Saturday, November 17, 2012

மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "


ஊழல் பெருச்சாளிகளுக்கும்
உதவாக்கரை தலைவர்களுக்கு மிடையில்
ஈட்டி ஏந்திய கோழைகளாய்
வெறும் வாக்காளிக்கும் எந்திரங்களாய்

புரட்டு மதவாதிகளுக்கும்
முரட்டு பகுத்தறிவாளருக்கு மிடையில்
சுழலில் மாட்டிய படகுகளாய்
இரு தலைக் கொல்லி எறும்புகளாய்....

திமிங்கல  நிறுவனங்களுக்கும்
உள்நாட்டு  முதலைகளுக்கு மிடையில்
தீயில் உருகும் மெழுகாய்
ஏழ்மையில் கரையும் உயிரினங்களாய்.

சிகரத்தைப் பார்த்து ஏங்கியபடி
பாதாளம் பார்த்துப் பயந்தபடி
சரிவினில் தொங்கிடும் ஜந்துக்களாய்
இலக்கற்றுத் திரியும் விலங்கினங்களாய்..

பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
நல்லதொரு மேய்ப்பனைத் தேடி
தீராத பாவப்பட்ட ஜென்மங்களாய்
மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "


22 comments:

  1. நடுத்தர வர்க்கத்தினரின்
    நிலையை அழகாக விளக்கும் பதிவு ஐயா ...
    உண்மையான உண்மைகள்...

    ReplyDelete
  2. எப்போ வருவாரோ எந்தன் கலி தீர?

    ReplyDelete
  3. நடுத்தர குடும்பத்தாரின் உண்மை நிலையை வரிகள் சொல்கின்றன... என்று தீருமோ...?
    tm3

    ReplyDelete
  4. நல்ல மேய்ப்பன் கிடைப்பானா?
    பார்க்கலாம்.

    ReplyDelete
  5. உங்கள் வேதனைகளும் ஆதங்கமும் கோபங்களையும் சேர்த்து கவலையாக சாட்டையை வீசும் கவிதை, ஊனை உருவி குத்துகிறவர்களை குத்தி திருத்தட்டும் குரு...!

    ReplyDelete
  6. நடுத்தர வர்க்கத்தினரின் நிலையை அழகாக எடுத்துச் சொல்கின்றது கவிதை.

    புலம்பிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  7. பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
    நல்லதொரு மேய்ப்பனைத் தேடி
    தீராத பாவப்பட்ட ஜென்மங்களாய்
    மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "

    நடுத்தர வர்க்கதினரின் நிலமை அப்பட்டமா சொல்லிடிங்க.

    ReplyDelete
  8. காலச்சூழலுக்கேற்ற விழிப்புணர்வூட்டும் கவிதை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. அலைந்து திரிகிறோம்
    நல்லதொரு மேய்ப்பனைத் தேடி

    நடுத்தர வர்க்கதின் நிலமை இது

    ReplyDelete
  10. மேய்ப்பனுக்காகக் காத்திராமல் தானே மேய்ப்பனாகி விட வேண்டியதுதான்!

    ReplyDelete
  11. மேய்ப்பனை ஆடுகளுக்குத் தேடலாம்.. நண்டுகளில் தேடுவது எப்படி? அதனால் தான் நாங்கள் திரைக் கொட்டகையில் தேடுகிறோம்!

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அய்யா
    அறிவு முரடானது என்றால் தெரிவு செய்யும் உரிமை சிறிதளவும் கிடையாது என்று பொருளா?

    முரடான பாதையை தேர்ந்தெடுத்து பார்ப்போமே காங்கிரஸையும் கழகங்களையும் ஒதுக்கி வைத்து

    ReplyDelete


  13. நம்பிக்கையே வாழ்வின் அடிநாதம். மேய்ப்பரே எங்கிருக்கிறீர்கள். ?

    ReplyDelete
  14. சிகரத்தைப் பார்த்து ஏங்கியபடி
    பாதாளம் பார்த்துப் பயந்தபடி
    சரிவினில் தொங்கிடும் ஜந்துக்களாய்
    இலக்கற்றுத் திரியும் விலங்கினங்களாய்..

    உண்மை நிலையை விளக்கும் வரிகள் சிறப்பு ஐயா.

    ReplyDelete
  15. // பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
    நல்லதொரு மேய்ப்பனைத் தேடி //

    அனைத்து மேய்ப்பர்களுமே நம்மை விற்று விடுகிறார்கள். பாவப்பட்ட ஆடுகள் நாம்!

    ReplyDelete
  16. காலகாலமாய்த் தேடிக்கொண்டுதானிருக்கிறோம்.கிடைக்கிறார் இல்லையே !

    ReplyDelete
  17. நடுத்தர மக்களைப் பற்றிய முதல் தரக் கவிதை! அருமை!

    ReplyDelete
  18. நடுத்தர மக்களைப் பற்றிய முதல் தரக் கவிதை! அருமை!

    ReplyDelete
  19. நிதர்சனத்தின் கண்ணாடியாய் தலைப்பும் கவிதையும்.

    ReplyDelete
  20. நடுத்தரங்களின் நிலமையை சரியா சொல்லிட்டீங்க...

    ReplyDelete
  21. ஆம். "ந‌டுத்த‌ர‌ம்' என்றும் மேய்ப்ப‌னுக்காக‌வே காத்திருப்ப‌து தான் அத‌ன் வீழ்ச்சி.
    க‌ற்பிப்ப‌வ‌னை தேடினால், ஆளும் வ‌ர்க்க‌ம் அத‌னைத் தேடி ஓடி வ‌ரும்.

    ReplyDelete