Sunday, August 19, 2012

கவிதையும் குழந்தையும்

விரும்பி வருந்தி
அணைக்க அழைக்கையில்
பழுப்புக்காட்டி ஓடி மறையும்
எதிர்பாரா நேரத்தில்
மனம் குளிர
மடியில் விழுந்து புரளும்......

சில சமயம்
பெரிய தோரணைக்காட்டி
சின்னஞ்சிறு கதைகள் பேசும்
பல சமயம்
கைக்கடக்கமாய்க் கிடந்து
பல அரியதை உணரக் காட்டும்....

கடலாய் மலராய்
காவியமாய் ஓவியமாய்
ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்
அவரவர் மன நிலையளவே
தன்னுயரம் காட்டும்
இன்சுவையும் கூட்டும்.....

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
ரசித்துப் படைத்தவனுக்கு
பேரின்பப் பெட்டகமாய்
உருமாறித் தன் முகம் காட்டும்
உணர்வுக்குள்  சொர்க்கத்தைச் சேர்க்கும் ...

சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடியாத தெனினும்
தன் சிறு அசைவால்
இருளோட்டி ஒளிகூட்டிப்  போகும்
துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்.....

குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?

38 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள் தாய்க்கும் கவிஞனுக்கும்
    என்ன வித்தியாசம் உள்ளது இரு வேறு படைப்புகளிலும்!...தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  2. குழந்தையை கவிதை என்றால் என்ன ?
    கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?

    ஆமா ரொம்ப சரியா சொன்னீங்க.

    ReplyDelete
  3. அருமை.
    தொடருங்கள்.....

    ReplyDelete
  4. குழந்தை ஒரு கவிதை தான், கவிதை கவிஞனுக்கு குழந்தை தான்.. நன்று அய்யா!

    ரம்ஜான் சிறப்பு கவிதை...
    உங்கள் பார்வைக்கும் கருத்துரைக்கும் அன்புடன் அழைக்கிறேன்.நன்றி....
    http://ayeshafarook.blogspot.com/2012/08/blog-post_371.html

    ReplyDelete
  5. அன்பு உள்ளம் தங்களை வாழ்த்துகின்றது ஐய்யா .

    ReplyDelete
  6. இன்னொரு வாழ்துக்காகவும் காத்திருக்கின்றது என் தளம் .

    ReplyDelete
  7. யாராலும் மறுக்க முடியாத அழகு குழந்தையும் கவிதையும்தான்...கவி பாடி கூட குழந்தையை வரையறுக்க முடியாது..ஆனால் குழந்தைதான் கவிதையை வரையறுக்க முடியும்.ஏனெனில் அழகாக இருக்க வேண்டுமல்லவா.எப்படியாயினும் நம் நோக்கம் சந்தோசமே..

    நன்றி.

    ReplyDelete
  8. அருமையான வரிகள்.
    // ரசிக்கத் தெரிந்தவனுக்கு
    மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
    ரசித்துப் படைத்தவனுக்கு
    பேரின்பப் பெட்டகமாய்
    உருமாறித் தன் முகம் காட்டும்
    உணர்வுக்குள் சொர்க்கத்தைச் சேர்க்கும் ... //
    ரசனையான கவிதை. உண்மை தான்.
    குழந்தையின் அழகில் தன்னை மறக்கிறான்
    கவிதையின் அழகில் உலகை மறக்கிறான்
    தொடருங்கள்

    ReplyDelete
  9. குழந்தை,உங்கள் கவிக்குழந்தை மிகவும் அருமை ஐயா,வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. //ரசித்துப் படைத்தவனுக்கு
    பேரின்பப் பெட்டகமாய்//
    குழந்தையை கவிதை என்றால் என்ன ?
    கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?//


    அருமையான படைப்பு .குழந்தையும் கவிதையும் ஒன்றுதான் .


    ReplyDelete
  11. குழந்தையை கவிதை என்றால் என்ன ?
    கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?//மிக அழகாய் சொன்னீரக்ள்

    ReplyDelete
  12. வாழ்க்கையை உயிர்ப்புடன் வைக்கும் மிகச்
    சில விஷயங்களில் இந்த [கவிக்]குழந்தையும்
    ஒன்று.

    ReplyDelete
  13. நம்மால் படைக்கப் படும் யாவும், ரசிக்கப் படும் யாவும் நம் குழந்தைகள்தானே! நன்றாய்ச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  14. கவிதைகள் ...குழந்தைகள் இரண்டுமே அழகு தான்!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ரசித்தோம்....... இனிமை

    ReplyDelete
  16. ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்
    அவரவர் மன நிலையளவே
    தன்னுயரம் காட்டும்

    இர‌ட்டுற‌ மொழிந்த‌ அழ‌கிய‌ க‌விதைக்குழ‌ந்தை!

    ReplyDelete
  17. குழந்தையை கவிதை என்றால் என்ன ?
    கவிதையை குழந்தை என்றால்தான் என்ன

    இரண்டையும் சொன்ன விதம் மிக மிக அருமை

    ReplyDelete
  18. arumai arumai!

    veru vaarthai illai...

    ReplyDelete
  19. //குழந்தையை கவிதை என்றால் என்ன ?
    கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?//

    படைப்பாளிக்கும், கவிதை ரஸிகனுக்கும்,
    கவிதை தான் குழந்தை.

    மழலைப் பிரியர்களுக்கும், சம்சார சாஹரத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு, குழ்ந்தைகளே கவிதைகள்.

    நல்ல பதிவு.. பாராட்டுக்கள்.. vgk

    ReplyDelete
  20. ''...சுயமாக தன்னிலையில்
    துரும்பசைக்க முடியாத தெனினும்
    தன் சிறு அசைவால்
    இருளோட்டி ஒளிகூட்டிப் போகும்
    துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்...'''
    இப்போது அனுபவிக்கிறேன்.
    நல்ல சிறப்பான படைப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  21. வரிக்கு வரி சிறப்பு. அனைவருக்கும் ஏற்புடைய கருத்து. மிக ரசித்தேன். நன்று ஐயா.

    ReplyDelete
  22. கலக்கல் கவிதை..

    ReplyDelete
  23. அனைத்து வரிகளையும் ரசித்தேன்...

    /// குழந்தையை கவிதை என்றால் என்ன ?
    கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ? ///

    இதற்கு மேல் என்ன வேண்டும்... ?

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 9)

    ReplyDelete
  24. படைத்தவனுக்குத்தானே தெரியும் அந்தப் பிரசவ வேதனையும், பிந்தைய மட்டற்ற மகிழ்ச்சியும்,கவிதையும்,குழந்தையும் ஒன்றுதான்!
    அருமை!

    ReplyDelete
  25. அழகு சார் அழகு வரிகள் பிரமாதம் (11)

    ReplyDelete
  26. அருமையான ஓப்பீடு! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    ReplyDelete
  27. உங்கள் கவிக்குழந்தை அருமை.

    ReplyDelete
  28. ஆமாம்... ஆமாம்...
    கவிஞன் ஆண்மகனாயினும்
    கவிதையைச் சுமர்ந்து பெற்றவனாகிறான்.
    தான் பெற்ற குழந்தையை விட
    தான் பேற்றுவித்த
    கவிதை குழந்தை அதனிலும்
    உயர்ந்தது தான் ஐயா.
    நன்றிங்க ரமணி ஐயா.

    ReplyDelete
  29. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  30. இந்த பதிவை-
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

    வருகை தாருங்கள்-
    அய்யா!

    மூத்தவர்கள்,,

    ReplyDelete

  31. குழந்தையைக் கவிதை என்றால் என்ன, கவிதையைக் குழந்தை என்றால் என்ன, காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.

    ReplyDelete
  32. கடைசி வரிகள் வரை யோசிக்க முடியவில்லை. சுவையான உருவகங்கள்.
    இரண்டில் ஒன்று என்றைக்கும் குழந்தையானதால் அதிக இன்பமோ?

    ReplyDelete
  33. //சுயமாக தன்னிலையில்
    துரும்பசைக்க முடியாத தெனினும்
    தன் சிறு அசைவால்
    இருளோட்டி ஒளிகூட்டிப் போகும்
    துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்.....//

    அருமை.... த.ம. 12

    ReplyDelete
  34. ///
    ரசிக்கத் தெரிந்தவனுக்கு
    மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
    ரசித்துப் படைத்தவனுக்கு
    பேரின்பப் பெட்டகமாய்
    உருமாறித் தன் முகம் காட்டும்
    உணர்வுக்குள் சொர்க்கத்தைச் சேர்க்கும் ...
    ///
    அருமையான வரிகள் சார்! கவிதையை குழந்தையாகவும்!!! குழந்தையை கவிதையாகவும் வர்ணித்திருப்பது உள்ளத்தில் உருகி உணரும்படியான உணர்வுகளை தந்துவிட்டுப்போகிறது!

    ReplyDelete