Tuesday, January 21, 2014

கவிதையைப் போலவும்...

"இப்படி விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்று பார்த்தே
விலகிப் போயினர் சிலர்

"அதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
உருண்டு விளையாடி
மனம் களித்துப் போயினர் பலர்

"முழுதும் நனைந்திடாது
பட்டும் படாமலும் ரசிப்பதே சுகம் "என
உணவுக்கு  ஊறுகாயாய்
அளவோடு இணைந்துப் பின் விலகி
உற்சாகம் கொண்டனர் சிலர்

"அதனுள் வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி முற்றாக
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்... 

26 comments:

  1. தன்னிலை மாறாது எப்போதும்போல்
    அதுவாகவே அது இருப்பினும்
    எல்லோரின் நினைப்புக்கும்
    ஏற்றதாகவும் இருந்தது
    விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

    கவிதையைப் போலவும்... மாதிரி
    கவிதைக்கடல்...

    ReplyDelete
  2. ஒவ்வொருத்தரின் வித்தியாசமான எண்ணங்களின் வர்ணனையை ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. மின் நூல் பற்றி உங்களுக்கும் உதவக்கூடும்... (http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html)

    ReplyDelete
  4. சிந்திக்க வைத்தது..கடல்! கடவுளும் அது போலவே !
    அருமை..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வாரு சொல்லிலும் செயல் வடிவம் பிறந்தது போல ஒரு உணர்வு ஐயா..அருமையான கற்பனை... வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு சொல்லிலும் செயல் வடிவம் பிறந்தது போல ஒரு உணர்வு ஐயா..அருமையான கற்பனை... வாழ்த்துக்கள் ஐயா.
    த.ம-4வது வாக்கு...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. உங்கள் கவிதைக் கடலில் குதித்து முத்தெடுப்பவர்கள் வெகு பலர் !
    த.ம 5

    ReplyDelete
  8. பார்க்க பார்க்க சலிக்காதத சிலவற்றில் கடலும் ஒன்றாச்சே!

    ReplyDelete
  9. aha... kadal patriya oppidum kavithaiyum super!

    ReplyDelete
  10. மனிதருக்கு மனிதர் வேறுபடும் ரசனையையும் எப்பொழுதும் ஒன்றாய் இருக்கும் கடலும்,கவிதையும்... நீங்கதான் இப்படி அருமையாக் கவிதை எழுதமுடியும் ரமணி ஐயா.
    த.ம.7

    ReplyDelete
  11. தங்கள் எண்ணக்கடல் விரிவு சிறப்பு .
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. அருமை ஐயா அருமை
    கடல் தங்களின் எண்ணம் போல பெரிது
    த.ம.10

    ReplyDelete
  13. பிரம்மாண்டத்தின் வடிவம் கடல். கவிதையும் அதுபோலவே அழகாக சொன்னீர்கள்

    ReplyDelete
  14. கடல் கவிதை கடலை போலவே அழகாக !

    ReplyDelete
  15. அருமை அருமை உவமையோடு சிறப்பான கவிதை
    நன்றி தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  16. சிறப்பான சிந்தனைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா !

    ReplyDelete
  17. மிக அருமை! நல்ல சிந்தனையுடன் கூடிய கவிதை!

    வாழ்த்துக்கள்!

    த.ம

    ReplyDelete
  18. // விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்
    கவிதையைப் போலவும்... //

    நல்ல ஒப்புவமைக் கவிதை.

    ReplyDelete
  19. அதுவாகவே அது இருப்பினும்
    எல்லோரின் நினைப்புக்கும்
    ஏற்றதாகவும் இருந்தது


    ரசித்து படித்தேன் ..அழகான வர்ணனை

    ReplyDelete
  20. எனக்கும் கடலை பார்த்து ரசிக்க மிகவும் பிடிக்கும்...ஆனால் ,இப்படி கவிதையெல்லாம் எழுத வராது...நல்ல ஒரு வர்ணனை !!!!

    ReplyDelete
  21. தன்னிலை மாறாது எப்போதும்போல்
    அதுவாகவே அது இருப்பினும்
    எல்லோரின் நினைப்புக்கும்
    ஏற்றதாகவும் இருந்தது
    விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

    கவிதையைப் போலவும்... //
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. படிக்கத் தூண்டும் சிறந்த பாவாக்கம்

    ReplyDelete