Sunday, September 16, 2012

புரியாத சில புதிர்கள்

கடவுள் மீதும்
சாஸ்திரங்கள் மீதும்
நம்பிக்கையற்றவனுக்கு வாரீசுகள்
டஜன் கணக்கில் இருக்க
பூர்வ புண்ணிய  பாக்கிய ஸ்தானங்க்களின்
தோசங்களை சீர் செய்யும் பண்டிதருக்கு
ஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை

இலக்கண அறிவு மருந்துக்கும் இன்றி
இட்டுக் கட்டிப் பாடும்
சுந்தர பாகவதரின் பாடல்களில்
இலக்கண  இலக்கியம் பூரணமாய் அமைய
 இருபதாண்டு அனுபவமிக்க
தமிழ் பேராசிரியருக்கு
எத்தனை முயன்றும்  ஏனோ
ஒரு கவிதை எழுத வரவில்லை

வரப்பு வாய்க்கால் தகராறில்
பங்காளியின் தலையெடுத்தவனின் வாரீசு
படித்து முடித்து முதல் நிலை அலுவலராய்
முன்னேறிச் சிறக்க
சமூகத்தின் மேன்மை குறித்து
அன்றாடம் மேடையில் முழங்கும்
தலவரின் வாரீசுகள்  எல்லாம்
தறுதலையாய்த் திரியவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு தலைமுறையையே
தடம் மாற்ச் செய்பவனின்
படைப்புகள் எல்லாம்
பட்டி தொட்டியெல்லாம் பவனி வர
அடுத்த தலை முறை குறித்து
அக்கறை கொண்டவனின் படைப்புகள் எல்லாம்
கரையானுக்கு விருந்தாவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
எப்படித்தான் முயன்றபோதும்
சில புதிருக்கான விடை
புரியத்தான் இல்லை
 

50 comments:

  1. இவையெல்லாம் தாறுமாறாக இல்லையெனில் வாழ்க்கை சுவாரஸ்யம் அற்றதாகி விடும்! நேர்மையும்..நன்னடத்தையும் சாபமல்ல..முன்னே கசக்கும்..பின்னே இனிக்கும்! ஆனால் பெரும்பாலும் அதர்மமே ஜெயிப்பதால்..அவைகள் பால் மனம் தள்ளப்படுவது இயற்கையே!

    ReplyDelete
  2. //விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
    எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை//

    இப்படி பல விஷயங்கள் புரியாத புதிர் தான்....

    த.ம. 3

    ReplyDelete
  3. //கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
    ஒரு தலைமுறையையே
    தடம் மாற்ச் செய்பவனின்
    படைப்புகள் எல்லாம்
    பட்டி தொட்டியெல்லாம் பவனி வர
    அடுத்த தலை முறை குறித்து
    அக்கறை கொண்டவனின் படைப்புகள் எல்லாம்
    கரையானுக்கு விருந்தாவதை
    ஏனோ தடுத்திட முடியவில்லை//

    மிகச் சரியான வரிகள் சகோ... இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் கூட அது தான் நடந்தது.. சாருவாகம், சமணம் போன்றவை தந்த பயனுள்ள படைப்புக்கள் எல்லாம் அழிந்தே விட்டன. ஆனால் தேவையற்ற புராணங்களும், இதிகாசங்களும் இன்று வரை தொடர்கின்றன ..

    ReplyDelete
  4. ஐய்யா
    எப்படியா
    இம்புட்டு
    தௌிவா

    ReplyDelete
  5. ஐய்யா
    எப்படியா
    இம்புட்டு
    தௌிவா

    ReplyDelete
  6. அன்பின் ரமணீ

    //விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
    எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை // - இது தான் இயல்பு நிலை .

    நல்ல சிந்தனை - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அன்றாட வாழ்வில் இப்படி எத்தனையோ புதிர்கள் உள்ளன என்பத உதாரணங்கள் மூலம் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    த.ம. 4

    ReplyDelete
  8. அருமையான கவிதையும் சிந்தனையும் அண்ணா!

    ReplyDelete
  9. /விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
    எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை/

    அருமையான வ‌ரிகள்!

    வாழ்க்கை என்றுமே தன்னுள் இப்படி ஆயிரம் ஆயிரம் புதிர்களை புதைத்து வைத்துக்கொண்டு தானே இருக்கிறது?

    ReplyDelete
  10. //விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
    எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை//

    ஆமாம். புரியத்தான் இல்லை. அது தான் மிகவும் யதார்த்தமான வாழ்க்கையாக உள்ளது.

    நல்ல பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ஸ்தானங்க்களின்
    தோசங்களை சீர் செய்யும் பண்டிதருக்கு
    ஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை/////

    ஆரம்பமே அமர்க்களம்... இதை இதை அழகாய் புரிந்துகொண்டால் இந்த மத தீவிர வாதத்தை விலக்கி சுத்தமாக முடியும் :((

    ReplyDelete
  12. இலக்கண அறிவு மருந்துக்கும் இன்றி
    இட்டுக் கட்டிப் பாடும்
    சுந்தர பாகவதரின் பாடல்களில்
    இலக்கண இலக்கியம் பூரணமாய் அமைய
    இருபதாண்டு அனுபவமிக்க
    தமிழ் பேராசிரியருக்கு
    எத்தனை முயன்றும் ஏனோ
    ஒரு கவிதை எழுத வரவில்லை

    ஒ என்று அழுதுவிடுவேன் ஐயா .
    எனக்கு இந்த உலகமே புரியவில்லை
    என்கிறேன் .நீங்கள் என்னை சோதிக்க வேணாம் :))))

    ReplyDelete
  13. வணக்கம் ரமணி ஐயா,
    இத்தகைய முரண்பாட்டு மூட்டைகள் தான்
    பல நேரங்களில் வெறுப்பையும்
    சில நேரங்களில் தேடுதலையும்
    நம்மில் உருவாக்கிப் போகின்றன...

    நல்ல படைப்பு ...

    ReplyDelete
  14. வாத்தியார் பிள்ளை மக்கு சிண்ட்ரோம்தான்! இன்னும் என்ன சேர்க்கலாம் இந்த லிஸ்ட்டில் என்று என்னையும் யோசிக்க வைத்தது உங்கள் வரிகள்.

    ReplyDelete
  15. புரியாத புதிர்கள்

    ReplyDelete
  16. முர‌ண்க‌ளின் தொகுப்பாய் வாழ்க்கை!சொல்லிய‌வை அனைத்தும் விடுப‌ட்ட‌வைக‌ளையும் தொட்டுச் செல்கின்ற‌ன‌.

    ReplyDelete
  17. புரியாத புதிர்களையும் அழகியப் படைப்பாக்கி அதன்மூலம் பலரையும் சிந்திக்கவைக்கும் தங்கள் திறனுக்குப் பாராட்டுகள் ரமணி சார். தாங்கள் கூறியவற்றில் உள்ள யதார்த்தம் வியக்கத்தான் வைக்கிறது.

    ReplyDelete
  18. விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை.

    புரிதலுக்கான தேடலே வாழ்வென உணர்த்திய வரிகள் அருமை ஐயா.

    ReplyDelete
  19. விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
    எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை

    வாழ்க்கை என்பது வாய்ப்பாடல்ல .....

    ReplyDelete

  20. படித்துவிட்டு என் கருத்தாக நான் எழுத நினைத்தது ஏற்கனவே ஸ்ரீராம் எழுதிவிட்டார். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
    எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை

    உன்மைதான்

    ReplyDelete


  22. // விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
    எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை//

    எரியும் விளக்கிற்கு தூண்டு கோல் போல
    உங்கள் கவிதை சிந்தனை விளக்கைத் தூண்டும்

    ReplyDelete
  23. உண்மை தான். புரியாத புதிராகத் தான் உள்ளது.

    த.ம.14

    ReplyDelete
  24. // எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை //

    உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான்.

    இன்னும் கொஞ்ச நாளில் உலகில் “நல்லது செய்தால் நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கையே தகர்ந்து போய்விடும் போலிருக்கிறது.

    ReplyDelete
  25. நிஜம்தான். சிந்தயையைத் துண்டிவிட்டு யோசிக்க வைத்து விட்டீர்கள். அருமை.

    ReplyDelete
  26. சிந்திக்க வைக்கும் வரிகள்... சில புரியாத புதிர்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதே புதிர் தான்... (த.ம.16)

    ReplyDelete
  27. புரியாத புதிருக்குள் விடைதேடும் மனிதர்களாய்த்தான் நாங்கள்.இறப்பில்கூட அறியமுடியாத விஷயங்கள் எத்தனையோ !

    ReplyDelete
  28. ஆக்கப்பாதை வகுத்தவர்கள் பாடு
    ஆட்டம் கண்டு நிற்க,
    ஆகாத சிலதுகள் ஆர்ப்பரித்துக் குதிக்க,
    ஆகுமா தீர்வு காண இதற்கு?
    புரியாத புதிரே இது!(சொந்தக் கதை,சோகக் கதை)

    ReplyDelete

  29. புரியாத புதிர்கள் சிந்திக்க வைக்கும் ஒரு அருமையான பதிவு பல மூறை படித்து மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  30. சிரிப்பாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கின்றது . என்னதான் ஆழப்படித்தாலும் சில விடயங்களுக்கு விளக்கம் புரிவதே இல்லைதான் . இதுதான் சிதம்பர இரகசியம்

    ReplyDelete
  31. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  32. ***தமிழ் பேராசிரியருக்கு
    எத்தனை முயன்றும் ஏனோ
    ஒரு கவிதை எழுத வரவில்லை***

    என்ன சொல்றது, க்ரியேட்டிவிட்டி வந்து ஆசிரியர்களுக்கு இருக்கனும்னு இல்லை, சார்.

    ReplyDelete
  33. ***கடவுள் மீதும்
    சாஸ்திரங்கள் மீதும்
    நம்பிக்கையற்றவனுக்கு வாரீசுகள்
    டஜன் கணக்கில் இருக்க
    பூர்வ புண்ணிய பாக்கிய ஸ்தானங்க்களின்
    தோசங்களை சீர் செய்யும் பண்டிதருக்கு
    ஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை***

    குழந்தைளை வளர்த்து, அதுக பாழாப்போயி, இவர்கள் சொல்லும் அறிவிரைகளை எல்லாம் எடுத்தெறிந்து பேசி, பாழும் கிணற்றில் விழுந்து..என் நிம்மதியையே ஒழிச்சுட்டயே ஆண்டவா..னு புலம்ப வேண்டாம் பக்தன்னு..

    தன் பக்தனை நாம் பிள்ளைகள்னு ஒரு சுமையைக் கொடுத்து கஷ்டப்படுத்த வேண்டாமே.. என்று கடவுள் கருணையுடன் செய்த உதவி இது, சார்! :)

    ReplyDelete
  34. ***கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
    ஒரு தலைமுறையையே
    தடம் மாற்ச் செய்பவனின்
    படைப்புகள் எல்லாம்
    பட்டி தொட்டியெல்லாம் பவனி வர
    அடுத்த தலை முறை குறித்து
    அக்கறை கொண்டவனின் படைப்புகள் எல்லாம்
    கரையானுக்கு விருந்தாவதை
    ஏனோ தடுத்திட முடியவில்லை***

    நம்ம படைப்புகளெல்லாம் இந்த நன்றிகெட்ட மானிடர்களுக்குப் போவதைவிட, தான் ரசித்த பிறகு ஆயிரம் கரையான்கள் இதை சாப்பிட்டு நிம்மதியாக வாழ்கின்றனவேனு சந்தோசப்படலாம், சார். :)

    ReplyDelete
  35. நான் குதற்கமாக பதி சொல்லவில்லை சார். இன்னொரு கோணத்தில் இதை பார்க்க முயன்றேன், அம்புட்டுத்தான்! :)

    மற்றபடி மிகவும் நல்ல சிந்தனைகள், உங்க கவிதை!:)

    ReplyDelete
  36. உண்மையில் புரியாத புதிர்தான்!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை "

    எனும் வள்ளுவப்பெருந்தகையின் கூற்றினை நினவு கூர்ந்து
    நம்
    முன் வினைப் பயன்காரணமாய்த்தானோ இதெல்லாம் என்று
    வியக்கும் அதே நேரத்தில்,

    தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று தலைப்பு இட்டிருக்கும்
    நீங்கள் நொந்துபோகலாமா ?

    பதிவின் முதல் வரி எனக்கு பராசக்தி படத்தின் சில வசனங்களை
    நினைவு படுத்துகிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  38. புதிர்கள் புரிவதில்லை
    சில புதிர்களுக்கு விடையேயில்லை
    புரியாதென்பதால்தான் புதிராக இருக்கிறதோ

    //இவையெல்லாம் தாறுமாறாக இல்லையெனில் வாழ்க்கை சுவாரஸ்யம் அற்றதாகி விடும்! நேர்மையும்..நன்னடத்தையும் சாபமல்ல..முன்னே கசக்கும்..பின்னே இனிக்கும்! ஆனால் பெரும்பாலும் அதர்மமே ஜெயிப்பதால்..அவைகள் பால் மனம் தள்ளப்படுவது இயற்கையே//

    இவ்வரிகள் உண்மைதான்.

    புரியாத புதிரென்றபோதும்
    பூமியில் வாழ்வது
    எந்நேரமும்
    புதிதாகவே தோன்றும்

    ReplyDelete
  39. வாழ்வின் முரண்பாடுகளை சுவைபட சொல்லியுள்ளீர்கள் ...

    ReplyDelete
  40. புரிந்து கொண்டவர்களே
    புதிராக இருக்கும் பொழுது...
    புரியாதவர்களுக்குச்
    சில புரிதல்கள் புதிர் தான்!

    அருமையான கருத்துள்ள கவிதை ரமணி ஐயா.

    ReplyDelete
  41. azhakaa sonneenga ayya!

    nallavarkal sol-
    pudampoda padukiratho...!?

    oru naal thangamaaka jolikkum...

    ReplyDelete
  42. எழுதுய எழுத்து!
    நன்று

    ReplyDelete
  43. விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
    எப்படித்தான் முயன்றபோதும்
    சில புதிருக்கான விடை
    புரியத்தான் இல்லை//
    கவிதை அருமை.
    சில விஷயங்கள் புரியத்தான் இல்லை.
    அதை இறைவன் மறை பொருளாய் வைத்து இருக்கிறார்.
    விநாயகர் சதுர்த்தி
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. வாழ்க்கை பாதையில்
    குறுக்கே வரும் கசப்பான அனுபவங்கள்
    புரியாதனவற்றை புரியவைக்கும்
    அறியாதனவற்றை அறியவைக்கும்
    அதற்க்கு பிறகும்மசியாதவர்கள்
    நசித்துபோவது தவிர்க்க இயலாதது

    ReplyDelete
  45. கவிதை கூட எனக்கு புரியாத புதிராகத்தான் தோன்றுகிறது சார்..

    ReplyDelete
  46. அருமையான கவிதை........


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete