Tuesday, November 13, 2012

குழந்தையோடு இணைந்திருங்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவாளனை உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

 இவை எதற்கும் நேரமில்லையெனில்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்


24 comments:

  1. குழந்தையோடு இணைந்திருக்கும் நேரத்திற்கு ஈடு இணை ஏது...?

    ரசிக்க வைக்கும் வரிகள்...

    சிறப்புக் கவிதை... குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...
    tm2

    ReplyDelete
  2. குழந்தைகள் தினத்தில் மிக அருமையான கவிதை. குழந்தைகளுடன் இணைந்திருக்கும் பொழுதுகள் தேவகணங்கள் அல்லவா?

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுவதைக் காட்டிலும் உலகத்தில சிறந்ததேது? உண்மைதான்..

    ReplyDelete
  5. இயற்கையோடும் , கள்ளமில்லா
    மழலையோடும் இணைந்து இருத்தல் ,
    இணை இல்லா இன்பமே என்றும் !
    தேவை சற்றே ரசனையான மனமே !
    உணர்த்திய கவிதை அற்புதம் !

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  7. தாங்கள் குறிப்பிட்ட எதையும் அனுபவிக்க இயலாத நகர வாழ்விலும் நிச்சயம் குழந்தைகள் இருக்கவே செய்வார்கள். அனைத்தையும் அவர்களுடன் இருப்பதால் அனுபவிக்கலாம் சிறப்பு ஐயா.

    ReplyDelete
  8. சார்ந்திருப்பது சாலச் சிறந்தது

    ReplyDelete
  9. கடைசி வரிகள் கலக்கல்! உண்மை குழந்தைகள் எத்தகைய சூழலையும் மாற்றிவிடும்! நன்றி!

    ReplyDelete
  10. ஆமாம்! உண்மை தான்! அதை நான் அனுபவித்துக்கொன்டிருக்கிறேன்! உலகின் அத்தனை சந்தோஷங்களையும் ஒரு சிறு குழந்தையின் அருகாமை ஒன்றுமில்லாததாகச் செய்து கொன்டிருக்கிற‌து!

    உங்க‌ள் க‌விதை அந்த‌ உண்மையை மிக‌ அழ‌காக‌ச் சொல்லுகிற‌து!!

    ReplyDelete
  11. ///இவை எதற்கும் நேரமில்லையெனில்
    குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அது
    இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும்////

    இங்கே நாங்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  12. ஆமாம் குழந்தைகளே போதும் அவர்களிடம் அனைத்தையும் ரசிக்கலாம் நல்ல கவிதை

    ReplyDelete
  13. மழலை அமுதம். அதற்கு இணையேது.

    அருமையான கவிதையைத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  14. இந்நாள் மலரும் திருநாள் போல்
    எந்நாளும் திகழ்ந்திடவே - நானும்
    எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
    இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. இனிய கருத்து இரமணி ஐயா;

    ReplyDelete
  16. கவிதை மிகச்சிறப்பு...குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. குழந்தைகள் தினத்தன்று
    ஓர் அழகிய கவிதை
    சிந்தனையை தூண்டுதல் மட்டுமன்றி
    சிறந்த அறிவுரைகளும் கொண்ட கவிதை..
    வாழ்த்துக்கள் ஐயா ..

    ReplyDelete
  18. மிகச்சரியான கவிதை ஐயா! சோகம், உடல் அசதி, நோயின் தாக்கம், வெறுமை இவை அனைத்தையும் ஒரு குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பில் மறக்கலாம். கவிதை பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  19. அத்தனைக்கும் ஈடானது குழந்தைகளோடு இருத்தல் என்ற கருத்து மிக அருமை.

    ReplyDelete
  20. // இவை எதற்கும் நேரமில்லையெனில்
    குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அது
    இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும்//

    நாளுக்கு நாள் சிதறும் கருத்து முத்துக்துளைக் கண்டு மிகவும் வியக்கிறேன் இரமணி! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  21. குழந்தைகள் தினத்தன்று பெரியவங்களுக்கு நச்சென்று ஒரு கவிதை! பிரமாதம்!
    //நீலக் கடலின் பிரமாண்டத்தில்
    இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
    அது பேரறிவாலனை உணரச் செய்து போகும்//
    பேரறிவாளனை?

    ReplyDelete
  22. //இவை எதற்கும் நேரமில்லையெனில்
    குழந்தைகளோடு இணைந்திருக்க முயலுங்கள்
    நிச்சயம் அது
    இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத் தரும்//

    அருமையான வரிகள், அதுவும் இந்த குழந்தைகள் தினத்தன்று அவர்களை பெருமை படுத்தும் வரிகள். இன்றிலிருந்து உங்களை தொடர்கிறேன்.....இன்னும் இன்னும் சிறப்பான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  23. ஆம் அத்தனையும் உண்மை!
    அனுபவிக்கிறேன் அத்தனையையும்!
    போரனுடன் அடிக்கடி விளையாடுவேன்.
    இன்பம்!..இன்பம்!
    இனிய கவிதை. மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete