Friday, December 14, 2012

புலம்பி அலையும் பொது நலம்


உணவைத் தீர்மானிக்கும் அதிகாரம்
நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது
குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்
நேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு
நொந்துத் துடிக்குது ஜன நாயகம்

நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்
உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்

மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்
எளிமையும் ஏழ்மையும்  ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்

வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்


44 comments:

  1. உண்மை நேர்மைக்கு மதிப்பில்லை
    \\மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
    புலம்பி அலையுது பொது நலம்//

    ReplyDelete
  2. நல்லதொரு விழிப்புணர்வூட்டும் கவிதை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete

  3. ஒவ்வொரு பத்தியும் , சீர்கெட்டுக் கிடக்கும் இன்றைய சமுதாயத்திற்குத் தரப் பட்ட சம்மட்டி அடி! கவிதை நன்று இரமணி!

    ReplyDelete
  4. மிக அற்புதமான உபமான உபமேயங்கள்..
    மனதும் அறிவும் சேர்ந்து ஐம்புலன்களை அடக்கி ஆளாமல், ஐம்புலன்கள், மனதையும் அறிவையும் தங்கள் விருப்பத்திற்கு ஆட்டி வைக்கும், அவல நிலையை இதை விட தெளிவாக சொல்ல முடியாது..

    எண்ணிக்கையின் அடிப்படையில்
    நரிகளும்,நாய்களும் காட்டை ஆள,
    செய்வதறியாது திகைக்கின்றன
    சிங்கங்களும்,யானைகளும்..

    ReplyDelete
  5. நல்லா சொன்னீங்க.... பொதுநலம்

    ReplyDelete
  6. நல்லதோர் கவிதை சீர்கெட்ட சமுதாயத்தை விவரித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. //புலம்பி அலையுது பொது நலம்
    //- சமுதாய உண்மையை அப்படியே படம் பிடித்து கவிதையாக்கி விட்டீர்கள். அருமை!

    ReplyDelete
  8. மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
    பணத்திற்கும் பதவிக்கும் போக
    எகிறிக் குதிக்குது அராஜகம்
    எளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு
    தடுமாறி நிற்குது தர்மம்
    //என்ன அழகாக சொல்லி இருக்கீங்க...!!!!!!!!

    ReplyDelete
  9. நாட்டின் இன்றைய நிலையை நயமாக உரைத்துள்ளீர்கள் ...

    ReplyDelete
  10. இயல்பான கவிதை முதலும் முடிவும் ரொம்பவே சரி ...அருமை..

    ReplyDelete
  11. வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
    வசதிக்கும் வன்முறைக்கும் போக
    திமிரி வளருது சுய நலம்
    மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
    புலம்பி அலையுது பொது நலம்//

    இதை எல்லாம் பார்த்து பொது நலத்தால் புலம்பத்தான் முடியும் வேறு என்ன செய்ய!

    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  12. நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
    சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
    மீசை முறுக்குது சட்டம்
    உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
    கதறித் திரியுது நியாயம்

    சிறப்பான பகிர்வு !!..மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  13. மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
    புலம்பி அலையுது பொது நலம்

    நிதர்ச்னத்தை படம் பிடித்துக் காட்சிப்படுத்தும்
    அரிய வரிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. திண்மையான ஓர் கருத்தை எடுத்துக்கொண்டு செம்மையாக ஓர் கவிதை படைத்துள்ளீர்கள்.
    மிக அருமையான புனைவு!
    (//திமிரி வளருது சுய நலம்// திமிறி?)

    ReplyDelete
  15. அறிவு குழம்பித்தவிப்பதையும் நியாங்கள் அழிவதையும் த‌ர்மம் தடுமாறுவதையும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete

  16. நிதர்சன உண்மைகளை அழகாய்ச் சொல்லிச் செல்கிறது கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. நன்றாகச் சொன்னீர்கள் எங்கு போய் முடியப்போகின்றதோ?

    ReplyDelete
  18. சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  19. எளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு
    தடுமாறி நிற்குது தர்மம்....!

    ReplyDelete
  20. உடலைக்கெடுத்து நாவுக்கு அடிமையாகி உணவு சாப்புடுகிற பழக்கத்தை கைக்கொண்ட நாம் மற்ற எல்லா பழக்கத்திலும் அப்படியே இருக்கிறோம் என்பதே உண்மை.

    ReplyDelete
  21. ''..திமிரோடு வளருது சுய நலம்
    மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
    புலம்பி அலையுது பொது நலம்..''

    இதனால் தான் உலகே கெட்டுவிட்டது..
    நன்றாகக் கூறினீர்கள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. சாட்டையும் கைப்பழக்கம்.

    ReplyDelete
  23. எளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு
    தடுமாறி நிற்குது தர்மம்

    வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
    வசதிக்கும் வன்முறைக்கும் போக
    திமிரோடு வளருது சுய நலம்

    தயங்காமல் சுழலும் சாட்டை வரிகள் !

    ReplyDelete
  24. வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
    இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
    துள்ளிக் குதிக்குது பண நாயகம்

    அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.

    ReplyDelete
  25. வழக்கமான ரமணி சார் இதில் மேலும் மிளிர்கிறார்.

    ReplyDelete
  26. "நாவுக்கும் நாசிக்கு போக
    எகத்தாளம் போடுகிறது மனது
    குடலும் உடலும் நாசமாவதறிந்து
    குழம்பித் தவிக்கிறது அறிவு"
    அருமையான அறிவுரையாகக் கவிதை

    ReplyDelete
  27. அருமையான கவிதை இரமணி ஐயா.
    த.ம 8

    ReplyDelete
  28. எளிமையான வார்த்தைகள், ஆழமான கருத்துக்கள், ரசித்தேன், தொடர்கிறேன், நன்றி.

    ReplyDelete
  29. கவியாழி கண்ணதாசன் //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. சேக்கனா M. நிஜாம் //

    நல்லதொரு விழிப்புணர்வூட்டும் கவிதை !//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  31. புலவர் சா இராமாநுசம் //

    ஒவ்வொரு பத்தியும் , சீர்கெட்டுக் கிடக்கும் இன்றைய சமுதாயத்திற்குத் தரப் பட்ட சம்மட்டி அடி! கவிதை நன்று இரமணி!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. Ganpat //

    எண்ணிக்கையின் அடிப்படையில்
    நரிகளும்,நாய்களும் காட்டை ஆள,
    செய்வதறியாது திகைக்கின்றன
    சிங்கங்களும்,யானைகளும்..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. முத்தரசு //.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  34. புரட்சித் தமிழன் //
    .
    நல்லதோர் கவிதை சீர்கெட்ட சமுதாயத்தை விவரித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. உஷா அன்பரசு //

    //புலம்பி அலையுது பொது நலம்
    //- சமுதாய உண்மையை அப்படியே படம் பிடித்து கவிதையாக்கி விட்டீர்கள். அருமை!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. ஸாதிகா //

    /என்ன அழகாக சொல்லி இருக்கீங்க..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. koodal bala //

    நாட்டின் இன்றைய நிலையை நயமாக உரைத்துள்ளீர்கள்

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    //...

    ReplyDelete
  38. ezhil //

    இயல்பான கவிதை முதலும் முடிவும் ரொம்பவே சரி ...அருமை..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  39. கோமதி அரசு //

    இதை எல்லாம் பார்த்து பொது நலத்தால் புலம்பத்தான் முடியும் வேறு என்ன செய்ய!
    கவிதை நன்றாக இருக்கிறது./

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  40. அம்பாளடியாள் //

    சிறப்பான பகிர்வு !!..மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு /
    /
    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    .

    ReplyDelete
  41. G.M Balasubramaniam //

    நிதர்ச்னத்தை படம் பிடித்துக் காட்சிப்படுத்தும்
    அரிய வரிகள்.. பாராட்டுக்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. மாதேவி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  43. s suresh //

    சிறப்பான கவிதை! நன்றி!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete