Thursday, July 11, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி ( 20 )

நேரம் ஆக ஆக நாங்கள் அமர்ந்திருந்த பெஞ்சில்
வெய்யில் ஆக்கிரமிக்கத் துவங்க,
இனியும் காலதாமதமாகக் கிளம்பினால்
சாப்பாட்டிற்குள் வீடு வந்து சேருவது கடினம் என
கணேசனிடம் வற்புறுத்திச் சொல்லி என் வண்டியில்
ஏற்றிக் கொண்டு நாகமலை நோக்கிக் கிளம்பினேன்

எங்கள் வரவை எதிர்பார்த்து கணேசனின் நண்பர்
வாசல் திண்ணையிலேயே காத்திருந்தார்.

நாங்கள் சென்றவுடன் எங்களை நல்லவிதமாக
வரவேற்றுகுடும்ப உறுப்பினர்களை அறிமுகம்
செய்துவைத்து பின்அவர் புதிதாகக்
கட்டிக் கொண்டுள்ள வீட்டையும் சுற்றிக்
காட்டி அவர் எழுதிவைத்திருந்த கடன் பத்திரத்தை
படிக்கக் காட்டி நாங்கள் சம்மதம் எனச்
சொன்னவுடன்கையொப்பமிட்டும் கொடுத்தார்

கணேசனின் நண்பர் பேச்சுவாக்கில்
 தனது மூத்தவன்ஒன்பதாவது  படிப்பதாகவும்
 பெண் ஏழாவது படிப்பதாகவும்
இப்போது வீடு கட்டினால்தான் பையனின் படிப்பு
 மற்றும்பெண்ணின் திருமணத்திற்கு திட்டமிட
வசதியாக இருக்கும்என சொன்ன விஷயம் அவர் எல்லா விஷயங்களையும்திட்டமிட்டு மிகச் சரியாகச்
செய்பவராகப் பட்டது

நாங்கள் வீட்டிற்குத் திரும்புகிற வழியில் கணேசன்
இந்த விஷயத்தையே குறிப்பிட்டுச் சொல்லி
"நானும் இதே ஐடியாவிலதான் மிகச் சரியாகத்
திட்டமிட்டு அடுத்த வருடம் வீடு கட்டலாம என
முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகள்
விரும்பிக் கேட்ட சின்ன சின்ன ஆசைகளைக் கூட
செஞ்சு தராம இடமும் வாங்கி ஆரம்பச்
செலவுகளுக்காக இரண்டு லட்சமும் சேர்த்தேன்.
இப்பப் பாரு எல்லாம் பகல் கனவு மாதிரி ஆகப் போகுது "
என வருத்தப்பட்டுக் கொண்டே வந்தான்

நாங்கள் வீடு வந்த சேர மதியம்
இரண்டரை மணியாகிவிட்டது

எங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்ததைப் போல
நாங்கள் வந்ததும் குழந்தைகள் மற்றும் எங்களுக்கும்
வரிசையாக வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறத்
துவங்கினாள் என் மனைவி

இரண்டு கறி கூட்டு வடை பாயாசம் என ஒரு
விருந்து சாப்பாடே சமைத்திருப்பதைப் பார்த்து
கணேசன் "அக்கா இவ்வளவு எதுக்கு செஞ்சீங்க
நான் என்ன நம்ம வீட்டுக்கு விருந்தாளியா. "என்றான்

எனக்கு கூட  அவன் கேட்பது சரியெனவேப்பட்டது

குனிந்தபடி பரிமாறிக் கொண்டிருந்தபடி மனைவி
மெல்ல நிமிர அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம்
"என்னங்க்க அண்ணே அப்படிச் சொல்லிட்டீங்க
தலைக்கு வந்த சனியன் தலைப்போகையோடு
போனதுன்னு நாங்க எல்லாம் எவ்வளவு
சந்தோஷப்பட்டோம் தெரியுமா /
நீங்க  ஆம்பளைங்க எல்லாம் சந்தோஷம்னா
உடனே ஃபிரண்ட்ஸ்களோட வெளியே
 கொண்டாடுறதைப்பத்தி யோசிப்பீங்க
பொம்பளைங்களுக்கு தெரிஞ்சது எல்லாம்
தன்னை அழகு படித்திக்கறதும்
இப்படி வகை வகையா சமைச்சுப் சாப்பிடவைச்சு
ரசிக்கிறதுதானே "என்றாள்

அவள் சொல்வது எனக்கு நறுக்கெனச் சுட்டது
நான் குனிந்தபடி கணேசனைப் பார்க்க
அவன் கண்கள்கலங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது

சாப்பிட்டு முடித்து சிறிது ஓய்வெடுக்கலாம் என
எனது அறையில் கணேசனை சோஃபாவில்
அமரவைத்து நான் அருகில் சேரில் அமர்ந்து கொள்ள
சிறிது நேரம் மௌனமாக இருந்த அவன்
"அப்பா அம்மா குழந்தைகள் விஷயத்தில்
மிகச் சரியாக நடந்து கொள்கிற மிகச் சரியாக
அவர்களைப் புரிந்து கொள்கிற பெரும்பாலான
ஆண்கள் மனைவி விஷயத்தில் தான்
சரியாக நடந்து கொள்வதும் இல்லை
அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதுமில்லை"
என்றான்  அழுத்தம் திருத்தமாக

கணேசன் அவன் அவன் மனைவி சம்பத்தப்பட்டே
இது குறித்து விரிவாகச் சொன்னாலும் அது
என் சம்பத்தப் பட்டதுமட்டுமல்ல நம் அனைவரின்
சம்பத்தப்பட்டது போலவே பட்டது எனக்கு

(தொடரும் )

29 comments:

  1. //கணேசன் அவன் அவன் மனைவி சம்பத்தப்பட்டே
    இது குறித்து விரிவாகச் சொன்னாலும் அது
    என் சம்பத்தப் பட்டதுமட்டுமல்ல நம் அனைவரின்
    சம்பத்தப்பட்டது போலவே பட்டது எனக்கு//
    உண்மை! உண்மை!

    ReplyDelete
  2. //நீங்க ஆம்பளைங்க எல்லாம் சந்தோஷம்னா
    உடனே ஃபிரண்ட்ஸ்களோட வெளியே
    கொண்டாடுறதைப்பத்தி யோசிப்பீங்க
    பொம்பளைங்களுக்கு தெரிஞ்சது எல்லாம்
    தன்னை அழகு படித்திக்கறதும்
    இப்படி வகை வகையா சமைச்சுப் சாப்பிடவைச்சு
    ரசிக்கிறதுதானே "என்றாள்//

    உண்மைதான் போல!!!!

    தொடர்கின்றேன்.

    ReplyDelete
  3. தன்னை அழகு படித்திக்கறதும்
    இப்படி வகை வகையா சமைச்சுப் சாப்பிடவைச்சு
    ரசிக்கிறதுதானே "//எவ்வளவு ஆறுதலான அவசியமான சந்தோசமான நிமிடங்கள்

    ReplyDelete
  4. /// அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதுமில்லை... ///

    100% உண்மை...

    ReplyDelete
  5. அடுத்த பகுதி எப்ப வரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  6. ##ஆண்கள் மனைவி விஷயத்தில் தான்
    சரியாக நடந்து கொள்வதும் இல்லை
    அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதுமில்லை"## பல வீடுகளில் உண்மைதாங்க..

    ReplyDelete
  7. //"அப்பா அம்மா குழந்தைகள் விஷயத்தில்
    மிகச் சரியாக நடந்து கொள்கிற மிகச் சரியாக
    அவர்களைப் புரிந்து கொள்கிற பெரும்பாலான
    ஆண்கள் மனைவி விஷயத்தில் தான் சரியாக நடந்து கொள்வதும் இல்லை அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதுமில்லை"//

    நண்பர் சொல்வது பெரும்பாலானவர்களின் செயல்களுக்குப் பொருத்தமாகவே உள்ளது.. தொடரட்டும்.

    ReplyDelete
  8. மனைவி விஷயத்தில் எல்லா ஆண்களும் ஒன்றுதான்!

    ReplyDelete
  9. நாட்கள் செல்ல செல்ல என்ன நடக்குமோன்னு மனசை பிசையுது. கதையை சீக்கிரம் முடிங்கப்பா!!

    ReplyDelete
  10. தொடர்கிறேன்.

    ReplyDelete
  11. சோகமானாலும் சுவைபடச் சொல்வது அழகு!

    ReplyDelete

  12. நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா......தொடர்கிறேன்.

    ReplyDelete
  13. அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்.....

    த.ம. 7

    ReplyDelete
  14. ரமணி சார்! சோகக் கதையை சீக்கிரம் முடித்து விட்டு, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு வாங்க! நமப வாசகர்கள் எல்லோரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் உங்களுக்காக கண்ணை கசக்குவார்கள்.

    ReplyDelete
  15. நண்பர் சொல்வது பெரும்பாலானவர்களின் செயல்களுக்குப் பொருத்தமாகவே இருக்கும் தொடரட்டும்.

    ReplyDelete
  16. அடுத்து .....சிந்தனையுடன்..........தொடர்கின்றேன்.

    ReplyDelete
  17. உண்மைதான் நாம் பலர் அவர்களின் மனதை புரிந்துகொள்வது இல்லைப்போலும்! தொடர்கின்றேன் ஐயா!

    ReplyDelete
  18. இப்போதாவது மனைவியின் மனநிலை பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளாரே.. அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று அறியக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. அவர் சொன்னது மிகச் சரியே ஐயா.

    ReplyDelete
  20. நம்மால் முடியாது என்று தெரிந்த பிறகுதான் நாம் எதையெல்லாம் இழந்திருக்கிறோம்னு புரியுது குரு...! பாவம் கணேசன்...!

    ReplyDelete
  21. நீங்கள் சொல்லிக் கொண்டு போகும் விதம் அருமையாக இருந்தாலும் அதை சிறிது சிறிதாக படிக்க விரும்பாததால் வாரம் ஒரு முறை வந்து அனைத்து பதிவுகளையும் படித்துவிடுகிறேன். இது கன்னிதீவு போல சென்று கொண்டிருக்கிறது இருந்தாலும் படிக்க அருமையாகத்தான் உள்ளது

    ReplyDelete
  22. "அப்பா அம்மா குழந்தைகள் விஷயத்தில்
    மிகச் சரியாக நடந்து கொள்கிற மிகச் சரியாக
    அவர்களைப் புரிந்து கொள்கிற பெரும்பாலான
    ஆண்கள் மனைவி விஷயத்தில் தான்
    சரியாக நடந்து கொள்வதும் இல்லை
    அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதுமில்லை"
    என்றான் அழுத்தம் திருத்தமாக//

    இப்போது புரிந்து கொண்டார் அல்லவா! அதுவே நல்லது தான்.

    ReplyDelete
  23. தொடருகிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  24. அய்யா,

    என்னையும் சுட்டது

    ReplyDelete
  25. enna sir, appadidye niruthiteengale....continue pannunga....idhu ellarukum oru paadam maadiri iruku

    regards
    geetha

    ReplyDelete