Wednesday, October 31, 2012

வரம் வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணியும்
என்னைவிட்டு  நகர்வதில்லை

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

43 comments:

  1. /// வழிகாட்டும் ஒளிவிளக்காய்
    எழுத்திருக்க நினைப்பதனால்
    அணிதேடி அலைவதில்லை-அணியும்
    என்னைவிட்டு நகர்வதில்லை ///

    மிகவும் பிடித்த நம்பிக்கை வரிகள்...

    நன்றி...
    tm3

    ReplyDelete
  2. வரம்வேண்டா தவமாக
    தினமெழுத்தில் கரைவதனால்
    நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
    அருளுக்கும் குறைவில்லை

    ரொம்ப நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
  3. ஆரம்பத்திலிருந்தே ரசித்துப் படித்தேன்(4)

    ReplyDelete
  4. நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
    அருளுக்கும் குறைவில்லை....
    நிறைவானது மனமும். நன்றி ஐயா.

    ReplyDelete

  5. கலைவாணி அருளுக்கு குறைவில்லை .அருமை.ananthako.blogspot.com

    ReplyDelete
  6. அருமையான கவிதை.
    "வரம்வேண்டா தவமாக
    தினமெழுத்தில் " ...

    ReplyDelete
  7. வாணி தான் வந்தே தங்கள் வாயிற்படியில்
    தவம் இருக்கிறாள் போலும் .....அருமை !

    ReplyDelete
  8. // போற்றுதலைத் தூற்றுதலை
    ஓர்கணக்கில் வைப்பதனால்
    வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
    தேக்கமுற வாய்ப்புமில்லை//

    நல்ல சிந்தனை! தெளுவான கருத்தோட்டம்! கவிதை சிறப்பாக உள்ளது!

    ReplyDelete
  9. நல்லதொரு கவிதை.

    ReplyDelete
  10. //நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
    அருளுக்கும் குறைவில்லை//

    நிறைவான வரிகள். சிறப்பான கவிதை.

    ReplyDelete
  11. கலைவாணி
    அருளுக்கும் குறைவில்லை
    >>>
    மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஐயா!

    ReplyDelete
  12. ஒவ்வொரு வரிகளையும் இரண்டு இரண்டுமுறை படித்து மிகவும் ரசித்தேன், அற்புதமான வரிகள்.

    ReplyDelete
  13. கலைவாணி அருள் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்! மிகச் சிறப்பான படைப்பு! மிகவும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  14. //வரம்வேண்டா தவமாக
    தினமெழுத்தில் கரைவதனால்
    நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
    அருளுக்கும் குறைவில்லை//

    கம்பருக்கு அருள் செய்த கலைவாணி அருள் உங்களுக்கு எப்போதும் இருக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்!

    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
    வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
    யிருப்பளிங்கு வாரா திடர். – கம்பர் (தனிப் பாடல்)

    ReplyDelete
  15. என்மூலம் வந்ததெல்லாம்
    என்னால்தான் வந்ததெனும்
    எண்ணமில்லை என்பதனால்-
    ....
    அற்புதமான வரிகள் அய்யா, நன்றி

    ReplyDelete

  16. ரசித்துப் படித்த கவிதை வரிகள்.....எல்லாம்தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. //வரம்வேண்டா தவமாக
    தினமெழுத்தில் கரைவதனால்//

    இதனால்தான் உங்கள் படைப்புகள் பலமுள்ளதாக இருக்கிறது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  18. முத்திரைக் கவிதை!

    நன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. அருமையான கவிதை. ரசித்தேன்.

    ReplyDelete
  20. உணர்வோடு கருவினையும்
    இணக்கமாக இணைப்பதினால்
    இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
    கலங்கவிட்டு ரசிப்பதில்லை///

    உங்கள் திறமைக்கு இது என்ன இதை விட சாத்தியமே....
    அருமையான கவிதை....
    நம்பிக்கை விதையை மனசில் விதைக்கும் கவிதை :))))

    ReplyDelete
  21. குறிப்பாக மூன்றாவது பாரா [சரணம் என்று சொல்லணுமோ? கவிதை(யிலும்)ல நான் கொஞ்சம் வீக்கு!], ஐந்தாவதும் கவர்கின்றன.

    ReplyDelete
  22. வரம் வேண்டா தவம்... என்ன அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு கலைவாணியின் அருள் என்றும் குறைவுபடாது நண்பரே. அருமை.

    ReplyDelete
  23. மிகவும் அருமையான கவிதை.

    ReplyDelete
  24. ஸ்திதப்ரஞன்!
    அருமை
    த.ம.13

    ReplyDelete
  25. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. திண்டுக்கல் தனபாலன் //

    வழக்கம்போல் தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. Lakshmi //

    ரொம்ப நல்லா இருக்கு கவிதை //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. Avargal Unmaigal //

    அருமை அருமை.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. பழனி.கந்தசாமி //

    ரசித்தேன்.//

    தங்கள் வாழ்த்து "படி"த்தேன்

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. சிட்டுக்குருவி //

    ஆரம்பத்திலிருந்தே ரசித்துப் படித்தேன்//


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. Sasi Kala s//


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. Sethuraman Anandakrishnan //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. மாதேவி //

    அருமையான கவிதை.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. ஸ்ரவாணி //


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. புலவர் சா இராமாநுசம் //

    நல்ல சிந்தனை! தெளுவான கருத்தோட்டம்! கவிதை சிறப்பாக உள்ளது! //


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. கவிதை வீதி... // சௌந்தர் // //


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. கோவை2தில்லி //

    நல்லதொரு கவிதை.//


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. RAMVI //


    நிறைவான வரிகள். சிறப்பான கவிதை.//


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. கலைவாணிக்கு உங்கள் அருள்.

    ReplyDelete