Thursday, January 16, 2014

மேற்கில் தோன்றும் உதயம்

பச்சை விளக்கைப் பார்க்கும் போதே
போதை ஏறுமே-கால்கள்
இச்சை கொண்டு பாதை மாறி
போக ஏங்குமே
மொத்த உடம்பும் பித்தம் ஏற
ஆட்டம் போடவே-மனசில்
மிச்சச் சொச்சக் கூச்சம் கூட
விலகி ஓடுமே

வீடு போக எந்தப் பாதை
மாறிப் போயினும்- இந்தக்
கேடு கெட்ட" பாரு "அங்கே
இருந்து தொலைக்குமே
தாறு மாறா விலையைக் கூட்டி
விற்கும் போதிலும்-காசை
வீசி எரிந்து வாங்கிக் குடிக்க
மனசு தாவுமே

கடனைக் கேட்டு வட்டிக் காரன்
வந்து போனதும்-ரோட்டில்
கிடக்கப் பார்த்த மனிதர் எல்லாம்
முகத்தைச் சுளித்ததும்
நினைப்பில் வந்து தடுக்கப் பார்த்தும்
வெட்கம் இன்றியே-இந்த
வலையைக் கிழிக்கும் பலத்தை இழந்து
புலம்பித் தவிக்குமே

செத்துக் காடு போன பிணமே
வீடு திரும்பினால் -பெண்
பித்துப் பிடித்துத் திரிவோன் மனசில்
இரக்கம் அரும்பினால்
போதைப் பாதைப் போன யாரும்
திருந்தக் கூடுமே-கதிரோன்
பாதை மாறி மேற்கில் கூட
உதிக்கக் கூடுமே

29 comments:

  1. மாலையில் மட்டுமல்ல எப்போதும் தப்பாமல் எல்லா வயதினருக்கும் சூரிய உதயம்கிடைக்கிறது

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    தாறு மாறா விலையைக் கூட்டி
    விற்கும் போதிலும்-காசை
    வீசி எரிந்து வாங்கிக் குடிக்க
    மனசு தாவுமே

    என்ன வரிகள்...சொல்ல வார்த்தைகள் இல்லை சிறப்பான கருத்தாடல் மிக்க கவிதை...ஐயா... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. போதைக்கு அடிமையானவர்கள் திருந்துவது மிக மிக அரிது அதை அழுத்தமாக சொல்லி விட்டது கவிதை.

    ReplyDelete
  4. குடி குடியயைக் கெடுக்கும் என்பதை நம் இந்தியக் குடி மகன்கள் என்று உணர்வார்கள்?!! திருந்துவார்கள்? என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!!!!

    த.ம.

    ReplyDelete
  5. சீக்கிரம் சுடுகாடு சேர்வதற்கே இந்த பச்சை விளக்கு உதவும் என்பதை என்றுதான் உணர்வார்களோ ?
    த.ம 6

    ReplyDelete
  6. ''..தாறு மாறா விலையைக் கூட்டி
    விற்கும் போதிலும்-காசை
    வீசி எரிந்து வாங்கிக் குடிக்க
    மனசு தாவுமே...''
    குடிகாரன் புத்தி..
    நல்ல வரிகள்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  7. மிக அருமையாக எழுதி இருக்கிங்க சார்!

    ReplyDelete
  8. நல்ல கவிதை..
    கானா பாடகர்கள் யாரவது பார்த்தல் கொத்திக்கொண்டு பொய் பாடுவார்கள்...
    அந்த ராகத்தில் பாடிப்ப் பார்த்தால் வந்த விளைவு

    ReplyDelete
  9. போதையைச் சாடும் கவிதை நன்று. தலைப்பு அந்த அழகிய வரிகளைக்கொண்ட இனிய இனிய பாடலை நினைவு படுத்தி விட்டது.

    ReplyDelete
  10. அருமை ஐயா
    அரசே கடைகளை நடத்துகிறது
    த.ம.8

    ReplyDelete
  11. கல்வி நிலையங்களை தனியார் நடத்துகிறார்கள்
    டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது
    எவ்வளவு முரண்

    ReplyDelete
  12. இயலாமையால் ஆற்றாமையா
    ஆற்றாமையால் இயலமையா?
    கேட்டினால் சமூகமா
    சமூகத்தினால் கேடா?

    ReplyDelete
  13. போதையிலே பாதை மாறியவர்களைப் பற்றிய கவிதை! படிக்கும்போது அவர்கள் மீது எனக்கு கோபம் வரவில்லை. ஒருவித கழிவிரக்கம்தான் வருகிறது. தீராத நோயாளிகளாய் அவர்களை எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
  14. தாறு மாறா விலையைக் கூட்டி
    விற்கும் போதிலும்-காசை
    வீசி எரிந்து வாங்கிக் குடிக்க
    மனசு தாவுமே//

    இளைய தலைமுறையும் இப்பாதை போவதை நினைத்தால் நெஞ்சம் அடிக்குதே குரு...

    ReplyDelete
  15. பச்சை விளக்கைப் பார்க்கும் போதே
    போதை ஏறுமே-கால்கள்
    இச்சை கொண்டு பாதை மாறி
    போக ஏங்குமே

    எப்படி திருத்துவது அவர்களாக திருந்தினால் தான் உண்டு நாம் என்ன செயமுடியும்.
    நல்ல தலைப்பு நன்றி

    தொடர வாழ்த்துக்கள்....!
    மொத்த உடம்பும் பித்தம் ஏற
    ஆட்டம் போடவே-மனசில்
    மிச்சச் சொச்சக் கூச்சம் கூட
    விலகி ஓடுமே

    ReplyDelete
  16. இந்த மனநோய் தானாக தான் திருந்த வேண்டும்...

    ReplyDelete
  17. கருத்தாழ மிக்க கவிதை! சந்தநய மிக்க வரிகள்! வீரியமாய் மனதில் இறங்கியது கவிதையின் மையப் பொருள்!

    ReplyDelete
  18. குடி கெடுக்கும் குடி ஒழியும் நாள் வருமா?

    கவிதை அருமை !

    ReplyDelete
  19. அறிவை மழுங்கச்செய்யும் போதைப்பழக்கம்...
    அருமை கவிதை ஐயா..
    த.ம.14

    ReplyDelete
  20. சரியாய் சொல்லியுள்ளீர்கள்... குடி ஒழிந்த நாடாக என்று திகழுமோ!

    ReplyDelete
  21. போதையில் விழுந்தவனுக்கு பாதை தெரியாதுதான்! அருமையான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. //''..தாறு மாறா விலையைக் கூட்டி
    விற்கும் போதிலும்-காசை
    வீசி எரிந்து வாங்கிக் குடிக்க
    மனசு தாவுமே...''//
    அருமையான கவிதை!

    ReplyDelete
  23. நேர்மறை சிந்தனையைத் தூண்டும் அருமையான கவிதை. நன்றி.

    ReplyDelete
  24. டாஸ்மாக் வாசலில் வைத்தால் யாரேனும் திருந்துவார்கள் .நெஞ்சம் சுடும் நிஜம் சார்!
    அருமையான படைப்பு !

    ReplyDelete
  25. சிறந்த கவிதை..... குடி குடியைக் கெடுக்கும்..... சரி தான்.

    த.ம. +1

    ReplyDelete
  26. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

    அருமை ...!!!

    தங்கள் தளத்தை தொடர்ந்து விட்டேன் ...!!!(Follower)
    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete