Monday, December 31, 2012

வாழ்த்தி வளமாய் வாழ்வோம்

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

56 comments:

  1. இயந்திர வாழ்வில் ..முகமன் /வாழ்த்து பரிமாற்றம் கூட மறைந்து வருகிறது . உற்சாகத்தை மீட்டெடுப்போம் வாருங்கள் நண்பர்களே !

    அனைவருக்கும் புத்தாண்டு நலம் சேர்க்கட்டும் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள்

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //வரவேற்பாளராய் இருந்து
    சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
    அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்//

    புதிய உற்சாகம் கொடுக்கும் வரிகள். இதைவிட சிறப்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்ல முடியாது ரமணி ஸார்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வரவேற்பாளராய் இருந்து
    சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
    அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்
    /////////////

    அழகான வரிகள்

    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்களின் இந்த கவிதைக்கு மற்றவர்களின் பதிவில் நீங்கள் தரும் உற்சாகம் தரும் கருத்துரைகளையே எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
    எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. உண்மைதான் ரமணி சார். நமக்கு எதிர்பார்க்கும் எதனையுமே அடுத்தவருக்கு நாம் செய்யும்போது அது நமக்கு பல மடங்காகிக் கிடைக்கும் . இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013.

    ReplyDelete
  8. நமக்கு என்பதற்கு பதில் நாம் என வாசிக்கவும். மன்னிக்கவும்

    ReplyDelete
  9. உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் என்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ஐயா ..

    ReplyDelete
  10. "அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்!"
    நண்பர் ரமணி,மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துவதில் உள்ள சுகம் அலாதி தான் ஐயா.

    தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  12. வணக்கம்!

    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    வாழ்த்தி வளா்வோம்! வணங்கி மகிழ்வோம்!மண்
    தாழ்த்தும் நிலையைத் தகா்த்திடுவோம்! - சூழ்புகழ்
    வண்ணம் வடித்த கவிபடித்துப் பாடும்பா!
    எண்ணம் வடித்த எழில்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    01.01.2013

    ReplyDelete

  13. வணக்கம்!

    வலையுலகம் வாழ்த்தி வரவேற்கும் வண்ணம்
    தலையுயா்த்தித் தந்தாய் தமிழ்!

    ReplyDelete
  14. உண்மையான கருத்து! பிறரை உற்சாகப்படுத்துவதன் மூலம் நம்மை உற்சாகப்படுத்திக் கொள்கிறோம்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. நன்றாய் சொன்னீர்கள்!
    வாழ்த்துவதே வாழ்வது!

    ReplyDelete
  16. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. முத்தரசு //

    சரியாக சொன்னீர்கள்

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  18. kala nesan //

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//






    ReplyDelete
  19. Ranjani Narayanan //

    புதிய உற்சாகம் கொடுக்கும் வரிகள். இதைவிட சிறப்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்ல முடியாது ரமணி ஸார்!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!/
    /
    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும்
    அருமையான பின்னுட்டமும் அதிக
    உற்சாகமளிக்கிறது
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. ஆத்மா //

    அழகான வரிகள்
    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//தங்கள் உடன் வரவும் வாழ்த்தும்
    அருமையான பின்னுட்டமும் அதிக
    உற்சாகமளிக்கிறது
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. தி.தமிழ் இளங்கோ //
    .
    உங்களின் இந்த கவிதைக்கு மற்றவர்களின் பதிவில் நீங்கள் தரும் உற்சாகம் தரும் கருத்துரைகளையே எடுத்துக்காட்டாக கொள்ளலாம். //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்



    ReplyDelete
  22. ezhil //


    உண்மைதான் ரமணி சார். நமக்கு எதிர்பார்க்கும் எதனையுமே அடுத்தவருக்கு நாம் செய்யும்போது அது நமக்கு பல மடங்காகிக் கிடைக்கும் . இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. அம்பாளடியாள் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. வாழ்த்தி மகிழ ஒரு தனி மனம் வேணும்.வாழ்த்துக்கள் 2013 சிறக்க/

    ReplyDelete

  25. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  26. ஒவ்வொரு கவிதையிலும் ஒரு அழகான பஞ்ச் வைத்து விடுகிறீர்கள்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. வரவேற்பாளராய் இருந்து
    சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
    அதிக மணம் உன் மேல்தான் இருக்கும்

    யதார்த்தம்.........
    புத்தாண்டு வாழ்த்துக்ள்.

    ReplyDelete
  28. சந்தனமும் பன்னீரும் கலந்தது போன்ற மிகவும் மணமுள்ள பகிர்வு. பாராட்யுக்கள் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. வரவேற்பாளராய் இருந்து
    சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
    அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்//

    உண்மைதான்.
    வாழ்த்தி வாழ்வோம்.

    ReplyDelete
  30. அருமையா கருத்து. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. வரவேற்பாளராய் இருந்து
    சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
    அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

    என்ன அருமையான வரிகள் . நன்றி சார்

    ReplyDelete
  32. //வரவேற்பாளராய் இருந்து
    சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
    அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன//

    அருமையான வரிகள் .
    யோசித்துப் பார்த்ததில் உண்மை புரிந்தது .
    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் .
    புதுவருடத்தை அழகாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ராஜி

    ReplyDelete
  33. அழகாய் சொன்னீர்கள்..! // சரியாக புரியாது விழிக்கிறான்
    எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்//

    நிச்சயம் நாம் வரவேற்பாளராய் மணம் வீசுவோம்!

    ReplyDelete

  34. பிறர் வாழ்த்துகிறார்கள் என்றாலேயே நம் உற்சாகம் நம்மையும் மீறி வெளிப்படும். உங்கள் மனோதத்துவம் சரியானது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. Ganpat //

    "அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்!"

    பின்னூட்டங்கள் தொடர்ந்து விரைந்து
    நடக்க எனக்கு உற்சாகம் கொடுக்கும்
    தங்கள் பின்னூட்டம் எப்போதும்
    எனக்கு ஓடவே தெம்பளிக்கும்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    ReplyDelete
  36. Sasi Kala //

    வாழ்த்துவதில் உள்ள சுகம் அலாதி தான் ஐயா.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  37. கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //

    வாழ்த்தி வளா்வோம்! வணங்கி மகிழ்வோம்!மண்
    தாழ்த்தும் நிலையைத் தகா்த்திடுவோம்! - சூழ்புகழ்
    வண்ணம் வடித்த கவிபடித்துப் பாடும்பா!
    எண்ணம் வடித்த எழில்!வலையுலகம் வாழ்த்தி வரவேற்கும் வண்ணம்
    தலையுயா்த்தித் தந்தாய் தமிழ்!//



    தங்களால் பாராட்டப்பட்டதை
    கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறேன்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. s suresh //

    உண்மையான கருத்து! பிறரை உற்சாகப்படுத்துவதன் மூலம் நம்மை உற்சாகப்படுத்திக் கொள்கிறோம்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  39. கே. பி. ஜனா... //
    .
    நன்றாய் சொன்னீர்கள்!
    வாழ்த்துவதே வாழ்வது!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. விமலன் //

    வாழ்த்தி மகிழ ஒரு தனி மனம் வேணும்.வாழ்த்துக்கள் 2013 சிறக்க//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. Avargal Unmaigal //

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. T.N.MURALIDHARAN //

    ஒவ்வொரு கவிதையிலும் ஒரு அழகான பஞ்ச் வைத்து விடுகிறீர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்/

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. Jana //

    வரவேற்பாளராய் இருந்து
    சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
    அதிக மணம் உன் மேல்தான் இருக்கும்
    யதார்த்தம்.........
    புத்தாண்டு வாழ்த்துக்ள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. வை.கோபாலகிருஷ்ணன் //

    சந்தனமும் பன்னீரும் கலந்தது போன்ற மிகவும் மணமுள்ள பகிர்வு. பாராட்யுக்கள் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. கோமதி அரசு //

    உண்மைதான்.
    வாழ்த்தி வாழ்வோம்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. பால கணேஷ் //

    அருமையா கருத்து. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. பூந்தளிர் //

    என்ன அருமையான வரிகள் . நன்றி சார்/

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



    ReplyDelete
  48. rajalakshmi paramasivam //

    அருமையான வரிகள் .
    யோசித்துப் பார்த்ததில் உண்மை புரிந்தது .
    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் .
    புதுவருடத்தை அழகாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.
    பகிர்வுக்கு நன்றி.//

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. உஷா அன்பரசு //

    நிச்சயம் நாம் வரவேற்பாளராய் மணம் வீசுவோம்!///

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



    ReplyDelete
  50. G.M Balasubramaniam //

    பிறர் வாழ்த்துகிறார்கள் என்றாலேயே நம் உற்சாகம் நம்மையும் மீறி வெளிப்படும். உங்கள் மனோதத்துவம் சரியானது. வாழ்த்துக்கள்.//

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்





    ReplyDelete
  51. அருமை... அருமை...

    உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் இரமணி ஐயா.

    த.ம. 7

    ReplyDelete
  52. அருணா செல்வம் //

    அருமை... அருமை...//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


    ReplyDelete
  53. அருமை.

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  54. மாதேவி //

    அருமை.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னுட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. அ ய்யா, அருமை. மனம் இருந்தால் மணம் உண்டு

    ReplyDelete