Friday, February 14, 2014

தேர்தல் புயல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும்
வழக்கம்போல்
 மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'

(அடுத்த தேர்தல்  வந்துவிட்டது  ஆயினும்
நிலைமைகள் எப்போதும்போல்தான்  உள்ளது 
எனவே புதிதாக  ஒரு பதிவு  போடாமல் 
பழைய பதிவையே  மிண்டும்  பதிவாகத
தந்துள்ளேன்  )

17 comments:

  1. "துண்டுக்கு பதில் வேட்டியையே..."

    ஹா..ஹா...ஹா..

    பழசாயிருந்தாலும் புளிக்கவில்லை! :))

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    அப்படி போடுங்க......

    நம்ம சனம் உணர்ந்தால் சரிதான்

    ReplyDelete
  3. /// கொடுக்கவா செய்கிறோம்...?
    விதைக்கத்தானே செய்கிறோம்...! ///

    இவை என்று மாறுமோ...?

    ReplyDelete
  4. பத்து வருடத்துக்கு முன்பு எழுதிய பாடல், இன்னும் பொருந்துகிறது பாருங்கள்! என்னே உங்கள் தீர்க்கதரிசனம்!

    ReplyDelete
  5. இப்படி பாடிப் பாடியே நமது காலம் ஓடி விட்டது. ஆனாலும் பாடல் மாறாது. காலங் கடந்தும் ஒலிக்கும்.

    ReplyDelete
  6. அரசியல்வியாதிகளின் புயலில் இருந்து இன்னும் நாம் மீளவில்லை குரு !

    ReplyDelete
  7. //இரவில் வீடுவீடாக
    "கவர்" கொடுத்துப்போகும்
    "வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்//

    இதை நீங்கள் எத்தனை முறை மீள் பதிவாகப் போட்டாலும் எத்தனை வருடங்கள் கழித்துப் போட்டாலும், மாறப் போவதில்லை!

    மிக அருமையான ஒரு படைப்பு! நிதர்சன்மான உண்மையைச் சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  8. //இரவில் வீடுவீடாக
    "கவர்" கொடுத்துப்போகும்
    "வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்//

    இதை நீங்கள் எத்தனை முறை மீள் பதிவாகப் போட்டாலும் எத்தனை வருடங்கள் கழித்துப் போட்டாலும், மாறப் போவதில்லை!

    மிக அருமையான ஒரு படைப்பு! நிதர்சன்மான உண்மையைச் சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  9. இனி தேர்தல் விழா கொண்டாட்டம் ஆரம்பம் பட்டாசு பலகாரம்தண்ணீர் விற்பனை அமோகமாய் இருக்கப்போகிறது

    ReplyDelete
  10. எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும் இதுதான் நிலைமை --- மக்கள் உணரும்வரை...

    ReplyDelete
  11. இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும்
    காட்சிகளும் மாறப்போவதில்லை...
    காலங்களும் மாறப்போவதில்லை...

    ReplyDelete
  12. தேர்தலுக்கு தேர்தல் மாற்றங்கள் இல்லாத போது நாமும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லைதான் பதிவுகளை! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  13. பழைய பதிவா ?
    இன்னமும் பொருத்தமா தான் இருக்கு !
    அருமை சார் தேர்தல் கவிதை!

    ReplyDelete
  14. பத்து வருடத்துக்கு முன்பு எழுதிய பாடல், இன்னும் பொருந்துகிறது பாருங்கள்!

    ReplyDelete
  15. எல்லாத் தேர்தலுக்கும் பொருந்தும் கவிதை.....

    த.ம. +1

    ReplyDelete