Tuesday, January 7, 2014

ஈடு இணையற்ற கவி நீதான் இனி

வாக்கியக் குச்சிகளை ஒடித்து
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை

வார்த்தைகளை
ஊதி ஊதிப் பெரிதாக்கி உப்பவை
இரத்தசோகைப் பிடித்தவன் முகம் போலது
வாக்கியத்திற்கு பொருந்தாவிடினும்
அது ஒரு பொருட்டில்லை

உன் படைப்பை எப்போதும்
ஒரு புதர் போல்
ஒரு புதிர்போல் பராமரி
எதையும் விளங்கச் சொல்லி
சராசரியாகிப் போகாதே

புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்

எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
ஈடு இணையற்ற கவி நீதான் இனி

29 comments:

  1. // எவனை மிதித்தோ
    எவனை அணைத்தோ
    வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி //
    அரசியல் கவிஞனின் செயல் இது. உண்மையான கவிஞன் இப்படி செய்ய மாட்டான். உங்கள் ஆதங்கமும், போலிகளைச் சாடிய விதமும் நல்ல சாட்டையடி!


    ReplyDelete
  2. Vali konda varikalaa Ayyaa...!!?

    ReplyDelete
  3. சரியான சாடல் வரிகள்

    ReplyDelete
  4. //புரிந்த படைப்பை விட புரியாத படைப்பே நிறையச் சொல்லிப் போகும்//

    ஏற்கனவே ஒன்றும் புரியாத படைப்புகளாகவே தான் நிறைய வெளியாகி வருகின்றன.

    //தற்காலக் கவி உலகில் ஈடு இணையற்ற கவி நீதான் இனி//

    நல்லாவே உசுப்பி விட்டுள்ளீர்கள். ;)))))

    இனி சுத்தம் !

    ReplyDelete
  5. வாக்கியக் குச்சிகளை ஒடித்து
    உன் மனோலயப்படி
    சுள்ளிகளாக்கி பரப்பி வை
    நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை//

    ஆஹா அருமையான சொல்லாடல் .கச்சிதமாக நாலே
    நாலு வரி

    எவனை மிதித்தோ
    எவனை அணைத்தோ
    வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
    சந்தேகமே இல்லை
    தற்காலக் கவி உலகில்
    ஈடு இணையற்ற கவி நீதான் இனி//

    சொல்லி வேலையில்லை நல்லாவே
    வெழுத்து வாங்கியுள்ளீர்கள் ஐயா :))
    உங்கள் ஆதங்கம் புரிகிறது இன்பக்
    கவிதை தொடர என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  6. கடைசி இரண்டு பாரா! அருமை.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.

    புரிந்த படைப்பை விட
    புரியாத படைப்பே
    நிறையச் சொல்லிப் போகும்
    புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
    விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்

    உண்மையன வரிகள்.. ஐயா.. மேலும் பல கவிகள் படைக்க எனது வாழ்த்துக்கள்..த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. மின்மினிகள் வெளிச்ச மேடையில் இடம் பிடித்தாலும் விடிந்ததும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள் !
    த.ம 6

    ReplyDelete
  9. புரிந்த படைப்பை விட
    புரியாத படைப்பே
    நிறையச் சொல்லிப் போகும்//

    ஹா ஹா ஹா ஹா யாருக்கோ செமையா ரவுண்டு கட்டி அடிச்சிருக்கார் குரு, உங்கள் ஆதங்கம் புரிகிறது குரு.

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துகள் ரமணி ஐயா!
    :) கவிதை அருமை!
    //புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
    விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்// ஹாஹா

    ReplyDelete
  11. உன் படைப்பை எப்போதும்
    ஒரு புதர் போல்
    ஒரு புதிர்போல் பராமரி
    எதையும் விளங்கச் சொல்லி
    சராசரியாகிப் போகாதே

    ஆஹா எவ்வளவு விடயங்களை சிக்கனமாகவும், கச்சிதமாகவும் அனைத்தையும் எடுத்துரைத் திருக்கிறீர்கள்.

    சந்தேகமே இல்லை
    தற்காலக் கவி உலகில்
    ஈடு இணையற்ற கவி நீதான் இனி

    பகிர்வுக்கு நன்றி ....! தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  12. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. சாட்டையடி வரிகள் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. கவிதை அருமை! அதுவும் நல்ல நெத்தியடிக் கவிதை!

    வாழ்த்துக்கள்!!

    த.ம.+

    ReplyDelete
  15. இந்த வம்பே வேண்டாம் என்று தான்...வசனத்தை வரிசையாகவே எழுதி விடுகிறேன் ! கொத்து புரோட்டாவாக பிய்த்து போட்டு...மற்றவர்களை தொல்லை படுத்துவதில்லை...!

    ReplyDelete
  16. கருத்தில் மாறுபடுகிறேன். எழுதுவது எழுதியபடியே புரிந்து கொள்ளப்படல் வேண்டும். எதையாவது நினைத்து எழுத எதையாவது புரிந்து கொள்வதில் எழுதுபவன் எண்ணம் ஈடேறுவதில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. சாட்டையடி வரிகள்.

    ReplyDelete
  18. ஒவ்வொரு வரிகளும் அருமை! புரிந்த படைப்பை விட புரியாத படைப்பே நிறைய சொல்லிப்போகும்! நிதர்சனமான உண்மை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  19. புரிந்த படைப்பை விட புரியாத படைப்பே
    நிறையச் சொல்லிப் போகும் என்ற வரிகள் ஒவ்வொருவரும் தமக்குத்தானோ என நினைக்க வைக்கும் வரிகள். நன்றி.

    ReplyDelete
  20. புரியவேண்டிய கருத்தை மறைவாகச் சொல்லுவதும் ஒரு மாகவிதையின் இலக்கணமன்றோ? ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தை ஒரே நேரத்தில் சொல்லவல்லதும் மாகவிதையன்றோ? - எனவே உங்கள் கவிதை, நல்ல கவிதை எழுதுபவனையும் பாராட்டும்விதமாகவே இருக்கிறது. அதே சமயம் போலிக்கவிதைகளின் மீது சாடுவதாகவும் இருக்கிறது. அபாரம் போங்கள்!

    ReplyDelete
  21. போலிக் கவிகளைப் புரிய வைத்துள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
  22. போலிக் கவிகளைப் புரிய வைத்துள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
  23. வேடதாரிகளை வெளிப்படித்திய விதம் அருமை!
    இப்படி எழுதுவதுதான் உமக்கப் பெருமை!

    ReplyDelete
  24. ஆஹா...........,சரிதான்

    ReplyDelete
  25. "வாக்கியக் குச்சிகளை ஒடித்து
    உன் மனோலயப்படி
    சுள்ளிகளாக்கி பரப்பி வை
    நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை" என
    புதுக் கவிதை எழுத வைக்கிறியள்...
    பிறகு என்ன
    நம்மாளுகள் - இனி
    நல்ல கவிஞர்களே!

    ReplyDelete