Sunday, February 2, 2014

இரண்டாம் முறைக் கிடைத்த லட்டு

பதிவுலகப் பிதாமகரின்
இரண்டாவது சிறுகதைக்கான போட்டியில்
(தை வெள்ளிக்கிழமை  )
நான் தவறாது விரும்பித் தொடரும் பதிவர்
திருமதி.ராஜலெட்சுமி பரமசிவம் அவர்களுடன்
முதல் பரிசைப் பகிர்ந்து கொள்ள  கிடைத்த
யோகத்தை பெருமையாகக் கருதுகிறேன்

சரியோ தவறோ படைப்பாளியின் கருத்துக்கு
என் கருத்து உடன்பட்டுப் போகிறதோ இல்லையோ
கதையைப் படித்ததும் நான் உணர்கிற கருத்தை
குழப்பமின்றி பதிவு செய்வதால் கிடைத்த
அங்கீகாரமாக இந்தப் பரிசைக் கருதுகிறேன்

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-01-03.html

திரு .வைகோ அவர்கள் போட்டிக்கான அறிவிப்பில்
குறிப்பிட்டிருப்பதைப் போல இந்தப் போட்டியில்
கலந்து கொள்வதன் மூலம் ஒரு படைப்பை
ஊன்றிப் படிப்பதற்கான பயிற்சியாகவும்
நமது விமர்சனத் திறனை வளர்த்துக் கொள்ள
ஒரு நல்ல வாய்ப்பாகவும் இந்த சிறுகதை
விமர்சனப் போட்டி இருப்பதால் பதிவர்கள்
அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இத்துடன் இந்த இரண்டாம் சிறுகதைக்கான
இணைப்பையும் அதற்கான எனது  விமர்சனத்தையும்
இத்துடன் பகிர்ந்துள்ளேன்

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html



எனது விமர்சனம் 



துவங்கியதும் தெரியாது தொடர்ந்ததும் தெரியாது
சட்டென  கனத்துப் பெய்து 
ஓய்ந்த  கோடை மழைபோலவும்...

வளைவுகள் நெளிவுகள் அற்ற ஒரு
நெடுஞ்சாலையில் சட்டெனத் தோன்றி
வேகமாக நம்மைக் கடந்து போகும் ஒரு
அதி வேக அழகியக் கார் சட்டென நம்முள்
ஏற்படுத்திப் போகும் அதிர்வினைப் போலவும் ...

இக்கதை நம்முள் ஒரு எதிர்பாராத 
ஆயினும் ஒரு அழுத்தமான பாதிப்பை 
ஏற்படுத்திப் போகிறது
என்றால் நிச்சயம் அது மிகையில்லை

"ருக்குவுக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது " என
எடுத்தவுடன் கதைக் கருவின் கழுத்தை அழுத்தப்
பிடிப்பதற்கு உண்மையில் கொஞ்சம் கூடுதல்
"தில் "தான் வேண்டும்.அது வைகோ சாருக்கு
கூடுதலாக இருக்கிறது என்பதற்கு இக்கதையே சாட்சி

வேறு யாரேனும் இக்கதையைச் சொல்லி இருந்தால்
நிச்சயமாக செக்- அப்புக்கு வருவது முதல் துவங்கி
பின் குழந்தை இல்லாத தம்பதிகளின் மன நிலையை
விளக்கி பின் விலாவரியாக பேரம் பேசுதலை
விவரித்து உச்சக் கட்டமாக பிரசவ வலியெடுத்து
மருத்துவ மனையில் சேர்ப்பது என்கிற வகையில்தான்
யோசித்திருப்பார்கள்.அதுவும் ஒரு சாதாரணக்
கதையாகிப் போயிருக்கும்

நிச்சயம் எத்தனை குழந்தை பெற்றாலும்
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பத்து மாதம்
சுமந்து பெற்றவள் நிச்சயம் மனசார தன் குழந்தையை 
விற்கத் துணியமாட்டாள்

இது கதாபாத்திரமாக வருகிற மருத்துவருக்கும்
நிச்சயம் தெரிந்திருக்கிறது.அதனால்தான் குழந்தையை
வாங்க நினைப்பவர்களை வரச் சொல்லிவிட்டு
இவர்களிடம் அவர்களை வரச் சொல்லவா எனக் கேட்கிறார்

குழந்தையைப் பெற்றவர்களுக்கும் குழந்தையை
ஆரோக்கியமாகப் பெற்றுவிட வேண்டும் அதற்காக
மருத்துவர் மூலம் பெற முடிந்த உதவிகளைப்
பெற்றுக் கொள்வோம்,அதுவரை மருத்துவரிடம்
முரண்பாடு வேண்டாம் எனத் தான்  முடிவு
எடுத்திருக்கவேண்டும்.இல்லையெனில் மருத்துவர்
கேட்டவுடன் இருவரும் இப்படி திட்டவட்டமான
பதிலைக் கூறி இருக்க வாய்ப்பே இல்லை

கதை மாந்தருக்கும் தெரிந்த கதைபடிப்பவருக்கும்
புரிந்த விஷயம் கதையை எழுதியவருக்குத்
தெரியாமலா இருந்திருக்கும்.நிச்சயம் தெரிந்திருக்கும்

கதாசிரியரைப் பொருத்தவரை அவர் குழந்தையைப்
பெற்றுக் கொடுக்கும் நிகழ்வினைப் பயன்படுத்திக் 
கொள்கிறாரே ஒழிய அவரது முழுக் கவனமும் 
நிச்சயம் அதில் இல்லை எனவே எனக்குப் படுகிறது

உண்மையோ பொய்யோ தப்போ சரியோ
காலம் காலமாக பண்பாடு ரீதியாக கலாச்சார ரீதியாக
நாம் பல நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறோம்

தப்பிக்கவே முடியாமல் சிக்கிக் கொள்கிற சூழலில்
மிக எளிதாக தப்பித்துக் கொள்ள இது போன்ற
நம்பிக்கையின் மீதான  நம்பிக்கைகள் கை கொடுக்கின்றன

"ஐந்தாவது குழ்ந்தை " "தை வெள்ளிக்கிழமை " என்கிற
சென் டிமெண்டானநம்பிக்கையை தவிர்த்து  
வேறு எந்தக் காரணத்தைஸ் சொல்லி இருந்தாலும் 
அதற்குமருத்துவர் மாற்று ஒன்று சொல்லி இருக்கமுடியும்
இந்த நம்பிக்கைக்கு எதிராக நிச்சயம் அவர்
எந்த வாதத்தையும் வைக்க முடியாது
கதையில் வைக்கவும் இல்லை

எனக்கு இந்தக் கதையின் மையக் கருத்தே
இதுதான் எனப்படுகிறது 

இல்லையெனில் கதை ஆசிரியர் ஐந்தாவது குழ்ந்தை
மற்றும் தை வெள்ளிக் கிழமை என்கிற வரிகளுக்கு
அத்தனை அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார்.

அந்த வகையில்  நிலாவைக் காட்டி சோறு
ஊட்டுகிற தாயினைப் போல ஏதோ ஒரு
நிகழ்வை  எடுத்துக் கொண்டு தான் வாசகருக்கு
ஊட்ட நினைக்கிற கருத்தினை மிகச் சுருக்கமான
கதையாகச் சொல்லிப்போனாலும் சரியாக சொல்லிப்
போனவிதம் மிக மிக அருமை

அதே சமயம்

கலையை முன் வைத்துவிட்டு கலைஞன்  ரசிகனே
தேடி அறியட்டும் எனச் சொல்கிற மாதிரி
அந்த இரண்டு சொற்களை அத்தனைப் பெரிதாக
உருவத்திலும் நிறத்திலும் அழுத்திச் சொல்லாமல்
படிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும் என
மிகச் சாதாரணமாகச் சொல்லி இருக்கலாமோ
எனத் தோன்றிய எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை

இருப்பினும் வருடத்தில் வருகிற வெள்ளிக் கிழமைகளில்
தை வெள்ளி மிகச் சிறந்தது என்பதைப் போல
இந்தத் "தை வெள்ளிக் கதையும் " மிகச் சிறந்தது
என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும்

36 comments:

  1. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் , ரமணி சார்.

    ReplyDelete
  2. மிக அருமை ஐயா..கதையைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்..
    த.ம.2

    ReplyDelete
  3. வாழ்த்துகள் அய்யா, கிடைத்த விருதுக்குப் பாராட்டுகள், இந்த ஊக்கத்துடன் மற்ற நம் எழுத்தாளர்களின் படைப்புகளையும் விமர்சனம் செய்து சிற்ந்த திறனாய்வாளராகவும் பெயர்விளங்க என் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஆம் தங்கள் விமரிசனம் நன்று.
    இக்கதையை நானும் வாசித்துக் கருத்திட்டேன்.
    உண்மையில் வேறு எந்த அலம்பலும் இல்லாமல்
    தை வெள்ளி மிக முக்கியம் பிரபலம் என்பது
    போன்ற கருத்து அங்கு தெளிவாக இருந்தது கவனித்தேன்..
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. My Dear Ramani Sir,

    வணக்கம்.

    இந்த சிறுகதை விமர்சனப்போட்டி துவங்கியதும் முதல் இரண்டு போட்டிகளுக்குமே ‘முதல் பரிசு’ தங்களுக்கே கிடைத்துள்ளதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    முதற்கண் தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    தற்போது நடைபெறும் மூன்றாவது போட்டிக் கதைக்கும் தாங்கள் ஓர் விமர்சனம் அனுப்பி, அதுவும் பரிசினைப்பெற்று தாங்கள் HAT TRICK போட்டாலும் ஆச்சர்யம் இல்லை தான்.

    ஒரு விமர்சனம் என்பது எப்படியிருந்தால் பரிசுக்கு அது தேர்வாகக்கூடும் என்கிற டெக்னிக் [தேவ இரகசியம்] மிகச்சிறந்த எழுத்தாளரும், வாசிப்பாளருமாகிய தங்களுக்கு நன்கு தெரிந்துள்ளது.

    தங்கள் மூலம் பலரும் இதனை உணர்ந்து, தங்கள் பாணியிலேயே விமர்சனம் எழுத முயற்சிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    எழுத்துலகில் திறமைகளுக்குச் சவால் விடக்கூடிய இது ஓர் மிகவும் ஆரோக்யமான போட்டியாக அமைந்துள்ளது என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    எழுதியவர் யார் என்று நடுவர் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தும் கூட, தங்களுக்கே தொடர்ந்து இரு முறை முதல் பரிசு கிடைக்கிறது என்றால், தங்களின் மிகச்சிறப்பான எழுத்துக்களுக்குத் தலை வணங்கத்தான் வேண்டும் என்பதே இதில் உள்ள உண்மை.

    நடுவர் அவர்களின் தனித்திறமைகளுக்கும், அவர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவாறு தங்களின் எழுத்துக்கள் ஓர் சவாலாக அமைகிறது என்பதே என்னுடைய கணிப்பு.

    தொடர்ந்து அனைத்து 40 வாய்ப்புக்களிலும் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல வெற்றிகள் அடைய என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  6. //திரு .வைகோ அவர்கள் போட்டிக்கான அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்தப் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் ஒரு படைப்பை ஊன்றிப் படிப்பதற்கான பயிற்சியாகவும் நமது விமர்சனத் திறனை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகவும் இந்த சிறுகதை விமர்சனப் போட்டி இருப்பதால் பதிவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்//

    லட்டு போன்ற இந்தப்பதிவினைக் கொடுத்துள்ளதுடன், மற்ற சக பதிவர்களையும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு, தாங்கள் இங்கு கேட்டுக்கொண்டுள்ளது, தங்களின் தனித்தன்மையையும், பிற எழுத்தாளர்களையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் நல்ல எண்ணத்தையும், நற்குணத்தையும் காட்டுவதாக உள்ளது.

    அதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  7. முதல் பரிசு பெற்றதற்கு இனிய நல்வாழ்த்துக்கள்....!
    விமர்சனம் படிக்கத் தூண்டும் அளவுக்கு உள்ளது. உண்மையில் அருமை மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் ரமணி சார். ஒரு விமர்சனம் எப்படியிருக்கவேண்டும் என்பதை நாங்கள் அறிய ஒரு நல்லவாய்ப்பாக அமைந்துள்ள இப்போட்டி. இப்படி ஒரு வாய்ப்பை அளித்த வை.கோ.சாருக்கு நன்றி. தங்கள் படைப்புத் திறமைக்கு சான்று தேவையில்லை. எனினும் இதுபோன்ற போட்டிகள் மூலம் தங்களோடு சேர்த்து எங்களுக்கும் பயன் கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சியே. மீண்டும் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா.

    முதலாவது பரிசு பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... இன்னும் பல வெற்றிப்படிகளை தாண்ட எனது வாழ்த்துக்கள்.ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. வணக்கம்
    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. பாராட்டுக்கள் ஐயா...

    இன்னும் பல லட்டுகள் கிடைக்கும் ஐயா... சக பதிவரையும் கலந்து கொள்ள அறிவித்தது சிறப்பு... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் குரு...!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ...சிறுகதையைப் போன்றே விமர்சனமும் அருமை !
    த ம 7

    ReplyDelete
  14. சிறந்தொரு விமர்சனம்
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சார் ! சிறந்த விமர்சனம்....

    ReplyDelete
  16. திறனாய்வு மிகவும் அருமை!

    ReplyDelete
  17. அழகிய ஆய்வு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ரமணி ஐயா !

    ReplyDelete
  19. வாழ்த்துகள் ஸார்.

    ReplyDelete
  20. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  21. விமர்சனம் மிக அருமை!அருமை! தங்கள் தமிழ் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?!!!!!

    மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. வாழ்த்துகள் .

    சிறப்பான விமர்சனம்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் அருமையான எழுத்துப்பணி.

    ReplyDelete
  24. இரண்டு லட்டு போதுமா. இன்னும் நிறைய வேண்டுமா.? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  26. கவியில் மட்டுமல்லாது விமர்சனத்திலும் தங்கள் சிறப்பை காட்டுவதாக உள்ளது. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. சிறந்த திறனாய்வுப் பகிர்வு

    தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
  28. இரண்டாம் முறையாக முதல் பரிசினைப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்....

    சிறப்பான விமர்சனம். படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  29. கவிஞர் ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! திரு VGK அவர்களின் பதிவில் மட்டுமே பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தேன்!

    ReplyDelete
  30. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரமணி சார். உங்களின் நுணுக்கமான கண்ணோட்டம் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஒருவர் சொல்லும் கருத்திலும், கண் எதிரே காணும் நிகழ்விலும் கவிதைக்கான கருவை அனாயசமாக எடுத்துவிடும் அசகாய சூரர் நீங்கள். உங்களுக்கு இரண்டு முறை அல்ல மூன்றாவது முறையும் முதல் பரிசு தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அன்பு வாழ்த்துகள் சார்.

    ReplyDelete