Monday, June 10, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (8)

ஆஸ்பத்திரி எனக்கூடப் பாராமல் முன் ஹாலில்
அத்தனைபேர் அமர்ந்திருக்கிருக்கிறார்கள் எனக் கூட
நினைவில் கொள்ளாமல் என் கைகளை அழுத்தப்
பிடித்தபடிகண்கலங்கியபடி என் தோள்களில்
 சாய்ந்தபடி வந்துகொண்டிருந்த கணேசன்,
 வெளியே தன் மனைவிவருவதைப்பார்த்ததும்
 சட்டென நிமிர்ந்து என் பக்கம்திரும்பி
 கண்களையும்  முகத்தையும்அவசரம்அவசரமாகத்
 துடைத்துக் கொண்டான்

பின் என் காதோடு எனக்கு மட்டும் கேட்கும்படியாக
"ரமணி எனக்கு ரொம்பக் குழப்பமாய் இருக்கு
தயவு செய்து டாக்டர் சொன்னதை இப்போ
இவ கிட்டே சொல்லிடாதே என்ன சொல்றது
எப்படிச் சொல்றது என்கிறதைப் பத்தி நான்
யோசிச்சுவைக்கிறேன்.ரிபோர்ட் இன்னமும் வரலை
சாய்ந்திரம் வரச் சொல்லி இருக்கிறார்னு மட்டும்
இப்போது சொல்லிவை.அவ உங்கிட்டேதான் கேட்பா
உன் முகத்தையும் தொடச்சுக்கோ"
என்றான்

அவன் என்னிடம் விஷயத்தைச் சொல்லி முடிக்கவும்
நண்பனின் மனைவி எங்களை நெருங்கவும்
சரியாக இருந்தது

"கோவிலில் அற்புதமான தரிசனம்,எனக்கு அப்போதே
நம்பிக்கை வந்து விட்டது,ஒன்னும் இல்லைதானே
சாதாரண வயிறுவலி தானே "என மடமடவென
அவராகவே எங்களைப் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார்

அவரது கண்களில் தெரிந்தா பயத்துடன் கூடிய
கேள்விக் குறியும் உடலில் தெரிந்த படபடப்பும்
அவர் எந்த ஒரு தீய செய்தியையும் கேட்கிற
நிலையில் இல்லை என்பது  தெளிவாகத் தெரிய
நான் என்ன சொல்வது எப்படிச் சொல்வது என
திணறிப்போனேன்.

என் குழப்பத்தை உணர்ந்த கணேசன் சட்டென
சுதாரித்து "நீ நினைக்கிறபடிதான் இருக்கும் விஜி
டாக்டரும் அப்படித்தான் சொல்றார்
ஆனா ரிபோர்ட் இன்னமும் டாக்டர்கிட்டே வரலை
சாயந்திரம் வரச் சொல்றார். வேகமா நடந்து வந்ததாலே
கொஞ்சம் படப்படப்பா இருக்கே,இப்படி
 கொஞ்சம் உட்கார்"என ஆஸ்பத்திரி வாசலில் இருந்த
 பெஞ்சில்மனைவியை உட்காரவைத்து
 தானும் உட்கார்ந்து கொண்டான்

அவன் என்ன நினைக்கிறான் என்பது தெரியாமல்
நான் எதையாவது உளறிக் கொட்டாமல்
இருக்கவேண்டுமே என்கிற பயம் என்னுள்
 வளர வளரமுதலில் இங்க்கிருந்து கிளம்புவதுதான்
 சரியானமுடிவாகப்பட்டது எனக்கு

"சரி நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட்
எடுத்துட்டு அப்படியே ஆட்டோ பிடித்து வீட்டுக்கு
கிளம்புங்க.நானும் இப்படியே  ஆபீஸ் கிளம்பறேன்
நீ மட்டும் சாயந்திரம் நேரே ஆஸ்பத்திரி வந்துரு
நானும் நேரடியா இங்கே வந்திடரேன் " என
இருவர் முகத்தையும் பட்டும்படாமலும் பார்த்துவிட்டு
உள்ளே ரிசெப்ஸன் பெண்ணிடம் டாக்டர் மெடிகல்
ரிபோர்டுடன் கடிதம் தருவதாகச் சொன்ன
 விஷயத்தைச்சொல்லி மாலையில் வந்து
 பெற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு
 வண்டியை எடுத்து கிளம்புகையில்
வாசலில் கோவில் வீபூதியை கணேசனின்
நெற்றியில் பூசிக்கொண்டிருந்தாள் விஜி

இரண்டு நாள் அலுவலகம் செல்லாததால்
 அலுவலகத்தில்கொஞ்சம் வேலை அதிகம் இருந்தது
,எப்போதும் போலகவனமாக வேலை செய்ய
 இயலாமல் கணேசனின்நினைவும் வர வர
 என்னால் சரியாக எதிலும்
கவனம் செலுத்த இயலவில்லை

மதியம் மூன்று மணி அளவில் போன் செய்த கணேசன்
நாளை மறு நாள் சென்னை செல்வோம் என்றும்
ஒரு வாரம் லீவு சொல்லிவிட்டு வரும்படியும்.
தானும் ஒரு வாரம் லீவு சொல்லிவிட்டதாகவும்
சொல்லிவிட்டு தான் இன்று இரவு என் வீட்டில்
தங்க்கும்படியாக வருவதாகவும் என்னை மட்டும்
அப்படியே ஆஸ்பத்திரியில் ரிபோர்ட் வாஙகிக்கொண்டு
வரும்படியும் சொன்னான்.

அவன் பேசிய விதத்திலிருந்து அவன் குரலில் இருந்த
உறுத்டியைக் கொண்டு அவன் எதையும்
ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கும் இந்த விசயத்தை
எப்படி டீல் செய்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டான்
என்பதை நான் புரிந்து கொண்டேன்

நான் என் உயரதிகாரியிடம் கணேசன் என்பதை மட்டும்
எனது சித்தப்பா என மட்டும் மாற்றிச் சொல்லி
அவசியம் சென்னை செல்லவேண்டியதைச் சொல்லி
ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டேன்
அவரும் இன்னும் ஆறு மாதங்க்களில் ஓய்வு பெற
இருப்பதால் அவருடைய பென்ஷன் சம்பந்தமான
பேப்பர்கள் சென்னை உயர் அலுவலகத்தில் இருந்ததால்
அது குறித்தும் விசாரித்து வரும்படியும் சொல்லி
அவசரமில்லை பத்து நாளானும் இருந்து
நல்லவிதமாக பார்த்துவிட்டு வரச் சொல்லி
அனுமதி கொடுத்தார்

நான் மாலையில் அலுவலகம் முடிந்ததும் நேராக
அஆஸ்பத்திரி சென்று மெடிக்கல் ரிபோர்ட் மற்றும்
சிபாரிசுக் கடிதத்தையும் வாங்கிக் கொண்டு
டாக்டரிடமும் நாளை மறு நாள் சென்னை செல்லுகிற
விஷயத்தையும் தெரிவித்துவிட்டு அவசியமானால்
தொடர்பு கொள்வதாக செல் எண்ணையும்
வாங்கிக் கொண்டு வீடு வருகையில் மணி இரவு
ஒன்பதுக்கு மேலாகிவிட்டது

எனது வரவை எதிர்பார்த்து எங்கள் வீட்டு
உட்புற திண்ணையில் உட்கார்ந்திருந்தான் கணேசன்
நனறாகச் சேவிங் செய்து கலர் சட்டை அணிந்து
விபூதி அணிந்து  அவன் அமர்ந்திருந்ததைப்பார்க்க
காலையில் ஆஸ்பத்திரியில் பார்த்த கணேசனா என
எனக்கே ஆச்சரியமாக இருந்தது

அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட
முறைகள் அதிசயமானதாகவும் வித்தியாசமாகவுமே
பட்ட எனக்கு அது அணையப் போகிற விளக்கின்
பிரகாசம் தான்  என
ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை

(தொடரும் )


26 comments:

  1. /// அணையப் போகிற விளக்கின் பிரகாசம் /// ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது சார்...

    ReplyDelete
  2. //அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட
    முறைகள் அதிசயமானதாகவும் வித்தியாசமாகவுமே
    பட்ட எனக்கு அது அணையப் போகிற விளக்கின்
    பிரகாசம் தான் என ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை//

    படிக்கவே மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. ;(((((

    முடிவை எதிர்நோக்கியுள்ளவரின் கதை இன்னும் தொடர்வது தங்களினால் மட்டுமே சாத்தியமாகிறது.

    ReplyDelete
  3. அது அணையப் போற விளக்கு அல்ல, விரைவில் ஏறி நட்ச்சத்திரமாய் பிரகாசிக்கும் என்பதை ஆசிரியர் அடுத்த பதிவில் டுவிஸ்ட் வைப்பார் என நம்புகிறேன்... கதை கூறும் விதம் சிறப்பு...

    தொடருங்கள்...

    ReplyDelete
  4. படிக்கப் படிக்க வருத்தம்தான் மேலிடுகிறது அய்யா

    ReplyDelete
  5. உன் முகத்தையும் தொடச்சுக்கோ"//ஆத்மார்த்தமா பழகிய நண்பராச்சே அழுகையை அடக்க முடியாது

    ReplyDelete
  6. ம்.ம்... தொடருங்கள் ஐயா...

    ReplyDelete
  7. தொடருகிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  8. அணையப் போகிற விளக்கின்
    பிரகாசம் தான் வருத்தப்படவைக்கிறது ...!

    ReplyDelete
  9. இன்னும் இந்த திகில் தொடர்கிறதா முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete

  10. சென்ற பதிவில் நான் எழுதிய பின்னூட்டம் ...? கதையை எப்படி நகர்த்தப் போகிறீர்கள்.? கற்பனைதானே. மாற்றி யோசிக்கலாமே. அணையப் போகிற விளக்கில் சிறிது எண்ணை ஊற்றி அது இன்னும் பிரகாசமாக எரிய வைக்கலாமே.

    ReplyDelete
  11. ஆமா இது கதை தானே. சுபமாக முடியுங்கள் வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  12. கதையாகவே இருக்கட்டும் . உண்மை இல்லை தானே.
    பழைய பதிவுகளை தேடிப்பிடித்துப் படிக்கும் தைரியம் எனக்கில்லை. இருந்தாலும் படித்து கருத்திடுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  13. அழுது புலம்புவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என யதார்த்தத்தை சந்தித்து, நிலைமையை சமாளித்த நண்பரின் அணுகுமுறை வியக்க வைக்கிறது. கூடவே அணையப் போகிற விளக்கு என நீங்கள் தந்த குறிப்பு தான் பகீர்!

    ReplyDelete
  14. இந்த பதிவை அன்றே படித்து விட்டேன். மனது கனத்ததால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  15. மனம்கனக்க செய்து விட்டது.+

    ReplyDelete
  16. கதை மனம் கனக்க வைக்கின்றது

    ReplyDelete
  17. அணையப் போகும் விளக்கு.....

    அடடா....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  18. வலைப பக்கம் வர முடியாததால் இரண்டு மூன்று பகுதிகளை சேர்த்து படித்தேன். உருக்கமாக எழுதுகிறீர்கள். ஒவ்வரு வரிகளும் கண்கலங்க வைக்கிறது.

    ReplyDelete
  19. மனக்கலக்கத்துடன்..... தொடர்கிறேன்.

    ReplyDelete
  20. கண்கள் கசிய வைத்தப் பகுதி. மனைவிக்குத் தெரிந்தால் அவள் தாங்கமாட்டாள் என்று அவளிடம் தன் நோயை மறைக்கும் அன்புக் கணவன்! அவன் நிலையை நினைத்து வெளியில் புலம்பவும் முடியாமல் உள்ளுக்குள் மருகும் உற்ற நண்பன்! கனத்த மனத்துடன் அடுத்தப் பகுதிக்குப் போகிறேன்.

    ReplyDelete
  21. அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட
    முறைகள் அதிசயமானதாகவும் வித்தியாசமாகவுமே
    பட்ட எனக்கு அது அணையப் போகிற விளக்கின்
    பிரகாசம் தான் என
    ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை
    //உங்கள் கடைசி பாரா ஓரளவு முடிவை ஊகிக்க வைத்துவிட்டது மன கனத்துப்போய் விட்டது.

    ReplyDelete
  22. எனெக்கென்னவோ உங்கள் நண்பர் எமனோடு விளையாடி, எமனோடுஉறவாடி, வெற்றிகரமாக பிழைத்து எழுந்து வருவார் என்றே தோன்றுகிறது!

    ReplyDelete