Wednesday, August 22, 2012

நீரோடு செல்கின்ற ஓடம்

நல்ல படிப்பு 
நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வப் போது புலம்பி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குறைக்க முயன்று
தோற்று வீழ்வாள் துணைவி

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்

 மீள்பதிவு 

54 comments:

  1. ஆற்றங்கரையோரம்
    வியாபாரத்திற்க்காக
    பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
    சாகாதிருப்பதற்க்காக
    அவ்வப்போது தெளிக்கப்படும்
    துளி நீர் போல
    உயிர் நீர் போல//


    எழுத்தில் அடைத்துவிட முடியுமா
    இத்தனை ஆற்றாமையையும்
    அதிர்ந்து போனது மனம்

    அருமை ரமணி

    ReplyDelete
  2. இயந்திர வாழ்க்கையை எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க. கடைசியா சொன்ன உவமை பிரமாதம்.

    ReplyDelete
  3. ஆஹா..பிரமாதம்!

    இயங்குவது நாம்..இயக்குவது சமூகம்..அதன் சார்பு!
    வேறு வழியில்லை..அதன் வழியே நாமும்..இனிவரும் சமூகமும்!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆறுதல்!அருமை
    த.ம.5

    ReplyDelete
  5. துளி நீர் போல
    உயிர் நீர் போல
    >>
    நம்ம வாழ்க்கை அடுத்த நிலைக்கு கொண்டு செல்பவையே அவைகள்தானே ஐயா

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை! வேலைக்கு சென்றுகுடும்பம் நடத்தும் குடும்பத்தலைவனின் கஷ்டங்கள் சிறப்பாக பகிரபட்டுள்ளது! நன்றி!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
  7. இன்றைய பணிச் சூழலை எவ்வளவு அழகாக உவமையுடன் சொல்லி இருக்கிறீர்கள். பெரும்பான்மையோருக்கு பொருந்தும் வரிகள்.

    ReplyDelete
  8. நம் இஷ்டப்படி எதுதான் நடந்தது !!???

    ReplyDelete
  9. அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்... மிக்க நன்றி... (TM 7)

    ReplyDelete
  10. நீரோட்டு செல்கின்ய ஓடத்திற்கு
    நீராவது துணையாக இருந்தால் சரிதான்!

    அருமைங்க ரமணி ஐயா.

    ReplyDelete
  11. // கடந்தகால இழப்புகளும்
    எதிர்கால கவலைகளும்
    நிகழ்கால பொறுப்புகளும்
    என்னை
    கையாலாகாதவன் ஆக்கிப்போகும் // உண்மை தான்.

    // துளி நீர் போல
    உயிர் நீர் போல // அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  12. கோவை மு சரளா //

    எழுத்தில் அடைத்துவிட முடியுமா
    இத்தனை ஆற்றாமையையும்
    அதிர்ந்து போனது மனம்
    அருமை ரமணி

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் விரிவான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. T.N.MURALIDHARAN //

    இயந்திர வாழ்க்கையை எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க. கடைசியா சொன்ன உவமை பிரமாதம்.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    அருமை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. ரமேஷ் வெங்கடபதி

    ஆஹா..பிரமாதம்!இயங்குவது நாம்..இயக்குவது சமூகம்..அதன் சார்பு!வேறு வழியில்லை..அதன் வழியே நாமும்..இனிவரும் சமூகமும்!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. சென்னை பித்தன் //.

    இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆறுதல்!அருமை//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. ராஜி //

    நம்ம வாழ்க்கை அடுத்த நிலைக்கு கொண்டு செல்பவையே அவைகள்தானே ஐயா //

    அடுத்த நிலை எது என முடிவெடுப்பதில்தான்
    நாம் தவறு செய்துவிடுகிறோமோ
    எனத் தோன்றுகிறதுஆழ்ந்து சிந்திக்கச் செய்து
    போகும் அருமையான பின்னூட்டத்திர்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. s suresh //

    சிறப்பான கவிதை! வேலைக்கு சென்றுகுடும்பம் நடத்தும் குடும்பத்தலைவனின் கஷ்டங்கள் சிறப்பாக பகிரபட்டுள்ளது! நன்றி!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. கிரேஸ் //

    இன்றைய பணிச் சூழலை எவ்வளவு அழகாக உவமையுடன் சொல்லி இருக்கிறீர்கள். பெரும்பான்மையோருக்கு பொருந்தும் வரிகள்.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. ///என் இஷ்டபடியும்
    இதுவரை எதுதான் நடந்தது
    என்பதை விளக்கிச் சொல்லி
    அவளுக்கு ஆறுதல் சொல்லி
    நானும் ஆறுதல் பெறலாம் என
    எத்தெனிக்கையில்
    கடந்தகால இழப்புகளும்
    எதிர்கால கவலைகளும்
    நிகழ்கால பொறுப்புகளும்
    என்னை
    கையாலாகாதவன் ஆக்கிப்போகும்
    ///

    அருமையான யதார்த்த வரிகள் அருமை...
    த.ம 8

    ReplyDelete
  21. கவிதையை ரசிக்கும் போது ஏதோ ஒரு அரச தொழில் புரிபவரின் வாழ்வோடு தொடர்பு படுவதாக ஒரு எண்ணம் மனதில் தோன்றுகிறது சார் (8)

    ReplyDelete
  22. பல தடவைகள் உங்கள் தளம் வந்தும் விரைவாக திரும்பிவிட்டேன்... இணைய இணைப்பின் சிக்கல்களின் காரணத்தினால் தொடருங்கள்

    ReplyDelete
  23. இந்த இயந்திர வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது. அவ்வப்போது உயிர் நீராய் ஏதோ ஒன்று தளராது வழி நடத்திச் செல்கிறது! இயந்திர வாழ்வின் அத்தனை தவிப்புகளையும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்! அப்படியே பூங்குன்ற‌னாரின் பாடலையும் புரியுமாறு விவரித்திருக்கலாம்!!

    ReplyDelete
  24. கஸ்ரமான இந்த வாழ்வியலை மிக அருமையாக
    படம் பிடித்துப் போட்டுள்ளீர்கள் ஐயா .எமக்காக
    நாம் அழுவதும் சிரிப்பதும் இனி எப்போது வரும்!!!...

    ReplyDelete
  25. இராஜராஜேஸ்வரி said...

    நம் இஷ்டப்படி எதுதான் நடந்தது//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. திண்டுக்கல் தனபாலன் //

    அருமையாக சொல்லி உள்ளீர்கள
    வாழ்த்துக்கள்... மிக்க நன்றி.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. AROUNA SELVAME //

    நீரோட்டு செல்கின்ய ஓடத்திற்கு
    நீராவது துணையாக இருந்தால் சரிதான்!
    அருமைங்க ரமணி ஐயா.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  28. Rasan //

    // துளி நீர் போல
    உயிர் நீர் போல // அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. இடி முழக்கம் //.

    அருமையான யதார்த்த வரிகள் அருமை...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. சிட்டுக்குருவி //..

    கவிதையை ரசிக்கும் போது ஏதோ ஒரு அரச தொழில் புரிபவரின் வாழ்வோடு தொடர்பு படுவதாக ஒரு எண்ணம் மனதில் தோன்றுகிறது சார் //

    சரியான யூகம்
    விடாது தொடர்ந்து பதிவுக்கு வந்து தங்கள்
    கருத்தை பின்னூட்டமாக அளித்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. மனோ சாமிநாதன்

    இந்த இயந்திர வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது. அவ்வப்போது உயிர் நீராய் ஏதோ ஒன்று தளராது வழி நடத்திச் செல்கிறது! இயந்திர வாழ்வின் அத்தனை தவிப்புகளையும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்! அப்படியே பூங்குன்ற‌னாரின் பாடலையும் புரியுமாறு விவரித்திருக்கலாம்!!//

    அவருடைய அந்த முழுப்பாடலையும்
    கொடுத்து அதற்கு ஒரு விளக்கப் பதிவும்
    கொடுக்கலாம் என நினைக்கிறேன்
    அதிகக் கருத்துள்ள பாடல் அது
    அதன் முதல் அடியை மட்டுமே
    அதிகம் பயன்படுத்திகொண்டிருக்கிறோம்
    தங்கள் வரவுக்கும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. அம்பாளடியாள் //

    கஸ்ரமான இந்த வாழ்வியலை மிக அருமையாக
    படம் பிடித்துப் போட்டுள்ளீர்கள் ஐயா .எமக்காக
    நாம் அழுவதும் சிரிப்பதும் இனி எப்போதுவரும்!!!

    பதிவின் அடி நாதம் புரிந்து அழகான
    அருமையான உணர்வு பூர்வமான
    பின்னூட்டமாகத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. Seeni //

    sariyaaka sonneenga ayyyaaaa!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. அற்புதம்.
    வ.எரிச்சலை இதைவிட அருமையாகச் சொல்லிவிட முடியாது :-)

    ReplyDelete
  35. //சம்பளத்தொகையே என் இல்லத்திற்கும் என் அலுவலகத்திற்க்கான இடைவெளியை நிர்ண்யித்துப் போகும்

    நிறைய யோசிக்க வைக்கிறது. எங்கே போகிறோம் நாம்? எழ முடியாத குழியா?

    ReplyDelete
  36. எங்கே வாழ்க்கை தொடங்கும்
    அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம்
    என்பது யாருக்கும் தெரியாது
    பாதையெல்லாம் மாறிவரும்
    பயணம் முடிந்துவிடும்
    மாறுவதை புரிந்துகொண்டால்
    மயக்கம் தெளிந்துவிடும்

    பாடல்: கண்ணதாசன்
    படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்

    ReplyDelete
  37. அந்த கடைசிவரிகளில் தான் எத்தனை ஆழம்....!இப்படித்தான் ஓட்டமும் நடையுமாய் தொலைகிறது நம் பொழுதுகள்.
    முடியும் ிடியும் என்று நம்பித்தான் வாழ்கிறோம்.வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  38. இயந்திர வாழ்க்கையை அப்படியே வடித்திருக்கிறீர்கள். உண்மையிலேயே என்ன வாழ்க்கை இது :(

    தாமத வருகைக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  39. "நீ ரோடு செல்கின்ற ஓடம்" என்று நீ ரோடு என்று பிரிந்திருகிறதே தலைப்பு, சரி செய்யலாமே.

    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள், மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது.


    ReplyDelete
  40. ஒவ்வொன்றும் யதார்த்த வரிகள்....திணிக்கப்பட்டவையையே எமக்கானவையாக வரித்துக்கொள்கிறோம்,அருமையான பதிவு ஐயா

    ReplyDelete
  41. #யாரை அழைத்துக் கொள்வது
    அல்லது
    யாரிடம் பராமரிக்க அனுப்புவது
    என்கின்ற தீர்மானமே
    நான் தகப்பனாவதை
    நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்#

    அருமையான ஆழமான வரிகள்...த ம 12

    ReplyDelete
  42. அவசியப் பேச்சுக்கே
    நேரமில்லை என்பதால்
    எங்களுக்கான
    அன்னியோன்னிய பேச்சுக்கள்
    அடியோடு நசுங்கிப்போகும்/



    வாழ்க்கை தேவைக்காக இருவரும் வேலைக்கு போகும் போது ஏற்படும் இழப்புகளை அழகாய் சொல்கிறது கவிதை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. நிதர்சனம்.. யதார்த்தம்.. தத்துவக் கலவை இந்த கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. மனிதனின் தினசரி நிகழ்வுகள் பற்றிய உங்கள் பதிவு அருமை அய்யா! அன்றாட விஷயங்கள், நாம் சந்திக்கும் விடயங்கள் அனைத்தும் யோசித்து எழுதியுளீர்.. வாழ்த்துக்கள் அய்யா!

    "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
    என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

    ReplyDelete
  45. நல்லா படிக்கணும் கண்ணு.... படிச்சா தான் நல்ல வேலை கிடைக்கும்... நல்ல வேலை கிடைச்சா நிறைய சம்பளம் கிடைக்கும்... வசதியா வாழலாம்.... ஆனால் சிரித்து சந்தோஷமாக வாழமுடியுமா? என்ற கேள்விக்கான சாட்டையடி பதில் தான் ரமணி சார் உங்க இந்த கவிதை....

    வாழ்க்கையை சந்தோஷத்தை நிர்ணையிப்பதும் நிராயுதபாணியாக கைவிடுவதும் பணத்தின் முக்கிய பங்காகிறது... குழந்தைகளின் சந்தோஷம் பெற்றோரிடம் கதைக்கேட்டுக்கொண்டே மடியில் படுத்துக்கொண்டே ஊட்டி விட உண்டு மகிழ்ந்து கண் சொக்கி உறங்குவது...

    ஆனால் வேலைக்கு செல்லும் எத்தனை பெற்றோர் தன் குழந்தைகளுக்கு இப்படி ஆசையாக தன் குழந்தைகளை இப்படி வளர்க்க முடிகிறது?

    அதிக சம்பாத்தியம் நல்ல உடை உடுத்தவும் சமுதாயத்தில் உயர் பதவி வகுக்கவும் அதிக பங்கு வகிக்கிறதே தவிர கணவன் மனைவி இருவருக்குள் இருக்கும் அன்னியோன்னியத்தை அறவே அறுத்துவிடும் அபாயமும் நிகழ்வதுண்டு....

    குழந்தைகளின் பாடங்களை உட்கார்ந்து கவனிக்கும் அளவுக்கு நமக்கு நேரமும் இருப்பதில்லை நேரம் இருந்தாலும் மனம் லயிப்பதில்லை...அலுவலகத்தில் அரைகுறையாக விட்டுவிட்டு வந்த மீட்டிங்கும் ப்ரெசண்டேஷனும் நாளை எப்படி தொடர்வதோ என்ற மன ஒத்திகையில் மனம் லயித்துவிடுவதுண்டு....

    கிடைக்கும் நேரத்தில் குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து நிலாச்சோறு சாப்பிட்டு கதைகளை அளந்துக்கொண்டு அன்பை பரிமாறிக்கொண்டு மொட்டைமாடியில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு....... ஹூம் கனவாகவே மிஞ்சிவிட்ட விஷயங்களாக்கிவிடும் இந்த அவசர யுகம்....

    ரொம்ப நாள் கழித்து உங்க ப்ளாக்ஸ்பாட் திடிர்னு பார்க்க தோணித்து ஏனோ தெரியவில்லை... படித்துவிட்டால் கருத்து எழுதாமல் போகமுடிவதில்லை என்பதே உண்மை ரமணி சார்....

    அருமையான வரிகள்... எளிமையான வரிகள்... தினம் தினம் எல்லோரும் காணும் பிரச்சனைகள் விஷயங்கள் அதை லாவகமாக கவிதையாக கையாளும் உங்கள் அருமையான சிந்தனைக்கு ஹாட்ஸ் ஆஃப் ரமணி சார்....

    நல்லா படிச்சு சம்பாதிக்க ஆரம்பித்தால் எதை எதையெல்லாம் இழக்கிறோம்னு கணக்கு பார்க்க உட்கார்ந்தால் அதிர்ச்சியில் நமக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்பதே உண்மை....

    பரஸ்பரம் அன்பை கணவன் மனைவி பரிமாறிக்கொள்ளும் கணங்கள் காலை காபி குடிக்கும் அந்த கொஞ்ச நேரமும் சிற்றுண்டி எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து உண்ணும் நேரமும் வாரத்தில் ஒரே ஒரு நாள் கிடைக்கும் விடுமுறை.... எல்லாவற்றையுமே சிந்திக்கவைத்துவிட்டது ரமணி சார் உங்க கவிதை வரிகள்...

    எப்பவும் போல் உங்க கவிதையை முதல் வரிசையில் அமர்ந்து படிக்கும் ரசிகையாக நான்....

    ReplyDelete
  46. ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை நீருக்கு ஒத்துக்காட்டி...அருமையான வரிகள் ஐயா !

    ReplyDelete
  47. மீள் பதிவாயினும் மீண்டும் படித்தும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

    எது தான் நம் இஷ்டப்படியும் விருப்பப்படியும் நடக்கிறது?

    ReplyDelete
  48. வ‌ர‌வுக்குள் வாழ்ந்த‌ கால‌ம் போய் செல‌வுக்குத் த‌க்க‌ வ‌ருமான‌ம் தேடும் கால‌மான‌தால் இவ்வ‌ள‌வு சிக்க‌ல்க‌ளோ... ஆட‌ம்ப‌ர‌த்தில் உவ‌கை கொள்ளும் ம‌ன‌சுக்கு அன்பில் திளைக்க‌ வ‌ழியில்லை.

    ReplyDelete
  49. இயந்திரமயமான வாழ்க்கை தான். ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கும் வாழ்க்கையினை அப்படியே படம் பிடித்துக் காட்டிய கவிதை. இயந்திர வாழ்க்கையில் உழலும் எனக்கும் புரிகிறது கவிதையின் வலி....

    த.ம. 15.

    ReplyDelete
  50. இக்கால யந்திர வாழ்வில் மனித வாழ்வின் அடுத்தடுத்த கணங்களை அவனது சூழ்நிலையும், குறிப்பாக பணமுமே நிர்ணயம் செய்கின்றன எனும் நிசத்தை உரக்கச் சொல்கிறது இக்கவிதை. வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete