Tuesday, September 3, 2013

ஆழக் கடலும் பதிவர் சந்திப்பும்

களிப்பின் உற்பத்திச் சாலையாய்
விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
அந்த அற்புதக் கடல்

இயலாமையாலும் நேரமின்மையாலும்
எட்டி நின்று அதன் அழகை
ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
ஒரு அற்புத ஓவியமாய்...

தன் அலங்காரம் கலைந்துவிடுமென்று
கரையோரம் அமர்ந்திருந்து அந்தச் சூழலை
உள்வாங்கிக் கொண்டிருந்தோருக்கு
ஒரு அதிசயப் பொருளாய்...

இரசித்தலும் அனுபவித்தலும்
இணைத்துக் கொள்வதில்தான் என
உணர்ந்து தன்னுள் இறங்கியவர்களுக்கு
ஒரு கற்பக விருட்ஷமாய்....

நம்பிக்கையின் ஆழம் பொருத்து
அருள் தரும் ஆண்டவானாய்
அவரவர் மன நிலைக்குத் தக்க
தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
அந்த அற்புத அதிசயக் கடல்
நம் பதிவர் சந்திப்பைப் போலவும் ....

62 comments:

  1. பதிவர் சந்திப்பை பற்றிய வித்தியாசமான சிந்தனை! அருமை! தங்களை பதிவர் விழாவில் சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சி அளித்தது! நன்றி!

    ReplyDelete
  2. ரமணி சார்.. உங்களை மிஸ் பண்ணிட்டேன் நான் :(

    ReplyDelete
  3. பதிவர் சந்திப்பும் ஆழ்கடலின் அதிசயமானதா...? அருமையான உவமை

    ReplyDelete
  4. அற்புதக்கடலாய், அற்புத ஓவியமாய், அதிசயப்பொருளாய், கற்பகவ்ருக்‌ஷமாய்...

    பதிவர் சந்திப்பு என்பதே ஒருவரை ஒருவர் இதுநாள் வரை எழுத்துகளில் மட்டுமே கம்பீரமாய் கண்டுக்கொண்டு நேரில் பார்க்கும்போது சிநேகபாவத்துடன் கைக்குலுக்கி நட்பை மலரச்செய்யும் அற்புதமான சங்கமம் இந்த சந்திப்பு என்பதை ஒவ்வொரு வரிகளிலும் உணர்த்திவிட்டீர்கள் ரமணி சார்..

    ஏன் என்னை நீங்க கூட்டிட்டு போகலை பதிவர் சந்திப்புக்கு?

    ReplyDelete
  5. சகோதரத்துவம் - அன்பு மேலோங்க இதுபோன்ற சந்திப்புகள் தொடர வேண்டும்.

    சந்திப்பை மிஸ் பண்ணிட்டேன் !

    ReplyDelete
  6. கடலும் பதிவர் சந்திப்பும்!வழக்கம்போல் வித்தியாசமான பார்வை.நன்று

    ReplyDelete
  7. // அற்புத அதிசயக் கடல்... // அருமை...

    ReplyDelete
  8. கருத்துக்களும் களிப்பும் கலந்திங்கு காணுகையில்
    இருத்தலிங்கு வீணென நோகும் என்மனம்...

    உங்கள் உவமிப்பு தருகிறது பிரமிப்பு ஐயா!

    அருமையான கவிதை!
    வாழ்த்துக்கள்!

    த ம.6

    ReplyDelete
  9. பதிவர் சந்திப்பை இப்படிக் கூட கவிதை ஆக்க முடியுமா? அருமை அருமை.

    ReplyDelete
  10. தங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா...

    த.ம. 7

    ReplyDelete
  11. எனக்கு முன்னரே முரளி அண்ணன் ஓட்டு போட்டுட்டார்.... ஆகவே

    எனது த.ம.8

    ReplyDelete
  12. நட்பு தேடுவதிலும் சொந்தங்களுடன் அன்பு கொள்வதிலும் உங்கள் உள்ளம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறது கவிதை.

    ReplyDelete
  13. பபதிவர் சந்திப்பை கவிதையில் பதிவு செய்த விதம் அருமை ஐயா! நன்றி!

    ReplyDelete
  14. விழாக் கடலில் இறங்காமல் பார்வைக் கரையிலேயே நின்று பதிவிட்டு விட்டீர்களே... சற்று ஆழமாக நீந்தியிருக்கக் கூடாதா...!

    ReplyDelete
  15. அருமை ஐயா. ஆனாலும்
    இன்னும் விரிவாய்
    இன்னும் ஆழமாய்
    பதிவர் சந்திப்பு குறித்த
    சொல்லோவியங்களையும்
    பகிரப்பெற்ற
    கருத்தோவியங்களையும்
    தங்களின் வார்த்தை ஜாலக்
    கவிதையில் எதிர்பார்க்கின்றேன்
    ஐயா

    ReplyDelete
  16. ஆழ்கடல் அமைதியையும் பதிவர்களின் மனநிலையையும் ஒப்பிட்ட வரிகள். ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  17. களிப்பின் உற்பத்திச்சாலை - அங்கேயே தங்கிவிட்டேன்.

    ReplyDelete

  18. mika nalla sinthanai...nanru.
    ''..தன்னுள் இறங்கியவர்களுக்கு
    ஒரு கற்பக விருட்ஷமாய்.''...
    anpudan Vetha.Elangathilakam.

    ReplyDelete
  19. என்னால் வரமுடியவில்லையே என்ற ஆதங்கம் இன்னும் உண்டு! அருமை கவிதை ஐயா!

    ReplyDelete
  20. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  21. ஆழக்கடலை ஓவியமாய் ரசித்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணத்தையும் அழகான எழுத்தோவியமாக்கியமை சிறப்பு. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  22. ஆழ்கடலில்முத்துகுளித்ததுபோல்இருந்தது

    ReplyDelete
  23. சந்தித்ததில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  24. இயலாமையாலும் நேரமின்மையாலும்
    எட்டி நின்று அதன் அழகை
    ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
    ஒரு அற்புத ஓவியமாய்..//
    கவிதை அருமை.
    நீங்கள் சொல்வது உண்மை.அற்புத ஓவியத்தை ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.பதிவர் சந்திப்புக்கு வந்து அதைப்பற்றி பதிவிடும் பதிவர்கள் பதிவுகளை.

    ReplyDelete
  25. மிகவும் வித்தியாசமான சிந்தனை!
    உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, ரமணி ஸார்! அதிகம் பேச முடியவில்லை என்பது தான் குறை.

    ReplyDelete
  26. வித்தியாசமான கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. //அவரவர் மன நிலைக்குத் தக்க
    தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
    அந்த அற்புத அதிசயக் கடல்
    நம் பதிவர் சந்திப்பைப் போலவும் ....//

    ஒப்பீடு அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  28. Seeni said...
    aazhamaana sinthanai...//

    தங்கள் முதல் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. s suresh said...//
    பதிவர் சந்திப்பை பற்றிய வித்தியாசமான சிந்தனை! அருமை

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. Manjubashini Sampathkumar said...//
    ரமணி சார்.. உங்களை மிஸ் பண்ணிட்டேன் நான் //\\
    அடுத்த சந்திப்பு மதுரையில் நடக்க
    அதிக வாய்ப்பிருக்கிறது
    நீங்கள் தான் எனக்கு சிறப்பு விருந்தினர்

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. PARITHI MUTHURASAN said...//
    பதிவர் சந்திப்பும் ஆழ்கடலின் அதிசயமானதா...? அருமையான உவமை/

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  32. Manjubashini Sampathkumar said...//

    ஏன் என்னை நீங்க கூட்டிட்டு போகலை பதிவர் சந்திப்புக்கு?

    அடுத்த சந்திப்பு மதுரையில் நடக்க
    அதிக வாய்ப்பிருக்கிறது
    நீங்கள் தான் எனக்கு சிறப்பு விருந்தினர்
    //





    ReplyDelete
  33. சேக்கனா M. நிஜாம் said...
    சகோதரத்துவம் - அன்பு மேலோங்க இதுபோன்ற சந்திப்புகள் தொடர வேண்டும்./

    /தங்கள் உடன் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  34. சென்னை பித்தன் said...
    கடலும் பதிவர் சந்திப்பும்!வழக்கம்போல் வித்தியாசமான பார்வை.நன்று/

    /தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  35. திண்டுக்கல் தனபாலன் said...//
    // அற்புத அதிசயக் கடல்... // அருமை.../

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/
    //


    ReplyDelete
  36. இளமதி said...
    கருத்துக்களும் களிப்பும் கலந்திங்கு காணுகையில்
    இருத்தலிங்கு வீணென நோகும் என்மனம்...
    உங்கள் உவமிப்பு தருகிறது பிரமிப்பு ஐயா!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  37. T.N.MURALIDHARAN said...//
    பதிவர் சந்திப்பை இப்படிக் கூட கவிதை ஆக்க முடியுமா? அருமை அருமை.

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///


    ReplyDelete
  38. ஸ்கூல் பையன் said..//.
    தங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா.//


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  39. ஸ்கூல் பையன் said...//
    எனக்கு முன்னரே முரளி அண்ணன் ஓட்டு போட்டுட்டார்.... ஆகவே


    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  40. Amudhavan said...//
    நட்பு தேடுவதிலும் சொந்தங்களுடன் அன்பு கொள்வதிலும் உங்கள் உள்ளம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறது கவிதை//

    .தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  41. .Seshadri e.s. said...
    பபதிவர் சந்திப்பை கவிதையில் பதிவு செய்த விதம் அருமை ஐயா! நன்றி!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  42. தி.தமிழ் இளங்கோ said...
    ஆழ்கடல் அமைதியையும் பதிவர்களின் மனநிலையையும் ஒப்பிட்ட வரிகள். ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்//.


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete

  43. அப்பாதுரை said...//
    களிப்பின் உற்பத்திச்சாலை - அங்கேயே தங்கிவிட்டேன்.

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  44. kovaikkavi said...

    mika nalla sinthanai...nanru.
    ''..தன்னுள் இறங்கியவர்களுக்கு
    ஒரு கற்பக விருட்ஷமாய்.''...


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  45. தனிமரம் said...//
    என்னால் வரமுடியவில்லையே என்ற ஆதங்கம் இன்னும் உண்டு! அருமை கவிதை ஐயா!


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  46. சங்கவி said...
    தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி../

    எனக்கும் ...
    கொஞ்சம் கூடுதலாகவே


    /

    ReplyDelete
  47. கீத மஞ்சரி said...
    ஆழக்கடலை ஓவியமாய் ரசித்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணத்தையும் அழகான எழுத்தோவியமாக்கியமை சிறப்பு. பாராட்டுகள்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///


    ReplyDelete
  48. கவியாழி கண்ணதாசன் said...
    ஆழ்கடலில்முத்துகுளித்ததுபோல்இருந்தது//


    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///



    ReplyDelete
  49. கோவை நேரம் said...//
    சந்தித்ததில் மகிழ்ச்சி..

    எனக்கும்...
    மீண்டும் அவசரம் ஏதும் இல்லாமல்
    சந்திக்கவேண்டும் போல உள்ளது
    வாய்ப்புக் கிடைக்குமென நினைக்கிறேன்
    மிக்க மகிழ்ச்சு

    .

    ReplyDelete
  50. கோமதி அரசு said..//.
    //
    கவிதை அருமை.
    நீங்கள் சொல்வது உண்மை.அற்புத ஓவியத்தை ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.பதிவர் சந்திப்புக்கு வந்து அதைப்பற்றி பதிவிடும் பதிவர்கள் பதிவுகளை.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete
  51. Ranjani Narayanan said...
    மிகவும் வித்தியாசமான சிந்தனை!
    உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, ரமணி ஸார்! அதிகம் பேச முடியவில்லை என்பது தான் குறை.//

    எனக்கும் அப்படித்தான்
    நான் பேசத்தான் அருகில் வந்து அமர்ந்தேன்
    தாங்கள் நிகழ்வுகளில் கவனமாக இருப்பதுபோல்
    பட்டதால் இடைஞ்சலாக இருக்கவேண்டாம் என
    நைஸாக நகர்ந்துவிட்டேன்
    மறுமுறை அவசியம் சந்திப்போம்
    வாழ்த்துக்களுடன்....


    ReplyDelete
  52. மாதேவி said...//
    வித்தியாசமான கவிதை வாழ்த்துகள்.

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/////


    ReplyDelete
  53. வை.கோபாலகிருஷ்ணன் said...//
    //....//

    ஒப்பீடு அருமை. பாராட்டுக்கள்//.

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/////



    ReplyDelete
  54. ஸ்ரீராம். said...//
    விழாக் கடலில் இறங்காமல் பார்வைக் கரையிலேயே நின்று பதிவிட்டு விட்டீர்களே... சற்று ஆழமாக நீந்தியிருக்கக் கூடாதா...!//

    கருத்துதுக்கு நன்றி
    கூட்டம் குறைந்ததும் ஹாயாக
    நீந்தலாம் என நினைக்கிறேன்
    வரவுக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  55. கரந்தை ஜெயக்குமார் said...
    அருமை ஐயா. ஆனாலும்
    இன்னும் விரிவாய்
    இன்னும் ஆழமாய்
    பதிவர் சந்திப்பு குறித்த
    சொல்லோவியங்களையும்
    பகிரப்பெற்ற
    கருத்தோவியங்களையும்
    தங்களின் வார்த்தை ஜாலக்
    கவிதையில் எதிர்பார்க்கின்றேன் //

    கருத்துதுக்கு நன்றி
    கூட்டம் குறைந்ததும் ஹாயாக
    நீந்தலாம் என நினைக்கிறேன்
    வரவுக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. அடுத்த சந்திப்பு மதுரையில் நடக்க
    அதிக வாய்ப்பிருக்கிறது
    நீங்கள் தான் எனக்கு சிறப்பு விருந்தினர்

    ஹை :) ரொம்ப சந்தோஷம் ரமணி சார்..

    ரஞ்சனி மேம் வேற யார் கிட்டயோ பேசிட்டு இருக்கும்போது நைசா நகர்ந்துட்டதா எழுதி இருக்கீங்க.. நானும் அப்டி தான் பேசிக்கிட்டு இருப்பேன். நகர்ந்தீங்கன்னா சுட்டுடுவேன் :) ரொம்ப சந்தோஷம் சார் எனக்கு....

    ReplyDelete
  57. Manjubashini Sampathkumar said...//
    ரஞ்சனி மேம் வேற யார் கிட்டயோ பேசிட்டு இருக்கும்போது நைசா நகர்ந்துட்டதா எழுதி இருக்கீங்க.. நானும் அப்டி தான் பேசிக்கிட்டு இருப்பேன். நகர்ந்தீங்கன்னா சுட்டுடுவேன் :) ரொம்ப சந்தோஷம் சார் எனக்கு//

    முன்னாலேயே எச்சரிக்கை செய்ததற்கு
    மனமார்ந்த நன்றி
    ஜாக்கிரதையாய் இருந்து கொள்வேன்
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete