகள். ஜி.எம்.பி. ஐயாவுக்கான பதிலில் வெளிப்பட்ட வாழ்க்கையின் இருநிலைகளுக்கான கோட்பாடு கண்டு வியந்தேன். இதுவரை உணராதவர்களும் உடனடியாய் உணரும் வகையில் கவியாக்கம் வெகு நன்று. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  56. பிரிதலுக்கும்
    பிரித்தலுக்கும் இடையில்
    இணைதலுக்கும்
    இணைத்தலுக்கும்
    ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
    ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது//

    உண்மைதான் அய்யா அதை உணர்ந்தால் உள்ளத்தால் உணர்ந்தால் உண்மை விளங்கும்..

    மிக அருமையான பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்
    தொடர்ந்துவருகிறோம்..

    ReplyDelete
  57. இழப்பதற்கு கோவணம் தவிர
    ஏதுமில்லையாயினும்
    பிரிதலோ இணைதலோ
    முடிவெடுப்பதில் இனியேனும்
    சுயமாய் இருப்போம்// தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  58. நல்ல சிந்தனை.

    உங்களுக்கு இங்கே ஒரு பரிசு காத்திருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  59. அப்பத்தைப் பங்கிட்டக் குரங்கு - ரசித்தேன். இது ஒரு வட்டம் என்று நினைக்கிறேன். எல்லாருமே இந்த வட்டத்துக்குள் வந்து போகிறோமோ?

    ReplyDelete
  60. பிரிதல் பிரித்தல் வித்தியாசப் படுத்திய விதம் அருமை ரமணி சார்....

    ReplyDelete
  61. பிரிதல், இணைதல் தன்வினை.
    பிரித்தல், இணைத்தல் பிறர் வினை
    விளக்கங்களும் சிறப்பு.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  62. கீதமஞ்சரி //

    ஜி.எம்.பி. ஐயாவுக்கான பதிலில் வெளிப்பட்ட வாழ்க்கையின் இருநிலைகளுக்கான கோட்பாடு கண்டு வியந்தேன். இதுவரை உணராதவர்களும் உடனடியாய் உணரும் வகையில் கவியாக்கம் வெகு நன்று. பாராட்டுகள் ரமணி சார். //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. அன்புடன் மலிக்கா

    மிக அருமையான பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்
    தொடர்ந்துவருகிறோம்.. //

    தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. Sasi Kala //

    சுயமாய் இருப்போம்// தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா.//

    தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. கவிநயா //

    உங்களுக்கு இங்கே ஒரு பரிசு காத்திருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//

    எதிர்பாரா இன்ப அதிர்ச்சி தந்து மகிழ்வித்தமைக்கு
    மனமார்ந்த நன்றி.மகிழ்வுடன்
    ஏற்றுக் கொள்கிறேன்

    ReplyDelete
  66. அப்பாதுரை ..//

    அப்பத்தைப் பங்கிட்டக் குரங்கு - ரசித்தேன்.//

    தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. ரெவெரி //

    பிரிதல் பிரித்தல் வித்தியாசப் படுத்திய விதம் அருமை ரமணி சார்...//

    தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. kovaikkavi //
    பிரிதல், இணைதல் தன்வினை.
    பிரித்தல், இணைத்தல் பிறர் வினை
    விளக்கங்களும் சிறப்பு.
    நல்வாழ்த்து.//

    தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. அப்பாதுரை //

    ஒரு வட்டம் என்று நினைக்கிறேன். எல்லாருமே இந்த வட்டத்துக்குள் வந்து போகிறோமோ? //

    வட்டம் கொஞ்சம் யோசிக்கச் செய்து போனது
    வரவுக்கும் சிந்திக்கச் செய்துபோகும் அருமையான
    பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. விழிப்புணர்வுக் கவி.

    "அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்"
    இதுதானே நடந்துகொண்டு இருக்கின்றது.

    ReplyDelete
  71. மாதேவி //

    விழிப்புணர்வுக் கவி//.

    "அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்"
    இதுதானே நடந்துகொண்டு இருக்கின்றது.//

    தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete