Wednesday, October 3, 2012

மர்ம இடைவெளி-2

நான் சிறுவனாய் இருந்தபோது
எந்த எக்ஸ்பிரஸ் பஸ்ஸாயினும்
எங்கள் கிராம வழி செல்லும் எல்லாம்
எங்களூரில் நின்றுதான் போகும்
நாங்கள் சௌகரியமாக இறங்கிக் கொள்வோம்

நான் இளைஞனான காலத்தில்
எக்ஸ்பிரஸ் பஸ்கள் எல்லாம்
புறவழிச் சாலைவழியே சென்றுவிடும்
நாங்களும் ஊருக்கு வெளியில் இறங்கி
ஊருக்கு வரப் பழகிக் கொண்டோம்

நான் நடுவயதைக் கடக்கையில்
நாற்கரச் சாலைகளூம்ம் ஐந்து கரச் சாலைகளும்
எங்கள் ஊருக்கு வெகு தொலைவில் செல்ல
இப்போது நாங்கள் அங்கே இறங்கி
அங்கிருந்து ஊர் வர
அடுத்த பஸ்ஸுக்கு காத்திருக்கிறோம்

வேகமும் நாகரீகமும் வளர வளர
அரசின் மக்களுக்கான நலத் திட்டங்கள் பெருகப்பெருக
எங்கள் கிராமத்திற்கும்
அந்தப் பிரதான சாலைக்குமான
இடைவெளி சிறிதும் குறையாது
ஏன் அதிகமாகிக்கொண்டே போகிறது என்பது மட்டும்
எனக்கு இதுவரை விளங்கவே இல்லை

53 comments:

  1. இறங்குமிடம் தூரமாகி போச்சுங்கறது உண்மைதான் ஐயா. ஆனா, இப்போ ஒரு சில வீடுகள் தவிர்த்து எல்லார் வீட்டிலும் இரண்டு சக்கர வாகனம் இருக்கு. அப்படியே இல்லாதவர்களும் 20ரூபாய் ஆட்டோவுக்கு குடுத்து வீடு வந்து சேருமளவுக்கு வளர்ந்து விட்டனர். அதனால நிறுத்தம் எங்கிருந்தால் என்ன என்ற மனப்போக்கு வந்துவிட்டது என்பது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  2. நாகரீகம் வளர வளர
    நகரங்கள் வளர்ந்து விட்டது ரமணி ஐயா.

    ReplyDelete
  3. அப்போது மக்களுக்காக பஸ் இருந்தது. இன்று பஸ்ஸிற்காக மக்கள்! பஸ்களும் தங்கள் வசதிக்கு ஏற்றமாதிரி செல்கின்றன. அவர்கள் வசதிக்கு ஏற்றமாதிரி வாழ நாமும் கற்றுக்கொண்டு வருகிறோம்!

    ReplyDelete
  4. நான் பஸ்ஸை மட்டும் சொல்லவில்லை
    பஸ்ஸையும் சொல்லியிருக்கிறேன்
    முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. நகரங்களின் வளர்ச்சி சந்தோஷமே
    கிராமங்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதுதானே சரி
    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. bandhu //
    அப்போது மக்களுக்காக பஸ் இருந்தது. இன்று பஸ்ஸிற்காக மக்கள்! பஸ்களும் தங்கள் வசதிக்கு ஏற்றமாதிரி செல்கின்றன. அவர்கள் வசதிக்கு ஏற்றமாதிரி வாழ நாமும் கற்றுக்கொண்டு வருகிறோம்!

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    அதைத்தான் சொல்ல முயற்சித்திருக்கிறேன்
    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. அதான் எல்லாரிடமும் ரெண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் பெருகி விட்டன பஸ் சில் சிலர்தான் பயணம் செய்கிரார்கள் போல இருக்கு.

    ReplyDelete
  8. ஆரம்பத்தில் சில மாறுதல்கள் சிரமமாக இருந்தாலும்... பழகி விட்டால் வழக்கமாகி விடும் - வேறு வழி இல்லாததால்...

    ReplyDelete
  9. நியாயமான ஏக்கம்! என்னுடைய பக்கத்தில் "மீட்டிட வருவானா?" கவிதை! வருகை தர விழைகிறேன்!
    நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  10. அந்தப் பிரதான சாலைக்குமான
    இடைவெளி சிறிதும் குறையாது
    ஏன் அதிகமாகிக்கொண்டே போகிறது என்பது மட்டும்
    எனக்கு இதுவரை விளங்கவே இல்லை
    //நியாயமான வினாதான்.

    ReplyDelete
  11. அன்பின் ரமணி

    பலருக்கும் பயனபட சாலைகள் பெருகுகின்றன - அது சில ஒதுக்குப்புர கிராமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. என்ன செய்வது - நாற்கரச் சாலையில் இறங்கி - ஷேர் ஆட்டோ / ரிக்‌ஷா / மினி பஸ் இப்படி ஏதேனும் இருப்பின் அவற்றைப் பயன் படுத்தலாம். நல்வாழ்த்துகள் ரமணீ - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. நீங்கள் மதுரையில்
    இருப்பதால் இந்த கேள்வி
    நியாயமானதே சார் ம்(;

    ReplyDelete

  13. Lakshmi //

    நான் வாகனத்தை ஒரு குறியீடாகத்தான்
    சொல்ல முயன்றிருக்கிறேன்
    நகர் புற மக்களுக்கான வளர்ச்சியில்
    கவனம் செலுத்துகிற அரசு கிராமங்களைக்
    கணக்கில் கொள்வதே இல்லை
    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. திண்டுக்கல் தனபாலன் //

    நீங்க்களும் நம் பக்கம் என்பதால்
    மிகச் சரியாக "வேறு வழி இல்லாததால்"
    என்கிற வார்த்தையை மிகச் சரியாகப்
    பயன்படுத்தி இருக்கிறீர்கள்
    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி
    .

    ReplyDelete
  15. Seshadri e.s.//

    நியாயமான ஏக்கம்!

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. ஸாதிகா //

    நியாயமான வினாதான்.//


    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. சரியான கேள்வி தான்.
    மக்களிடம் வசதிகள் பெருகி விட்டன....

    ReplyDelete
  18. ஐயா இது உலகமயமாக்குதலின் விளைவு.நகரங்கள் மேம்படுத்தப்பட்டு கிராமங்கள் புறம் தள்ளப்படுகிறது .

    ReplyDelete
  19. cheena (சீனா) //
    ..

    அன்பின் ரமணி

    பலருக்கும் பயனபட சாலைகள் பெருகுகின்றன - அது சில ஒதுக்குப்புர கிராமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. என்ன செய்வது -//

    திட்டங்கள் அனைவருக்கும் பயன்படும்படியாக இருந்தால்
    மிக நல்லது என்பதே என கருத்து
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  20. செய்தாலி //

    நீங்கள் மதுரையில்
    இருப்பதால் இந்த கேள்வி
    நியாயமானதே சார்//

    மதுரையே இன்னமும் கிராமமமாகத்தான் உள்ளது
    கிராமங்களைச் சொல்லவும் வேண்டுமோ ?
    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கோவை2தில்லி //

    சரியான கேள்வி தான்.//

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. Barari //

    ஐயா இது உலகமயமாக்குதலின் விளைவு.நகரங்கள் மேம்படுத்தப்பட்டு கிராமங்கள் புறம் தள்ளப்படுகிறது //.

    என் பதிவின் நோக்கம் புரிந்து
    அருமையாகப் பின்னூட்டமிட்டமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. நகரமயமாக்கலால் ஏற்படும் பாதிப்பு என்றாலும் இப்போ நகரமாய் பல கிராமங்கள் மாற்றப்படுகின்றனவே அவற்றுள்ளும் உங்க ஊரு வரவில்லையா

    நல்லதும் ரொம்ப வித்தியாசமானதுமான கவிதை சார்

    ReplyDelete
  24. வயல்கள் கைவிட்டதால் விவசாயிகள் வாழாவெட்டி ஆனார்கள். அரசும் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி விலகி கிராமங்களைக் கைவிடும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. இப்படித் தொடர்ந்தால் கிராமங்களும் வாழாவெட்டியாகிவிடும். ஒரு பேருந்தைக் குறியீடாய் வைத்து பேருந்தல் எழுப்பும் அருமையானப் படைப்பை படைத்துள்ளீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  25. நல்ல கேள்வி. கிராமங்கள் புறக்கணிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  26. Bye Pass Rider பேருந்துகளுக்கு கிராமங்கள் தெரிவதில்லை. நாம்தான் வழிமறித்து கட்டிப் போட வேண்டும்.

    ReplyDelete
  27. வசதிகள் பெருக பெருக கிராமங்கள் தங்கள் வசதியை இழந்து வருகின்றன என்ற உங்கள் ஆதங்கம் நியாயமான ஒன்றே...

    ReplyDelete
  28. வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் மாற்றங்கள் யாவும் நகர மக்களுக்கே கிராமங்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதை நயமாகச் சொன்னீர்கள் அன்பரே.

    ReplyDelete
  29. சாலை, வாகனம், இடைவெளி எல்லாம் இன்று காலை அடுத்த அறையிலிருந்த மகளுடன் ஐ-போன் குறுஞ்செய்தியில் உரையாடிய பொழுது புரிந்து போனது.

    ReplyDelete
  30. சிட்டுக்குருவி //


    நல்லதும் ரொம்ப வித்தியாசமானதுமான கவிதை சார்//

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. .
    கீதமஞ்சரி //

    ஒரு பேருந்தைக் குறியீடாய் வைத்து பேருந்தல் எழுப்பும் அருமையானப் படைப்பை படைத்துள்ளீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.//

    என் பதிவின் நோக்கம் புரிந்து
    அருமையாகப் பின்னூட்டமிட்டமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. மாதேவி //

    நல்ல கேள்வி. கிராமங்கள் புறக்கணிக்கப்படாமல் இருக்க வேண்டும்.//

    என் பதிவின் நோக்கம் புரிந்து
    அருமையாகப் பின்னூட்டமிட்டமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. தி.தமிழ் இளங்கோ //

    Bye Pass Rider பேருந்துகளுக்கு கிராமங்கள் தெரிவதில்லை. நாம்தான் வழிமறித்து கட்டிப் போட வேண்டும்.//

    மிகச் சரியான கருத்து
    தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. NKS.ஹாஜா மைதீன் //

    வசதிகள் பெருக பெருக கிராமங்கள் தங்கள் வசதியை இழந்து வருகின்றன என்ற உங்கள் ஆதங்கம் நியாயமான ஒன்றே...//


    என் பதிவின் நோக்கம் புரிந்து
    அருமையாகப் பின்னூட்டமிட்டமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. ஆமாம் ஐயா..இதே போல நிறைய ஊர்களை கேள்விப்பட்டிருக்கிறேன்..பாயிண்ட் டூ பாயிண்ட் என்கிறார்களே..

    ReplyDelete

  36. ஒருகாலத்தில் நானும் தொல்லைப் பட்டேன்! இன்று கிராம உறவே அற்றுப் போய்விட்டது!

    ReplyDelete
  37. முனைவர்.இரா.குணசீலன் //

    வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் மாற்றங்கள் யாவும் நகர மக்களுக்கே கிராமங்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதை நயமாகச் சொன்னீர்கள் அன்பரே.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. அப்பாதுரை //

    சாலை, வாகனம், இடைவெளி எல்லாம் இன்று காலை அடுத்த அறையிலிருந்த மகளுடன் ஐ-போன் குறுஞ்செய்தியில் உரையாடிய பொழுது புரிந்து போனது.//

    தங்கள் பின்னூட்டமே அருமையான
    கவிதையாக உள்ளது
    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. மதுமதி //

    ஆமாம் ஐயா..இதே போல நிறைய ஊர்களை கேள்விப்பட்டிருக்கிறேன்..பாயிண்ட் டூ பாயிண்ட் என்கிறார்களே..//

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. புலவர் சா இராமாநுசம் //


    ஒருகாலத்தில் நானும் தொல்லைப் பட்டேன்! இன்று கிராம உறவே அற்றுப் போய்விட்டது!/

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  41. ஏன் அதிகமாகிக்கொண்டே போகிறது என்பது மட்டும்
    எனக்கு இதுவரை விளங்கவே இல்லை.
    உண்மை தான் ஐயா பயணம் என்றால் மாட்டுவண்டில இருபுறமும் வயல்வெளிகளை ரசித்தபடி செல்வது தான் இனிதான பயணம்.

    ReplyDelete
  42. //அரசின் மக்களுக்கான நலத் திட்டங்கள் பெருகப்பெருக
    எங்கள் கிராமத்திற்கும்
    அந்தப் பிரதான சாலைக்குமான
    இடைவெளி சிறிதும் குறையாது
    ஏன் அதிகமாகிக்கொண்டே போகிறது என்பது மட்டும்
    எனக்கு இதுவரை விளங்கவே இல்லை//

    உண்மைதான். நகரமயமாக்கலின் விளைவுதானோ இது. சில மினி பஸ்கள் இந்த இடைவெளியைக்குறைக்க முயன்றாலும் யானைப்பசிக்கு சோளப்பொறி போல்தான் இருக்கிறது.

    ReplyDelete
  43. Sasi Kala //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. அமைதிச்சாரல் //


    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. கே. பி. ஜனா... //

    நல்ல கேள்வியே!//

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. ஒவ்வொரு முறை நீங்க எடுக்கும் தலைப்பாகட்டும், கருத்தாகட்டும், கருவாகட்டும்... கண்டிப்பா அதில் ஒரு மெசெஜ் இருக்கும்னு நான் சொல்லி இருக்கிறேன் பலமுறை பதிவில்... இப்பவும் அட்டகாசமான ஒரு டாபிக்.. சமூகத்தில் யாருக்கு என்ன நல்லது நடந்தா என்ன யாருக்கு என்ன கெடுதல் நடந்தா எனக்கென்ன என்று போகாமல் அவஸ்தைகளை விரிவாக மிக அழகாக சொன்னவிதம் சிறப்பு ரமணிசார்.

    நம்ம பாட்டி தாத்தா கிட்ட கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பேசினோம்னா அந்த காலத்து அற்புதங்களை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, இயற்கை வளங்களை, அனுபவித்த அதிசயங்களை மிக அழகாய் சொல்லுவார்கள். சொல்லும்போதே நமக்கும் ஏக்கமாக இருக்கும் நாம ஏன் அந்த காலத்தில் பிறக்காம போயிட்டோம் அப்டின்னு.... அந்த காலத்தில் கரெண்ட் வசதி, போக்குவரத்து வசதி, தண்ணீர் வசதி, காற்று வசதி, தொலைகாட்சி இதெல்லாம் இப்ப நாம் அனுபவிப்பது போல் இல்லை. ஆனால் இயற்கை நிறைய வளங்களை நமக்கு கொடுத்திருந்தது. இயற்கையை அழிக்காமல் தானும் வாழ்ந்து இயற்கையையும் வாழவைத்தார்கள் நம் முன்னோர்கள்... முன்னோக்கிச் சென்றால் அரசியலில் கூட எதிர்க்கட்சி ஆளும் கட்சி இருவரிடையே நல்ல பண்புகள் இருந்தது. ஒருவரை ஒருவர் அசிங்கமாக இகழ்ந்து பேசாமல் மேடையில் தாக்காமல் தான் செய்யப்போகும் நல்லவைகளை மட்டுமே முன் வைத்து அதன்படி ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதி மீறாமல் வசதிகளை செய்தும் தந்தனர்... அதனால் தான் உங்களால் இத்தனை அழகாய் எளிதாய் சிறு பிள்ளையாய் இருந்தபோது எக்ஸ்பிரஸ் பஸ்ஸாயினும் ( எந்த வித வசதியையும் குறைக்காமல்) கிடைத்தது.... ஏறிப்போகவும் முடிந்தது. ஊரின் அருகே நின்று நிதானமாக கிளம்பியது. மக்களின் பிரச்சனைகளை ஆழ்ந்து கவனித்து அதை சரியும் செய்தது..... அந்தக்காலத்து அரசியல்..... விவசாயிகள் உழைத்து பாடுபட்டாலும் வயிறு நிறைய உண்டனர். நிம்மதியாக வாழ்ந்தனர்... முதல் பத்தியை படித்தபோது எனக்கு நினைவுக்கு வந்தது இதெல்லாம் ரமணிசார். அந்தக்காலத்து அரசியலில் கூட பண்பு, தனிமனித ஒழுக்கம், நேர்மை இருந்தது. கல்வி பயிலாத காமராஜர் தன் வீட்டுக்கும் தனக்கும் எந்த வித வசதியும் செய்துக்கொள்ளாமல் தன் தாய்க்கு கூட தன் உழைப்பில் இருந்து மட்டுமே பணம் அனுப்பி (கஷ்ட ஜீவனம் தான்) வாழ்க்கையை நடத்தினர்...அப்பெல்லாம் மக்களைக்காக்க அரசியல் அவசியமாக இருந்தது. அதனால் நாடும் சிறப்பாக இருந்தது. மக்களும் சுபிக்‌ஷமாக வாழ்ந்தனர். கிராமப்புறம் என்று ஒதுக்காமல் கிராமத்துக்கு தேவையான வசதிகளும் செய்து தந்தனர். பிள்ளைகள் வெகு தூரம் நடந்துச்சென்று படிக்க சிரமப்படுகிறார்களே என்று பள்ளிக்கூடங்கள் அமைத்தனர். மரத்தடி பள்ளிக்கூடம் என்றாலும் பிள்ளைகளும் அதுவே மிகப்பெரிய வரபிரசாதமாக இருந்தது.. ஆசிரியர்களும் வந்து டெடிக்கேட்டடாக பணியும் செய்தனர்....

    ReplyDelete
  47. கொஞ்சம் வளர்ந்து இளைஞன் ஆன காலத்தில் அதாவது அடுத்த ஒரு 10 ஆண்டு இடைவெளியில் அரசியலில் லஞ்சம் தொடங்கியது.... மக்களின் பிரச்சனைகள் அமுக்கப்பட்டு அரசியல்வாதிகள் தான் செட்டிலாக நல்ல இடமாக அரசியலை நோக்கி நடைப்போட்டனர்.... மக்களுக்கு கிடைக்கவேண்டிய வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பானது... கிராமபுறங்களின் பக்கம் அரசியல்வாதிகளின் பார்வை செல்வது தடைப்பட்டது... விவசாயிகளின் கடும் உழைப்பை உயர்வாய் எண்ணாமல் அவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகளையும் பறித்தது... பட்டினிச்சாவு தொடங்கியது அப்போது தான்.... நாடே முழுக்க அழுதது விவசாயிகளின் இந்த கோரச்சாவைக் கண்டு... ஆனாலும் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. தன் சுயநலம் தான் பெரிதாக பட்டிப்போட்டு அவர்கள் கண்ணை மறைத்திருந்தது..... அரசியலில் ஒருவரைப்பற்றி ஒருவர் தாக்கத் தொடங்கினர் மேடையில்... மக்கள் வேடிக்கைப்பார்க்கவும், கைத்தட்டவும், கரவொலி எழுப்பவும் உபயோகப்படுத்தப்பட்டனர்... அப்ப வசதிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்தது. அட கிராமப்பக்கம் எல்லாம் போனா டார்கெட் ரீச் பண்ண முடியாதுப்பா.. மெயின் ரோடுக்கு வந்து ஏறிக்கட்டும்.. அட்லீஸ் புறவழி சாலையிலாவது விடுறோமில்ல??? அதுக்கு சந்தோசப்படுங்க... இப்படி ஒரு ஒப்புக்கு சமாதானம் அவசியப்பட்டது சொல்லி சமாளிக்க மக்களிடம்.... மக்களோ எப்படியும் பயணிக்கவேண்டியே ஆகவேண்டிய கட்டாயம்.... அதனால் வேறுவழி இல்லாமல் ஊறு விளைவிக்காதவரையில் நடந்து பழகிக்குவோம். அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம் என்று வெளியில் இறங்கி ஊருக்குள் நடந்து வரவும்..... எங்காவது செல்லவேண்டும் என்றாலும் நடந்து போய் பஸ் ஏறப்பழகியாச்சு....

    ReplyDelete
  48. டெக்னாலஜி பெருகப்பெருக கிராமப்புறங்களுக்கான அடிப்படை வசதிகள் கூட மறுக்கவும் மறைக்கவும் படுகிறது என்ற நிதர்சனமான வேதனையை புரிந்துக்கொள்ள வைத்தீர்கள் ரமணிசார் இந்த மூன்றாம் பத்தியில்.. வசதிகளும் வாய்ப்புகளும் சிட்டில இருக்கிறவங்களுக்கு தாம்பா... பெட்ரோல் இட்டு தனக்கென்று அத்தனை செலவு செய்து வாகனம் வைத்துக்கொள்ள வசதி இல்லாத அடித்தட்டு மக்கள் தான் இதில் அடிபடுவது... கிராமங்களையே ஒதுக்குப்புறமாக்கி அதற்கு வசதிகளும் செய்து தராமல் இருக்கிற வசதியையும் மறுத்துவிடும் அரசியல்வாதிகளிடம் சட்டையைப்பிடித்து கேள்வி கேட்கவும் இயலாது.. “ ஓட்டு வாங்க வரும்போது முதுகு வளைந்து காலைத்தொடும் அளவுக்கு குனிந்து கூன்போட்டு வணக்கம் போட்டு வாக்குகள் தந்து ஓட்டை மட்டும் வாங்கிக்கொண்டு அதன்பின் கிராமங்களை அடியோடு மறந்து போறிங்களேன்னு....” கவர்ன்மெண்ட்டிடம் ஸ்ட்ரைக் செய்யவும் முடியாது....தடாச்சட்டத்துல பிடிச்சு ஜெயில்ல போடத் தன் லாயக்கு... அடச்சே பஸ்ஸுக்கு காத்திருப்பதை விட நாம ஒரு வண்டி வாங்கிக்கலாம் என்று முடிவும் எடுக்கமுடியாது திரிசங்கு நிலையில் மாட்டிக்கொண்டு அவதிபடுவது இதுபோன்ற மக்களே.... வசதிகள் பெருக பெருக... கிராமங்கள் அழிக்கப்படுகிறது.. மக்கள் ஒதுக்கப்படுகின்றனர்... விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர்.... நான்ஸ்டாப் ஸ்டாப்பிங் பஸ்ல ஏறினால் இரண்டு ஸ்டாப்பிங்ல நிறுத்தாமல் மூன்றாவது ஸ்டாப்பிங்ல நிறுத்துவாங்க. நமக்கும் வேறு வழி இல்லாமல் இறங்கி எதிர்ப்பக்கம் போய் நின்று மற்றொரு பஸ்ஸுக்காக காத்திருந்து அடுத்த சாதாரண பஸ் பிடித்து வீடு வந்து சேருவதற்குள் அக்கடா என்று ஆகிவிடும்.. இப்படி அல்லப்பட்டு பயணம் செய்வதை விட வீட்டிலேயே இருந்துவிடவும் தோன்றும்.... டெக்னாலஜி பெருகி என்னப்பயன்?? வசதிகள் பெருகி என்னப்பயன்?? எந்த ஒரு முன்னேற்றமும் மக்களுக்காக என்பது போய் தன் மார்க்கெட் ரேட் எவ்வளவு என்ற விகிதாச்சாரத்தில் போய் முடிந்து தான் மட்டும் கொழிக்க இடம் வகுத்துக்கொள்கிறது... காண்ட்ராக்ட் பிடிச்சுக்கொடுத்தா எவ்ளோ தரே கமிஷன்?? அந்த காண்ட்ராக்ட் காரன் கமிஷனை வெட்டிவிட்டு இங்கு சிமெண்ட்டையும் குறைவாக்கி பொதுமக்கள் நிறைய பேர் பலியாகக்காரணமும் ஆகிவிடுவான்... ஆகமொத்தம் டெக்னாலஜி டெவலப்மெண்ட் என்பது மக்களின் வசதிக்காக என்பது போய் மக்களை அவதிபட வைக்கவும் அழிக்கவும் மட்டுமே உபயோகப்படுகிறது...

    ReplyDelete
  49. கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் பணி செய்ய விருப்பம் இருப்பதில்லை ஒருசில ஆசிரியர்களுக்கு. அட அவ்ளோ தூரம் யாரு போய் மெனக்கெடுவது? அட ஒரு சிலப்பிள்ளைகளும் கல்வியின் சிரமங்கள் நடந்து வர சிரமங்கள் எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு படிக்க வந்தால் ஆசிரியர்கள் இருப்பதில்லை... கிராமப்புறங்களில் மட்டும் ஹாஸ்பிடல்கள் சரிவர இயங்குவதில்லை... பள்ளிக்கூடங்கள் இயங்குவதில்லை... இனி அரசியல்வாதிகள் வசதிகள் என்று செய்வதாக இருந்தால் கிராமப்புறங்களில் இருந்து தொடங்கட்டும்..... அவர்களுக்கு நல்ல கல்விக்கூடங்கள் அமைத்துக்கொடுக்கட்டும்... ஊருக்கு உள்ளே வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் ஒரு பஸ் என்ற நிலை மாறி தினமும் அடிக்கடி பஸ் சென்றுவர வசதிகள் அமைத்துக்கொடுக்கட்டும்.. யாருக்கு தெரியும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள கிராமப்புறங்களில் கூட எத்தனையோ நல்முத்துகள் விளைகின்றதே.... நல்மணிகள் நாளைய மன்னர்களாய் அரசியலிலோ அல்லது மருத்துவத்திலோ சாதிக்க சாத்தியம் இருக்கின்றதே..

    ReplyDelete
  50. கடைசி பத்தி நெத்தியடி அரசியல்வாதிகளுக்கு கொடுத்த அடி.....மக்கள் நலத்திட்டங்கள் வகுத்து தன்வரை கஜானா ரொப்பிக்கொள்ளும் அரசியல்வாதிகளை சாட்டையால் வீசி கேட்கப்பட்ட நாகரீகமான கேள்வி இது... ” இத்தனை வசதிகள் கூடியும் பிரதான சாலைக்கும் எங்கள் கிராமத்துக்குமான இடைவெளி மட்டும் குறையாது அதிகமாகிக்கொண்டு போவது ஏன் என்று?” இனி ஓட்டுக்கேட்க வரும் அரசியல்வாதிகளிடம் முதலில் அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கிறேன் என்று வாக்குக்கொடுப்பதை விட்டு முதலில் வசதிகளை செய்துக்கொடு பின் ஓட்டுப்போடுகிறோம் என்று மக்கள் தைரியமாக உரைக்கட்டும்... அரசியல்வாதிகளின் சாசனங்கள் இனி மக்கள் தீர்மானிக்கட்டும்... இலவசங்கள் கொடுத்து டெம்பரவரியாக மக்களை கவர்ந்திழுக்கும் திட்டங்கள் வேண்டாம். நிலையான சாலை வசதியும் பஸ்வசதியும், போக்குவரத்து வசதியும், பள்ளிக்கூடமும், மருத்துவமனையும் இப்படி எல்லா வசதிகளும் மேம்படுத்தி கிராமப்புறங்களில் இருக்கும் மக்களும் மனிதர்கள் தான் என்ற கருணையை மனதில் கொண்டு அவர்களின் சிரமங்களையும் மனதில் கொண்டு வசதிகள் செய்துக்கொடுத்து தனக்கென்று சுயநலமாய் சிந்திக்காமல் இவர்களும் வாழட்டும் என்ற நிலை கொண்டுவந்தால் சுபிக்‌ஷம் கிராமப்புறங்களுக்கு மட்டுமல்ல.... நம் நாட்டுக்கே தான் என்று வாசிப்போர் எல்லோரையும் சிந்திக்கவைத்த மிக அற்புதமான சிந்தனை வரிகள் பகிர்ந்தமைக்கு அன்புநன்றிகள் ரமணிசார்....மனம் நிறைகிறது.. திருப்தியாக இருக்கிறது....இப்படி ஒவ்வ்வொருத்தராக கேட்க ஆரம்பித்தால் கிராமப்புறங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையும் வருகிறது...

    ReplyDelete
  51. அன்பார்ந்த மஞ்சுபாஷிணி அவர்களுக்கு

    எழுதுவதில் கிடைக்கும் திருப்தியை விட
    மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்களின்
    வார்த்தைகளைக் கேட்பது எத்தனை சுவையானது
    என்பது தங்கள் பின்னூட்டங்களைப் படிக்கும்
    எனக்குத்தான் தெரியும்
    உண்மையில் தாங்கள் சொல்லியுள்ள அனைத்து
    விஷயங்களையும் உள்ளடக்கி பஸ்ஸை ஒரு
    குறியீடாக மட்டும் வைத்துச் சொல்ல முயன்றதை
    மிகச் சரியாகப் புரிந்து விரிவாக அழகாக பல்வேறு
    பணிகளுக்கிடையிலும் பின்னூட்டமிட்டது
    பிரமிப்பூட்டுகிறது.மிக்க நன்றி

    ReplyDelete
  52. மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்....

    ReplyDelete