Sunday, November 4, 2012

காலமும் வாழ்வும்

ஆற்றின் போங்கில்
படகு போவது அறியாது
படகும் துடுப்பும்
தனக்குக்தான் கட்டுப்பட்டதென
உணர்வுப்பூர்வமாய்
அறிவுப் பூர்வமாய்ச்
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்
படகில் பயணிக்கும் இருவர்

மௌனமாய்ச் சிரித்துக் கொள்கிறது
அகன்று  விரிந்த பெருவெளி 

20 comments:

  1. அருமையா சொனீங்க சார்

    ReplyDelete
  2. ரொம்ப சின்ன கவிதையில வாழ்க்கையோட மிகப் பெரிய தத்துவத்தையே சொல்லீட்டீங்க ஐயா! என்னதான் இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்!

    ReplyDelete
  3. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார். வரிகள் குறைவானாலும் வாழ்வின் மிகப் பெரிய தத்துவத்தை எளிய வரிகளில் வழங்கியுள்ளீர்கள் அய்யா.நன்றி

    ReplyDelete

  4. ...கையில் கடிகாரத்தைக் கட்டிக்கொண்டிருப்பவர் காலமே நம் கட்டுக்குள் இருப்பதாக எண்ணுவது போல்.....?

    ReplyDelete
  5. மௌனமாய்ச் சிரித்துக் கொள்கிறது
    அகன்று விரிந்த பெருவெளி
    >>
    அந்த மௌனத்திற்குள ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது ஐயா!

    ReplyDelete
  6. உணர்வுப்பூர்வமாய்
    அறிவுப் பூர்வமாய்ச் சண்டையை விட மௌனமாய்ச் சிரித்துக் கொள்கிற பெருவெளி கனக்கிறது !

    ReplyDelete
  7. இந்த மௌனத்தின் வலிமையே பெரிது அல்லவா..
    அருமை!

    ReplyDelete
  8. சுருக்கமாய் இருந்தாலும் நறுக்கென ஒரு கவிதை.

    ReplyDelete
  9. Short n Sweet...Shortest ever..if I remember correctly Ramani Sir...

    ReplyDelete
  10. Nice poem. Pls visit my site: http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  11. வெளியின் சிரிப்பில் கொஞ்சம் வில்லத்தனம் சேர்த்திருக்கலாமோ?

    ReplyDelete